பதிப்புகளில்

தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய சாதனையாளர்களை கவுரவிக்கும் ‘The Disruptors of Tamil Nadu’

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளது யுவர்ஸ்டோரி!

7th Dec 2018
Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share

உண்மையான மாற்றம் என்பது இயல்பை தவிர்த்து புதிய வழியில் சிந்தித்து, புத்தாக்க செயல்களை புரிபவர்களால் மட்டுமே சாத்தியம் ஆகும். சராசரி வாழ்க்கையின் இயல்பை எதிர்த்தவர்கள், ரிஸ்க் எடுத்தவர்கள், மற்றும் எவருக்கும் அஞ்சாது துணிந்து தங்களின் முயற்சியை களத்தில் நிரூபித்தவர்களே சாதனையாளர்கள். அவர்களைத் தான் ஆங்கிலத்தில் ‘Disruptors’ என்று கூறுகிறோம்.  

இந்த காரணத்திற்காகவே யுவர்ஸ்டோரி மீடியா ‘The Disruptors’; சாதனையாளர்களை கவுரவிக்கும் விருது நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகின்றது. 

டிசம்பர் 12ம் தேதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாதனையாளர்களை (disruptors) சென்னை க்ரவுன் பிளாசாவில் நடைப்பெறும் மாபெரும் விழாவில் விருது வழங்கி சிறப்பு செய்யவுள்ளது.

image


கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் பல்வேறு துறைகளில் பல புதிய முயற்சிகளும், சமூக தாக்கத்தை ஏற்படுத்திய புத்தாக்கங்களும் நடந்தேறியுள்ளது. கல்வி, அரசாட்சி, தொழில், தொழில்நுட்பம், தொழில்முனைவு, கலை, இலக்கியம், விவசாயம் மற்றும் பொழுது போக்கு என்று எல்லாத் துறைகளிலும் பல புதிய சாதனையாளர்கள் காலடி வைத்து மாற்றத்தை நிகழ்த்தி மக்களின் பார்வையை மாற்றியதோடு, அவர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளனர். 

#YourStoryDisruptors என்ற எங்களின் நிகழ்வு மூலம் ‘தமிழகத்தில் மாற்றம் புரிந்தவர்களை’ ’The Disruptors of Tamil Nadu’ விருது வழங்கி கொண்டாடி, அவர்களின் கதையை, கடந்துவந்த சவால்களை, துணிவுடன் வென்ற முயற்சியை பற்றி அவர்கள் மூலமே தெரிந்து கொள்ள வாய்ப்பு அளிக்க இருக்கிறோம். 

 

அனுபவம் மிகுந்த எங்கள் ஜூரி குழு விருதுக்கு தகுதியானவர்களை பரிசீலித்து தேர்வு செய்துள்ளனர். மூத்தப் பத்திரிகையாளர் சுசிலா ரவீந்திரனாத், சென்னை ஏஞ்சல்ஸ் விஷ் விஸ்வனாதன், சக்சஸ் க்யான் சுரேந்திரன், அத்வே கேப்பிடல் துணை தலைவர் காவ்யா நாயர், பார்ட்னர் 50கே வென்ச்சர்ஸ் சஞ்சய் எனிசெட்டி மற்றும் மெட்வே ஹாஸ்பிடல் டாக்டர்.பழனியப்பன் ஆகியோர் ஜூரியில் இடம் பெற்றிருந்தனர். 

The Disruptors of Tamil Nadu

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய வகையில் துறைவாரி விருது பெறுபவர்கள் பட்டியல்:

அரசியல்: மாஃபா கே.பாண்டியராஜன், ஆட்சிமுறை: Dr.சந்தோஷ் பாபு; ஐடி செயலாளர், கலை: கார்த்திக் குமார்; ஏவம், கலாச்சாரம்: மிதுன் சன்செட்டி; கேரட்லேன் நிறுவனர், நுகர்வோர் ரீடெயில்: சிகே குமாரவேல்; நேச்சுரல்ஸ் இணை நிறுவனர், விளையாட்டு: அருண் வாசு; சர்ஃப் வில்லேஜ் நிறுவனர், உணவு: மஹாதேவன்; ஹாட் பிரட்ஸ் நிறுவனர், தொழில்நுட்பத் தளம்: முருகவேல் ஜானகிராமன்; பாரத் மேட்ரிமொனி நிறுவனர், இயற்கை விவசாயம்: வினோத் குமார், இலக்கியம்: சிவசங்கரி; எழுத்தாளர், உற்பத்தி: ஹேமலதா அண்ணாமலை; ஆம்பியர் மோட்டார்ஸ், தொழில்நுட்பம்: ஸ்ரீதர் வேம்பு; ஜோஹோ, இதழியல்: ரங்கராஜ் பாண்டே, ஆசிரியர், தந்தி டிவி. 

யுவர்ஸ்டோரி இந்த வெற்றியாளர்களை உங்கள் முன் கொண்டு வர இருக்கிறது. எங்களுடன் வந்து அவர்களின் கதைகளைக் கேட்டு கொண்டாட வாருங்கள்!

நிகழ்ச்சி விவரங்கள்: 

யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஒ ஷ்ரத்தா ஷர்மா, ’The Disruptors of Tamil Nadu’ நிகழ்ச்சியை தொடங்கி உரையாற்றுவார். அடுத்து நடக்கவிருக்கும் கூட்டு விவாதத்தில், 'புத்தாக்க புதிய முயற்சிகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும்?' 'How disruptive thinking and innovation can lead to nation building' என்ற தலைப்பில் விவாதிக்கப்படும். இந்த பேனல் விவாதத்தில், தைரோகேர் நிறுவனர் Dr. வேலுமணி, Nestaway நிறுவனர் ஸ்முருத்தி பரிதா மற்றும் லியோ பர்னெட் தீரஜ் சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டு விவாதிக்க உள்ளனர்.

அதைத் தொடர்ந்து ‘ப்ளாக்செயின் வருங்காலத்தின் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கக் கூடிய தொழில்நுட்பம்’ என்பது குறித்து Belfrics Group உயர் தலைமை டிஜிட்டல் மற்றும் புத்தாக்க அதிகாரி சந்தோர் பல்வேஷ் உரையாட உள்ளார். Belfrics சர்வதேச ப்ளாக்செயின் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்த தொழில்நுட்பம் கொண்டு இந்திய நிறுவனங்கள் அடுத்தக் கட்டத்துக்கு தங்கள் நிர்வாகத்தை எடுத்து செல்லக்கூடிய வழிகளை பங்கேற்பாளர்களுடன் பகிர உள்ளார். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தங்களின் நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்று சாதனைகள் படைக்க இவ்விழா உந்துதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

’The Disruptors of Tamil Nadu’ நிகழ்ச்சிக்கு டிக்கெட் புக் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.  

’The Disruptors of Tamil Nadu' நிகழ்ச்சி விவரங்கள்

Add to
Shares
16
Comments
Share This
Add to
Shares
16
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக