பதிப்புகளில்

ஆண்கள் கழிவறை சுகாதாரத்தில் அக்கறைக் கொண்டு செயல்படும் பெண் தொழில்முனைவரின் கண்டுபிடிப்பு!

19th Jan 2018
Add to
Shares
679
Comments
Share This
Add to
Shares
679
Comments
Share

துர்நாற்றத்துடன் கூடிய கழிவறையையும் நகராட்சி குழாயையும் பார்க்கும்போது நல்ல குடிநீருக்கான பற்றாக்குறை இருப்பது தெரியும். இந்தக் காட்சி தனது தொழில்நுட்பத் திறன் கொண்டு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிற கவலையில் இருந்த நேஹா பகோரியாவை வேதனைப்படுத்தியது.

இதில் முரண்பாடு என்னவென்றால் கழிவறையை சுத்தம் செய்ய குழாயிலிருந்து அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இந்தக் குழாயிலும் தண்ணீர் வற்றிவிடும். தண்ணீர் சேமித்தல், சுகாதாரம் இந்த இரண்டு பிரிவுகளிலும் இருக்கும் பிரச்சனைகளுக்கு நேஹா உருவாக்கிய தீர்வுதான் ’இகோ ட்ராப்இன்’ (EcoTrapIn). இது கழிவறைகளை நீரற்ற துர்நாற்றம் இல்லாத இடமாக மாற்றுவதற்கான முயற்சியாகும்.

image


புதுமை படைத்தவர்

குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரம் இவை இரண்டுமே உலகளாவிய பிரச்சனையாகும். இந்தியாவில் இந்தப் பிரச்சனை கிராமப்புறங்களில் மட்டுமில்லாமல் நகர்புறங்களிலும் உள்ளது. அத்துடன் கழிவறைகளை சுத்தப்படுத்த அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்பட்டாலும் அவை மஞ்சள் நிற கறையுடனும் மோசமான துர்நாற்றத்துடனுமே காணப்படுவதை கவனித்தார்.

”நான் இதுகுறித்து ஆய்வு செய்தேன். நீரற்ற கழிப்பறைக்கான தொழில்நுட்பம் கழிவறைகளை உலர்வாகவும் சுத்தமாகவும் மாற்றுவதுடன் அதிகளவு நீரை சேமிக்கவும் உதவுகிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதுவே ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. புதுமையான நீரற்ற கழிப்பறை தொழில்நுட்பமான ’இகோ ட்ராப்இன்’ துவங்கினேன்,” என நினைவுகூர்ந்தார்.

போர்பந்தரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரான நேஹா டெல்லியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் முடித்தவர். இவர் நான்காண்டுகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றினார். இவர் காந்தியவாதி. அத்துடன் விவேகானாந்தரின் கருத்துக்களைப் பின்பற்றுபவர். இவர் ஈடுபட்டுள்ள பணியால் தனிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்திருந்தாலும் பெரியளவில் எதையும் சாதிக்கவில்லை என்கிற உணர்வு தொடர்ந்து இருந்து வந்ததால் அவரது பணி வாழ்க்கை அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

சுகாதாரப் பிரிவில் நீரற்ற தொழில்நுட்பம் ஆராயப்படாத பகுதியாக இருந்தது. குறிப்பாக நீரற்ற கழிவறைகள் குறித்து அதிகம் ஆராயப்படவில்லை. ஆனால் இதில் சாத்தியக்கூறுகள் நிறைந்திருப்பதை நேஹா தனது ஆய்வு வாயிலாக கண்டறிந்தார்.

’தபு’ (Tapu) நிறுவனத்தின் நீரற்ற கழிவறைக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முயற்சியின் முதல் வடிவம்தான் காப்புரிமை பெறப்பட்ட ’இகோட்ராப்இன்’. இந்த முயற்சி ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

 ”கழிவறைகளை சுத்தம்செய்ய வீணாக்கப்படும் டன் கணக்கான நீரை சேமித்து அதே சமயம் கழிவறைகளை துர்நாற்றம் வீசாத பகுதியாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்,” என்று விவரித்தார்.

கழிவறையில் கூடுதலாக இணைக்கப்படும் தொழில்நுட்பம் என்பதால் தற்போதுள்ள கழிவறைகளையும் நீரில்லா துர்நாற்றமில்லா கழிவறையாக மாற்றமுடியும். சிறுநீர் கழிக்கும் தொட்டிக்கு அடிப்பகுதியில் இதை பொருத்திவிடலாம். இதன் உள்ளே செல்லும் அல்லது வெளியேறும் கிருமிநாசினி பாதை வாயிலாக சிறுநீர் செல்லும். சிறுநீர் வடிந்ததும் இதிலுள்ள ஒரு ஃப்ளோட் வெளியேற்றத்தை நிறுத்திவிடும். தண்ணீரும் சிறுநீரும் ஒன்றோடொன்று கலக்காது எனவே அடிக்கடி ஃப்ளஷ் பயனப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இதனால் அதிக கிருமிகள் இருக்கும் லிவரை தொடவேண்டிய அவசியமும் இருக்காது. இதனால் சிறுநீர் கழிக்கும் ஒரு தொட்டியில் மட்டுமே 1,67,900 லிட்டர் நல்ல தண்ணீர் பாதுகாக்கப்படும்.

சிறுநீரும் தண்ணீரும் கலப்பது தவிர்க்கப்படுவதால் துர்நாற்றம் வீசப்படுவதும், கறை படிவதும், நீர் வெளியேறும் குழாய் அடைபடுவதும் கட்டுப்படுத்துகிறது. கைகளால் தொடுவதற்கான அவசியமே இல்லாத இந்த தயாரிப்பு முழுமையாக பசுமையானது. மறுசுழற்சிக்கு உட்பட்டது. நாள் ஒன்றுக்கு சுமார் 8 ரூபாய் செலவாகும். ஆனால் தண்ணீர் கட்டணம், சுத்தப்படுத்தும் பொருட்கள், ப்ளம்பிங், பழுதுபார்க்கும் சேவைக்கான கட்டணங்கள், மின்சாரம், பேட்டரி போன்ற கட்டணங்கள் 90 சதவீதம் சேமிக்கப்படும்.

image


ஆண்களுக்கான பகுதியில் செயல்படுதல்

சமூக அக்கறையுடன் சிந்தித்து செயல்பட விரும்பியபோதும் இவரது தயாரிப்பு ஆண்களின் கழிவறைக்கே பொருந்தும் என்பதால் வெளியிடங்களில் இது சார்ந்த பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டு தரவுகளை சேகரிக்க சென்றபோது சில தர்மசங்கடமான சூழல்களை அவர் சந்திக்க நேர்ந்தது.

”ஆண்கள் சுகாதாரமற்ற கழிவறைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பகிர்ந்துகொள்ளத் தயங்கி ஒதுங்கிவிடுவார்கள். தயாரிப்புகள் நிறுவப்பட்டத்தை சரிபார்க்கச் சென்றபோது பெண் உள்ளே இருப்பதால் ஆண்கள் கழிவறைக்குள் செல்லத் தயங்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு,” என்று நினைவுகூர்ந்தார்.

இரண்டரை ஆண்டுகளில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்.பி.ஜெயின் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிட்யூட் மும்பை போன்றோர் வாடிக்கையாளர்களாக இணைந்தனர். நேஹா இவர்களது கருத்துக்கள் மற்றும் சான்றுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இராண்டாவது வடிவமான இகோட்ராப்இன்ப்ள்ஸ் (EcoTrapInPlus) முயற்சியை திட்டமிட்டார்.

இதன் சோதனைகட்ட விற்பனை அரிஹந்த் இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடட் மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்திற்கு பல பாராட்டுகள் கிடைத்தது.

அடுத்த வடிவமான ’இகோ ட்ராப்இன்எக்ஸ்ட்ரா’ (EcoTrapInXtra) மேலும் வலுவான தொழில்நுட்பத்துடன் வசதிக்கேற்ப வழக்கமான கப்ளிங் சார்ந்த சிறுநீர் கழிக்கும் தொட்டியுடன் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. “சந்தையில் கிடைக்கும் நீரற்ற சிறுநீர் தொட்டிகளை பராமரிப்பதும் நிறுவுவதும் எளிது,” என்றார்.

பராமரிப்பை மேலும் எளிதாக்கவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு முதல் சந்தையில் கிடைக்கிறது. இந்த வடிவமானது லார்சன் அண்ட் டூப்ரோ, ப்ரயாஸ் இன்னோவேஷன்ஸ் போன்ற மதிப்புமிக்க அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

புதுமையான கண்டுபிடிப்பில் ஈடுபட்ட இந்த தொழில்முனைவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இவரது தயாரிப்பிற்கு ஆதரவளித்து சமீபத்திய வடிவமான ’இகோட்ராப்இன்எக்ஸ்ட்ரா’ என்கிற நீரில்லா சிறுநீர் தொட்டிக்காக நிதியுதவி அளித்துள்ளது.

”தேசிய மற்றும் சர்வதேச அளவில் சென்றடையவும் விருதுகளைப் பெறவும் இந்த அங்கீகாரம் உதவியது. கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் சந்தைப்படுத்தத் துவங்கியுள்ளோம். கடந்த இரண்டாண்டுகளில் எங்களது வருவாய் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த இரண்டாண்டுகளில் எங்களது வருவாய் 300 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் நேஹா.

டீலர்கள் மற்றும் சானல் பார்ட்னர்கள் வாயிலாக சந்தைப்படுத்தப்பட்டது. உலகளாவிய தேவைகளை பூர்த்தி செய்ய சர்வதேச சந்தைகளில் செயல்படுவது குறித்தும் ஆராய்ந்து வருகிறது.

”எங்களது போட்டியாளர்கள் பெரும்பாலானோரின் தொழில்நுட்பம் வெளிநாடுகளைச் சார்ந்ததாகும். இகோட்ராப்இன்ப்ளஸ் மற்றும் இகோட்ராப்இன்எக்ஸ்ட்ரா நீரற்ற சிறுநீர் தொட்டிகளுக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பான தொழில்நுட்பம் கொண்டது. தொடர் செலவுகள் குறைவு. மாற்றுவதற்கான செலவு குறைவு. இவையே இந்த தயாரிப்பை போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களாகும்,” என்றார்.

தற்போது மொத்த உற்பத்திக்கான தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருகிறது. 

“அடுத்த சில மாதங்களில் அதிக நிதியை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். சுற்றுசூழலை பாதுகாக்க விரும்பும் முதலீட்டாளர்களைக் கண்டறிவது சவாலாக உள்ளது. ஆனால் அவ்வாறான முதலீட்டாளரைக் கண்டறிந்தால் மிகச் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா

Add to
Shares
679
Comments
Share This
Add to
Shares
679
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக