பதிப்புகளில்

க்ரௌட்ஃபண்டிங் மூலம் நிதி திரட்டி தன் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட இல்லத்தரசி!

29th Mar 2017
Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share

சில்லென்ற நவம்பர் மாதத்தின் ஒரு மாலைப்பொழுது. அடர்ந்த நிறம் கொண்ட தோள் வரை நீண்ட கூந்தல் கொண்ட பெண்மணி ஒருவர் கூட்டத்தின் முன்னால் நின்றிருந்தார். இந்திய ஹேபிடட் செண்டர் (India Habitat Centre) அரங்கில் கூடியிருந்த கூட்டத்தில் கவிதையை விரும்பும் சுமார் 150 நபர்கள் கூடி இருந்தனர். அவர்கள் முன் சிற்றின்பம் சார்ந்த கவிதைகள் கொண்ட தாள்களை கையில் பிடித்திருந்தார். குளிருக்கேற்ற ஜேக்கட் மற்றும் கேப் அணிந்து நிமிர்ந்து நின்றவாறு சற்றே பதட்டமாக சிரித்தபடி,

“என் பெயர் சிசிலியா அப்ரஹாம். என்னுடைய வயது 40. நான் ஒரு இல்லத்தரசி. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவதாசி பெண் கவிஞரின் சில கவிதை வரிகளை வாசிக்கப்போகிறேன். அன்றைய காலகட்டத்தில் இந்தக் கவிதைகள் தடை செய்யப்பட்டவையாகும்,” என்றார்.
image


சிசிலியா, தெலுங்கு கவிஞரான முட்டுபலனியின் Rādhikā-sāntvanam கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அந்த கவிதை வரிகளை வாசித்தார். கிருஷ்ணன், இலாவை மணந்த பிறகு அவரை சந்திக்க வந்த ராதா, பொறாமை நிறைந்த பேச்சுக்கள் குறித்து அந்த கவிதை வரிகளில் இடம்பெற்றிருந்தது. அவரது குரல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தபோதும், அவரது கணவரான புனீத் சிசிலியாவை ஊக்குவிக்கும் விதமாக அவரைப் பார்த்து சிரித்தார்.

சிசிலியா அவர் எழுதிய கவிதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட தீர்மானித்தபோது அவர் முதலில் அணுகிய சில பதிப்பாளர்கள் அவரது மெயில்களுக்கு பதில் கூட அனுப்பவில்லை. சிசிலாவே புத்தகத்தை வெளியிட முதலில் வலியுறுத்தியவர் கணவர் புனீத்.

”எனக்கு உத்வேதம் அளித்தவர் கவிஞர் முட்டுபலனி. அவரது கவிதைகளை வாசித்தால் எனக்கு அதிக தைரியம் உண்டாகும். 17-ம் நூற்றாண்டில் அவரால் சிற்றின்பம் குறித்து எழுத முடிந்து என்றால், என்னுடைய கவிதைப் புத்தகத்தை நானே வெளியிட முடியம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.”

இல்லத்தரசியான சிசிலியாவின் கணவர் இராணுவத்தில் பணிபுரிகிறார். இரண்டு குழந்தைகளின் தாய். ’வெறும் இல்லத்தரசி’ என்று பலமுறை பலரால் கூறப்பட்ட இவர் கவிதைப் புத்தகத்தை வெளியிட க்ரௌட்ஃபண்டிங் மூலம் நிதி திரட்டியுள்ளார். 

எப்படி துவங்கியது?

சிசிலியா அப்ரஹாம் 10 வருடங்கள் இராணுவ கண்டோன்மெண்டில் வசித்து வந்தார். இவர் ரீபாக்கில் பயிற்சிபெற்ற ஏரோபிக் பயிற்சியாளர் மற்றும் சிவானந்த் யோகா ஆசிரியர். இவரது கணவர் இராணுவ அதிகாரி என்பதால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நகரத்தை மாற்றவேண்டியிருந்தது. இதனால் சிசிலியா மனம் விரக்தியடையத் தொடங்கினார். புனீத், குழந்தைகள் கபீர் மற்றும் ஏப்ரல் ஆகியோருடன் டெல்லிக்கு குடிபெயர்ந்தபோது சிசிலியாவின் விரக்தியான மனநிலை மேலும் மோசமடைந்தது. 

”என்னுடைய கல்லூரி நாட்களில் நான் கவிதைகள் எழுதுவேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கைப் பாதையில் அந்தக் கலையை நான் தொடரவில்லை. வாழ்க்கை மிகவும் சாதாரணமாக இருப்பதாக உணர்ந்தேன். என்ன செய்யவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை.” என்றார்.

நாள் முழுதும் குழந்தைளின் குறும்புகளை சமாளித்து, நாட்கள் கழிந்தது. அப்படி ஒரு நாள் தனது எம்பிஏ வகுப்பு முடித்து வீட்டிற்கு திரும்பிய கணவர் புனீத், குழந்தைகளுக்கு கதை ஒன்றை படித்துக்கொண்டிருந்தார். சிசிலியா ‘வலியை அறிதல்’ (Finding pain) என்கிற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினார்.

”அந்த நாள் மிகவும் மோசமாக கழிந்தது. நான் எழுதியதை வழக்கத்திற்கு மாறாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்.” என்றார். மறுநாள் அவரது பதிவிற்கு 17 லைக்ஸ் வந்திருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். மேலும் சில நண்பர்கள் அவரது கவிதையை படித்து அவரை அடையாளம் கண்டுகொண்டதாகவும் கமெண்ட்கள் எழுதியிருந்தனர்.

”பதினேழு பேர் என்னுடைய கவிதையை படித்திருக்கின்றனர், அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.” என்று புன்னகைத்தவாறே கூறினார் சிசிலியா. அங்கிருந்து தொடங்கிய அவரது பயணம் இரண்டாண்டுகள் தொடர்ந்தது. கவிதைகள் எழுதி அதை நண்பர்கள் படிக்கவும் பாராட்டவும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். 

”கவிதைத் தொகுப்புகள் அனைத்தையும் ஒரு புத்தகமாக பலர் வெளியிடச் சொன்னார்கள். முதலில் எனக்கு சிரிப்பு வந்தது. அவ்வாறு செய்தால் என்ன என்று பிறகு சிந்தித்தேன்.”

சில பதிப்பாளர்களுக்கு அவர் இமெயில் அனுப்பியிருந்தபோதும் ஒருவரும் பதிலளிக்கவில்லை. டெல்லி க்ராண்ட் ஸ்லாம்மில் ஒரு பகுதியாக இணைந்திருந்தபோது, இரண்டு இளம் கவிஞர்கள்தான் அவருக்கு க்ரௌட் ஃபண்டிங் குறித்து அறிமுகப்படுத்தினர். கவிஞர்களுக்கான ஓபன் மைக் நிகழ்வில் ஸ்லாட் புக் செய்து அதில் தனது கவிதைகளை வாசிப்பார் சிசிலியா. நைஜீரியன் கெனடியரான இக்கினா ஆன்யெட்பூலா மற்றும் சவுத் ஆஃப்ரிக்கரான கைலி லூய்வ் ஆகிய இருவரும் அவரது புதிய நண்பர்களாகவும் தைரியமூட்டுபவர்களாகவும் மாறினர். 

”அவர்கள் என்னுடைய வீட்டில் தங்கியிருந்தபோது கைலி தன்னுடைய அரிசோனா, US பயணத்திற்காக க்ரௌட் ஃபண்டிங் திரட்டினார். இது நல்ல யோசனையாக உள்ளதே என்று நினைத்தேன்.” என்றார் சசிசிலியா. இன்ஸ்டாக்ராம்மில் தன்னுடைய கவிதைகளை பதிவிடும் கவிஞர் ரூபி கவுரின் கவிதைகளை படித்தார். மேலும் கவிதைப் புத்தகத்தை தாமாகவே வெளியிட்ட அமந்தா லவ்லேஸ் கவிதைகளையும் படித்தார். அதையே தாமும் பின்பற்ற அவருக்கு உத்வேகம் ஏற்பட்டது.

மக்களிடம் நிதி கேட்பது எளிதல்ல

“மக்களிடம் பணம் கேட்பது எளிதல்ல” என்று ஒப்புக்கொண்டார் செசிலியா.

நான் துவங்கியபோது க்ரௌட் ஃபண்டிங் தளங்களுக்கு கட்டணம் செலுத்த 3000 ரூபாய் பணம் என்னிடம் இல்லை. அதனால் இலவச தளமான கெட்டோவை (Ketto) தேர்ந்தெடுத்தேன். நான் சேகரிக்கும் பணத்தில் அவர்கள் கமிஷன் எடுத்துகொள்வார்கள். 

”என்னுடைய நோக்கத்தை வெளியிட்டேன். தனிப்பட்ட கலையை ஊக்குவிப்பர்களிடம் நன்கு சிந்தித்து என்னுடைய கோரிக்கையை விடுத்தேன். நான் செய்ய விரும்புவதில் நேர்மையாக இருந்தேன். நான் செய்ய முயற்சிப்பதில் நம்பிக்கை இருந்தால் மட்டுமே மக்கள் பண உதவி செய்வார்கள் என்பதை நன்கறிவேன்.”

மிகுந்த மன தைரியம் தேவைப்பட்டது. எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில்தான் துவங்கினார். அது மட்டுமல்ல பல்வேறு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் துணிந்தார் சிசிலியா. ஒரு வீடியோவை உருவாக்கினார். அதில் அவரது முதல் கவிதை புத்தகமான ‘Not Just a Housewife’ (இல்லத்தரசி மட்டுமல்ல) என்கிற புத்தகத்தை வெளியிட நிதி உயர்த்துவதாக குறிப்பிட்டு அதை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார். 

“நான் 1,10,000 ரூபாய் பணத்தை கூட்டுநிதியில் பெற்றேன்.” என்றார். அற்புதமான பலன் கிடைத்தது. அந்தப் பதிவு 482 முறை ஷேர் செய்யப்பட்டு பலரை சென்றடைந்தது. நண்பர்கள், உடன்படித்தவர்கள், நண்பர்களின் குழந்தைகள், முற்றிலும் அந்நியமானவர்கள், வென்சர் கேப்பிடலிஸ்ட் என அனைவரும் உதவ முன்வந்தனர். பத்து நாட்களுக்குள் 1,36,759 ரூபாய் உயர்த்தினார்.

அதிகபட்ச தொகையை அனுப்பியிருந்த நண்பர் ஒருவர் தான் கவிதைகளை அதிகம் படிக்காதவர் என்றும் இப்படிப்பட்ட துணிச்சலான ஒருவரை கண்டதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். குறைந்தபட்ச தொகையை அனுப்பியவர் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவர். ”தங்களது பாக்கெட் மணியை அனுப்பச்சொல்லி தங்களது அம்மாவிடம் ஒரு சில மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.” என்றார் புன்னகைத்தபடி.”

என்னுடைய புத்தகம் பொதுமக்களின் நிதியினால் வெளியிடப்பட்டது மிகப்பெரிய விஷயம். பெண் கவிஞர்கள் குறித்து அதிகம் தெரியாமலும் யாரும் அவர்களை ஆதரிக்காமலும் இருக்கும் இந்த காலத்தில் நான் இப்படிப்பட்ட சூழலை ஏற்படுத்தியுள்ளேன். பழங்காலத்தில் அரசர்கள் கலைஞர்களை ஆதரித்தது போன்ற ஒரு சூழல் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. எனக்கு பணம் தேவையில்லை என்று மக்களிடம் தெரிவித்தேன். என்னை ஆதரித்தால் போதும். நான் தொடர்ந்து என்னுடைய Ketto பக்கத்தில் புத்தகத்தின் நிலை குறித்து அப்டேட் செய்துவருகிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் இணையம் வழியாக பிரதி அனுப்பப்பட்டு அதன் பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

தர்யகஞ் (Daryaganj) பதிப்பாளர் மூலமாக சிசிலியா தனது புத்தகத்தை தாமாகவே வெளியிட அவருக்கு கிடைத்த பணம் உதவியது. விளக்கப்படங்கள் ப்ரொஃபஷனல் கலைஞரிடமிருந்து கட்டணம் செலுத்தி பெறப்பட்டது. சிசிலியாவின் பயணத்தில் அவரது கல்லூரி நண்பர் புத்தகத்தின் எடிட்டராக இணைந்துகொண்டார். ஒரு வலைதளத்தை உருவாக்கி மக்கள் புத்தகத்தை எங்கே வாங்கலாம் என்று பதிவிட்டு வருகிறார். சிசிலியா புத்தக வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். இதற்கும் ஆதரவாளர்கள் ஸ்பான்சர் செய்கின்றனர்.

Hauz Khas டெல்லியின் Kunzum Café புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகிறது. பெண் கவிஞரான சிசிலியா அப்ரஹாமின் புத்தக வெளியீட்டிற்கு மக்களை வரவேற்கும் செய்திகள் ஃபேஸ்புக்கில் குவிந்து வருகிறது. ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இந்த கவிஞர்.

“மறுபடியும் திருமணம் செய்துகொள்வது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.” இந்த அனுபவம் அவரிடம் ஏற்படுத்திய மாற்றம் குறித்து கேட்கப்பட்டது. இன்னும் ’வெறும் இல்லத்தரசியாக’ இருக்கிறாரா என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்று சிரித்தவாறே பதிலளித்தார் சிசிலியா.”

அதற்கும் மேல் இன்று நான் ஒரு புத்தகத்தை வெளியிட்ட கவிஞர். ஆனால் நான் இல்லத்தரசியாக இருக்க விரும்பினால் மக்கள் என்னை அவ்வாறே ஏற்றுக்கொண்டு மதிக்கவேண்டும். அது ஒருவரது தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. பெண்களை வகைப்படுத்துகையில் இல்லத்தரசி என்கிற வார்த்தைக்கு முன்னால் ‘வெறும்’ என்கிற வார்த்தையை சமூகம் இணைத்துக் கொள்ளக்கூடாது.

’அக்கறைகொண்ட வெறும் இல்லத்தரசியாக இருப்பது பெரிய விஷயமில்லை என்று தோன்றினாலும் அவ்வாறு இருந்து பார்த்தால் மட்டுமே அது புரியும். சாகசங்கள் செய்வது, ஆடம்பரமாக இருப்பது போன்றவற்றைக் காட்டிலும் ‘ஒரு இல்லத்தரசியாக’ இருப்பதையே தேர்வு செய்கிறேன்’ – இது ‘Not Just a Housewife’ என்கிற சிசிலியா அப்ரஹாமின் கவிதையின் ஒரு பகுதியின் விளக்கமாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : ரச்னா பிஷ்ட்

Add to
Shares
91
Comments
Share This
Add to
Shares
91
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக