இந்தியாவில் மத்திய தர வர்க மக்கள் யார்?

இந்திய மத்திய தர வர்கத்தை பிரதிநித்துவப்படுத்துவது எவை? அல்லது ஆர்வமுள்ள சந்தையாளர் ஒருவருக்கு இந்தியா முன்வைக்கும் வாய்ப்பை எப்படி விளக்குவோம் போன்ற கேள்விகள் போதிய தரவுகள் இல்லாமல் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றன. 

YS TEAM TAMIL
30th Jun 2018
4+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

’அறையில் உள்ள யானை, இந்தியாவின் காணாமல் போன மிடில் கிலாஸ்’ எனும் தலைப்பில் எக்கனாமிஸ்ட் ஜனவரி 18, 2018 இதழில் வெளியான கட்டுரை, இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வாய்ப்புகள் தொடர்பான சமகாலத்தன்மையுடன் இல்லாவிட்டாலும், அந்த கட்டுரை பல உண்மைகளை கொண்டிருந்தது. 

இந்தியாவின் நாட்டுப்பற்றுடனான பெருமையை அந்த கட்டுரை தீவிரமாக தாக்கியது. அந்த கட்டுரை பலரை அதிருப்து அடையச்செய்தது. இதன் விளைவாக, மிண்ட் இதழில் இந்தியாவின் பெருகும் மிடில் கிலாஸ் எனும் கட்டுரை வெளியானது. நிடி ஆயோக் சி.இ.ஓ அமிதாப் காந்த், அவரது சகாக்கள் வைபவ் கபூர், ரன்வீர் நகைச் எழுதிய அந்த கட்டுரை எக்கனாமிஸ்ட் கட்டுரையின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. 

இந்தியா போன்ற சிக்கலான பொருளாதாரத்திற்கு எக்கனாமிஸ்ட் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மத்திய தர வர்கம் என்பது ஒற்றை பரிமானம் கொண்டிருந்தது என்பது கட்டுரையின் முக்கிய கருத்தாக அமைந்தது. எந்த விமர்சனத்திற்கும் நம்முடைய இறுதி பதிலடி சிக்கலான தன்மை என்பது தான்.

image


இந்த புத்தாயிரமாண்டின் துவக்கத்தில், இந்திய மற்றும் சர்வதேச இதழ்களில் இந்திய மத்திய தர வர்கம் பற்றி கட்டுரைகள் வெளியாகத்துங்கியது முதல், இந்திய மத்திய தர வர்கம் தொடர்பாக நிறைய மிகை பரபரப்பு உண்டாகியிருக்கிறது. இந்தியாவை சர்வதேச அரங்கில் பொறுத்துவதற்கான முயற்சியாக அவற்றில் பல அமைந்ததாக கருதுகிறேன். அதிலும் குறிப்பாக 1990 களில் ஆசிய புலிகளின் புத்தெழுச்சியில் இந்தியா விலக்கப்பட்ட நிலையில் இவ்வாறு நிகழ்ந்தது.

இந்திய மத்திர தர வர்கத்தை நோக்கும் போதும், யாரும் வெற்றிகரமாக பதில் அளிக்காத ஒரு கேள்வியாக, இந்திய மத்திய தர வர்கம் என்றால் என்ன? எனும் கேள்வியை நான் கருதுகிறேன். ஏனெனில் ஒரு வரையறை இருந்தால் தான் நம்மால் விவாதத்தை துவங்க முடியும். இல்லை எனில், இந்திய பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைக்கு லாபகரமான சந்தையை பிரதிபலிக்கும் அளவுக்கு பர்ந்த மத்திய தர வர்கம் இருக்கிறதா? எனும் விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்திய மத்திய தர வர்கம்

மத்திய தர வர்கம் என்பது ஒருவர் என்ன வருமானம் பெறுகிறார் என்பதன் அடிப்படையிலேயே பரவலாக வரையறை அமைகிறது. எந்த அளவு வருமானம் போதுமானது என்பது விவாதத்திற்கு உரியதாக இருக்கிறது. மிண்ட் மற்றும் எக்கனாமிஸ்ட் கட்டுரைகளுக்கு இடையிலான விவாதங்களில் ஒன்றாக இது அமைந்தது.

இன்னொரு வழி, ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீதத்தினர் மற்றும் செல்வந்தர்களாக இருக்கும் 20 சதவீதத்தினரை விலக்கி விட்டால், மத்திய தர மக்களுக்கான இன்னொரு செயல்முறை விளக்கம் கிடைக்கிறது. இந்த கருத்தின் அடிப்படையில், மத்திய தர வர்கத்திற்கு, சராசரி இலங்களுக்கான தேசிய மீடியன் வருமானத்தின் இரு மடங்கு முதல் மூன்றில் இரண்டு பங்கு எனும் பியூ ரிசர்ச் வரையறை என்னை ஈர்க்கிறது.

