பதிப்புகளில்

வளமான வாழ்க்கை வாழ, விடியும் முன் விழித்திடுங்கள்!

9th Jun 2016
Add to
Shares
1.6k
Comments
Share This
Add to
Shares
1.6k
Comments
Share

அன்றாட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காலை பொழுதுகளே தீர்மானிக்கின்றன. 

காலை நேரத்தை ஆக்கத்துடன் பயன்படுத்தினோம் எனில், மகிழ்ச்சி மற்றும் வளம் கொண்ட வாழ்வை தரும் பழக்கவழக்கங்களை வளர்த்து கொள்ளலாம்.

நம்மில் பலர் உறங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில், சிலர் சுறுசுறுப்போடு தங்கள் அறிவைக்கொண்டு; ஆரோக்கியம், தொழில் மற்றும் சொந்த வாழ்வை செம்மைபடுத்தி தினம்தினம் வெற்றி கண்டு கொண்டிருக்கின்றனர். 

உலகத்தில் உள்ள அனைத்து சாதனையாளர்களும் நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்தவர்கள். அவர்கள் அதிகாலை எழுந்திருப்பதற்கும் இதுவே காரணமும் ஆகும். சீக்கிரம் எழுந்து கொள்வதால், அந்த நாள் தொடங்குவதற்கு முன்னரே அதனைப் பற்றி சிந்திக்க சில மணி நேரம் இவர்களுக்குக் கிடைக்கிறது.

நிஜ வாழ்வில் நாம் பார்க்கும் நிகழ்வுகளும் அறிவியல் ஆராய்ச்சிகளும், அதிகாலை எழுவதன் அவசியத்தை கூறுக்கின்றன. காலம் கழிந்த பின் செய்ய முடியாத வேலைகளை, அன்றே கடைப்பிடிக்க காலை பொழுதுகள் எவ்வாறு உதவுக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர் லாரா வண்டர்காம்.

நாம் தூங்குவவதற்கு முன்னரே, அடுத்த நாள் காலையில் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்க, ஊக்குவிக்கும் வகையில் லாரா எழுதிய நகைச்சவை கலந்த வழிகாட்டி கையேடு "வாட் தி மோஸ்ட் சக்ஸ்புள் பீபிள் டூ பிபோர் பிரேக்பாஸ்ட்" (What the most successful people do before Breakfast) ஆகும்.

சாதனையாளர்கள் பலர் காலை எழுந்தவுடன் முதலில் என செய்கிறார்கள்? எப்படி தங்கள் தினத்தை தொடங்குகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

ஜேக் மா - நிறுவனர், அலிபாபா குரூப்

"உழைப்பதற்காக நாம் இங்கு பிறக்கவில்லை, வாழ்க்கையை அனுபவிக்க பிறந்துள்ளோம் என்று எனக்கு நானே எப்பொழுதும் கூறிக்கொள்வேன். ஒருவரை ஒருவர் உதவிக்கொண்டு ஒற்றுமையுடன் வாழவே நாம் இங்கு உள்ளோம். வாழ்நாள் முழுவதும் வேலை செய்தே நாட்களைக் கழித்துவிட்டால், அதற்காக நாம் நிச்சயம் வருத்தபடுவோம்" .

அவருடைய இந்த சொற்கள் அவரது நடைமுறை வாழ்விலும் வெளிப்படுகிறது. அதுதான் அவரை தினமும் காலை ஆறு மணிக்கு விழிக்கச் செய்து, ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாய் வாழ வைக்கிறது. காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அரைமணி நேரம் வேலை செய்துவிட்டு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறார்.

ஜெஃப் பெஜோஸ் - தலைமை நிர்வாக அதிகாரி, அமேசான் 

வாடிக்கையாளர்கள் சேவை மீது அவர் கொண்ட ஆழ்ந்த கவனம் அவரை உயர்ந்தவராக்கியது. ஜெஃப் பெஜோஸ் என்பவர் எப்பொழுதும் வேலை செய்துகொண்டே இருப்பவர் என்று நீங்கள் நினைத்தால், நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... காலக்கெடுவும், மன அழுத்தம் அதிகரிக்கும்போதும்கூட, இந்த தலைமை அதிகாரியின் முக்கியத்துவம் நல்ல ஒரு இரவு உறக்கமே ஆகும். இரவு நன்றாக தூங்குவதால் இவருக்கு நேரம் இருக்காது, ஆகையால் தினமும் காலையில் சீக்கிரம் எழுந்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

டிம் குக் - தலைமை நிர்வாக அதிகாரி, ஆப்பிள் நிறுவனம்

காகெர் (Gawker) நிறுவனத்தினுடைய ரயன் டடே பொறுத்தவரையில், அதிகாலை 4.30 மணிக்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதில் பேர் பெற்றவர் டிம் குக். காலை 5 மணியளவில் அவரை ஜிம்மில் பார்க்க முடியும். இவர் அதிக நேரம் வேலையும் செய்பவர், அலுவலகத்திற்கு முதலில் செல்வதும் கடைசியாய் வெளிவருவது நானே என்றும் பெருமை கொள்பவர்.

பில் கேட்ஸ் - இணை நிறுவனர், மைக்ரோசாப்ட் 

பில் கேட்ஸ், காலையில் த்ரெட்மில், மற்றும் கார்டியோ உடற்பயிற்சிகளை, குறைந்தது ஒரு மணி நேரமாவது செய்பவர். உடற்பயிற்சி கற்றுதரும் வீடியோகளைப் பார்த்து அதன் வழிமுறைகளைப் பின்பற்றுவார். 

மார்க் ஜுக்கர்பெர்க் - இணை நிறுவனர் & தலைமை நிர்வாக அதிகாரி, ஃபேஸ்புக்

மார்க், அவரது வேலைகளை காலை ஆறு மணிக்குத் தொடங்குவார், தயார் ஆகுவார், நேரடியாக ஆபிஸ் செல்வார். www.sleepypeople.com இணையதளத்தின்படி, முன்பெல்லாம் ஒரு சில நாட்கள் மார்க், ப்ரோக்ராமர்சுடன் இரவெல்லாம் பேசி முடிக்கவே காலை ஆறு மணி ஆகிவிடும். ஆகையால் மார்க், ஒரு சின்ன தூக்கத்துடன் தான் நாளையே தொடங்குவார்.

ஜாக் டார்சே - இணை நிறுவனர், ட்விட்டர் 

ஜாக் தினமும் காலை 5.30 மணிக்கே எழுந்துக்கொள்வர். தியானம் செய்துவிட்டு, 5 மைல்கள் ஜாகிங் போவார்.

ரிச்சர்ட் பிரான்சன் - நிறுவனர், வெர்ஜின் குரூப்

விடியற்காலையில் ரிச்சர்ட் அவரது தீவில் நீச்சல் அடிப்பார். பிறகு, டென்னிஸ் விளையாடி விட்டு, ஆரோக்கியமான காலை உணவு எடுத்துக் கொள்வார்.

வாரென் பஃபேட் - தலைமை நிர்வாக அதிகாரி, பெர்க்ஷையர் ஹாத்அவே

வாரென் பஃபேட் காலை 6.45 மணிக்கு எழுந்துக் கொண்டு, ஆறு நாளிதழ்களைப் படிப்பார். அதுதவிர, அவருக்கு எந்த ஒரு நிலையான திட்டமும் இருக்காது, படிப்பதிலே 80% நேரத்தைச் செலவழிப்பார்.

ரத்தன் டாட்டா - எமிரிட்டஸ் தலைவர், டாட்டா சன்ஸ்

ரத்தன் டாட்டா காலை 6 மணியிலிருந்து டாட்டா சன்ஸ் கம்பெனிகளின் மீட்டிங்களில் கலந்து கொள்ள தொடங்கிவிடுவார். வார இறுதி நாட்களில், காலை வேளையில் அவரது கார் அல்லது சொந்த ஜெட் ஓட்டி கொண்டு பயணம் செல்வர்.

முகேஷ் அம்பானி - தலைவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடட்

முகேஷ் அம்பானி தினமும் காலை 5 மணியிலிருந்து 5.30-க்குள் எழுந்துக்கொள்வர். அண்டிலியாவின் இரண்டாம் ப்ளோரில் உள்ள ஜிம்மில் பயிற்சி செய்துவிட்டு, கொஞ்ச நேரம் நீச்சல் அடிப்பார். அதனையடுத்து, இரண்டு செய்தித்தாள்களைப் படித்துவிட்டு, நாளைத் தொடங்குவார்.

ஒப்ரா வின்ப்ரே - நடிகை, தொகுப்பாளர், நூலாசிரியர்

மனநிலையை அமைதிப்படுத்த தினமும் காலை 20 நிமிடம் தியானம் செய்வார் ஒப்ரா. அதன்பிறகு, அவரது ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார்.

இந்திரா நூயி - தலைமை நிர்வாக அதிகாரி, பெப்சிகோ

உலகிலுள்ள பலர் உறங்கிக்கொண்டு இருக்கும் வேளையில், ஜெனரல் மோட்டார்ஸின் மேரி பாரா, பெப்சியின் இந்திரா போன்ற நிர்வாகிகள் அதிகாலை எழுந்து தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு, செய்யத் தொடங்கிவிடுகின்றனர். 

