பதிப்புகளில்

முதலீடு ஏதுமின்றி 1.3 கோடி ரூபாய் வணிகத்தை உருவாக்கிய ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப்!

28th Nov 2018
Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share

ரோபோடிக்ஸ் இன்று அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையாகிவிட்டது. ஏனெனில் மனிதர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள் எளிதாக தானியங்கி முறையில் மாற்றப்படுகிறது. இதனால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது. எனினும் இது வெறும் ஆரம்பக்கட்டம் மட்டுமே. ஏனெனில் ரோபோடிக்ஸ் பிரிவில் இன்னும் எத்தனையோ புதுமைகள் வரவுள்ளது.

2013-ம் ஆண்டு பொறியாளர்களான என்ஏ கோகுல் மற்றும் நிகில் ராமசாமி பலமுறை ரோபோடிக்ஸ் குறித்து கலந்துரையாடினர். அப்போது தானியங்கல் மற்றும் ரோபோடிக் பிரிவில் அடிப்படையில் இடைவெளி இருப்பதை உணர்ந்தனர். இந்தத் தொழில்நுட்பங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் குறிப்பிட்ட பணிகளை மட்டுமே மேற்கொள்கிறது என்று கருதினர்.

எனவே இருவரும் 2015-ம் ஆண்டு பெங்களூருவில் வ்யுதி சிஸ்டம்ஸ் (Vyuti Systems) நிறுவினர். இந்த ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் முழுமையான தானியங்கல் தீர்வை வழங்குகிறது. இதன் சிஸ்டமில் விஷன் தொழில்நுட்பத்துடன்கூடிய ஒரு ரோபோடிக் கை, சிக்கலான பணிகளில் ஈடுபட தனியுரிமை வன்பொருள் மற்றும் மென்பொருள் போன்றவை உள்ளன.

நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது கோகுலும் நிகிலும் முதன் முதலில் சந்தித்தனர். கோகுல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றினார். நிகில் விற்பனைப் பிரிவில் பணியாற்றினார்.

வீட்டிலிருந்தே செயல்படத் துவங்கி சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் இதுவரை 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகத்தை உருவாக்கியுள்ளது.

குறுகிய காலத்திலேயே GE ஹெல்த்கேர், ஹனிவெல், டிம்கென், Sansera போன்றோர் வ்யுதி க்ளையண்ட் பட்டியலில் இணைந்தனர்.

கோகுல் அவர்கள் ஆர்வம் காட்டிய பகுதி குறித்து விவரிக்கையில், 

“மெக்கானிக்கல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ரோபோடிக் கை பிரிவில் உள்ள அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்யப்பட்டுவிட்டது எனலாம். ஆனால் இந்தப் பிரிவில் பொருட்களைத் திறம்பட கையாளும் பகுதியில் கவனம் செலுத்தப்படவில்லை,” என்றார்.

ஒரு மெக்கானிக்கல் ரோபோ ப்ரோக்ராம் செய்யப்பட்ட குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ளும். ஆனால் அமைப்புகளில் ஏதேனும் மாறுபாடு இருக்கும் பட்சத்தில் அதனால் பணிகளை மேற்கொள்ளமுடியாது என்கின்றனர் நிறுவனர்கள். மெக்கானிக்கல் ரோபோவிற்கு பொருளின் அளவு, செயற்பாட்டு பகுதி போன்ற குறிப்பிட்ட வழிதாட்டுதல்கள் அவசியம் எனவும் விவரித்தனர். 

image


”ப்ரோக்ராம் செய்யப்பட்டதில் ஒரே ஒரு டிகிரி அளவு மாறுபட்டிருந்தாலோ அல்லது தூக்கவேண்டிய பொருளின் அளவு ப்ரோக்ராம் செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் பெரிதாக இருந்தாலோ ரோபோ கை அந்தப் பணியை மேற்கொள்ளமுடியாது,” என்றார் நிகில்.

பிரச்சனைக்கு தீர்வுகாண ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப்

ரோபோடிக்ஸ் மற்றும் தானியங்கல் பகுதியில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் பொருட்களைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறதே தவிர பொருட்களைத் திறம்படக் கையாள்வதில் கவனம் செலுத்துவதில்லை என்கின்றனர் இந்நிறுவனர்கள்.

