பத்ரா நாயை காண 500 கிமி பயணித்த 68 வயது முதியவர்!

இரு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருவரால் மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பத்ரா எனும் நாய், பல காயங்களுடன் உயிர் பிழைத்தது.  

YS TEAM TAMIL
28th Jun 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

68 வயதான சதாசிவன் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி. இவர் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டு முதுகெலும்பில் இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்ட பத்ரா என்கிற நாயை சந்திப்பதற்காக கோயமுத்தூரில் இருந்து சென்னை சென்றார்.

2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மருத்துவ மாணவர் ஒருவர் பத்ரா என்கிற நாயை மாடியில் இருந்து தூக்கி வீசியபோது அவரது நண்பர் ஒருவர் அருகில் இருந்து இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவுசெய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பொதுமக்களும், பிராணி பாதுகாவலர்களும் இந்த மாணவர்களை கடுமையாக கண்டித்து, தண்டனை வழங்க போர்கொடி தூக்கினார்கள். 

இறுதியில் இவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் முதுகெலும்பில் இரண்டு எலும்பு முறிவுகளுடன் அந்த நாய் உயிர் பிழைத்தது.

இந்தச் சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ப்ளூ கிராஸ் தன்னார்வலரான கார்த்திக் தண்டபானி மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த நாய்க்கு அடைக்கலம் தர முன்வந்தனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு பத்ராவைக் கண்டு கட்டியணைக்க வந்தார் 68 வயதான ஓய்வுபெற்ற காவல் அதிகாரி. இவர் அந்த நாயை சந்திப்பதற்காகவே 500 கிலோமீட்டர் பயணித்துள்ளார்.

image


இந்த நாய் குறித்து தெரிந்துகொண்ட 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியான சதாசிவன், இது குறித்து கூடுதல் தகவல்கள் பெறுவதற்காக சென்னையில் உள்ள குன்றத்தூர் காவல் நிலையத்திற்குச் சென்றார். அந்தக் காவல் நிலையத்தில் இருந்த அதிகாரிகளிடம் அந்த நாயின் இருப்பிடம் குறித்த தகவல்கள் இல்லாததால் தானே விசாரணையை மேற்கொண்டார். ’தி க்விண்ட்’ உடனான நேர்காணலில் அவர் தெரிவிக்கையில்,

”பத்ராவின் நிலையை நினைத்து வருந்தினேன். வாயில்லா ஜீவனான அந்த நாய் அனுபவித்த வேதனைகளை என்னால் கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை. இது என்னை பெரிதும் பாதித்தது,” என்றார்.
image


விலங்குகளை மீட்பவர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிலரை அவர் சந்தித்தார். அப்போதுதான் அந்த நாயை மீட்ட அந்தோனி ரூபினை எதிர்பாராத விதமாக சந்தித்தார். இறுதியாக ஜூன் மாதம் 18-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சதாசிவன் பத்ராவை சந்தித்தார். ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான அவர், தனது செயலால் பலரது மனதில் இடம் பிடித்தார், குறிப்பாக பத்ராவின் மனதில் இடம் பிடித்தார். பத்ராவை பராமரித்து வந்த கார்த்திக் தண்டபாணி கூறுகையில், 

“பத்ராவை சந்திக்க இந்த வயதானவர் இவ்வளவு நீண்ட பயணத்தை மேற்கொண்டதைப் பார்க்க நெகிழ்ச்சியாக உள்ளது. சில மாதங்கள் கடந்த பின்னும் பத்ராவை யாரும் மறக்கவில்லை என்பதும் அதற்கு நேர்ந்த சம்பவம் எவ்வாறு மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் தெரிந்து மகிழ்ச்சியாக உள்ளது. விலங்குகள் மீது மக்கள் இந்த அளவிற்கு அன்புடன் இருப்பது மனதை உருகச் செய்கிறது,” என்றார்.

தற்போது பத்ராவிற்கு ஆறரை வயதாகிறது என்றும் நடந்த அந்த மோசமான சம்பவத்தின் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளது என்றும் 'ஹஃபிங்டன் போஸ்ட்' அறிக்கை தெரிவிக்கிறது.

சதாசிவன் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் பயணம் மேற்கொள்வது இது முதல் முறை அல்ல. 22 வயதான தலித் நபரான சங்கர், தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காரணத்தால் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து படித்துத் தெரிந்துகொண்டதும் சதாசிவன் உடுமலைப்பேட்டை சென்று சங்கரின் மனைவியை சந்தித்துள்ளார்.

நல்லுள்ளம் படைத்தவர்கள் பலரும் நம்மிடையில் வாழ்கின்றனர் என்பது ஆறுதலான விஷயம்.

கட்டுரை : THINK CHANGE INDIA

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags