பதிப்புகளில்

சர்வதேச சூரிய சக்தி கூட்டணி கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

YS TEAM TAMIL
29th Dec 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய மின்சார அமைச்சகத்தின் திட்டமான சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. சர்வதேச சூரிய சக்தி கூட்டணி பாரிசில் 2015 நவம்பர் 30 – ந் தேதி இந்தியப் பிரதமர் மற்றும் பிரான்ஸ் அதிபர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. பருவ நிலை மாற்றம் குறித்த ஐநா கட்டமைப்பு மாநாட்டின் சம்மந்தப்பட்ட தரப்பினர் குழுவின் 21 –வது கூட்டத்தின்போது இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டது.

image


உலகின் 121 சூரிய சக்தி வளமுள்ள நாடுகளை ஒருங்கிணைக்கும் இந்த சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி ஆராய்ச்சி குறைந்த கட்டண நிதி உதவி மற்றும் விரைந்த திட்ட அமைப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளுவதற்கு ஏற்படுத்தப்பட்டது. அரியானா மாநிலம் குருகிராமில் குவால்பஹாரி என்ற இடத்தில் சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி தலைமை இடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கூட்டணியில் செயல்படுத்துவதற்கு தேவையான ஆதரவு வழங்க இந்தியா உறுதி அளித்துள்ளது. இந்தக் கூட்டணி இந்தியாவிற்கு உலக அளவில் பருவநிலை மற்றும் புதுப்பிக்கக் கூடிய மின்சார தொடர்பான பிரச்சினைகளில் தலைமைப் பங்கை அளிக்கிறது. இந்த அமைப்பு இந்தியாவின் சூரிய சக்தி திட்டங்களைக் காட்சிப்படுத்துவதற்கு மேடை அமைத்து தந்துள்ளது.

பின்னணி:

இந்த உடன்பாடு மொரோக்கோ நாட்டின் மராகேஷ் நகரில் சம்மந்தப்பட்ட தரப்பினர் குழுவின் 22 – வது திட்டத்தின் போது கையெழுத்துக்காக வைக்கப்பட்டது. இந்த உடன்பாடு சர்வதேச சூரிய சக்தி கூட்டணி தொடர்பான பாரீஸ் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டது. இது தனது உறுப்பு நாடுகளுக்கு சூரிய சக்தி குறித்த நெடுநோக்கை வழங்குகிறது. ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம், உலகவங்கி ஆகியவை இந்தக் கூட்டணியில் சேருவதாக அறிவித்துள்ளது. இதுவரை 25 நாடுகள் இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக