பதிப்புகளில்

ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்கும் கர்நாடகா அரசின் 'ஸ்டார்ட் அப் கொள்கை'

YS TEAM TAMIL
31st Jan 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

கர்நாடக மாநில அரசு, அடுத்த வாரம் துவங்கும் 'இன்வெஸ்ட் கர்நாடகா மாநாட்டை' முன்னிட்டு தனது ஸ்டார்ட் அப் கொள்கை 2016- ஐ வெளியிட்டுள்ளது. இந்த கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு; இந்த சலுகைகள் அனைத்தும் அரசு ஆதரவிலான இன்குபேட்டர்கள் கீழ் செயல்படும் ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஸ்டார்ட் அப் கொள்கை 2016 -ன் நோக்கம் என்ன?

 • குளோபல் ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம் ரான்கிங் அறிக்கை, 2015 பெங்களூரு நகரம் 3,100 முதல் 4,900 ஸ்டார்ட் அப்களின் இருப்பிடமாக திகழ்வதாக தெரிவிக்கிறது.
image


 • முன்னணி 20 ஸ்டார்ட் அப் சூழலில், வென்ச்சர் கேபிட்டல் முதலீடு மற்றும் வெளியேறுதல் ஆகியவற்றில் பெங்களுரு நகரம் இரண்டாவது பெரிய அளவிலான வளர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.
 • 2012 ராங்கிங்குடன் ஒப்பிடும் போது நான்கு இடங்கள் முன்னேறி 15 வது இடத்தில் உள்ளது.
 • இந்த சர்வதேச அமைப்பில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நகரம் பெங்களூரு.
 • ஐ4 (ஐ.டி,ஐ.டி.இ.எஸ்,புதுமைகள் மற்றும் ஊக்க திட்டம் 2014-19) கீழ் அரசு புதுமையை ஊக்குவிக்க இன்குபேஷன் வெளியை அமைக்கும்.
 • வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நட்பான தொழில்நுட்பங்கள்.

இந்த கொள்கையின் கீழ் ஸ்டார்ட் அப்பிற்கான விளக்கம்

* ஸ்டார்ட் அப் நான்கு ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிறுவனமாக இருக்கக் கூடாது.

* கர்நடகாவில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* அதன் 50 சதவீத ஊழியர்கள் கர்நாடகாவில் பணி அமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

* நிறுவன வருவாய் ரூ.50 கோடியை தொட்டதும் சலுகைகள் பொருந்தாது.

கொள்கையில் குறிக்கோள்கள்

1. உலகத்தரத்திலான ஸ்டார்ட் அப் மையத்தை உருவாக்குதல்

 • 20,000 தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப்கள் உருவாக ஊக்கம் அளித்தல்
 • கர்நாடகாவில் மட்டும் 6,000 ஸ்டார்ட் அப்கள் உருவாக வழி செய்தல்
 • ரூ.2,000 கோடி நிதி உருவாக்கித்தருவது
 • குறைந்தபட்சம் 25 சமூக தாக்கம் கொண்ட புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க ஊக்குவித்தல்

2. புதுயுக இன்குபேஷன் நெட்வொர்க் 

 • இந்த திட்டத்தின் கீழ் 50 கல்வி நிறுவனங்கள் மூலம் மாணவர்கள் திட்டங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படும். ஒரு திட்டத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி
 • தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் சர்வதேச ஸ்டார்ட் அப் இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு
 • இந்த கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு மாவடங்களிலும் தொழில்முனைவு மையமாக விளங்கும்

3. ஆய்வுக்கு ஊக்கம்

 • உயர் கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப வர்த்தக இன்குபேட்டர்களை அரசு ஊக்குவிக்கும்
 • இந்த இன்குபேட்டர்கள் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையிலான கூட்டாக அமையும்
 • ஐ.ஓ.டி,ரோபோடிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் போன்ற புதுயுக நுட்பங்களை வர்த்தகமயமாக்குவது

4. கருத்தாக நிலை நிதியுதவி

 • ஸ்டார்ட் அப்களுக்கு கருத்தாக்க நிலையில் நிதி உதவி அளித்து உதவ இன்குபேஷன் நிதி ஏற்படுத்தப்படும்
 • மாநில அரசால் உருவாக்கப்பட உள்ள வலைவாசல் மூலம் ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பிக்க வேண்டும்
 • நிதி உதவி இன்குபேஷன் மையங்கள் மூலம் வழங்கப்படும்

5. பொதுத்துறை-தனியார் கூட்டு மூலம் இன்குபேஷன் வசதிகள்

 • தேசிய மற்றும் சர்வதேச அளவிலான இன்குபேட்டர்கள்
 • டெண்டர் மூலம் பங்குதாரர்கள் தேர்வு
 • இன்குபேட்டர்கள் புதுயுக இன்குபேட்டர் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படும்

6. நிதிகளின் நிதி

 • வென்ச்சர் நிதிகளில் முதலீடு செய்ய நிதி திரட்டப்படும்
 • பின்னர் ஏஞ்சல் கட்ட நிதியாக பயன்படுத்தப்படும்
 • தொழில்முறையிலான நிதி மேலாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

7. சமூக முன்னேற்றத்திற்காக புதுமை

 • சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஐந்து கருத்தாக்கங்கள் ஆண்டுதோறும் தேர்வு
 • இவை தாக்கம் மிக்க வர்த்தகமாக மாற்றப்படும்

8. ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம்

 • அரசு அங்கீகரித்த இன்குபேட்டர்களில் செயல்படும் ஸ்டார்ட் அப்கள் மாநில அரசின் ஏழு சட்டங்கள் தொடர்பாக சுய சான்றிதழ் அளித்துக்கொள்ளலாம்
 • ஸ்டார்ட் அப் பிரிவு மூலம் உதவி

திட்டம் பற்றிய அலசல்

ஸ்டார்ட் அப்கள் பற்றி தான் எங்கும் பேச்சாக இருக்கிறது. மாநிலத்தில் செயல்படும் ஸ்டார்ட் அப்களுக்கு கர்நாடக அரசு பெரிய அளவில் திட்டம் வகுத்துள்ளது. நாட்டில் உள்ள தொடக்க நிறுவனங்களில் மூன்று பங்கு நிறுவனங்கள் கர்நாடகாவில் உள்ளன. மாநிலத்தின் பல்வேறு தொழில் திட்டங்கள் கிழ் உள்ள சலுகைகளை ஒன்றிணைத்து ஸ்டார்ட் அப்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்குபேட்டர் மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அரசு-தனியார் துறை கூட்டு மூலம் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தொழில்முனைவை ஊக்குவிக்கும். எனினும் நிதிகளின் நிதிக்கான தொகை பற்றி குறிப்பிடப்படவில்லை,

30 சதவீதம் மார்க்கெட்டிங் தொகை, ஆண்டு அடிப்படையில் திருப்பி அளிக்கப்படும் என்பது நல்ல செய்தி. ஆனால் இதற்கு குறிப்பிட்ட ஸ்டார்ட் அப் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதேப் போல அரசு ஆதரவு இன்குபேட்டரால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களுக்கு மட்டுமே சேவை வரி திரும்பி அளிக்கப்படும். இன்குபேட்டர்களில் காப்புரிமை தொடர்பான சலுகைகளும் இருக்கின்றன. காப்புரிமை வழங்கப்பட்ட பின் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையான தொகை திரும்பி அளிக்கப்படும். பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இன்குபேட்டர்களில் 10 சதவீத இடம் பெண்களுக்கு அளிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் மாநிலத்தில் ஆறு லட்சம் நேரடி வேலைவாய்ப்புகள் மற்றும் 1.2 மில்லியன் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது. இதில் 50 சதவீத ஊழியர்கள் கர்நாடகாவில் இருக்க வேண்டும். தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் இதுவும் ஒன்று.

"கர்நாடகா எப்போதுமே தொழில்நுட்பம் சார்ந்த கொள்கை வகுப்பதில் முன்னிலை வகிக்கிறது. இது கர்நாடக ஸ்டார்ட் அப்கள் நாட்டிற்கான தீர்வுகளை வழங்க வழி செய்யும்” என்று மாநில கனரக மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

வி.சிகள் பார்வை

நிதிகளின் நிதி அளவு பற்றி அறிய விரும்பும் வென்ச்சர் கேபிட்டல் துறை அதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மாநாட்டில் வெளியாகலாம்.

“எந்த ஒரு மாநில அரசும் ஸ்டார்ட் அப் கொள்கையை செயல்திறன் மிக்கதாக ஆக்க வேண்டும். அளவிடப்பட முடியாத அறிவிப்புகளை வெளியிடக்கூடாது. நோக்கங்களை தெரிவிப்பதை கடந்து செயல்பட வேண்டும்” என்று Exfinity Ventures நிறுவனர் வி.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

கர்நாடக அரசு உணவு பதப்படுத்தல் மற்றும் சுகாதாரத்துறைகளில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எதிர்பார்க்கிறது. ரோபோடிக்ஸ் மற்றும் 3டி பிரிண்டிங் போன்ற சுற்றுச்சூழல் நட்பான நுட்பங்களை ஊக்குவிக்கிறது.

"கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் ஸ்டார்ட் அப்கள் உருவாவதை நான் பார்க்கவில்லை. விலை கண்டறிதலில் பல ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இது புதுமை அல்ல. கடந்த பத்தாண்டுகளில் ஐடி சேவை துறையை உருவாக்கியது போன்ற எந்த ஒரு சூழலையும் உருவாக்குவதற்கான கொள்கை வரவேற்கத்தக்கது” என்று இன்போசிஸ் முன்னாள் சி.இ.ஓ மற்றும் கொடைவள்ளலான எஸ்.டி.சிபுலால் கூறுகிறார்.

யுவர்ஸ்டோரி பார்வை

கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஸ்டார்ட் அப் கொள்கைகளை கொண்டுள்ளன. கேரள அரசின் ஸ்டார் அப் கொள்கை 2014 ல், ரூ.5000 கோடி முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா இன்குபேஷன் மையத்தை துவக்கியுள்ளது. ஆந்திரா புதுமை உருவாக்க மையத்தை துவக்கியுள்ளது. ஆனால் வென்ச்சர் கேபிடல் மூலம் ஸ்டார்ட் அப்களை ஊக்குவிப்பதில் இவை வெற்றி பெறவில்லை. குஜராத் மற்றும் கர்நாடகா மட்டும் தான் ஸ்டார்ட் அப்களில் வெற்றிகரமான அனுபவம் கொண்டுள்ளன. கர்நாடகா இன்பர்மேஷன் டெக்னாலஜி பண்ட் மற்றும் குஜராத் வென்ச்சர் கேபிடன் பைனான்ஸ் லிட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

வேலைவாய்ப்பு மற்றும் வளத்தை உருவாக்கும் போது எந்த திட்டமும் வரவேற்பை பெறும். அரசு புதிய இன்குபேட்டர்கள் அமைப்பதற்காக வர்த்தக நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. டெண்டர் மூலம் இவை தேர்வு செய்யப்படும். இதில் வெளிப்படையான தன்மை மிகவும் அவசியம். ஸ்டார்ட் அப் அலையை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் மாநில அரசு இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் இது நீண்ட கால கொள்கை என்பதால் சமூகம், பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கமான தீர்வுகள் மூலம் கிடைக்கும் வெற்றியைக் கொண்டே இதன் நோக்கம் அளவிடப்படும்.

ஆக்கம்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக