பதிப்புகளில்

சிறிய நகரங்களில் இருந்தே அடுத்த யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாக வாய்ப்பு!

ஃபேஸ்புக், நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப்ஸ், இன்வெஸ்ட் இந்தியா நம்பிக்கை...  

17th Mar 2018
Add to
Shares
37
Comments
Share This
Add to
Shares
37
Comments
Share
“2007-ல் ஃபேஸ்புக்கில் 24 மில்லியன் பேர் மட்டுமே இருந்தனர். இப்போது 2018-ல் பார்த்தால் 2 பில்லியன் பேருக்கு மேல் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர்,”

என்கிறார் ஃபேஸ்புக்கின் இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான பிளாட்பார்ம் பாட்னர்ஷிப்ஸ் தலைவர் சத்யஜீத் சிங். 

இந்திய அரசின் இன்வெஸ்ட் இந்தியாவுடன், நாஸ்காம் 10000 ஸ்டார்ட் அப்ஸ் மற்றும் ஃபேஸ்புக் இணைந்து நடத்திய கோட் பார் தி நெக்ஸ்ட் பில்லியன் நிகழ்ச்சியில் தொழில்முனைவோரிடம் பேசும் போது சத்யஜீத் இவ்வாறு கூறினார்.

சத்யஜீத் சிங் ஸ்டார்ட் அப்களுடன் உரையாற்றுகிறார் 

சத்யஜீத் சிங் ஸ்டார்ட் அப்களுடன் உரையாற்றுகிறார் 


”தேசத்திற்காகவும், அடுத்த 100 கோடி இணைய பயனாளிகளுக்காகவும் சேவைகளை உருவாக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான நோக்கங்களில் ஒன்று,” என்றும் அவர் கூறினார்.

அவரைப்பொருத்தவரை ஸ்டார்ட் அப்கள் ஏற்கனவே உள்ள தீர்வுகளை பிரதியெடுப்பதைவிட புதிய சேவைகளை உருவாக்க வேண்டும். வளர்ச்சி, வாடிக்கையாளர் பங்கேற்பு, வருவாய் வாய்ப்பு, மறு பங்கேற்பு மற்றும் அளவீடு ஆகிய முக்கிய கட்டங்கள் மூலம் ஸ்டார்ட் அப்கள் வாடிக்கையாளர் பயணத்தை அணுக வேண்டும் என்பதை அவர் விவரித்தார்.

“பயனாளி உங்கள் சேவையில் நுழைந்தவுடன் அடுத்த கட்டம் வளர்ச்சியாகும். நீங்கள் பெற்றிருக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையை மீறி, நீங்கள் அவர்களை பங்கேற்க வைத்து தக்க வைத்துக்கொள்ளாவிட்டால், ஓட்டை பக்கெட் அனுபவம் தான் உண்டாகும்,” என அவர் எச்சரிக்கிறார்.

சதய்ஜீத் குறிப்பிட்ட ஐந்து முக்கிய கட்டங்கள் வருமாறு:

1. வருகை

“இந்தியா போன்ற வளரும் நாட்டில் மக்கள் போன் எண்கள் மூலம் சேவைகளின் உள்ளே நுழைவதை விரும்புகின்றனர்,” என்று கூறுகிறார் சதய்ஜீத். எனவே ஸ்டார்ட் அப்பின் நோக்கம் லாகின் செய்வதை எளிதாக்குவதாக இருக்க வேண்டும். இதற்கு ஃபேஸ்புக் இரண்டு வித தீர்வுகளை அளிக்கிறது.

முதல் அம்சம் பற்றி விவரிக்கிறார்

முதல் அம்சம் பற்றி விவரிக்கிறார்


* பேஸ்புக் லாகின்: டெவலப்பர்கள் இதற்கு வேண்டுகோள் வைத்து, பயனாளிகளுக்கு தனிப்பட்ட அனுபவம் அளிக்க பிறந்த தேதி, பிரெண்ட் கிராப் மற்றும் பாலினம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை பெறலாம்.

* அக்கவுண்ட் கிட்: கூடுதல் பாஸ்வேர்டு தேவையில்லாமல் பயனாளிகள் போன் எண் அல்லது இமெயிலும் மூலன் கணக்கில் நுழைய இது வழி செய்கிறது.

2. பங்கேற்பு

டெவலப்பர்கள் தங்கள் சேவைக்கான பங்கேற்பை பெறும் வகையில் ஃபேஸ்புக் வழக்கமான மற்றும் கட்டண சேவைகளை பெற்றுள்ளது. எளிமையான பகிர்வு (ஷேர்) வசதியை பெறுவதன் மூலம் ஸ்டார்ட் அப்கள் ஆதரவு மற்றும் பிராண்ட் விழிப்புணர்வை பெறலாம். ஆனால் இந்த பங்கேற்பு இயல்பானதாக இருக்க வேண்டும். பயனாளிகள் அறியாமல் பகிரும் வகையில் எதையும் செய்யாதீர்கள் என அவர் எச்சரிக்கிறார்.

3. வருவாய் வாய்ப்பு

ஸ்டார்ட் அப்கள் லட்சக்கணக்கான பயனாளிகளை தங்கள் வசம் ஈர்த்தவுடன், பலவகையான வருவாய் வாய்ப்புகளை ஆராய வேண்டும். ஃபேஸ்புக் ஆடியன்ஸ் நெட்வொர்க் எனும் பெயரில் ஃபேஸ்புக் இதற்கான சேவையை கொண்டுள்ளது. இதன் மூலம் பலவகையான விளம்பர வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கின் ஆடியன்ஸ் நெட்வொர்க் தோற்றம் 

பேஸ்புக்கின் ஆடியன்ஸ் நெட்வொர்க் தோற்றம் 


4. மறு பங்கேற்பு

மறுபங்கேற்பு முக்கியமானது என்கிறார் சத்யஜீத். இ-காமர்ஸ் தளத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பொருட்களை தேர்வு செய்து விட்டு அவற்றை வாங்காமல் செலுவதை இதற்கு உதாரணமாக சொல்கிறார். இதை தவிர்க்க பிராண்ட்கள் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை கொண்டு தனிப்பட்ட செய்திகளை அனுப்பி வாடிக்கையாளர்களை கவரலாம்.

5. அளவீடு

ஸ்டார்ட் அப்கள் தங்கள் சேவையில் முன்னேறும் பாதையில் உள்ள புதிர்களுக்கு தீர்வு காண அளவீடு முக்கிய வழி என்கிறார் சத்யஜீத். இதற்கு உதவ பேஸ்புக் அனல்டிக்ஸ் எனும் இலவச சேவை இருக்கிறது என்கிறார். 

“கன்வெர்ஷன் விகிதம் மற்றும் பயனாளிகள் எங்கிருந்து வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை பெறலாம். மேலும் பல மேடைகளில் செயல்படக்கூடியது என்பதால் பேஸ்புக் காலின் தேவையில்லை.”
பேஸ்புக் மெசஞ்சர் செயலி சார்ந்த சேவைகள் 

பேஸ்புக் மெசஞ்சர் செயலி சார்ந்த சேவைகள் 


இந்த கட்டங்கள் குறித்து மேலும் ஆழமாக பேசிய சத்யஜீத் இவை குறித்து ஸ்டார்ட் அப்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். ஜியோவியோ கேர் எனும் ஸ்டார்ட் அப், சமீபத்தில் தாய்மை அடைந்த பெண்கள் சிசுவின் நலன் குறித்து தகவல்களை பெற உதவும் பேபி பாட் அரட்டை மென்பொருளை உருவாக்கிய விதம் பற்றி விவரித்தது.

மற்றொரு ஸ்டார்ட் அப், ஃபேஸ்புக் அனல்டிக்ஸ் தொடர்பான அனுபவத்தை விவரித்து சுவாரஸ்யமான கேள்விகளையும் எழுப்பியது. அன் இன்ஸ்டால் விகிதம் பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டது. பலரும் கேட்கும் கேள்வி இது என சத்யஜீத் கூறினார்.

கோட் பார் தி நெக்ஸ்ட் பில்லியனில் பங்கேற்ற 10 ஸ்டார்ட் அப்கள்

image


நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப்ஸ், பிராந்திய தலைவர் (தெலுங்கானா மற்றும் ஆந்திரா) விஜய் பாவ்ரா, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் மத்தியில் உரையாற்றி இந்த திட்டம் பற்றி விளக்கினார்.

இந்த ஆறு மாத திட்டம், சமூக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கண்டறியும் நோக்கம் கொண்டது என்று அவர் கூறினார். பிரமிட்டின் கீழ் பகுதியில் இருக்கும் பயனாளிகள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மொபைலை முதல் இலக்காக கொண்ட செயலிகளை இந்த ஸ்டார்ட் அப்கள் உருவாக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 ஸ்டார்ட் அப்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களை சேர்ந்தவையாக இருந்தன. பல்வேறு நகரங்களின் உள்ளூர் வழிகாட்டிகள் உதவியோடு செயல்படும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக விஜய் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் யூனிடஸ் சீட் பண்ட், ஆன்கூர் கேபிடல், இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க் போன்ற வர்த்தக மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டிகளையும் ஸ்டார்ட் அப்கள் அணுகவும் இந்த திட்டம் வழிவகுக்கிறது என அவர் கூறினார்.

அடுத்த யூனிகார்ன்

இந்திய அரசின் இண்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்திருக்கும் நிஷாந்த் மல்கோத்ரா, ஸ்டார்ட் அப்களுடன் தனியே பேசினார்.

உதவி மற்றும் ஆதரவு பற்றி பேசியவர் 2016 ஏப்ரல் முதல் ஸ்டார்ட் அப் இந்தியா குழு கால் செண்டர் மூலம் 53,420, இமெய்டில் மூலம் 25,070 மற்றும் டிவிட்டர் மூலம் 3,141 உள்பட 81,631 கோரிக்கைகளை பெற்றிருப்பதாக கூறினார். அரசு இதுவரை 7.837 ஸ்டார்ட் அப்களை அங்கீகரித்துள்ளது. 87 ஸ்டார்ட் அப்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நிஷாந்த் மல்கோத்ரா பேசுகிறார்

நிஷாந்த் மல்கோத்ரா பேசுகிறார்


ஸ்டார்ட் அப்களின் தாக்கம் பற்றியும் அவர் பேசினார். மின் கழிவில் இருந்து கம்ப்யூட்டர்களை உருவாக்கும் இளம் தொழில்முனைவோரான ஜெயந்த் பராப் மகாராஷ்ட்ரா மாசு கட்டுப்பாடு வாரியத்திடன் பதிவு செய்து கொள்ள உதவியது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

புது யுக நிறுவனங்களான ஓலா மற்றும் பேடிஎம்முடன் ஒப்பிடும் போது விப்ரோ மற்றும் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற அதிக காலம் எடுத்துக்கொண்டன என்றும் அவர் குறிப்பிட்டார். பெரும்பாலான யூனிகார்ன் நிறுவனங்கள் முதல் அடுக்கு நகரங்களில் இருந்து வந்தூள்ளன. ஆனால் தொழில்நுட்பம் பரவலாகி வரும் நிலையில் இது மாறக்கூடும்.

ஸ்டார்ட் அப்களுடன் நடத்திய உரையாடல் அடிப்படையில் அடுத்த யூனிகார்ன் நிறுவனங்கள் இராண்டாம் அடுக்கு மற்றும் சிறிய நகரங்களில் இருந்து வரும் என நம்புவதாக நிஷாந்த் கூறினார். மின்வணிகம், மருத்துவம் மற்றும் உணவு நுட்பம் ஆகிய பிரிவுகளில் இதுவரை அதிக செயல்பாடுகள் இருந்தாலும் விவசாய நுட்பம், லாஜிஸ்டிகஸ், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அதிக வாய்ப்பிருப்பதாக கூறினார்.

நாடு முழுவதும் 20 இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் புதுமை மற்றும் ஸ்டார்ட் அப்களை ஊக்குவத்து 15,000 தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான ஸ்டார்ட் அப் இந்தியா யாத்திரை பற்றியும் நிஷாந்த் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தில்: ஹர்ஷித் மல்லையா | தமிழில்: சைபர்சிம்மன் 

Add to
Shares
37
Comments
Share This
Add to
Shares
37
Comments
Share
Report an issue
Authors

Related Tags