Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

பிறந்தநாளுக்கு முன் உயிரிழப்பு: 5 பேருக்கு மறுவாழ்க்கை அளித்த கேரள இளைஞர்!

உடலுறுப்பு மாற்று அறுவகை சிகிச்சையால் ஐந்து பேரை காப்பற்றிய 22 வயது இளைஞன்!

பிறந்தநாளுக்கு முன் உயிரிழப்பு: 5 பேருக்கு மறுவாழ்க்கை அளித்த கேரள இளைஞர்!

Friday April 16, 2021 , 2 min Read

பிறந்தநாளுக்கு முந்தைய மாலையில் இறந்த ஒரு மனிதன் ஐந்து பேருக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது நடந்தது கேரளாவில்.


கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஆண்டோ. சில தினங்கள் முன் இவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். அதற்கு முந்தைய நாள் ஒரு துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்த தனது சகோதரி ஜோசபின் அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.


அப்போது எதிர்பாராதவிதமாக கார் மோதி ஆண்டோ விபத்தில் சிக்கி இருக்கிறார். இதற்கிடையே, தனது சகோதரனுக்காக காத்திருந்த ஜோசபின் அவன் வரவில்லை என்பதறிந்து நடந்தே வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். அப்போது சாலையில் குழுமியிருந்த கூட்டத்தை பார்த்த ஜோசபின், தானும் சென்று அங்கு பார்த்தபோது விபத்து ஏற்பட்டது அவளுடைய சகோதரன்தான் என்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (ஜி.என்.சி.எச்) கொண்டு சேர்த்தார் ஜோசபின்.

ஆனால், விபத்தில் ஆண்டோ மூளைச் சாவு அடைந்திருப்பது தெரியவர, தாயார் மேரி மற்றும் சகோதரிகள் ஜோசபின் மற்றும் சின்சி ஆகியோர் ஆண்டோவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, கேரள மாநில அரசின் உறுப்பு தானம் திட்டமான ‘மிருதசஞ்சீவானி’ திட்டத்தின்படி உறுப்புமாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


மிருத்சஞ்சீவனியின் மாநில நோடல் அதிகாரி டாக்டர் நோபல் கிரேசியஸ், ஜி.எம்.சி.எச் இன் மாற்று கொள்முதல் மேலாளர் டாக்டர் அனில் சத்யதாஸ், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ஜெயச்சந்திரன், மாற்று ஒருங்கிணைப்பாளர்கள் பி வி அனீஷ் மற்றும் எஸ் எல் வினோத் குமார் ஆகியோர் முன்னிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

anto

ஆண்டோவின் சிறுநீரகங்கள் ரோஹித் மேத்யூ, மற்றும் சுபீஷாத் என்ற இரண்டு நோயாளிகளுக்கு மாற்றப்பட்டன. இதேபோல் அவரின் இதய வால்வுகள் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி மருத்துவமனையின் நோயாளிகளுக்கு உறுப்பு மாற்றம் செய்யப்பட்டது. மேலும், அவரது கல்லீரல் கொச்சியில் உள்ள அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் நோயாளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.


இதன்பின் முறையான பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆண்டோவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆண்டோவின் குடும்பம் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஆண்டோவின் தந்தை இறந்துவிட வருமானத்திற்காக எலக்ட்ரீஷியன் மற்றும் மீன் வேலை செய்பவராக பணிபுரிந்து வந்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.


இந்தநிலையில், கொடுரமான விபத்து ஏற்பட்டு தந்து 23 வது பிறந்தநாள் ஒரு நாள் முன்பு அவர் அடக்கம் செய்யப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கட்டுரை: Think Change India | தமிழில்: மலையரசு