பதிப்புகளில்

சட்டசபைக்கு தனது இரண்டு மாத குழந்தையுடன் வந்து பணியாற்றி அசத்தும் எம்எல்ஏ!

25th Jan 2018
Add to
Shares
686
Comments
Share This
Add to
Shares
686
Comments
Share

சட்டசபைக்குத் தொடர்புடைய ஒரு குடும்பத்தில் பிறந்ததால் போட்டியிட்டு தேர்வாகாமலேயே சட்டசபைக்குள் நுழைந்துள்ளார் ஒருவர். இவரது அம்மா தனது தொகுதிப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்க இவர் அங்குள்ள எம்எல்ஏ-க்களை பெரிதும் கவர்ந்து அனைவரது ஆதரவையும் முழுமையாக பெற்றுள்ளார்.

ரோத்தாஸ் நகர் தொகுதியின் எல்எல்ஏ சரிதா சிங் மற்றும் அவரது இரண்டு மாத குழந்தை அத்வைத் அபினவ் ராய் இருவரும் டெல்லி சட்டசபையிலுள்ள அனைவரது அபிமான ஜோடியாக உள்ளனர்.  

image


ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சரிதா சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தன்னார்வலரான அபினவ் ராய் தம்பதியினருக்கு 2017-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிறந்தார் அத்வைத் ராய். டெல்லி சட்டசபையில் மகப்பேறு விடுப்பு கிடையாது. எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக சரிதா சிங் தனது குழந்தையை உடன் அழைத்துவருகிறார்.

”அரசுப் பணியாளர்கள் என்பதால் எங்களுக்கு மகப்பேறு விடுப்பு கிடையாது. நாங்கள் மக்கள் பணியில் இருப்பவர்கள். அந்த பொறுப்புகளை நாங்கள் நிறைவேற்றவேண்டும். இந்த காலகட்டத்தை நான் மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்,”

என்று நியூஸ்18-க்கு தெரிவித்துள்ளார் சரிதா. அத்வைத்தை அனைவரும் சேர்ந்து கவனித்துக்கொள்கின்றனர். சரிதா சட்டமன்ற உறுப்பினராக தனது பொறுப்புகளை நிறைவேற்றி வருகிறார். சரிதாவுடன் பணியாற்றும் இருவர் குழந்தையை முழு நேரமும் கவனித்துக்கொள்கின்றனர். சில சமயம் அத்வைத் தனது அம்மாவுடன் களப்பணிகளுக்கும் செல்வார். 

“சட்டசபையில் குழந்தை இருக்கும்போது அமைதியான சூழல் கிடைக்கும். ஆனால் கழிவுநீர் வெளியேறும் பாதைகள் நிரம்பி வழிவதை பார்வையிட செல்லும்போதுகூட குழந்தையை உடன் அழைத்து சென்றுள்ளேன். அந்த சமயத்தில் காரில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பேன்.”

தற்சமயம் சட்டசபையில் மழலையர் பராமரிப்பிற்கென பிரத்யேக வசதி இல்லை. எனவே சரிதா தாய்ப்பால் கொடுக்க துணை சபாநாயகர் ராக்கி பிட்லான் அலுவலக அறையை பயன்படுத்திக்கொள்கிறார். சரிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அவரது செய்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குழந்தையின் வளர்ச்சி தடைபடும் என பெரியவர்கள் அஞ்சுகின்றனர். சரிதா மற்றும் அபினவ் இந்த கவலைக்கு பதிலளிக்கும் விதமாக அதிக மக்களோடு இணைந்து குழந்தை வளர்வதையே தாங்கள் விரும்புவதாக தெரிவிக்கின்றனர்.

மற்ற உணவு வகைகளுக்கு பழகும் வரை குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்காவது குழந்தையை இவ்வாறு உடன் அழைத்து செல்ல விரும்புகிறார் சவிதா. 

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா

Add to
Shares
686
Comments
Share This
Add to
Shares
686
Comments
Share
Report an issue
Authors

Related Tags