பதிப்புகளில்

4-வதோடு படிப்புக்கு மூட்டைக் கட்டும் நிலை ஏற்பட்டும் தொடர் முயற்சியால் ஐஏஎஸ் ஆன ஆட்டோ ஓட்டுனர் மகன்!

ஏழைக் குடும்பத்தில் பிறந்த அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் நிறைந்தவை. ஆனால், அனைத்தையும் கடந்து இன்று யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிக் கண்டு  ‘இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரி’ ஆகியுள்ளார்.

9th Aug 2018
Add to
Shares
19.5k
Comments
Share This
Add to
Shares
19.5k
Comments
Share

ஃபேஸ்புக்கை அடிக்கடி லாகின் செய்து டைம்லைனை நோட்டமிடுபவர்கள் போல், டிஎன்பிஎஸ்சி வெப்சைட் அடிக்கடி எட்டி பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டிருக்கிறது. ஆம், முன் காலங்களைவிட அரசு தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் அதிகரித்துவிட்டர் என்றாலும், பலரும் பத்தோடு பதினொன்றாகவே படிக்கின்றனர் மற்றும் படிக்க வற்புறுத்தப்படுகின்றனர். அப்படி எக்சாம் போபியாவால் திணறுபவர்களுக்கு அன்சார் ஷாயிக் சொல்லிக் கொள்வது இதை தான்,

“போட்டித் தேர்வில் உங்களுடன் லட்சம்பேர் போட்டியிடுவார்கள் என்று பயந்தீர்களாயின் அது தவறு. உங்களுடைய ஒரே போட்டியாளர் நீங்கள் தான். எனவே, உங்கள் நம்பிக்கையற்ற எண்ணங்கள் அனைத்தையும் தூரவீசிவிட்டு பயணியுங்கள், வெற்றி உங்கள் பாதையைத் தேடி வரும்,” என்கிறார். 

அது சரி, ஆனால் யாரிந்த அன்சார் ஷாயிக்...? 

நம்பிக்கையின் நாயகன், விடாமுயற்சியின் காதலன். ஆம், அதுவே அவருக்கான சரியான அடையாளமாய் இருக்கும். இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் ஒருவர் அவரது பாதையில் எத்தனை கற்களையும், மேடுகளையும் தாண்டிவிட முடியும்? அன்சார் கடந்துவந்த பாதை முழுவதுமே தங்கு தடைகள் தான். ஆனால், அனைத்தையும் கடந்து இன்று ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்துடன் ‘இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரி’ என்ற அடைமொழியுடன் நிமிர்ந்து நிற்கிறார். 

பட உதவி : மில்லட் டைம்ஸ் 

பட உதவி : மில்லட் டைம்ஸ் 


2016ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வை எதிர்கொண்ட முதல் முயற்சிலேயே வெற்றிக்கண்டு 21 வயதிலே கலெக்டராகி மேற்கு வங்க மாநிலத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் அன்சார். 

அன்சார் கடந்துவந்த கரடுமுரடான பாதை

மகாராஷ்டிராவின் பர்பானி சிட்டியின் ஷெல்கான் கிராமத்தில் பிறந்தவர் அன்சார் ஷாயிக். அப்பா ஆட்டோ ஓட்டுநர். அவருக்கு மூன்று மனைவி. இரண்டாவது மனைவியான அன்சாரின் அம்மா, விவசாய வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளி. ஏற்கனவே, குடும்ப பொருளாதார நிலை மோசம். இதில், அன்சாரின் அப்பாவுக்கு குடிப்பழக்கமும் தொற்றிக்கொள்ள குடிக்கு அடிமையாகி, தினம்தினம் சண்டை, சச்சரவு என நிம்மதியற்ற வாழ்வு. 

நாட்கள் இப்படியாக கழிந்தாலும், அன்சார் படிப்பில் படுச்சுட்டி. ஆனால், குடும்பத்தின் நிலையின் காரணமாக அக்கம்பக்கத்தாரும், சுற்றதாரும் அன்சாரின் அப்பாவிடம், அன்சாரின் படிப்பை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அவரும், அதற்கு சம்மதம் தெரிவித்து அன்சாரின் ஆசிரியரிடம் பள்ளியை பாதியில் நிறுத்த கேட்டிருக்கிறார். 

“எனக்கு நல்லா நினைவில் இருக்கிறது. அப்போ நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். சொந்தகாரங்க எல்லாம் அப்பாட்ட என்னை ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிக் கொண்டு இருந்தனர். அப்பாவும் டீச்சருக்கு போன் பண்ணி, நான் இனிமேல் ஸ்கூலுக்கு வரமாட்டன் சொன்னார். ஆனால், டீச்சர் தான் ‘அவன் நல்லா படிக்கிற பையன். அவனை மட்டும் படிக்க வைத்தீங்கனா, உங்க குடும்பத்தின் நிலையே மாறிபோகும்’ என்று சொல்லியிருக்காங்க...” 

என்று நினைவுகூறும் அன்சார், அவரது வாழ்க்கையின் திருப்புமுனை சம்பவம் அதுவே என்கிறார். ஆசிரியரால் அன்சாருக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்துள்ளனர் அவருடைய பெற்றோர். அந்த வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திகொள்ள தீர்மானித்த சிறுவன் வைராக்கியதுடன் படித்து, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 91% மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார். 

அவருடைய வாழ்வின் கஷ்டக்காலமான பள்ளிப் பருவத்தை பற்றி சிரித்து கொண்டே அன்சார் பகிர்ந்து கொண்டாலும், மூன்றுவேளை உணவுக்கு வழியற்ற நிலையில், ஒருநாள் மதியஉணவில் புழு கிடந்தும் பொருட்படுத்தாமல் உண்டு உள்ளார்.

“எனக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிடிக்கும். மூன்று வேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையின் நான்-வெஜ்ஜுக்கு எங்கு போவது. ஒருநாள், லன்ச்சில் புழுகிடந்தது. அதையும் சாப்பிட்டோம். சோ, வெஜ் மீல்ஸ், நான் வெஜ்ஜாகிவிட்டது,” 
பட உதவி : மில்லட் டைம்ஸ் 

பட உதவி : மில்லட் டைம்ஸ் 


என்று சிரிக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு புனேவில் உள்ள கல்லூரியில் இளங்கலை பொலிடிக்கல் சயன்சில் சேர்ந்திருக்கிறார். மராத்தி மீடியம் பள்ளியில் படித்த அவருக்கு, ஆங்கிலவழி கல்வியை எதிர்கொள்வது சிரமமாக இருந்துள்ளது. ஆனால், எதற்கும் சோர்வு அடையாதவரே அன்சார், ஆங்கிலத்தையும் ஒரு கைப்பார்த்தார். 

அன்சாரின் கல்லூரி செலவுக்காக அவருடைய அப்பாவும், தம்பியின் முழு சம்பளமான 7 ஆயிரத்தையும் செலவிட்டிருக்கின்றனர். ஒரு ஜோடி செருப்பு, இரண்டு ஜோடி ஆடையுடன் கல்லுõரிக்கு சென்று வந்திருக்கிறார். 

இச்சமயத்தில் ஒருநாள், அரசாங்க வீட்டு திட்டத்துக்காக அன்சாரின் அப்பா ஆவணங்களை தயார் செய்திருக்கிறார். ஆனால், ஆவணங்களை மேற்பார்வையிட்டு கையெழுத்திட ஒரு அதிகாரி லஞ்சம் கேட்டிருக்கிறார். இச்சம்பவம் அன்சாரை நெருட வைத்ததுடன், ஆட்சியர் ஆகுவதற்கான விதையாகவும் அமைந்துள்ளது. 

கல்லூரியில் படித்து கொண்டிருக்கும்போதே, யுபிஎஸ்சி தேர்வுக்காக பயிற்சி வகுப்பில் சேருவதற்கு புனேவில் உள்ள ‘யுனிக் அகாடமி’யை அணுகியுள்ளார். ஆனால், அதற்கான கட்டணம் ரூ70 ஆயிரம் என்றறிந்து மனம் சோர்வடைந்தவர், அகாடமியின் நிறுவனரிடம் தன் நிலையை எடுத்துரைத்து உதவி செய்யுமாறு வேண்டிக் கொண்டுள்ளார். இலகிய மனம் படைத்த அவரும் அன்சாருக்கு உதவ முன்வந்து 50 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்துமாறு கூறியிருக்கிறார். 

பட உதவி: பெட்டர் இந்தியா 

பட உதவி: பெட்டர் இந்தியா 


“ஒரு வழியாக பயிற்சி மையத்தில் சேர்ந்தால், என் வயதுடையவர்கள் யாருமில்லை. எல்லோரும் 20 வயது 30வயது என்றிருந்தனர். நான் மையத்தில் அடிக்கடி கேள்வி கேட்பதை எல்லோரும் எள்ளிநகையாடினர். ஆனால், நான் கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. அந்நாட்களில், பாடப்புத்தகங்கள் வாங்குவதற்கும் பணமிருக்காது. சகவகுப்பு தோழர்களிடம் புத்தகத்தை வாங்கி ஜெராக்ஸ் போட்டு கொள்வேன். ‘வட பாவ்’ மட்டும் என் முழு நாள் உணவாகவும் இருந்திருக்கிறது,”

எனும் அன்சார் பிரிலிம்சை முடித்து விட்டு மெயின்ஸ் மற்றும் நேர்முகத்தேர்வுக்காக காத்திருந்தபோது ஏற்பட்டது மற்றொரு தடை. 

அன்சாரின் தங்கையின் கணவர் குடித்து குடித்து இறந்துள்ளார். அதனால், அப்பாவும், தம்பியும் பணிப்புரிந்து கொண்டிருந்த போதும், குடும்பச் சுமை அன்சாரின் மீது விழுந்துள்ளது. ஆனால், அன்சாரின் தங்கை நம்பிக்கை வார்த்தைகளை அளிக்க, தொடர்ந்து தேர்வுக்காக படித்திருக்கிறார். 

இத்தனை கஷ்டங்கடலிலும் எதிர்நீச்சல் அடித்த அன்சார் எதிர்பார்த்த நாள் வந்தது. ஆம், அன்சார் மாவட்ட ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அபீசியலாக அறிவிக்கப்பட்ட தினம் அது. விடியலை நோக்கி காத்துக் கொண்டிருந்த ஒட்டுமொத்த குடும்பம் மட்டுமின்றி, ஷெல்கான் கிராமமே ஆனந்தத்தில் திளைத்தது.

பட உதவி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பட உதவி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 


“வறுமைக்கும், வெற்றிக்கும் தொடர்பில்லை. வெற்றிக்கு தேவையானது கடினஉழைப்பும் விடாமுயற்சியுமே. ஒருவர் எந்த குடும்ப பின்புலத்தில் இருந்து வருகிறார் என்பதை வைத்து, அவருடைய புத்திசாலிதனத்தை அறிந்து கொள்ள முடியாது. வறுமையின் கொடியில் சிக்கித்தவிப்பவர்கள், அதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி கற்றலே. இது எளிதல்ல.. ஆனால், கடுமையான உழைப்பினால் சாத்தியமே,” என்கிறார் அன்சார். 

தகவல் உதவி : thebetterindia.com மற்றும் kenfolios.com

Add to
Shares
19.5k
Comments
Share This
Add to
Shares
19.5k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக