பதிப்புகளில்

13 வயதில் நிறுவனம் தொடங்கிய இந்திய இளம் சிஇஒ அயான் சாவ்லா!

24th Mar 2017
Add to
Shares
465
Comments
Share This
Add to
Shares
465
Comments
Share

அதிவேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்-அப் ஆர்வம், கல்லூரி மாணவர்கள் பலரை தொற்றிக்கொண்டு நிறுவனம் தொடங்க படிப்பை பாதியில் விடும் அளவிற்கு கொண்டு சென்ற பல கதைகளை படித்து வருகின்றோம். ஆனால் அயான் சாவ்லா என்பவரின் கதை அதைவிட சுவாரசியமானது என்றே சொல்லவேண்டும். 13 வயதில் பள்ளியை விட்டு தொழில்முனைவில் இறங்கி இந்தியாவின் இளம்வயது சிஇஒ என்ற அடையாளத்தை பெரும் அளவிற்கு தொழிலில் வெற்றி கண்டுள்ளார். 

image


அயான் ஏழு வயதாக இருந்தபோது கம்யூட்டர்களில் ஆர்வம் கொண்டார். எல்லா குழந்தைகளையும் போல கணினியில் பலவற்றை முயற்சி செய்யும் துறுதுறு சிறுவனாக வளர்ந்தார். வீடியோ கேம்ஸ் விளையாடுவது, வீடியோ எடிடிங், படங்கள் பார்ப்பது என்று இருந்த அவருக்கு தொழில்நுட்ப பரிணாமத்தின் மீது அதீத ஈர்ப்பு ஏற்பட்டது. கல்வியின் அவசியத்தை முக்கியமாக கருதிய குடும்பத்தில் பிறந்த அயான், ஒரு நாள் தன் கனவை நோக்கி செல்ல பள்ளிப்படிப்பை கைவிடவேண்டி வந்தது. அதன்படி, ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த அயான் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார். இதுவே அவரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றும் சொல்லமுடியும். 

டெல்லியைச் சேர்ந்த அயான், 1997-ல் குஞ்சம் சாவ்லா என்ற பேஷன் டிசைனருக்கு மகனாக பிறந்தார். அயானின் மூத்த சகோதரி ஜ்யோல்ஷா சாவ்லா ஒரு சிவில் இஞ்சினியர். தன் அனுபவம் பற்றி பேசிய அயான்,

“என் பெற்றோர் நான் 8 வயதாக இருந்தபோது எனக்கு ஒரு கம்யூட்டரை வாங்கி தந்தனர். ஆர்வமுள்ள ஒரு குழந்தையான நான் அப்போதே எடிடிங் கருவிகள் கொண்டு அடோப் சாப்ட்வேர் மூலம் படங்கள் உருவாக்கினேன். வெப்சைட், மென்பொருள் மற்றும் ஆப்கள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினேன். 13 வயதில் சமூக பயன்பாடு கொண்ட மக்களை இணைக்கக் கூடிய ஒரு தளத்தை உருவாக்கும் ஐடியா என் மனதில் வந்தது. அது பற்றி ஓர் ஆண்டு ஆராய்ச்சி செய்தபின், 2011-ல் களத்தில் இறங்கினேன்,”என்றார். 

அயான் இதற்காக யாரிடமும் உதவியோ, வழிகாட்டவோ கேட்கவில்லை, தன் அறையில் கணினி முன்பு அமர்ந்து தானே இதைப் பற்றி படிக்க தொடங்கினான். தேவையான புத்தகங்களை வாங்கி படிக்கத் தொடங்கினான். சந்தேகங்களுக்கு ஆன்லைனில் பதில்கள் கிடைத்தன. தன் தாயாரின் ஆதரவு பற்றி பேசிய அயான்,

என் அம்மா என் நிறுவனத்தின் நிதி மற்றும் சட்ட சம்பந்த விஷயங்களை கவனித்து கொள்கிறார். அவர் தான் என் நிறுவனத்தின் தலைவி. ஆனால் அவருக்கு ஐடி பற்றி தெரியாது, அது என் வேலை அதில் அவர் தலையிடவும் மாட்டார். என் அம்மா ஒரு சூப்பர்வுமன். என்னை என் சொந்த விஷயங்களை, நிறுவனத்தை, வீட்டை கவனித்து கொள்வார். அவரிடம் பேசக் கூட எனக்கு நேரம் கிடைப்பதில்லை.

Asian Fox Developments என்ற நிறுவனத்தை 2011-இல் நிறுவினார் அயான். இது ஐடி, வெப் மற்றும் மார்க்கெடிங் தயாரிப்புகளை சேவைகளை அளிக்கிறது. பின் மூன்று நிறுவனத்தை நிறுவினார் அயான். Group for buddies, Global web mount மற்றும் Mind-In advertising என்று அடுத்தடுத்து இரண்டு ஆண்டுகளில் தொடங்கினார். அயானின் தாய் தொடக்கத்தில் ரூ.10000 முதலீடு செய்தார், அதன் பின் எந்த முதலீடிற்கும் யாரிடமும் செல்லவில்லை என்கிறார் அயான்.

கென்போலியோஸ் பேட்டியில் அயான்,

“பலமுறை என் வாடிக்கையாளார்கள் என்னை காட்டிலும் என் விற்பனை அதிகாரியை நம்பியுள்ளனர். நான் இளம்வயதுடையவனாக இருந்ததால் பலரும் என்னை ஏற்க தயங்கினர். நிறுவனம் நிறுவிய முதல் ஆண்டில் சவாலாய் இருந்தது. மெல்ல மெல்ல என் திறமையை அவர்கள் உணர ஆரம்பித்தனர்,” என்றார். 

இப்பொழுதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், இண்டெர்நெட்டில் சென்று ஐடி துறை சம்பந்தமாக படிப்பதை நிறுத்தவில்லை அயான். பல கருத்தரங்குகள், கூட்டங்கள், வெபினார்களில் பங்கெடுத்து சிறப்பு பேச்சாளராக வலம்வருகிறார். கல்லூரி மாணவர்கள் இடையே தன் கதையை பகிர்ந்து பல இளைஞர்களை ஊக்குவித்தும் வருகிறார் அயான். 2014-15-இல் ஆர்லாண்டோவில் நடைப்பெற்ற எண்டர்ப்ரைஸ் கன்னெக்ட் விழாவில் பேச இவரை அழைத்திருந்தனர். 

அண்மையில் Asian Fox Developments, திரைப்பட இயக்குனர் இக்ரம் அக்தர் மற்றும் தயாரிப்பாளார் ராஜேஷ் ஆர்.திருபாதி இன் India Mein Lahore என்ற படத்தில் ஐடி மற்றும் ஆன்லைன் மீடியா பார்ட்னராக கையொப்பம் ஆகியுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். 

18 வயது ஆகும் போதே, அயான் சுமார் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை உலகமெங்கும் கொண்டிருந்தார். அமெரிக்கா, யூகே ஹாங்காங், டர்க்கி என்று பல நாடுகளில் இவரின் நிறுவன கிளைகள் உள்ளது. இவருக்கு 'Young Entrepreneur of the Year' விருதை பிரதமரின் அலுவலகம் இருமுறை வழங்கியுள்ளது. 

தனது ஓய்வு நேரத்தை செலவிடுவது பற்றி கூறிய அயான்,

“நான் பார்ட்டிகளுக்கு எப்போவாவது தான் செல்வேன். அரசு ஆசிரியர்களை சந்தித்து நான் பாடம் எடுப்பேன். என் அறிவை பிறருடன் பகிர்வதில், குறிப்பாக ஐடிதுறை பற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதை நான் விரும்பி செய்கிறேன்,” என்றார். 

அயானின் கதை மில்லியனின் ஒருவரது கதை. இளம் வயதில் தொழில்முனைவை தேர்ந்தெடுத்து மேலும் மேலும் வளர்ந்து வெற்றிகளை தொட, உலகளவில் பிரசித்தி பெற நம் வாழ்த்துக்கள். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
465
Comments
Share This
Add to
Shares
465
Comments
Share
Report an issue
Authors

Related Tags