இப்போது தான் இன்னும் சிக்கலான பகுதி வருகிறது. நாம் தனிநபர் வருமானம் அல்லது தினசரி வருமானம் ஆகியவற்றை மேற்கோள் காட்ட பழகியிருப்பதால், எண்ணற்ற வருமான வரையறைகளில் மூழ்கி தவிக்கும் நிலை உருவாகலாம். ஆனால், குறிப்பாக சீனா, பூட்டான் ஏன் இலங்கை உள்ளிட்ட பக்கத்து நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவுக்கான தனிநபர் வருமானம் தொடர்பான புள்ளிவிபரம் ஈர்ப்புடையதாக இல்லை.

2013 கல்லப் ஆய்வு படி, 616 டாலர் எனும் மீடியன் வருமானத்துடன் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. இந்த மீடியன் வருமானம் உணர்த்துவது என்ன? 

மக்கள்தொகையில் 50% இந்த வருமானத்திற்கு மேலே மற்றும் 50% இதற்குக் கீழே இருப்பதாக பொருள். சீனாவின் மீடியன் வருமானம் 1,786 டாலராக இருக்கிறது. அதாவது சீனாவின் மத்திய தர வர்கம் இந்தியாவின் மத்திய தரவர்கத்தைவிட மூன்று மடங்கு செல்வம் பெற்றுள்ளது.

இப்போது மீண்டும் பியூ ரிசர்ச்சை எடுத்துக்கொண்டால், மீடியன் வருமானத்தில் இரு மடங்கு முதல் மூன்றில் இரண்டு பங்கு என்பது, 2006 டாலர் முதல்1,232 டாலர் வரை இருக்கலாம். 406 டாலர் எனும் கீழ் வரம்பு மிகவும் ஏமாற்றம் தருகிறது. ஏனெனில் இந்த மக்கள் வறுமை மற்றும் கடனில் உழல்பவர்கள்.

பியூ ரிசர்ச் வரையறை படி, மத்திய தர வர்கம், 1,232 டாலர் எனும் மேல்வரம்பு கொண்டிருந்தால், தினசரி வருமான கணக்குப்படி, நாள் ஒன்றுக்கு 3.5 டாலருக்கு மேல் என வைத்துக்கொள்ளலாம். காந்த் போன்றவர்கள் சுட்டிக்காட்டும் புள்ளிவிவரங்களில் கீழ் நிலையில் இவை வருகின்றன. எனவே பியூ ரிசர்ச் வரையறைபடி நாம், ஏழைகளையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா போன்ற பொருளாதாரத்தின் வாய்ப்புகளை குறைக்க, இந்துஸ்தான் யூனிலீவரின் விற்பனை சிக்கலானதாகவே இருக்கும் என நினைக்கிறேன். இந்துஸ்தான் யூனிலிவர் இந்து வளர்ச்சி விகிதத்தில் வளர்கிறது. இரட்டை இலக்க வளர்ச்சிக்கு சவால் விடுவதாக இருக்கிறது.

ஆக, இந்திய மத்திய தர வர்கம் தொடர்பான வரையறைகள் வேறு வேறு முடிவுகளுக்கு அழைத்துச்செல்லலாம். மேலும் இந்தியாவை தனியே பார்ப்பதும் தவறாக இருக்கும். இந்திய மத்திய தர வர்கம் உண்மையில் பிரதிநித்துவப்படுத்துவது என்ன? இந்தியாவின் உண்மையான வாய்ப்புகளை ஒரு சந்தையாளருக்கு நாம் எப்படி விளக்குவோம்? நம்முடைய நாட்டை நோக்குவது என்பது, யு.கே சந்தை தனது சர்வதேச வருமானத்திற்கு 55 மில்லியனவை சேர்த்துக்கொள்வது போல என கூறுவோமா? அல்லது அமிதாப் காந்த் கட்டுரையில் குறிப்பிடுவது போல 158 மில்லியன் என கூறுவோமா?

ஒரு விஷயம் தெளிவு. எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், மற்ற நாடுகள் மற்றும் அவற்றின் மத்திய தர வர்கத்துடன் நாம் எப்படி ஒப்பிடப்படுகிறோம் எனும் கூடுதல் அம்சங்கள் தேவை. உதாரணத்திற்கு இதே மத்திய தர வர்கம் சீனாவில் மூன்று மடங்கு அதிகம் சம்பாதிக்கலாம். உண்மையான மத்திய தர வர்க வரையறை என்பது நுகர்வோர் வருமானம் என்பதைவிட நுகர்வோர் செலவுகள் அடிப்படையில் அமைய வேண்டும் என ஒருவர் வாதிடலாம். அமெரிக்க பாணியில் சொன்னால், நம்முடைய மத்திய தர வர்க மக்கள் செழிப்பாளர்களை விட, தாக்குப்பிடிப்பவர்களா? சரியான தரவுகளே இதற்கான தெளிவான விடையை சொல்லும்.

(பொறுப்பு துறப்பு: இது கட்டுரையாளர் பிரபாகர் முந்த்கர் ஆங்கிலத்தில் எழுதியது. கட்டுரையில் தெரிவிக்கப்படும் பார்வை, கருத்துகள் கட்டுரை ஆசிரியருடையவை. யுவர்ஸ்டோரி கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல).

தமிழில்; சைபர்சிம்மன் 

4+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags