பதிப்புகளில்

நீங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுபவரா? பாலியல் தொல்லை தொடர்பான உங்கள் உரிமைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

18th Feb 2016
Add to
Shares
31
Comments
Share This
Add to
Shares
31
Comments
Share

சட்டக் கல்வியை மறு-உருவாக்கம் செய்யும் ஐப்லீடர்ஸ் அமைப்புக்காக பணியாற்றும் பல்லவி பரீக் ‘வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள்', ‘அலுவலகம் செல்லா ஆலோசகர்கள்’, ‘விருப்ப நேரத்துக்கு வேலைக்கு செல்வோர்’, என இந்தப் புதுயுக பணியார்கள், பாலியல் தொல்லைக்கு எதிரான தங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ள உதவுகிறார்.

விருப்பத்துக்கு ஏற்ப வேலை நேரம், பகுதி நேர வேலை மற்றும் வீட்டிலிருந்தபடி வேலை போன்றவை பணியிடத்தின் புதிய பரிமாணமாக உருவெடுத்துள்ளது. இதுபோன்ற வேலை வாய்ப்புகளை உகந்த பெண்களுக்கு அளிப்பதில் ஷீரோஸ்(SHEROES), ஃப்ளெக்ஸிகரியர்ஸ் இந்தியா (FlexiCareers India) நிறுவனங்கள் முதன்மையாக உள்ளன. குழந்தை மற்றும் தனிப்பட்ட வேலைகளுக்காக நேரம் ஒதுக்க முடிவதால் வீட்டிலிருந்தபடி வேலைசெய்ய பல பெண்கள் ஆர்வமாக உள்ளனர்.


ஆதித்யா ரனதேயின் உருவாக்கத்தில்

ஆதித்யா ரனதேயின் உருவாக்கத்தில்


இந்தத் தகவல், விருப்பமான நேரத்துக்கு ஏற்ப வேலை செய்பவர்கள் மட்டுமின்றி, முழு நேர பணியிலிருக்கும் சிலர் ஒரு சில காரணத்துக்காக குறிப்பிட்ட காலம் வரை வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் மற்றும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். இது பணிபுரியும் பெண்கள் தமது பணியிடம் சார்ந்த உரிமைகளையும், தமது நிறுவனம் பெண் பணியாளர்களது நலனுக்காக செயல்படுத்தப்பட வேண்டிய பாலியல் தொல்லைகளுக்கு எதிரான சட்டங்களையும் பற்றி தெளிவை ஏற்படுத்தும் முயற்சி.

ஒரு வணிக வளாகமோ, திரையரங்கமோ, உணவகத்துக்கோ, அலுவலகத்திலோ/வீட்டிலோ, கல்லூரியிலோ/பள்ளியிலோ எந்த ஒரு இடத்துக்குச் சென்றாலும் நமக்கு பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க பாலியல் துன்புறுத்தல் சட்டமான 2013 உள்ளது. இந்தச் சட்டம் பணியாளர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர் மற்றும் பார்வையாளர் என அனைவருக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க உதவுவது. இதுபற்றிய தெளிவான புரிதலுக்காக ‘ஷிபுக்’ (SHEbook) என்ற எளிமையான வடிவம் உதவுகின்றது.

பகுதி நேர மற்றும் முழு நேர பணியாளரான உங்களுக்கான பாலியல் தொல்லை மற்றும் பாலியல் பாகுபாடற்ற உரிமைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

பணியிடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள்:

1. நீங்களும் அந்த நிறுவனத்தில் ஒருவர்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் எங்கிருந்து பணியாற்றுகின்றீர்கள் என்பது முக்கியமல்ல. பணியமர்த்தும் ஒவ்வொருவருக்கும் நிர்வாகக் கொள்களையும், பாலியல் தொந்தரவு தொடர்பான சட்டத்தையும் விளக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. இவை பணியாளருக்கு அளிக்கப்படும் ஒப்பந்ததுடன் இணைக்கப்பட்டு, உங்களது பார்வையை எட்டியிருக்க வேண்டும் என்று நெறி உள்ளது. ஆகவே, ஒரு பணியில் சேரும்போது இவற்றைக் கவனியுங்கள். இந்த சட்டம் உங்களது பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. இத்தகைய நெறிமுறைகளை உங்களது நிர்வாகம் கடைபிடிக்க மறுத்தால் அவர் சட்டத்துக்கு ஒத்துழைக்க மறுக்கின்றார். நிர்வாகத்தின் இதுபோன்ற நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது. தமது பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தைத் தர மறுப்பதாகக்கூட இதனைக் கருதலாம். பாலியல் தொந்தரவுகள் உடல் சார்ந்தது மட்டுமல்ல. தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ, எஸ்.எம்.எஸ்.-களாகவோ அல்லது வேறு எந்த விர்ச்சுவல் முறையிலேயோ வந்தாலும் அவற்றை பாலியல் துன்புறுத்தல் எனலாம். பணியிடமோ, அலுவலக விருந்தின்போதோ, அலுவலக நிகழ்ச்சிகளின்போதோ, வெளியூரில் நடைபெறும் அலுவலக சந்திப்புகளின்போதோ அல்லது நீங்கள் அலுவலகம் தொடர்பாகசென்றிருக்கும் எந்த இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானாலும் இச்சட்டம் உங்களை பாதுகாக்கும். 

நிர்வாகத்தின் நடத்தை விதிமுறைகளையும் நீங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ள உரிமையுள்ளது. உங்களது நிர்வாகம் நடத்த இருக்கும் பயிற்சிப் பட்டறை, கணக்கெடுப்புகள் போன்ற எவ்வித பயிற்சிகளிலும் நீங்கள் பங்கேற்க அனுமதிப்பதுடன், அதைப்பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டியதும் அதன் கடமை.

2. பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் உங்களது உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள். இந்தச் சட்டம் பணியிடத்தில் உங்களது பாதுகாப்பு மற்றும் நன்மைக்காக செயல்படுகின்றது. சட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது வழக்கறிஞர்களின் வேலை என நம்மில் பலர் எண்ணினாலும், நமக்கான உரிமைகளைப் பற்றி முன்னதாகவே தெரிந்து வைத்திருப்பது பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும். எடுத்துக்காட்டாக, இந்த சட்டத்தைப் பொறுத்த வரை உங்களது நிர்வாகியின் பொறுப்புகள் குறித்தும், உட்கட்ட புகார்கள் குழுவின் நடவடிக்கை தொடர்பாகவும் தெரிந்துகொள்ளலாம். புகார் கொடுப்பதற்கான கால அவகாசம் பற்றியும், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காலக்கெடுவைப் பற்றியும் இதன் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

அதாவது, சம்பவம் நடந்த 90 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும். நீங்கள் அந்த பணிக்கு தொடர்ந்து செல்லவில்லை என்றாலும் சம்பவம் நடைபெற்ற 90 நாட்கள் வரை உங்களது புகார் பெற்றுக்கொள்ளப்படும். நிர்வாகமும், உட்கட்ட புகார்கள் குழுவும் இந்த புகார் தொடர்பாக ரகசியமாக செயல்பட வேண்டியது அவசியம்.

பாலியல் தொந்தரவுக்கு உள்ளான நீங்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான உரிமையுள்ளது. உங்களது புகாரைத் தொடர்ந்து நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் புகாரளித்த பத்து நாள் முதல் தொன்னூறு நாட்களுக்குள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டியது உட்கட்ட புகார்கள் குழுவின் வேலையாகும்.

இதுபோல, முக்கியமான பல தகவல்கள் இந்தச் சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது பகுதி நேர அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் உங்களுக்கும் அவசியமாகும்.

‘இந்த சட்டத்தைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வது மட்டுமல்லாது, இது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த என்னுடன் இணையலாம்.’ சட்ட அறிவியல் தேசிய பல்கலைக்கழகம், கொல்கத்தா ஆரம்ப நிலை சட்டத்தைக் கற்க சிறிய ஆன்லைன் சான்றிதழ் படிப்புக்களை வழங்கி வருகின்றது. பாலியல் பாகுபாடு இல்லாத பணியிடம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் முன்னெச்சரிக்கை என இந்தத் துறையைப் பற்றி தனிப்பட்ட தகவல்களை விளக்கமாகத் தெரிந்துகொள்ள முடியும். இந்தத் தகவலைப் படித்த பின்னர் உங்கள் அலுவலகத்தில் இவை கடைபிடிக்கப்படவில்லை என்றால், அவர்களுக்கு கிளவுட்’ரெய்ன் (CloudTrain) போன்ற போர்ட்டல் மூலமாக சுலபமாக வழிநடத்த முடியும்.

இவை உங்களுக்கான உரிமை, நீங்கள் இது தொடர்பாக தெரிந்துகொள்ள முயல்வது உங்கள் விருப்பம். உங்கள் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சட்டங்களை கடைபிடிப்பது ஆபத்து காலத்தில் உதவும். இதைப் பற்றி தெரிந்து வைத்திடாத உங்களைச் சூழ்ந்தவர்களையும் இதன் அத்தியாவசியத்தைக் கூறி தெளிவுபடுத்துங்கள்.

3. இந்தச் சட்டத்தின் அடிப்படையையும், பாலியல் துன்புறுத்தலுக்கு நிர்வாகம் அளிக்கும் தண்டனை பற்றியும் தமது பணியாளர்களின் கூட்டத்தைக் கூட்டி உட்கட்ட புகார்கள் குழுவுடன் இணைந்து எடுத்துரைக்க வேண்டியது நிர்வாகத்தின் பணியாகும். ஒரு நிர்வாகத்தின் கீழ் பணிபுரிபவர்கள் முதல் அதனுடன் தொடர்பில் உள்ள மற்ற நிறுவன ஊழியர்கள் வரை இதுபோன்ற கூட்டங்களுக்கு அழைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை உள்ளது. இந்த கூட்டங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வாயிலாக நடத்தப்படலாம். இதுபோன்ற பயிற்சிப் பட்டறையில் ஈடுபடும் முன் இதுதொடர்பான ஆவணங்களை கவனமாகப் படிக்க வேண்டும். இதில் ஏற்படும் சந்தேகங்களை கூட்டத்தின்போது கேட்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

4. உங்கள் நிறுவனத்தின் உட்கட்ட புகார்கள் குழுவைத் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் இந்தக் குழுவைப் பற்றிய தகவல் வெளியிடப்பட்டிருக்கும். எனினும், வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு இதன் விவரங்கள் மின்னஞ்சல் முகவரியில் அனுப்பப்பட வேண்டும் அல்லது நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். இதன் மூலம் புகார்களைத் தெரிவிப்பது எளிது.

5. இந்தச் சட்டம் பாலியல் துன்புறுத்தலை எவ்வாறு குறிப்புட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டது போல பாலியல் துன்புறுத்தல் உடல் சார்ந்தது மட்டுமல்ல. ஆகவே, சட்டம் என்ன சொல்கின்றது என தெரிந்துகொள்வது அவசியம்: 

  • * விரும்பத்தகாத தீண்டல்கள்
  • * ஆபாசப்படம் காண்பித்தல், பாலியல் சார்ந்த நடவடிக்கைகள்
  • * ஏதேனும் பாலியல் ரீதியான வார்த்தைகளைக் கூறுவது அல்லது செய்கை செய்வது
  • * பணியிடத்தில் விரோதமாக நடந்துகொள்வது
  • * பாலியல் ரீதியான ஆதயங்களை செய்யும்படி கேட்பது

மேற்கண்டவற்றில் எந்த ஒரு நிகழ்வு உங்களுக்கு ஏற்பட்டாலும் உடனடியாக அலுவலகத்தின் புகார்கள் குழுவுக்கு தகவல் கொடுக்க வேண்டும். மனிதவள மேம்பாட்டு பணியாளர்களுக்கும் இந்தக் குழுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உங்கள் அலுவலகத்தில் உட்கட்ட புகார்கள் குழு அமைக்கப்படவில்லை என்றால் அதை நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

6. ஒருவேளை நீங்களும் உட்கட்ட புகார்கள் குழுவினரின் உறுப்பினரானால், தொடர்ந்து சட்டத்தின் விவரங்களைப் பற்றி பணியாளர்கள் மற்றும் சக குழுவினர்களுக்கும் எடுத்துரைக்க ஏதுவாக பயிற்சிப் பட்டறைகளை நடத்துங்கள். இவை இந்தக் குழுவை செம்மையாக நடத்த கடைபிடிக்க வேண்டியவை. ஏனெனில் உரிமையியல் நீதிமன்றத்துக்கு இணையான சக்தி உட்கட்ட புகார்கள் குழுவுக்கு உள்ளது. இந்தக் குழு ஒவ்வொரு நிர்வாகத்துக்கும் அவசியம் என்பதால், பலரும் தகுதி வாய்ந்த பயிற்சியாளர் இன்றி தமது நிறுவனத்துக்கான குழுவை சீராக நடத்த முடியாமல் தவிக்கின்றனர். இவற்றை பயிற்றுவிக்க அலுவலக நிர்வாகத்தைப் பற்றியும், சட்டம் மற்றும் செயல்பாட்டையும் அறிந்திருக்க வேண்டும். இவை நன்கு தெரிந்தவரோ அதிகமான சம்பளத்தை எதிர்பார்ப்பர். வெறுமனே சட்டத்தை தெரிந்துகொள்வது மட்டுமல்லாது அதை பெண்களின் பாதுகாப்புக்காக முறையாக பயன்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம்.

சட்டத்தில் மேற்கொண்டு மாற்றங்கள் நிகழும்போது உங்களது பொறுப்புகளும் மாற வேண்டும்.

அவ்வப்போது கவனிக்கப்பட வேண்டியவை

1. உங்கள் பணியிடம் மற்றும் பணிக்காக பயணிக்கும் இடங்களின் மீது கவனம் இருக்கட்டும். அறிவிப்புப் பலகையில் உட்கட்ட புகார்கள் குழுவின் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை கவனிக்கவும். ஒருவேளை இது சம்பந்தமான அறிவிப்புகள் இல்லையென்றால் நிர்வாகம் உட்கட்ட புகார்கள் குழுவை அமைத்துள்ளதா என வினவலாம்.

2. பயிற்சி பட்டறைகள், கருத்தரங்கள் போன்றவற்றில் தவறாமல் கலந்து கொள்ளவும். இந்த உரையாடல்களின்போது நீங்கள் வெளியிடும் கருத்துக்கள் பணியிடத்தில் ஆண்-பெண் பழக்கவழக்கம் பற்றி தெரிந்துகொள்ள அவசியம்.

3. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான 2013 சட்டத்தை உங்கள் நிறுவனத்தில் செயல்படுத்தவில்லை என்றால், அதன் அவசியத்தை எடுத்துரையுங்கள். ஷிபுக்-க்கின் மூலம் முக்கிய விவரங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இந்த சட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு எனக்கு நேரடியாக கடிதம் எழுதுங்கள் அல்லது ட்விட்டர் பக்கத்தில் பகிருங்கள்.

ஆக்கம்: பல்லவி பரீக் | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உண்மையான பெண்ணியவாத ஆணுக்கு எழுந்து மரியாதை செலுத்துங்கள்!

பெண்கள்தான் மாற்றத்துக்கான கட்டியக்காரர்கள்! ஆனால், கோபம் இதற்கான முதல் படியா?

Add to
Shares
31
Comments
Share This
Add to
Shares
31
Comments
Share
Report an issue
Authors

Related Tags