பத்மஸ்ரீ வாரீயர் - தலைமை நிர்வாக அதிகாரி, நெக்ஸ்ட்EV, அமெரிக்கா

காலை 4.30 மணிக்கு எழுந்தும் வாரீயர் அலுவலகத்துக்குச் செல்லாமல், அரைமணி நேரம் மின்னஞ்சல்களுக்கும், செய்திதாள் படிக்கவும், உடற்பயிற்சி செய்யவும் செலவிடுவார். யாஹூவின் செய்தியின்படி, இவர் 8.30 மணிக்குள் ஆபிஸில் இருப்பார்.

நரேந்திர மோடி - இந்திய நாட்டு பிரதமர்

www.narendramodi.com இணையதளத்தின்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி காலை 5 மணிக்கு எழுந்துக்கொள்வார். பின், பிரணயாமா, சூர்ய வணக்கம், யோகா செய்வார்.

பாரக் ஒபாமா - அமெரிக்கா குடியரசுத்தலைவர்

அமெரிக்க குடியரசுத்தலைவர் காலை 6.30 மணிக்கு விழித்துக் கொண்டு, ஜிம்மில் எடை பயிற்சியும் கார்டியோ உடற்பயிற்சியும் எடுத்துக் கொள்வார். பின், குடும்பத்துடன் காலை உணவு உண்பார்.

டேவிட் கேமரூன் - பிரிட்டிஷ் பிரதம மந்திரி

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் காலை பொழுது 6 மணிக்கு ஆரம்பிக்கிறது. காலை 8 மணிவரை முக்கியமான அரசு வேலைகளைச் செய்து முடித்துவிடுவார். அதனைத் தொடர்ந்து, குடும்பத்துடன் காலை உணவு எடுத்துக் கொள்வார். இந்த நேரத்தில் வீட்டில் யாரும் டிவி பார்க்கக்கூடாது .

விராட் கோலி - கிரிக்கெட் விளையாட்டு வீரர்

கோலி காலை 6.00 மணிக்கு எழுந்துக்கொள்வார். இவரது உடற்பயிற்சியில் எடை பயிற்சியும் கார்டியோ பயிற்சியும் பெருமளவில் கலந்து செய்வார். இந்த பயிற்சி முறை பேட்டிங் செய்வதற்கேற்ற வகையில் தசைகளை உருவாக்க வழி செய்கிறது.

ஷூல்ட்ஸ் - தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்டார்பக்ஸ்

portfolio.com இணையதளத்தின்படி, இவர் பயிற்சியாய், வழக்கமாக தனது மனைவியுடன் சைக்கிளில் சென்று தன் நாளைத் தொடங்குவார். ஆனாலும், ஆறு மணிக்குள் அலுவலகம் சென்றுவிடுவார்.

ஜெஃப் இம்மேல்ட் - தலைமை நிர்வாக அதிகாரி, ஜெனரல் எலெக்ட்ரிக் (GE)

கார்டியோ பயிற்சிக்காக இம்மேல்ட் தினமும் காலை 5.30 மணிக்கு விழித்துக் கொள்வார். ஃபார்சுன்(fortune) பத்திரிகைக்கு அவர் கூறியதுப்படி, காலையில் செய்தித்தாள் படித்துக் கொண்டே, CNBC பார்ப்பார். 24 வருட வெற்றிக்காக, வாரம் நூறு மணிநேரம் வேலை செய்தேன் என்று கூறினார்.

டான் அக்ர்சன் - தலைமை நிர்வாக அதிகாரி, ஜெனரல் மோட்டார்ஸ் (GM)

டான் அக்ர்சன் அசோசியேட்டட் ப்ரஸிடம் (AP) கூறுகையில், "எப்போதாவதுதான் 4.30 அல்லது 5.00 மணியைத் தாண்டி தூங்குவேன்" என்றார். சீக்கரம் எழுந்துக் கொள்வதால், இவரால் GM ஆசியாவிடம் தாமதமின்றி பேச முடிகிறது. இதுவரை தான் செய்த பணிகளில் இதுவே சிறந்தது என்றும் சொல்லிக்கொள்வார்.

இது சிக்கலும் ஆர்வமும் உற்சாகமும் நிறைந்தது.

பாப் இகெர் - தலைமை நிர்வாக அதிகாரி, டிஸ்னி நிறுவனம்

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்துக்கொள்வதாய், பாப் தி நியூயார்க் டைம்ஸிடம் கூறியுள்ளார். கிடைத்த இந்த அமைதியான நேரத்தில் பேப்பர் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, இசை கேட்பது, மெயில் பார்ப்பது, டிவி பார்ப்பது போன்ற பணிகளைச் சேர்த்து செய்வார். இது சத்தமில்லா நேரம் ஆயினும், பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் இவரது திறன் சத்தத்தோடு சாதித்து கொண்டுதான் இருக்கிறது.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
1.6k
Comments
Share This
Add to
Shares
1.6k
Comments
Share
Report an issue
Authors

Related Tags