பதிப்புகளில்

TechSparks 2017- யுவர்ஸ்டோரி நடத்தும் பிரம்மாண்ட ஆண்டு விழா அறிவிப்பு!

YS TEAM TAMIL
26th Jun 2017
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

ஸ்டார்ட்-அப்’கள் இடையே முதலீடுகள் பேச்சு அடங்கி, தற்போது அவரவர் தொழிலில் கவனம் செலுத்தவேண்டிய நேரம் தொடங்கிவிட்டது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பு அல்லது சேவையைக் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து தொழிலில் வளர தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நல்ல நேரம் தொடங்கிவிட்டது...

image


ஆம், யுவர்ஸ்டோரி’ இன் பிரம்மாண்ட வருடாந்திர நிகழ்ச்சி ‘டெக்ஸ்பார்க்ஸ் 2017’ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-23 ஆம் தேதி, பெங்களூர் யெஷ்வந்த்பூரில் உள்ள தாஜ் விவாண்டா’வில் நடைபெறும் யுவர்ஸ்டோரியின் 8-வது பதிப்பு டெக்ஸ்பார்க்ஸ், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகளை உலகிற்கு வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். 

இந்த ஆண்டு விழாவில் உலகெங்கும் உள்ள சிறந்த பேச்சாளர்கள், தங்கள் அனுபவங்களை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதே இவ்விழாவின் சிறப்பம்சமாகும். வெற்றிக்கதைகள் முதல் தோல்வி அனுபவங்கள் வரை, தாங்கள் சந்தித்த சவால்கள் என்று பலரும் தங்கள் தொழில் பயணங்களை பகிரவுள்ளனர். 

’டெக்ஸ்பார்க்ஸ் 2017’ இந்தியா முழுதுமுள்ள தொழில்முனைவோர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழிலதிபர்களை அழைத்து பிரம்மாண்டமாக கொண்டாடும் விழா ஆகும். 

TechSparks 2017 தளத்தை க்ளிக் செய்து TS17SEB60 என்ற ப்ரோமோ கோட் பயன்படுத்தி சிறப்பு தள்ளுபடி பெறுங்கள். 

பல துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அவர்களின் கதைகளை பகிர்ந்து, முதலீட்டாளர்கள் முன்னிலையில் பிட்ச் செய்து, தேவையான ஆலோசனை, வழிகாட்டுதலை பெறலாம். பல புதிய வாய்ப்புகளுக்கான கதவு திறக்க டெக்ஸ்பார்க்ஸ் வழி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. 

டெக்30 (Tech 30)

எல்லா ஆண்டையும் போல், இந்த டெக்ஸ்பார்க்சிலும் சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் பெற வாய்ப்புள்ளது. விண்ணப்பித்தவர்களில் இருந்து சிறப்பான, வெற்றிகரமான தொழில் பயணம் கொண்டுள்ள நிறுவனங்கள் பட்டியலை யுவர்ஸ்டோரி வெளியிடும். கடந்த வருடங்களில் தேர்வான டெக்30 நிறுவனங்களில் பல இன்று பெரிய அளவு வளர்ச்சியடைந்து நிற்கின்றன. Little Eye Labs, Forus, Capillary, Freshdesk, Loginext, மற்றும் Niki.ai போன்றவை அதில் அடங்கும். 

டெக்30 விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது! உடனே பதிவு செய்யுங்கள்

டெக்ஸ்பார்க்ஸ் விழாவுக்கு வாருங்கள்... உங்கள் தொடர்புகளை பெருக்கிக்கொண்டு, உங்கள் கனவுப் பயணத்தை தொடங்கி லாபகரமாக தொழில் செய்து வெற்றி அடையுங்கள்!


Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக