ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் தமிழர்கள்...

தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

20th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தமிழகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. Hurun Report India and IIFl wealth நிறுவனம் இணைந்து இந்தியாவில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் பற்றி நடத்திய ஆய்வின் முடிவுகளை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிட்டுள்ளது.


இதன்படி தமிழகத்தின் ஊடக ஜாம்பவானாகத் திகழும் சன் நெட்வொர்க்கின் செயல் தலைவர் கலாநிதி மாறனுக்கு ரூ.19,100 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியப் பணக்காரர்கள் 2019 பட்டியலில் மொத்தமுள்ள 953 கோடீஸ்வரர்களில் கலாநிதி மாறன் 43வது இடத்தைப் பெற்றுள்ளார். தமிழகத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் தமிழர் என்ற வகையில் முதல் இடத்தில் இருக்கிறார்.
Crorepaties TN

சிகே ரங்கனாதன், சந்திரமோகன், ராதா வேம்பு மற்றும் கலாநிதி மாறன் (இடமிருந்து வலம்)

Hurun அறிக்கையின்படி இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ. 1,38,400 கோடியாகும்.


Zoho secure நிறுவனத்தின் நிறுவனர் வேம்பு ராதா ரூ.9,900 கோடி மதிப்பிலான சொத்தை வைத்திருக்கிறார். கலாநிதி மாறனுக்கு அடுத்த 2வது இடத்தை இவர் பிடித்திருக்கிறார்.

ரூ.7 ஆயிரத்து 300 கோடி சொத்துடன் வேம்பு சேகர் 3வது இடத்தில் இருக்கிறார். போத்தீஸ் நிறுவனர் சடையாண்டி மூப்பனார் ரூ.7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாகவும் இவர் பட்டியலில் 4வது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான கோடீஸ்வரர்கள் வரிசையில் இவர் 125வது இடத்தில் இருக்கிறார்.

ஹாட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ்ன் ஆர் ஜி சந்திமோகன் 7000 கோடி சொத்துடன் பட்டியலில் 5ம் இடம் பிடித்திருக்கிறார். கவின்கேரின் சிகே ரங்கநாதன் 5,300 கோடி சொத்துடன் 6ம் இடத்தில் இருக்கிறார். அமேல்கமேஷன் குழுமத்தின் கிருஷ்ணமூர்த்தி மற்றம் சீதா வெங்கடரமணி 4,500 கோடி ரூபாய் சொத்துடன் பட்டியலில் 7ம் இடத்தை பெற்றிருக்கின்றனர்.

iifl report

IIFL wealth Hurun India rich list 2019, source : Hurun research institute

ட்ரிவிட்ரான் ஹெல்த் கேரின் ஜிஎஸ்கே வேலு மற்றும் டிடிகே பிரெஸ்டிஜ் குழுமத்தின் டிடி ரங்கநாதன் 3,100 கோடி மதிப்பு சொத்துடன் 9வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். அமேல்கமேஷன் குழுமத்தை சேர்ந்த 6 பேர் இந்தப் பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர். மாநிலத்திலே இந்த ஒரே ஒரு குழுமத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான தனி நபர்கள் பட்டியலில் உள்ளனர்.


ஏ கிருஷ்ணமூர்த்தி, சீதா வெங்கடரமணி டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற இதே குழுமத்தை சேர்ந்த லஷ்மி நாராயணன், மல்லிகா ஸ்ரீனிவாசன், சங்கர் சுந்தரம், ஸ்ரீராம் முரளி உள்ளிட்டோரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக கோடீஸ்வரர்களில் 62 சதவிகிதம் பேர் சென்னையில் வசிக்கின்றனர். அதாவது 34 பேர் சென்னையிலும், கோயம்புத்தூரில் 12 பேரும், திருப்பூரில் இருந்து 4 பேரும், சேலத்திருந்து 3 பேரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கின்றனர். இந்திய அளவிலான கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7 பெண்கள் உள்பட 16 பேர் புதிதாக பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
industry wise

IIFL wealth Hurun India rich list 2019, source : Hurun research institute

புதிய வரவு கோடீஸ்வரர்களில் ரூ.1,800 கோடி சொத்துடன் ரஃபீக் அகமது & ஃபரிதா ஷு குடும்பம் முதல் ஆளாக சேர்ந்துள்ளது. எமரால்டு ஜுவல்ஸை சேர்ந்த கே.ஸ்ரீனிவாசன் ரூ.1,500 கோடி சொத்துடன் புதிய வரவு பட்டியலில் 2ம் இடம் பெற்றுள்ளார். அப்பலோ மருத்துவமனையின் சுசரிதா ரெட்டி ரூ.1,400 கோடி மதிப்பு சொத்துடன் 3வது புதிய கோடீஸ்வரராக இணைந்துள்ளார்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தமிழக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் 16% பேர் ஜவுளித்தறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக Hurun குறிப்பிட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆடோமொபைல் துறையைச் சேர்ந்த 13 சதவிகிதம் பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.


கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஒட்டுமொத்த சொத்து மதிப்பானது 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எனினும் சராசரி சொத்து மதிப்பில் 11 சதவிகிதம் குறைந்துள்ளது. 2016ம் ஆண்டு Hurun India rich listஐ ஒப்பிடும் போது 2019ல் 181% அதிகரித்திருப்பதாக அதன் அறிக்கை கூறுகிறது.

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India