பொருட்கள் திறம்படக் கையாளப்படும்போது தூக்கப்படவேண்டிய பொருளில் வேறுபாடு இருந்தாலும் ஒரு தானியங்கி ரோபோ சிறப்பாக இயங்கி பணியை மேற்கொள்ளும்.

பொருளைத் திறம்படக் கையாளும்போது ரோபோ மேற்கொள்ளும் பணிகள் மென்பொருள் அல்காரிதத்துடன் ப்ரோக்ராம் செய்யப்படும். இதனுடம் கேமிரா இணைக்கப்பட்டிருப்பதால் மாறுபாடுகள் இருப்பினும் ரோபோவால் பணியை மேற்கொள்ளமுடியும்.

மெக்கானிக்கல் ரோபோடிக் தானியங்கி முறையில் காட்சிப்படுத்தும் அம்சத்தில் அதிக கவனம் செலுத்த இருவரும் தீர்மானித்தனர். ஏனெனில் இதில் தீர்வுகாண்பதில் பலர் வெற்றியடையவில்லை. ரோபோடிக் அல்லது தானியங்கி ப்ராடக்ட் படத்தகவல்களைக் கொண்டு சூழலை புத்திசாலித்தனமாக புரிந்துகொண்டு பணியை மேற்கொள்ளமுடியும்.

உற்பத்தித் துறையில் தானியங்கல் மற்றும் ரோபோடிக்ஸ் பயன்பாடு அதிகம் என்பதாலும் தங்களது ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் இதில் வணிக ரீதியாக பயனடையும் என்பதாலும் இருவரும் இந்தத் துறையில் கவனம் செலுத்தத் தீர்மானித்தனர்.

”நாங்கள் க்ளையண்டுகளைச் சந்தித்து தீர்வு காணப்படவேண்டிய கடினமாக பிரச்சனைகளைக் கேட்டறிந்தோம்,” என்றார் கோகுல்.

வெற்றியடைதல்

இரு நிறுவனர்களும் இளம் வயதினர் என்பதால் வாங்குவோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டது. அவர்களது பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்ட பிறகு பணம் செலுத்துமாறு நிறுவனர்கள் கேட்டுக்கொண்டனர்.

இவர்களது முக்கிய வாடிக்கையாளர்களில் ஒருவரான Sansera Engineering மெக்கானிக்கல் தானியங்கல் பகுதியில் அவர்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அணுகினர். இந்நிறுவனம் ஏற்கெனவே ஒரு தொழில்நுட்ப வெண்டாரை பணியிமர்த்தியது. ஆனால் இரண்டாண்டுகளுக்குப் பிறகும் அவர்களால் தீர்வுகாண முடியவில்லை. ஆனால் வ்யுதி மூன்று வார காலத்தில் அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டதாக தெரிவிக்கிறது. Timken நிறுவனத்திடனும் இதே போன்ற அனுபவமே ஏற்பட்டது.

”இந்த வெற்றி எங்களுக்கு ஒரு விதமான அங்கீகாரத்தை அளித்தது. மற்ற க்ளையண்ட்களுடன் இணையவும் உதவியது,” என்றார் நிகில். வ்யுதி 31 ப்ராஜெக்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித எதிர்மறை கருத்துகளும் வந்ததில்லை என குறிப்பிடுகிறது.

”முதல் விற்பனை எப்போதுமே கடினமாக இருக்கும். ஒரு பிரச்சனைக்கு தீர்வு கண்டால் பரிந்துரை வாயிலாக நமது சேவை விரைவாக பலரைச் சென்றடையும்,” என்றார் நிகில்.

சூழ்நிலையைப் பகுத்தறிந்து, வகைப்படுத்தி, ஆய்வு செய்து அதன் பிறகு முடிவெடுக்கும் இவர்களது திறன்தான் வெற்றிக்கு வழிவகுத்ததாக நிறுவனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் எந்தவித முதலீடுமின்றி துவங்கப்பட்டது. இன்னமும் இரண்டு நபர்களைக் கொண்டே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர் மற்றும் சேவை பில்லிங் வாயிலாகவே நிறுவனம் இயங்கி வருவதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள்

தற்சமயம் இந்த அறிவியல் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் ரோபோடிக் தானியங்கல் சார்ந்து ஒவ்வொரு வாடிக்கையாளரும் சந்திக்கும் தனிப்பட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தகட்டமாக வளர்ச்சியடைய விரும்புகின்றனர்.

மற்ற வளர்ந்த நாடுகளுடம் ஒப்பிடுகையில் இந்தியாவில் தொழிற்சாலை பகுதியில் ரோபோக்கள் ஊடுருவல் குறைவாகவே உள்ளது. 2017-ம் ஆண்டு உலக ரோபோ புள்ளியியல் அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு 10,000 ஊழியர்களுக்கும் மூன்று ரோபோக்கள் மட்டுமே உள்ளன. வ்யுதி செயல்படும் பகுதியில் உலகளவில் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகிறது. இந்தியாவில் செயல்படும் ஸ்டார்ட் அப்களும் ரோபோடிக் தானியங்களில் மெக்கானிக்கல் பகுதியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பொருட்களை திறம்பட கையாளும் பகுதியில் கவனம் செலுத்துவதில்லை.

நம்பகமான க்ளையண்ட் தொகுப்பை உருவாக்கியுள்ள இந்த ஸ்டார்ட் அப் அடுத்தகட்ட வளர்ச்சியாக வாடிக்கையாளர்கள் ஒரு தயாரிப்பை வாங்கி அப்படியே பயன்படுத்தத் துவங்கும் விதத்தில் தயாரிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

ஹார்ட்வேர் அனைத்தும் ஆய்வு செய்யும் பணிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. காட்சிகளை கையாளும் விதத்தில் உருவாக்கப்படவில்லை. இதுவே எங்களுக்கு தடையாக உள்ளது,” என்றார் நிகில். பல பரிமாணங்களுடன்கூடிய கேமிராவுடன் இணைக்கப்பட்ட முன்வடிவம் தேவைப்படுகிறது. இதில் காட்சிகளை சுயமாக கற்றுக்கொள்ளும் வகையில் அறிவுத்திறன் பெற்ற மென்பொருள் இருக்கும். இது பல்வேறு பணிகளை மேற்கொள்ள உதவும்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு மென்பொருள் தீர்வை உருவாக்குவதற்கு பதிலாக இவர்கள் உருவாக்க விரும்பும் இந்த தயாரிப்பானது அனைவரின் தேவைக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

”நாங்கள் தற்போது வழங்க விரும்பும் திட்டத்தில் அனைத்து விதமான வடிவமைப்பிற்கும் எங்களது அறிவுத்திறன் வாய்ந்த கட்டமைப்பு தானியங்கி முறையில் பணியை மேற்கொள்ளும்,” என்றார் கோகுல்.

பல்வேறு செயல்முறைகளுக்காக மென்பொருள் லைப்ரரி உருவாக்க உள்ளனர். இது ப்ரோக்ராம் செய்யப்பட்ட அளவுகளில் மாறுபாடு இருப்பினும் எந்தவித தானியங்கல் பணியையும் ரோபோடிக் கை செய்துமுடிக்க உதவும்.

”வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ப சேவையளித்து ஒரு குறிப்பிட்ட சதவீத அளவு வரையிலும் கணிக்க முடியாத சூழலை எங்களால் கையாள முடிந்தது. அடுத்தகட்டமாக அனைத்து விதமான கணிக்கமுடியாத சூழல்களையும் கையாள திட்டமிட்டுள்ளோம்,” என்றார் கோகுல்.

அத்தகைய அமைப்பை உருவாக்க வ்யுதி ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் சுமார் 2 மில்லியன் டாலர் ப்ரீ சீரிஸ் சுற்று நிதி உயர்த்த எதிர்நோக்கியுள்ளது. இந்த ஸ்டார்ட் அப்பின் தற்போதைய வாடிக்கையாளர்களில் ஒருவரான Sansera ஏற்கெனவே இந்த திட்டத்தை சோதனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் சோதனை திட்டம் மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

”திட்டத்தை உருவாக்குவது என்பது முற்றிலும் தனிப்பட்ட பகுதி. ஆனால் அதைக் கொண்டு தயாரிப்பை உருவாக்கி விலையை நிர்ணயித்து நிலைப்படுத்தும் அளவிற்கு எடுத்துச் செல்வதே அந்த திட்டத்தை மெய்யாக்கும் செயலாகும்,” என்றார் கோகுல்.

ஆங்கில கட்டுரையாளர் : திம்மையா பூஜாரி | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக