#BoycottChina: சீனப் பொருட்கள் விற்பனையை பெரிய அளவில் பாதிக்கவில்லை!

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து #BoycottChina, #GoChina, #GoChineseGo போன்ற பிரச்சாரங்கள் பிரபலனமாகியுள்ளது.

23rd Jun 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் சீனப் பொருட்களை புறக்கணிக்கவேண்டும் என்கிற பிரச்சாரம் சமூக வலைதளங்களை வெகுவாக ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும் இந்த சூழலால் Xiaomi, Realme, Haier போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மற்றும் நுகர்வோர் தயாரிப்புகளின் விற்பனை பாதிக்கப்படவில்லை.

இதுகுறித்து நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில் விற்பனை எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்று இந்த சீன நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.
1

ஊரடங்கு காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கின்றனர். இதனால் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக போன்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் அதை பூர்த்திசெய்யும் வகையில் பல நிறுவனங்கள் அதிக விலையில் இறக்குமதி செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

சீன நிறுவனங்கள் நேரடியாக களத்திலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் சந்தையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக மற்றொரு நிர்வாகி தெரிவித்துள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் சீனாவிற்கு எதிரான போக்கு உருவாகி #BoycottChina, #GoChina, #GoChineseGo போன்ற பிரச்சாரங்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.

மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தை

பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் கருத்துக்கள் நுகர்வோர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்களது வாங்கும் முறையிலும் இது பிரதிபலிக்கக்கூடும் என்றும் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர் சங்கம் (CEAMA) தெரிவிக்கிறது.

“நுகர்வோர்களுக்கு பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற உணர்வு ரீதியான கருத்துக்கள் அவர்கள் வாங்கும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது எதிர்பார்த்த ஒன்றுதான். சில நாட்கள் கடந்த பின்னரே இதன் தாக்கம் தெரியக்கூடும்,” என்றார் CEAMA தலைவர் கமல் நந்தி.

இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் ஒரு கணிசமான பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பது அனைவரும் அறிந்ததே என்று இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தலைவர் பங்கஜ் மொஹிந்த்ரோ குறிப்பிடுகிறார்.

“கடந்த சில ஆண்டுகளில் தற்சாற்புடன் செயல்படுவதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வலுவான திறனை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்தவேண்டும். தற்போதைக்கு இதுபோன்ற பிரச்சாரங்கள் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இந்தியாவில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்திய சாம்பியன்களை ஊக்குவித்து வருகிறோம். 2025-ம் ஆண்டில் மொபைல் போன் மற்றும் பாகங்கள் பிரிவில் வலுவான இந்திய நிறுவனங்களைக் கொண்டிருப்போம்,” என்றார்.

இந்தியாவில் முன்னணியில் இருக்கும் ஐந்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் நான்கு பிராண்டுகள் சீனாவைச் சேர்ந்தது. மார்ச் 2020 காலாண்டில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட 32.5 மில்லியன் ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 76 சதவீதம் இந்த பிராண்டுகள் பங்களிப்பதாக IDC தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.


தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதில் 15.6 சதவீதம் பங்களித்து மூன்றாமிடத்தில் உள்ளது. ஐந்து முன்னணி விற்பனையாளர்களில் இந்நிறுவனம் மட்டுமே சீனா அல்லாத பிறநாட்டு நிறுவனமாகும்.


சீனாவைத் தொடர்ந்து இந்தியா ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடம் வகிக்கிறது. 2019-ம் ஆண்டு 152.5 மில்லியன் ஸ்மார்ட்போன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

“ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு குறைவான விருப்பத்தேர்வே உள்ளது. 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட்போன் இறக்குமதியில் 81% சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. உள்ளூர் OEM தயாரிப்பாளர்கள் 1% மட்டுமே பங்களிக்கின்றனர். சாம்சங், ஆப்பிள் ஆகியவையே சீனா அல்லாத பிற நாட்டு நிறுவனங்கள்,” என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் இணை இயக்குநர் தருண் பதக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 2020-ம் ஆண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் இறக்குமதி 10 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவிக்கிறது.


இன்றைய உலகமயமாக்கல் காலகட்டத்தில் ஒரு தயாரிப்பை குறிப்பிட்ட இடம் சார்ந்து அடையாளப்படுத்துவது கடினம். ஏனெனில் ஒரு தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது.


நுகர்வோரைப் பொருத்தவரை பிராண்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே இதுபோன்ற உணர்வு ரீதியான விஷயங்களில் இருந்து பிராண்டுகள் கவனமாக விலகியே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எனவேதான் அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்திய செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதைப் பார்க்கமுடிகிறது. தங்களது பங்களிப்பை உறுதிபடுத்துவது, புதிய சலுகைகள் அறிவிப்பது, தயாரிப்புத் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது, உள்ளூர் ஆர்&டி திறனை மேம்படுத்துவது என இந்திய சந்தையில் முக்கியக் கவனம் செலுத்துவதில் கூடுதல் தீவிரம் காட்டுவார்கள்,” என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் உள்ளூர் தேவைகளை பூர்த்திசெய்ய தொழிற்சாலை அமைப்பதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாகவும் நாட்டில் விற்பனை செய்யப்படும் அந்நிறுவனத்தின் 90 சதவீத தயாரிப்புகள் உள்ளூரில் தயாரிக்கப்படுவதாகவும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிக்கும் சீன நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.


Carrier Midea India நிறுவனத்தை சீன நிறுவனமான Midea Corporation நிர்வகித்து வருகிறது என்றாலும் இந்நிறுவனம் இந்திய நிறுவனத்தின் மதிப்புகளுடன் இந்திய நிறுவனமாகவே செயல்பட்டு வருவதாக Carrier Midea India நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் சச்தேவ் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த UTC Climate Control & Security, சீனாவின் Midea Group ஆகியவற்றின் கூட்டு முயற்சியான Carrier Midea India நிறுவனம் அதன் வணிகத்தின் பெரியளவில் பாதிப்பு ஏதும் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறது.

“நாங்கள் 100 சதவீதம் உள்ளூர் தயாரிப்பு நிறுவனம். நாங்கள் இங்கு விற்பனை செய்யும் Carrier அல்லது Midea பிராண்ட் ஏசி உள்ளூரில் தயாரிக்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் போன்றே நாங்கள் சீனா போன்ற மற்ற நாடுகளில் இருந்து சில மூலப்பொருட்களை வாங்கினாலும் உள்ளூர் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகிறோம்,” என்று சச்தேவ் குறிப்பிட்டார்.

பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இருப்பினும் இந்தியாவைப் பொறுத்தவரை மூலப்பொருட்களின் இறக்குமதியில் சீனாவை பெருமளவு சார்ந்திருப்பதால் சிக்கல் நீடிக்கிறது என்கிறார் CEAMA தலைவர் கமல் நந்தி.

“இந்த நாட்டில் ஒரு சிறப்பான சுற்றுசூழலை உருவாக்கவேண்டிய அவசியம் நிலவுகிறது. அரசாங்கத்துடனான துறைசார் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு இரண்டாண்டுகள் வரை ஆகலாம்,” என்று குறிப்பிட்டார்.

மேலும் மூலப்பொருட்களைப் பொறுத்தவரை சீனாவை மட்டுமே சார்ந்திருக்கக்கூடாது என்றும் கூடுதலாக மாற்று ஏற்பாடு ஒன்றை செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தாய்லாந்து, வியட்னாம், கொரியா போன்ற நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை வாங்குவது குறித்து ஆராயவேண்டும்,” என்றார்.

ஹார்ட்வேர் பிரிவுடன் ஒப்பிடுகையில் செயலியின் மூலாதாரத்தைக் கண்டறிவது எளிதாக இருப்பதால் உணர்வுப்பூர்வமான கருத்துக்கள் இந்தப் பிரிவுகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் கவுண்டர்பாயிண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த பதக்.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India