‘பாஸ்கெட்’ பெயர் பிரச்சனை: கோவை ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய bigbasket

- +0
- +0
தங்கள் பெயரில் போலி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாக பிக்-பாஸ்கெட், கோவை நிறுவனம் ஒன்றை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் மளிகை தளமான பிக்-பாஸ்கெட் (Big Basket) கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்திருக்கிறது.
கோவையைச் சேர்ந்த மளிகை ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘டெய்லி பாஸ்கெட்’ 'DailyBasket' நிறுவனத்தின் மீதுதான் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. காரணம், தனது பெயரில் இருக்கும் 'பாஸ்கெட்' பெயரை அந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பயன்படுத்துவதால்தான். இதனால் தற்போது 'cease and desist' நோட்டீசை அனுப்பி இருக்கிறது.
'Cease and Desist' நோட்டீஸ் என்பது, வர்த்தக முத்திரைகளை நகலெடுப்பது போன்ற செயலை நிறுத்த ஒரு தனிநபருக்கோ அல்லது வணிகத்துக்கோ அனுப்பப்படும் சட்ட அறிவிப்பு ஆகும். டெய்லி பாஸ்கெட்டின் பெயரிடல் ஒரு வர்த்தக முத்திரை மீறல் என்று பிக்பாஸ்கெட் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பிக்பாஸ்கெட் அனுப்பிய நோட்டீஸில்,
”Daily என்ற வார்த்தையை ’basket' உடன் சேர்ப்பதால் அது தனித்துவமான பெயர் ஆகிவிடாது. எங்கள் கிளையண்ட் பிக் பாஸ்கெட்டின் பெயரை நீங்கள் நேர்மையின்றி பயன்படுத்தி, அதை வைத்து ஏமாற்றும் நோக்கத்துடனும், மக்களை குழப்புவதாகவும் இருக்கிறது,” என தெரிவித்துள்ளது.
டெய்லி பாஸ்கெட் என்பது ஒரு இணையவழி வணிகம் மற்றும் முரண்பட்ட ஒத்த டொமைன் பெயர் மூலம் ஒத்தத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. ’டெய்லி’ என்ற வார்த்தையை 'பாஸ்கெட்' உடன் பயன்படுத்துவது உங்கள் பெயரை தனித்துவமாக்காது.
மேலும், எங்கள் பெயரை நேர்மையற்ற முறையில் வைத்துக்கொண்டு, டெய்லி பாஸ்கெட்-ன் வலைத்தளத்தில் (சிறிய சிறிய மாற்றங்களுடன்) அதன் பிராண்டை வேண்டுமென்றே நகலெடுத்துள்ளது, எனவே இந்த விஷயத்தை ஆராயக் கோரி, நோட்டீஸ் அனுப்பியுள்ளது பிக்பாஸ்கெட்.
மேலும், டெய்லி பாஸ்கெட்டின் மொபைல் பயன்பாடு மற்றும் வலைத்தள தளவமைப்புகள் தங்கள் நிறுவனத்தின் சேவைகளை ஒத்தவையாக இருக்கிறது என்றும் பிக்பாஸ்கெட் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நோட்டீஸ் தொடர்பாக பேசியுள்ள டெய்லி பாஸ்கெட், நாங்கள் தற்போது கோவையில் மட்டுமே சேவை செய்யும் ஒரு சிறிய ஆன்லைன் / ஆஃப்லைன் மளிகை ஸ்டார்ட்அப் நிறுவனம். எங்கள் செயல்பாடுகளை மூடிவிட்டு, எங்கள் களங்களை (அதாவது, எங்கள் வணிகம்) அவர்களிடம் ஒப்படைக்க சமீபத்தில் பிக்பாஸ்கெட்டிலிருந்து ’cease and desist' நோட்டீஸ் வந்தது.
”எங்கள் பிராண்டில் ‘பாஸ்கெட்' என்ற சொல் இருந்தாலும், நாங்கள் ஆன்லைன் மளிகைப் பொருட்களை வழங்குகிறோம் என்றாலும், நாங்கள் அவர்களின் வர்த்தக முத்திரைகளை நகலெடுத்தோம் அல்லது அவர்களின் வலைத்தளத்தையும் பயன்பாடுகளையும் நியாயமற்ற முறையில் நகலெடுத்தோம் என்று அர்த்தமல்ல. பிக்பாஸ்கெட்டின் பிராண்டை நாங்கள் ஒருபோதும் தவறாகப் பயன்படுத்த மாட்டோம். நோட்டீஸில் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு முற்றிலும் ஒரு ஒரு அப்பட்டமான பொய்," என்று கூறியுள்ளது.
ஆகஸ்ட் 2020ல் ரமேஷ் வேல் மற்றும் அஜித் குமார் ஆகியோரால் நிறுவப்பட்ட டெய்லி பாஸ்கெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் முழுவதும் மினி சூப்பர் மார்க்கெட்டுகளை அமைத்து அதனை ஆன்லைன் மளிகை வணிகத்திற்கான விநியோக மையங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த வார இறுதியில் ஒரு மினி-ஸ்டோர் திறக்கத் திட்டமிட்டுள்ளது. பிக்பாஸ்கெட்டின் சட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, டெய்லி பாஸ்கெட் நிறுவனர் ரமேஷ் வேல் இந்த விவகாரத்தில் தொடர் ட்வீட்களையும் வெளியிட்டு வருகிறார்.

டெய்லி பாஸ்கெட்-ன் நிறுவனர் ரமேஷ் வேல் தனது டிவிட்டர் பக்கத்தில்,
“BigBasket எங்களை பலவீனப்படுத்த ‘cease and desist’ கடிதம் மூலம் தொல்லை கொடுக்கின்றனர்,” என்று பதிவிட்டார்.
அவரின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து, சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்கள் இது போன்ற சட்ட வழிகளில் ஒழித்துக்கட்ட நினைப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
- Business
- bigbasket
- கோவை நிறுவனம்
- ஆன்லைன் வணிகம்
- பிக்பாஸ்கெட்
- online grocery
- Vegetable sales
- Legal notice
- Daily Basket
- cease and desist
- +0
- +0