பதிப்புகளில்

84 வயதிலும் தளரா மனிதன்: 400-க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகள் பதிவு செய்துள்ள ட்ராஃபிக் ராமசாமி!

29th Jan 2018
Add to
Shares
2.4k
Comments
Share This
Add to
Shares
2.4k
Comments
Share

ட்ராஃபிக் ராமசாமி 84 வயதிலும் பயமேதும் இன்றி அரசாங்கம், காவல்துறை, அதிகாரிகள் என அனைவரிடமும் கேள்வியெழுப்புகிறார். மில் தொழிலாளியாக இருந்த இவர் சுய முனைப்புடன் போக்குவரத்து காவலராகவும் சமூக ஆர்வலராகவும் செயல்படுகிறார். கடந்த பல ஆண்டுகளாக சென்னை சாலைகளின் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ளார். 400-க்கும் அதிகமான பொது நல வழக்குகள் (PIL) பதிவு செய்துள்ளார்.

ராமசாமிக்கு 18 வயதிருக்கையில் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சி.ராஜகோபாலச்சாரி அவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். ராமசாமி இன்றளவும் ராஜகோபாலச்சாரியை முன்மாதிரியாகவே கருதுகிறார். 1954-ம் ஆண்டு ராமசாமிக்கு 20 வயதிருக்கும் போது சென்னையின் அடையாளமாக விளங்கிய பின்னி மில்ஸ் நிறுவனத்தில் நெசவு பணியாளர்களுக்கு பொறுப்பேற்கும் பணியில் சேர்ந்தார். 1971-ம் ஆண்டு தாமாகவே முன்வந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட பிறகு சமூக பணிகளில் ஈடுபடத் துவங்கினார்.

பட உதவி: இந்தியா டுடே

பட உதவி: இந்தியா டுடே


சென்னையில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் சேவையில் சுயமாக ஈடுபட்டதால் அவருக்கு ’டிராஃபிக் ராமசாமி’ என்கிற பெயர் வந்தது. அவர் பெரும்பாலான நேரங்களில் சாலையில் போக்குவரத்தை சீரமைத்துக் கொண்டிருப்பதையோ அல்லது நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் பதிவு செய்து கொண்டிருப்பதையோ பார்க்கலாம். 

தட்டையான மரப்பலகைகள் கொண்டு உருவான மோட்டார் இன்ஜின் பொருத்தப்பட்ட மீன் வண்டிகளால் விபத்து நேரிடும்போது பாதிக்கப்பட்டவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டது. இந்த வகை வண்டிகளை தடை செய்வதற்காக முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார். 

சட்டவிரோத கட்டுமானங்கள், ஊழல்கள் போன்றவற்றை எதிர்த்து அடிக்கடி பொது நல வழக்குகள் பதிவு செய்வார். இதன் காரணமாக சென்னையைச் சேர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் (பில்டர்கள்), அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரை பகைத்துக்கொள்ளும் நிலை உருவானது.

”இது ஒரு ஜனநாயக நாடு. மக்களுக்காக, மக்களால், மக்களுடன் இணைந்து நம்மால் மாற்றத்தை கொண்டு வர முடியும். ஆனால் நாம் அது குறித்து பேசவேண்டும். அமைதியாக கடந்து செல்லக்கூடாது...”

என்று ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’-க்கு தெரிவித்தார்.

image


அனைத்து தரப்புகளிலிருந்தும் எதிரிகள் உருவானதால் ராமசாமி ஏழு முறை காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர்களால் பல முறை தாக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். ராமசாமிக்கு வந்த கொலை மிரட்டல்களுக்கு பயந்து அவரது மனைவியும் மகளும் பிரிந்து சென்று தனியாக வசிக்கத் துவங்கினர். அவர்களது அச்சத்திற்கு தக்க காரணம் இருந்தது. ஏனெனில் 2002-ம் ஆண்டு ராமசாமி தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். தி நியூஸ் மினிட்-க்கு அவர் தெரிவிக்கையில்,

2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் சென்னை உயர் நீதி மன்றத்திற்கு அருகிலிருந்த சாலையில் நின்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நபர் என் அருகில் வந்து நேரம் கேட்டார். நான் மணி பார்ப்பதற்குள் ஒரு கத்தியால் என்னை கடுமையாக தாக்கினார். அது ஒரு கொலை முயற்சியே. இருந்தும் நான் உயிர் தப்பினேன். என்னுடைய வலது கண்ணில் பார்வையை இழந்தேன்.”
பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட உதவி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


கடந்த 14 ஆண்டுகளாக காவல்துறை பாதுகாப்பில் இருக்கும் ராமசாமி, ஊழலுக்கு எதிராகவும் போர் தொடுத்து வருகிறார். இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளையும் பகைத்துக்கொண்டார். சமீபத்தில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி அரசு செலவில் நினைவிடம் கட்டுவதற்கு எதிராக பொது நல வழக்கு பதிவு செய்துள்ளார்.

கட்டுரை : Think Change India

Add to
Shares
2.4k
Comments
Share This
Add to
Shares
2.4k
Comments
Share
Report an issue
Authors

Related Tags