பதிப்புகளில்

கற்பித்தலில் பல உண்மைகளை கண்டறியும் யோகா பயிற்சியாளர் ரிங்கு சூரி!

1st Sep 2015
Add to
Shares
53
Comments
Share This
Add to
Shares
53
Comments
Share

நேரமில்லாத நகர வாழ் மக்களுக்கு, மனநிம்மதியை ஒரு சீரான உடல் மற்றும் உள்ளம் மூலம் ஏற்படுத்தலாம்" என்ற நோக்கத்தில் யோகா கலையை பயன்படுத்துகிறார் யோகா ஆசிரியர் ரிங்கு சூரி. மும்பையின் ஒரு அமைதியான சூழலில் இவருடைய யோகா 101 (Yoga 101) என்ற பயிற்சி மையம் அமைந்துள்ளது.

image


மற்ற யோகா மையங்களை விட, யோகா 101 சற்று தனித்தன்மையுடன் காணப்படுகின்றது. இதனுடைய எளிமையான சூழல், பல்வேறு மூலைகளிலிருந்தும் சிறந்த யோகா பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்து இந்த கலையில் இருக்கும் பரிமானங்களையும் அவர்களுடைய முழு அர்ப்பணிப்பையும் ஒரே இடத்தில் செலுத்துவது இந்த மையத்தின் சிறப்பம்சம். "மக்கள் இங்கு பல காரணங்களுக்காக வருகின்றனர். இருந்தாலும், நாளடைவில் இந்த யோகா கலை அவர்களுக்குள் புது உறவையும், மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது. உடற்பயிற்சியில் தொடங்கி, மன அமைதி, ஒரு பக்தி மற்றும் ஞானமார்கமான பாதையாக மாறுவதுண்டு. கொஞ்சம் கொஞ்சமாக யோகா பேச்சாகவும், செயலாகவும், ஞானமாகவும் இடம்பெறுகிறது. இது என்னுடைய கதை மட்டுமல்ல, எல்லாருடைய கதையும் கூட." என்று பேச தொடங்குகிறார் ரிங்கு.

யோகா என்பது ரிங்குவின் வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானது. ஆரோக்கியத்திற்காகவும், சரியான உடல் அமைப்பிற்காகவும் இதை ஆரம்பித்த ரிங்குவிற்கு நாளடைவில் யோகாவின் மேல் இருந்த அபிப்ராயம் மாறத்தொடங்கியது என்றே சொல்லலாம். "வெறும் உடற்பயிற்சியாக மட்டும் இல்லை. வாழ்க்கையுடைய உண்மையான அர்த்தத்தை யோகா மூலம் அறிந்தேன்." என்று விவரிக்கிறார். 2012ம் ஆண்டு ஆகஸ்ட்டின் போது, ரிங்கு கம்போடியாவிற்கு சென்றிருந்தார். பயணத்தின் போதும், யோகா பயிற்சி மேற்கொள்ள ஒரு அமைதியான கஃபேவை கண்டார். இதுவே யோகா 101 நிறுவுவதற்கு வித்தாக அமைந்தும் போனது.

யுவர்ஸ்டோரி ரிங்குவின் யோகா பயணத்தை பற்றியும், பயிற்சியாளர் வாழ்க்கையை பற்றியும் விரிவாக தெரிந்துக்கொண்டது.

எதற்காக யோகா?

"ஒரு யோகா பயிற்சியாளர் மற்றும் ஆசிரியை என்ற முறையில், இதை பற்றின பல நல்ல கருத்துகளை என்னால் சொல்ல முடியும். உடல் சார்ந்த பயிற்சியாக மட்டுமில்லாமல், உள்ளத்திற்கும் சேர்த்து பயிற்சி தருகின்றது. தற்போதைய வாழ்க்கை முறையில் இருக்கும் சோம்பேறித்தனத்தை அடியோடு விரட்டியடிக்க யோகா ஒரு சிறந்த பயிற்சி என்று நிச்சயமாக சொல்லலாம். உலகத்தில் இருக்கும் எல்லா உடற்பயிற்சி வகைகளில் யோகாவால் மட்டுமே, உடற்பயிற்சி, உடலுறுப்புகளை பலப்படுத்துவதை தவிர மனதையும் உயிருக்கும் ஒரு சிறந்த பயிற்சியை தர முடிகின்றது. உங்களுடைய முதுமையை தள்ளிப்போடுவதில் யோகாவிற்கு ஒரு சிறந்த இடம் உண்டு. ஒரு விஷயத்திலிருக்கும் போதையை அகற்றவும், கோபத்தை குறைத்துக்கொள்ளவும், உடல் எடையை குறைக்கவும் மேலும் பல விஷயங்களுக்கு ஒரே தீர்வாக இந்த யோகா கலை விளங்குகிறது."

"ஆரோக்கியமாகவும், தெளிவான நல்ல சிந்தனையுடனும் இருப்பதற்கு யோகா பெருமளவில் உதவுகிறது. யோகா பயிற்சி எடுத்துக்கொண்டு செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாவற்றையும் நேர்மறையாக அனுகத்தொடங்குவார்கள்."
image


யோகாவை அடைந்த அந்த பாதை

தன்னை எப்போதுமே பாதுகாத்துவந்த, ஒரு சிறு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார் ரிங்கு. சின்ன வயதிலிருந்தே தான் ஒரு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியம் ரிங்குவிற்கு எப்போதுமே இருந்தது. ஆனால், அம்மாவின் ஆசைக்காக ஆசிரியை கனவை ஒதுக்கிவைத்து கலை துறையை தேர்ந்தெடுக்காமல், வணிகவியல் பாடத்தை தேர்ந்தெடுத்து மார்கெட்டிங் துறையில் பணிக்கு சென்றார். சிஎன்பிஸி என்ற நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக பணியாற்றினார். தனக்கு பிடித்தமான பயணம், மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்ததால், தன்னுடைய வேலை மிகவும் பிடித்த விஷயமாகவே அமைந்தது என்கிறார் ரிங்கு. யோகாவின் அதிசய குணங்களை பற்றி தெரிந்தபின், தொடர்ந்து தன்னை யோகா பயிற்சியில் ஈடுபடுத்திக்கொண்ட ரிங்கு, இன்று ஒரு யோகா பயிற்சியாளர். இவருடைய மாணவர்கள் பல்வேறு வயதுள்ளவர்களாக இருப்பது மட்டுமல்லாமல், வெவ்வேறு துறைகளிலிருந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யோகா பயிற்சி மையம்

கம்போடியாவிலிருந்து இந்தியா திரும்பியப்பின், மும்பையின் ஒரு பிரபல யோகா மையத்தின் கிளையை தொடங்க அனுமதி கோரியிருந்தார் ரிங்கு. அந்த குறிப்பிட்ட மையத்திலிருந்து எந்தவொரு பதிலும் வராததால், சொந்தமாகவே ஒரு பயிற்சி மையத்தை நிறுவவேண்டும் என்ற எண்ணம் எழ தொடங்கியது. அதற்கான சரியான இடத்தை தேடிக்கொண்டிருந்த சமயத்தில் தான். பல ஆண்டுகளாக தன்னுடைய குடும்பம் வசித்துவந்த பங்களாவை விற்க முடிவு செய்திருந்தனர் ரிங்குவின் குடும்பத்தினர். அதை விற்பதற்கு பதிலாக, ரிங்கு அதை எடுத்து, தனக்கு விருப்பமான யோகா பயிற்சி மையமான யோகா 101ஐ மெதுவாக ஸ்தாபிக்க தொடங்கினார். ஜூலை 2013ம் ஆண்டில் முழு வேகத்துடன் உருவாக்கப்பட்ட யோகா 101 பயிற்சி மையத்தின் உள்கட்டமைப்பு, இடத்தை அழகுபடுத்துதல், என்ற எல்லா பணிகளையும் தனியாக கவனித்து, ரிங்கு மையத்தை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. மையத்தின் ஒரு புறத்தில் மக்கள் நன்கொடையாக அளித்த புத்தகங்களை ஒரு சின்ன நூலகம் போல அமைத்து, அதை படிக்கும் படியான வசதிகளையும் செய்தார்.தவிர, யோகா எண்ணெய், யோகா மேட், போன்ற யோகா சம்பந்தமான உபகரணிகளையும் விற்பதற்கு ஒரு தனி கடையும் அமைக்கபட்டிருக்கின்றது. ரிங்குவால் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக யோகா ஆடைகளும் இங்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதில் சவால்களும் உண்டு

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன். அன்றாட வேலைகளால் மக்களுக்கு நேரமில்லாமல் போனாலும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வும் உத்வேகமும் இன்னும் இருக்க தான் செய்கிறது. நமது வீடுகளில் யோகா என்பது ஒன்றும் புதிதல்ல, இருந்தாலும் ஒரு பயிற்சி மையத்திற்கு வந்து, ஆசிரியரை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பயிற்சி செய்வது சற்று புதிது தான். இங்கு நான் பல சவால்களை, சரியான மாணவர்களை (வீடுகளில் யோகா செய்பவர்கள், தங்களுக்கு விருப்பமான இடத்தில் பயிற்சி செய்பவர்களை) மையத்திற்கு கொண்டு வருவதில் சந்தித்தேன். தனியாக அவரவர்களுடைய வீடுகளில் செய்வதற்கும், ஒரு குழுவாக சேர்ந்து மையத்தில் செய்யும் பயிற்சிக்கும் இருக்கும் வித்தியாசத்தை எடுத்து விளக்கினேன். ஒரு குழுவோடு சேர்ந்து செய்யும் போது இருக்கும் வேகமே வேறு என்பதை உணர வைத்தேன்.

image


யோகா 101க்கு கிடைத்த வரவேற்பு

முதியவர்கள் யோகா என்பது அவர்களுடைய உடற்பிரச்னைகளை தீர்க்கும் விஷயமாக எடுத்துக்கொண்டார்கள். மற்றவர்களுக்கு யோகா மிகவும் மெதுவாக செய்யப்படும் அலுப்பு விஷயமாக கருதப்பட்டு வந்த சமயத்தில், நான் யோகாவில் இருக்கும் பல்வேறு முறைகள் பற்றி கற்று தந்தேன். யோகாவில் இவ்வளவு வகைகள் இருக்கின்றன என்று மக்களுக்கு தெரிந்த பின், தற்போது அவர்களுக்கு ஆர்வம் பெருகுவது மட்டுமல்லாமல், அதிக மக்கள் யோகாவின் வழியை நோக்கி பயணம் செய்வதை நான் பார்க்கிறேன்.

யோகாவிற்கும் மேற்குக்கும் உள்ள தொடர்பு

மேலை நாட்டு மக்கள் யோகாவை மாற்றவில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் ரிங்கு. "அவர்கள் யோகா கலையை எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு புது வடிவத்தை கொடுத்துள்ளனர். யோகாவில் இருக்கும் அடிப்படை கருத்தை அப்படியே வைத்து, எல்லோருக்கும் எளிமையாக சென்றடைய சில சுலபமான, வித்தியாசமான வழிகளை அதற்குள் புகுத்தி இருக்கின்றனர். மாறுதல் இல்லாத உடல் வடிவுடன் (வினாயஸா போல) தொடங்கி அதை படிப்படியாக இசையை சேர்த்து செய்யும் விதத்தில் அவர்களுடைய பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

யோகா 101ன் வருங்கால திட்டங்கள்

இந்த ஆண்டு முதல், ஒரு தனித்துவமான உணவு விடுதியும் பயிற்சி மையத்தில் இணைக்கப்படவுள்ளது. "மக்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பானங்களை அறிமுகப்படுத்துவதுடைய முயற்சி தான் இது." என்று விளக்குகிறார் ரிங்கு.

ரிங்கு யோகாவில் தன்னுடைய முழு மூச்சையும் செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "சில நாட்கள் என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னையே கேள்விகள் கேட்டுக்கொள்வதுண்டு. ஆனால், அதற்கான விடைகளை தானாகவே என்னுடைய யோகா பயிற்சியின் மூலம் கண்டறியவும் முடிகிறது." என்று தன்னுடைய மகிழ்ச்சியை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் ரிங்கு.

எல்லா மக்களுக்கும் இந்த கலை போய் சேரவேண்டும் என்ற துடிப்புடன் ரிங்கு செயல்படுகிறார். பல்வேறு மூலைகளிலிருந்தும் ரிங்குவின் உதவியை நாடி தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள், குறுஞ்செய்திகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. சில பேருக்கு தங்களுடைய ஆரோக்கியத்தை காப்பதில் எப்படி யோகாவை பயன்படுத்தலாம் என்ற சந்தேகம் இருக்கலாம், சில பேருக்கு, தங்களுக்கு தெரிந்த இந்த கலையை ஒரு பயிற்சி மையம் மூலம் கொண்டு சேர்க்க முடியும் என்ற சந்தேகங்கள் நிறைந்த கேள்விகள், இவை அனைத்தும் ரிங்குவிற்கு வந்து சேர்க்கிறது. "அவர்களுடைய பயணத்தில் என்னால் உதவ முடிவதை நினைத்து சந்தோஷம் தான்." என்று கூறுகிறார் ரிங்கு.

Add to
Shares
53
Comments
Share This
Add to
Shares
53
Comments
Share
Report an issue
Authors

Related Tags

    Latest Stories

    எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக