பதிப்புகளில்

மத்திய பட்ஜெட் 2017-18: முக்கிய அம்சங்கள்!

1st Feb 2017
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

இன்று 2017-18 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, முதன் முறையாக ரயில்வே பட்ஜெட்டையும் அதனுடன் சேர்த்து வெளியிட்டார். பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, 

image


“மாற்றம், ஊக்கம், சுத்தமான இந்தியா- தரமான அரசை சிறந்த வாழ்க்கை முறையாக மாற்றும் முயற்சி. சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களை, குறிப்பாக இளைஞர்கள், பாதிக்கப்பட்டோர்களை ஊக்கப்படுத்தி, ஊழல் என்ற அறக்கனை நாட்டைவிட்டு விரட்டி, கறுப்புப் பணம் மற்றும் வெளிப்படையில்லாத அரசியல் முதலீடுகளை களைந்து நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்,” என்றார்.

ஊரக பகுதிகளுக்கு செலவிடுவதே தங்களின் நோக்கம் என்று தெரிவித்த ஜெட்லி, கட்டமைப்பு மற்றும் வறுமையை ஒழித்து, நிதி மேம்பாட்டில் கவனம் செலுத்த உள்ளதாக கூறினார். பொருளாதார சீரமைப்புகள் மூலம் தொடர்ந்து அதிக முதலீடுகள் பெற்று, ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டோர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும். 

2017-18 பட்ஜெட்டின் மொத்த செலவீனம் ரூ.21.47 லட்சம் கோடிகள் ஆகும். இது மேலும் பெரும் வாய்ப்புள்ளதாக ஜெட்லி தெரிவித்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்படும் தொகை ரூ.4.11 லட்சம் கோடிகள் என்றார். கடந்த ஆண்டு இது 3.60 லட்சம் கோடிகளாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். 

இந்தியா சர்வதேச அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது, என்று கூறிய அருண் ஜெட்லி, ”நல்ல ஒரு முயற்சி தோற்றுப்போனதில்லை” என்ற மகாத்மா காந்தியின் மொழிகளை குறிப்பிட்டார். ’மிஷன் அந்த்யோதயா’ என்ற திட்டத்தை பற்றி பேசினார் ஜெட்லி. 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளை வறுமையில் இருந்து ஒழிக்கும் இத்திட்டம் காந்தியின் 150-வது பிறந்தநாளின் நினைவாக செயல்முறைப்படுத்தப் படும் என்றார். 

பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் குழந்தகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.1,56,538 கோடியில் இருந்து தற்போது ரூ.1,84,632 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

கட்டமைப்பு வளர்ச்சிகளுக்காக 2017-18 ஆண்டில் ரூ.3,96,135 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  

ரயில்வே செலவீனம் ரூ.1,31,000 கோடியில், அரசு ரூ.55000 கோடியை அளிக்கும். 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் அளிக்கு இலக்கு ரூ.2.44 லட்சம் கோடி என்று இந்த நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2015-16 ஒதுக்கப்பட்டதை விட இரண்டு மடங்காகும். 

 


Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags