பதிப்புகளில்

என்ன காரணங்களால் தொழில் முனைவோர் உருவாகிறார்கள்? ஹௌசிங்க்.காம் இன் கதை!

Vishnu Ram
15th Aug 2015
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

சமீப காலமாக, செய்தித்தாள்களில், பத்திரிகைகளில் புதிய தொழில் முனைவோர் குறித்த செய்திகள் மற்றும் செய்தி கட்டுரைகளை அதிகம் இடம் பெறுவதை பார்க்கிறோம். பெரும்பாலும், இவை அனைத்தும் ஒரே மாதிரி வரையரைக்கப்பட்ட கட்டுரைகளாகவே இருக்கின்றன. தயாரிக்கப்படும் பொருட்கள், முதலீடு, பணம், கூட்டு ஒப்பந்தம், கொடுக்கல், வாங்கல் என சில கட்டங்களுக்குள் இக்கட்டுரைகள் அமைந்துவிடுகின்றன. இது போன்ற வழக்கமான தகவல்களில், என்னவெல்லாம் தொழில் முனைவோர்க்கு உந்துதல் அளித்துள்ளது,என்பதை நாம் மறந்தே விடுகிறோம். ஒரு தொழில் முனைபவர் என்பவர் ஆர்வம் மிகுந்த பல கனவுகளை கொண்ட துணிவுமிக்கவர் ஆவார். சரி, என்ன என்ற கேள்வியை விட, ஏன் என்று பார்ப்போம். ஏன் இந்த தொழிலை துவங்கினார்? அதன் உந்துதலுக்கான காரணம் என்ன? அவரை, எது வழிநடத்தி செல்கிறது?

நாம் இப்போது "ஹௌசிங்க்.காம்" நிறுவனத்தை முன்னுக்கு கொண்டு சென்ற திரு. அத்வித்திய சர்மாவை பற்றி பார்ப்போம். அவரிடம் உரையாடிய போது சற்றே வித்யாசமாக உணர்ந்தோம். ஒரு மனப்பூர்வ உணர்வுகொண்ட உரையாடலாக இது அமைந்தது. அவர் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், உங்கள் வாழ்க்கையை புரட்டிபோடுவதாக அமையும் என்ற எண்ணத்தோடு தொடர்கிறோம்.

ஜம்முவும் அத்வித்தியா வின் தாத்தாவும்

என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் இந்த நிலையை அடைய உதவியது. சிறுவயதில், நான், ஜம்மூ நகரில் ஒரு வித்யாசமான சுழலில் வாழ்ந்தேன். ஒரு சிறுவனாக இரு நபர்கள் என்னை பெரிதும் கவர்ந்தனர். என் தாத்தா மற்றும் என் தந்தை. நாங்கள் ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தோம்.


image


எனது தாத்தா ஒரு சாஹித்ய விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவரது பல படைப்புகள் தொலைக்காட்சியில் அரங்கேறியுள்ளன. எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தனி அறை அமைத்துக்கொண்டு அவர் வாழ்ந்தார், எழுதவேண்டும் என்று நினைத்துவிட்டால், தனது அறையை பூட்டிக்கொண்டு பல நாட்கள் அங்கேயே இருந்துவிடுவார். என் தாத்தா, வெளியே வரும்போது, அவர் கையில் சில தாள்கள் இருக்கும். அவை எல்லாம் வானொலியில் ஒலிபரப்பவிருக்கும் அவரின் நாடக படைப்புகள் மட்டும் அல்ல.. அவை, அவர் உணர்வுகளின் வெளிப்பாடு. இதற்காக அவர் எவ்வளவு உழைத்திருப்பார் என எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அப்பொழுதே என் தந்தையிடம் தெளிவாக கூறிவிட்டேன், "அப்பா, நானும் எனக்கு எது பிடிக்குமோ, அதைத்தான் செய்வேன்". என் தாத்தா தன் பணியின் மீது வைத்திருந்த காதல், மோகம் என்று பலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். இன்று நான் செய்யும் பல வித்யாசமான செயல்களெல்லாம் என் தாத்தாவிடம் கற்றுகொண்டது தான். அவர் தன் அறை கதவுகளை பூட்டிக்கொண்டு தான் வேலைசெய்ய வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் மீது கடுமையாக நடந்து கொண்டது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. என் தத்தா என்னை "ஜம்மூவின் ராஜா" என்று அழைப்பார். என்னை பார்த்து பெருமை கொள்வார். அப்பொழுதே, ஒரு மனநிறைவு கொண்ட மனிதனாக உணர்ந்தேன்.image


தந்தையின் அர்பணிப்பு

என் தந்தை ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர். ஜம்மூ நகரின் முதல் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவரும் அவரே. கடும் உழைப்பாளி. நான் அவரை மருத்துவமனையில் பார்க்கும்போதெல்லாம் தனது பணியாளர்களுக்கும், இளநிலை மருத்துவர்களுக்கும் ஓய்வே இல்லாமல் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருப்பார். மக்களுக்கு சிறந்த சேவை செய்யவே நாள்தோறும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே இருப்பார். நான் அவரை கவனித்தவற்றில் ஒன்று, அவர் எப்பொழுதும் படித்துக்கொண்டே இருப்பார். தினந்தோறும் இரவில் ஓய்வின் போது பல மருத்துவ புத்தகங்களை தொடர்ந்து படித்து புதிய சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டார். தனது அறிவினை தொடர்ந்து 25 வருடங்களாக வளர்த்துக்கொண்டே இருந்தார்.

ஒரு முறை என் தந்தை, விபத்து ஒன்றில் சிக்கியவர்களுக்கு 18 மணி நேரம் தொடர்ச்சியாக சிகிச்சையளித்தார். வியப்பில், நான் அவரிடம், நீங்கள் சோர்வு அடைய மாட்டீர்களா ? என்று கேட்டபோது அவர் எனக்கு சொன்ன பதில் வார்த்தைகள் என் உணர்வுகளை சிலிர்படைய செய்தது. "இனி ஆபத்து இல்லை என்ற நல்ல செய்தியை கேட்க அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் உற்றார் உறவினர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்தவே நான் விரும்புகிறேன், அவர்கள் முகத்தில் தெரியும் சந்தோஷமே எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன்" என்றார். என் தந்தை பிறருக்கு உதவுவதில் அதிக வேட்கை கொண்டவர். இதுவே என்னை உருவாக்கியதும் கூட. என் தாயை பற்றியும் நான் குறிப்பிட விரும்புகிறேன். அவரும் ஒரு மருத்துவர். ஆனால் நான் பிறந்தவுடன் அவர் மருத்துவ தொழில் செய்வதை நிறுத்திவிட்டார். அவரிடம் நான் அன்பு, பரிவு, தன்னலமற்ற தன்மை ஆகியவற்றை கற்றுக்கொண்டேன். அவரை பற்றி பேசும் போதே என் கண்கள் குளமாகிவிடுகின்றன.

ஐ.ஐ.டி . மற்றும் வான்வெளி பொறியியல்

சிறிது காலம் எனது பெற்றோர்கள் சவூதி அரேபியா வில் இருந்தனர். அந்த காலத்தில் "டைட்" சலவை தூளுடன் ஒரு டிஜிட்டல் கைகடிகாரம் இலவச சலுகையாக கொடுத்தார்கள். இந்த இலவச டிஜிட்டல் கைகடிகாரத்திற்காக என் அம்மாவை நிறைய "டைட்" பாக்கெட் களை வாங்கச்சொல்வேன். எனக்கு சிறுவயதில் கணக்கிலும், தொழிர்நுட்பத்திலும் அதிக ஆர்வம். அதனால் கிடைக்கும் இலவச டிஜிட்டல் கைகடிகாரத்தை பிரித்து பதம் பார்த்துவிடுவேன். நான், மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் போது , "கல்பனா சாவ்லா" தான் எனக்கு மிக பெரிய செய்தி. என் உறவினர்கள் பலர் கல்பனா சாவ்லாவின் சொந்த ஊரான சண்டிகரை சார்ந்தவர்கள். அதனால் நாங்கள் பொதுவாக கல்பனா சாவ்லா, “நாசா” பற்றியெல்லாம் அதிகம் பேசுவோம். அப்போது தான் நான் ஒரு விண்வெளியாளராகி "நாசா" விற்கு செல்லவேண்டும் என்று தீர்மானித்தேன்.


image


எல்லா கனவுகளை சுமந்து கொண்டு ஐ.ஐ.டி யில் விண்வெளி பொறியியல் படித்தேன். ஆனால் படிக்கும் போது தான் தெரிந்தது, எனக்கு ஆகாய கப்பல்கள் செய்வது எப்படி என்பதை விட அதில் பறப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளவே விரும்பினேன் என்று. ஆனால் இந்த பொறியியல் கல்வி பிற்காலத்தில் பயனளித்தது. எங்கள் முதலீட்டாளர்கள் என்னை பார்த்து, எப்படி இதை அடையமுடிந்தது என்று கேட்கும் போது, நான் பெருமையுடன், "இது ராக்கெட் அறிவியல் அல்ல. ஆனால், நான் ராக்கெட் அறிவியல் பொறியாளர்" என்று பதிலளிப்பேன். சாதிக்க நினைத்தால் அதற்கு ஏற்ற இடம் ஐ.ஐ.டி . பம்பாய். இந்த இடம் ஒருவரை ஒரு உன்னத நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு சாதாரணமானவனை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் இடமாக திகழ்கிறது . என் பல கேள்விக்கான விடைகளை அளித்து சிறந்ததொரு அனுபவம் அளித்த ஐ.ஐ டி க்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.

நேரமில்லை, தொடங்கலாம் !

நான் கற்றுக்கொள்ள அதிக ஆர்வம்கொண்டிருந்தேன். என் வழியிலேயே எனது தவறுகளை தெரிந்து கொண்டேன். என் தவறுகள் என்னை வழி நடத்தி என்னை செம்மைபடுத்தின. ஒரு பெரிய நிறுவனத்தில் அனலிஸ்ட் எனும் ஆய்வு நுபுணராகும் எண்ணம் சிறிதளவும் இல்லை. அங்கே பிறர் என்ன கற்றுகொள்கிறார்களோ அதையே நானும் கற்க விருப்பமில்லை. என் வழியில் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். நன்றாக யோசிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு முறை தான், தொடக்கல் என்பது இயல்பான செய்முறை.

ஹௌசிங்க்.காம் எதற்கு?

வீடு, மனை என்பது ஒருவரின் வாழ்வில் அத்தியாவசியமாக திகழ்கிறது. எல்லோரிடமும் வீடு என்பது சொந்தமாகவோ, வாடகையாகவோ உள்ளது. இருப்பினும், இடம் என்பது பற்றாக்குறையாகவே இருக்கிறது. இதில் செயல்திறனில்லை, தெளிவில்லை, முக்கியமாக வெளிப்படைத்தன்மை இல்லை.

இத்தனை காலம் என்னுள் வளர்ந்த எண்ணங்களின், செயல்களின் வெளிப்பாடே ஹௌசிங்க்.காம். என் தாத்தாவை போல "செய்துவிடு" என்ற நெறிகாட்டுதலில், பல லட்சக்கணக்கானவர்களுக்கு உதவி செய்யும் முறையாக அமைந்தது. இது எனக்கு ஒரு நோக்கத்தையும் ஒரு அர்த்தத்தையும் கொடுத்தது. நான் என்ன வித்தியாசம் செய்தேன் என்று என்னும் போது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது பெங்களூரை சேர்ந்த ஒரு சிறுமி எனக்கு ஒரு கடிதம் எழுதினாள், "நன்றி, அத்வித்தியா; எங்களுக்கு ஹௌசிங்க்.காம் மூலம் நாங்கள் நினைத்த வீடு கிடைத்தது. என் 70 வயது பாட்டிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். எங்களுக்கு மருத்துவமனை அருகில் வீடு தேவைப்பட்டது. உங்கள் நெய்பர்ஹுட் தேடுதல் மூலமாக வீடு கிடைத்தது." நான் பெருமிதமடைந்தேன். நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அந்த கடிதம் எல்லாவற்றிற்கும் விளக்கம் தந்தது. நாங்கள் ஒரு சக்திவாய்ந்த ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். இது மக்களிடம் சென்றடையும் போது அவர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் பெரும் பங்கு அளிக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags