பதிப்புகளில்

கெராஜில் பிறந்த 'வொயில்டுகிராஃப்ட்' இன்று 400 இந்திய நகரங்களில் விழுதுவிட்ட ஆலமரம்

tharun kartic
15th Oct 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

பெங்களூருவின் ஜெய நகரில் சிறிய கெராஜ் ஒன்றில் நண்பர்களால் பொழுதுபோக்காக "வொயில்டுகிராஃப்ட்" (Wildcraft) ஸ்டோர் தொடங்கப்பட்டது. இன்று இந்தியா முழுவதும் 400 நகரங்களில் 130 பிரத்யேகமான ஸ்டோர்கள், 3 ஆயிரம் மல்டி பிராண்டட் ஸ்டோர்களாக விழுதுகளிறங்கிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. 2013ம் ஆண்டு மார்க்யூ வென்ச்சர் கேபிட்டல் நிறுவனமான செக்கோயா கேபிட்டலில் (marquee venture firm Sequoia Capital) இருந்து பெறப்பட்ட 10 மில்லியன் யுஎஸ் டாலரை முதலீடாகக் கொண்டு வொயில்டுகிராஃப்ட் தொடங்கப்பட்டது.

ஊர் சுற்றுவதில் ஆர்வலரான தினேஷ் என்ற பொறியாளரால் தொண்ணூறுகளில் ஆரம்பிக்கப்பட்டது வொயில்டுகிராஃப்ட். வெளிப்புறங்களுக்கு எடுத்துச்செல்லக்கூடிய ஒரு நம்பகமான மிகச் சிறந்த உடைகள மற்றும் கருவிகள் வேண்டும் என்ற தேவையின் அடிப்படையில் இந்நிறுவனம் உருவானது. ஒருமுறை சுற்றுலா சென்றபோது தினேஷ் விபத்தில் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் உருவான எண்ணம்தான் வொயில்டுகிராஃப்ட் பிறப்பதற்குக் காரணமாக அமைந்தது.

சுற்றுலா குறித்த பேரார்வத்திலும், மிகச்சிறந்த டிராவல் பேக் மற்றும் உபகரணங்களின் தேவையும் வொயில்டு கிராஃப்டை உருவாக்க வைத்திருக்கிறது. ஆனால், அதன் பயணம் அசாதராணமானது. 80கள் மற்றும் 90களில் தினேஷ் மற்றும் ஆரம்பக்கால பயண ஆர்வலர்கள், தேவையான பெரும்பாலான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்றுள்ளனர். சரியான கூடாரங்கள், தூக்கத்திற்கான டென்ட் பைகள், முரட்டுப்பைகள் ஆகியவை கிடைக்காமல் தினேஷும் அவருடைய நண்பர்களும் தங்களுக்கான பயண பேக்குகளை டிசைன் செய்யவும் தயாரிக்கவும் தொடங்கினர்.

நிறுவனத்தை உருவாக்குதல்

வொயில்டுகிராஃப்ட்டின் இணை நிறுவனர் கவுரவ் துப்லிஷ், “நானும் சித்தார்த்தும் கல்லூரிப் படிப்பை முடித்ததும் 2001ல் வொயில்டுகிராஃப்டில் சேர்ந்தோம். எங்களுக்கு சொந்தப் பணிகள் இருந்ததால், பகுதிநேரமாகத்தான் வேலை பார்த்தோம். 2007ம் ஆண்டு எங்களுடைய வெளிப்புற கருவிகள் குறித்த ஆர்வத்தை வணிகரீதியான வாய்ப்புள்ள புதிய தொழிலாக மாற்ற முடிவுசெய்தோம்” என்கிறார்.

வெளிப்புற கருவிகள், சுற்றுலாவுக்கான பைகள் மற்றும் உபகரணத் தொழில் இந்தியாவில் முறைசாராத தொழிலாக இருந்த நேரத்தில் வொயில்டுகிராஃப்ட் தோன்றியதாக கவுரவ் குறிப்பிடுகிறார். சர்வதேச மலையேறிகள் வெளிநாட்டில் தயாரான பைகளைப் பயன்படுத்துவது சந்தையில் முக்கிய வாய்ப்பாக இருந்தது. சில சர்வதேச பிராண்ட்கள் சந்தை வழியாக விநியோகம் செய்யப்பட்டு வந்தன என்கிறார். ஆனால் அதன் எண்ணிக்கை சொற்பம்தான்.

“இந்தியாவில் சாகசம் செய்வதில் விருப்பமுள்ள ஆர்வலர்கள் அதிகரிக்கும்போது, புதுமையான, தரமான தயாரிப்புகள் அவசர தேவை என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். தயாரிப்புகளின் வடிவம் மற்றும் செயல்பாடுகள் எங்களுடைய தொழிலில் முதன்மை மற்றும் முக்கியமான இடத்தில் இருந்தன. அந்த அணுகுமுறை இன்றுவரை தொடர்கிறது. தரமான சுற்றுலாப் பைகளின் மூலம் ஊக்கமுள்ள, செயல்திறன்மிக்க இந்தியர்கள் வெளிப்புறச் சுற்றுலாவில் அனுபவம் பெறுவதை எங்களது நோக்கமாக இருந்தது” என்று கூறுகிறார் கெளரவ்.

குழுவை உருவாக்குதல்

சில பகுதிநேர பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட வொயில்டுகிராஃப்ட் நிறுவனத்தில் இன்று எண்ணிக்கை 3 ஆயிரம் பேரைத் தாண்டிவிட்டது. ஒரு நீண்ட பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கிறது. அந்தப் பயணத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவர்களான கவுரவ், சித்தார்த் மற்றும் தினேஷும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். 2007ம் ஆண்டு ஒரு மாற்றம் நடந்தது, கவுரவ் மற்றும் சித்தார்த் இருவரும் ஸ்டாண்டர்ட் சார்ட்ட் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவன வேலைகளில் இருந்து விலகினார்கள்.

image


“நாங்கள் வரையறுக்கப்பட்ட முறையில் தொழிலின் இயக்கத்தை புரிந்துகொண்டோம் என்கிறார் கவுரவ். பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்தால், அது ஆதரவு அமைப்பைத் தரும், சுலபமாகவும் இருக்கும். “நீங்கள் ஒரு தொழிலை பூஜ்யத்தில் தொடங்கும்போது, எங்கிருந்து தொடங்குவது என்று நமக்குத் தெரியாது. எனவே டிஸைன், விநியோகம், உற்பத்தி, நிதி நிர்வாகம் என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். பிறகு அதையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும். அதன் பின்னர் சரியான பணியாளர்களைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் உங்களுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றுவார்கள்” என்று கூறுகிறார் கவுரவ்.

இன்று, உங்களுக்கு சொல்ல வொயில்டுகிராஃப்ட் வேறுபட்ட கதை வைத்திருக்கிறது. அடித்தளம் கூடுதல் வலிமையுடன் இருக்கிறது. அவர்களுக்கு பிரத்யேக டிசைன் குழுவும், வளர்ச்சிக் குழுவும் இருக்கின்றன. மேலும் சர்வதேச விநியோக தொடர்பும், பங்குதாரர் நெட்வொர்க்குடன் கூடிய 2500 உறுப்பினர்களைக் கொண்ட உற்பத்தி அமைப்பும் உள்ளது.

இந்தியா முழுதும் விரிவாக்கம்

கடந்த நான்கு ஆண்டுகளில் வொயில்டுகிராஃப்ட் முக்கியத்துவமான வளர்ச்சியை விற்பனை புள்ளிவிவரத்தில் அடைந்திருக்கிறது. 2011 நிதியாண்டில் வொயில்டுகிராஃப்ட் 50 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டின் முடிவில் அவர்களின் வளர்ச்சி இலக்கு 250 கோடி ரூபாயாக இருக்கிறது.

2009ம் ஆண்டு இந்தக் குழு தங்களுடைய நிறுவனத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்க முடிவு செய்தது, முதற்கட்டமாக பெங்களூருவைப் போல ஹைதராபாத், சென்னை மற்றும் புனேவில் வொயில்டுகிராஃப்ட் தொடங்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் கருத்துகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்களை வைத்து நாடு முழுவதும் விரிவாக்கும் முயற்சிகளில் இறங்கினார்கள்.

செக்கோயா கேப்பிடல் நிறுவனம் முதலீடு

2013, டிசம்பரில் வொயில்டுகிராஃப்டின் வளர்ச்சி சந்தையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தில் செக்கோயா கேப்பிட்டல் (Sequoia Capital) 60 கோடி ரூபாய் அளவுக்கு சிறுபான்மை முதலீடு செய்தது.

“கவுரவ் மற்றும் சித்தார்த் அசாதாரணமான தொழில்முனைவர்களாக அவர்களுடைய தொழிலில் உச்சத்தில் இருந்தார்கள். அவர்களுக்கு மார்க்கெட் புரிந்திருந்தது, தொழிலைப் புரிந்து வைத்திருந்தார்கள், மேலும் பகுப்பாய்வு மற்றும் அளவீடு முறையில் தொழிலை அணுகும் முறை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பொருள்களின் தரத்தில் உறுதியாக இருந்தார்கள்” என்கிறார் செக்கோயா கேபிட்டல் இந்தியா ஆலோசகர்கள் அமைப்பின் மேலாண்மை இயக்குநர் ரவிசங்கர்.

மேலும் பேசிய அவர், பல்வேறு தயாரிப்புகளை பலரும் சந்தைப்படுத்திய நிலையிலும், அவற்றின் செயல்பாடும், பயன்பாடும் சரியாக இல்லை என்றும் கூறுகிறார்.

இந்தியாவில் வெளிப்புற சுற்றுலா மற்றும் சாகசங்களுக்கான வளர்ச்சியில் பெரும் நாட்டமின்மை இருந்தது என்கிறார் கவுரவ். புகழ்பெற்ற சாகசப் பிரதேசங்களும், வெளிப்புற செயல்பாடுகளில் அனுபவம் சேகரிக்க எண்ணற்ற மக்கள் இருந்தாலும் இயற்கைக்குத் தொடர்பில்லாத வெளிப்புற சுற்றுலாவை ஊடகங்கள் பெரிதுபடுத்தின.

“ஆனால் மேற்கைப் போல் அல்லாமல், இந்தியர்கள் ஒன்று மற்றும் வேறுபட்ட நடவடிக்கைகளை முயற்சி செய்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு நடவடிக்கையில் நிபுணத்துவம் அடைவதைவிட, தற்போது அவையெல்லாம் அனுபவம் என்ற அளவிலேயே இருக்கின்றன” என்று விவரிக்கிறார் கவுரவ்.

உண்மையான வெளிப்புற சுற்றுலாவுக்கான தயாரிப்புகள் செயல்பாட்டில் உயர்வாக இருக்கவேண்டிய தேவை இருந்தது. ஒவ்வொரு நாள் பருவநிலையும் சமமாக இருப்பதில்லை. நிதி முதலீடு செய்வதற்கான உரையாடல்கள் தொடங்கியபோது, வொயில்டுகிராஃப்ட் போன்ற பிராண்டை ஏற்றுக்கொள்ள மேலும் வெளிப்படையாக இருந்தது சந்தை என்கிறார் ரவிசங்கர்.

“வாழ்க்கைமுறையாக விளையாட்டு மாறியதும், அதில் இருந்து நகர்ந்து தனி மனிதர்களின் மலையேற்றம், சைக்கிளிங் மற்றும் பயிற்சி ஓட்டம் எல்லாம் முக்கியமாக இருந்தது முதல் விஷயம், இந்த டிரெண்ட் இந்தியாவில் வளர்வதை நாங்கள் பார்த்தோம். அந்த அலையில்தான் வொயில்டுகிராஃப்ட் போன்ற பிராண்டுகள் நீச்சலடிக்க வேண்டியிருந்தது. மிகச்சிறந்த தயாரிப்பு தொகுப்புகளை தொழில்முனையும் குழு சந்தைக்கு எடுத்துச்சென்றது” என்கிறார் ரவிசங்கர்.

நிதி முதலீடு

இரண்டு ஆண்டுகள் கடந்து, கடைசிகட்ட நிதி முதலீட்டின்போது வொயில்டுகிராஃப்ட் முக்கியமான மாற்றத்தைக் கண்டது. “வொயில்டுகிராஃப்டில் மிகச் சிறந்த தலைமைக் குழு இருந்தது. இன்றைய மார்க்கெட்டில் அது சிறந்த ஒன்று. கவுரவ் மற்றும் சித்தார்த் இருவரும் இரண்டு ஆண்டுகளை காலக்கணிக்கில் வைத்துக்கொள்வதில்லை. 20 ஆண்டுளை முன்னோக்கிப்பார்க்கிறார்கள்” என்று பாராட்டுகிறார் ரவிசங்கர்.

கம்பெனியின் முக்கிய மதிப்புகளும், நம்பிக்கைகளும் இன்றுவரை அப்படி தொடர்வதாகக் கூறுகிறார் கவுரவ். “நாங்கள் இளமையான, ஆற்றல் மிகுந்த குழு, இங்குள்ள ஒவ்வொருவரும் தொழிலில் ஆர்வமும், சொந்த தொழில் என்ற பங்கேற்பு உணர்வும் கொண்டவர்கள். எங்களுடைய சமூக மற்றும் மின்னணு தளங்களிலும் உற்சாகத்தைப் பெற்றோம். சர்வதேச சந்தைகளில் தளங்களை ஏற்படுத்தினோம். மேலும் Hypadura, Hypacool, Hypadry and Hypawarm போன்ற புதுமையான தொழில்நுட்பத்தில் முதலீடுகள் செய்தோம்” என்கிறார்.

image


இந்தக் குழுவினர் தரமான தயாரிப்பு மற்றும் இந்தியாவின் வெளிப்புற சுற்றுலாவில், பைகள் சந்தையில் பிராண்ட்டை கட்டமைப்பதில் கவனம் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வொயில்டுகிராஃப்ட் 50 முதல் 60 சதவிகிதம் வரையில் வளர்ச்சியை அடைந்தது. ஆண்டுதோறும் 2 மில்லியன் பைகளை அவர்கள் விற்பனை செய்தார்கள். சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆடைகள் மற்றும் காலணிகள் விற்பனையில் தளர்ச்சி இருந்தது.

“அமைப்பையும் செயல்முறையையும் முறையான இடத்தி்ல வைத்து, இந்தக் குழுவினர் குறைந்த செலவில் வணிகத்தை சரியான பாதையில் கட்டி எழுப்பினார்கள்” என்று குறிப்பிடுகிறார் ரவிசங்கர்.

வெறும் வெளிப்புற சுற்றுலாப் பைகளை மட்டும் தயாரித்த வொயில்டுகிராஃப்ட், தலைமுதல் கால்வரையில் பயன்படும் தயாரிப்புகளையும் உருவாக்கும் திட்டத்துக்கு மாறியது. இந்தக் குழுவினர் பிராண்ட்டை சந்தையில் முறையாக சந்தைப்படுத்துவதில் அதிக கவனம் வைத்தனர். கடந்த ஆண்டு விளம்பரப் பலகைகளைத் தாண்டி வொயில்டுகிராஃப்ட் முதன்முறையாக தொலைக்காட்சி விளம்பரப்படம் (TVC) தயாரித்தது.

எதிர்காலத் திட்டங்கள்

தற்போது வொயில்டுகிராஃப்ட் சர்வதேச அளவுக்கு வணிகத்தை விரிவாக்க மத்திய கிழக்கு மற்றும் கிழக்கத்திய சந்தைகளை சென்றடைய திட்டமிடுகிறது. “இந்திய பருவநிலைக்கு ஏற்ற வெப்பம், மழை மற்றும் ஈரத்தைத் தாங்கக்கூடிய வெளிப்புற சுற்றுலா ஆடைகள் மற்றும் பைகள் தேவையாக இருக்கின்றன. அதுபோன்ற சந்தையைத்தான் இலக்கு வைத்திருக்கிறோம்” என்று சாதனைக் கதையை கூறிமுடிக்கிறார் கவுரவ்.

இணையதள முகவரி: WildCraft

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக