Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் பிராண்டிங் உத்திகள்!

ஒரு ஸ்டார்ட் அப்’பிற்கான பிராண்டை உருவாக்குவதில், இணையதள வடிவமைப்பில் துவங்கி பிராண்டின் குரல் வரை ஆறு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன?

ஸ்டார்ட்  அப் நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் பிராண்டிங் உத்திகள்!

Tuesday November 19, 2019 , 3 min Read

ஸ்டார்ட் அப் சூழல் போட்டி மிக்கது. நன்றாக செயல்படுத்தப்படும், சிறந்த ஐடியா மட்டுமே, முதலீடுகளை ஈர்த்து, பெரிய நிறுவனமாக வளர போதுமானது என நாம் நினைத்துக்கொண்டிருந்தாலும், நிலைமை இவ்வாறு இல்லை.


இன்றைய சூழலில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போட்டியை நிறுவனங்கள் வென்றாக வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஸ்டார்ட் அப்கள் குவிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கவர்வது கடினமாகி இருக்கிறது.

ஸ்டார்ட் அப்

தனித்து நின்று, தனக்கான அடையாளத்தை பெற ஸ்டார்ட் அப்கள் துவக்க நிலையிலேயே பிராண்ட் உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சிக்கலானதாக, செலவுமிக்கதாக, தொழில்முனைவோருக்கு தேவையற்றதாக தோன்றினாலும், அதிலும் குறிப்பாக பெரும்பாலான முயற்சியை சேவையை உருவாக்குவதில் செலவிட வேண்டியிருக்கும் நிலையில் இது தேவையற்றதாக தோன்றினாலும், வெற்றி பெற இது அவசியமானது.


ஆனால், இதன் பின்னே உள்ள அடிப்படைகளை புரிந்து கொண்டால், பிராண்டிங் என்பது சிக்கலானதோ அல்லது செலவுமிக்கதோ இல்லை என புரிந்து கொள்ளலாம்.


ஒரு ஸ்டார்ட் அப்பிற்கான பிராண்டை உருவாக்குவதில், இணையதள வடிவமைப்பில் துவங்கி பிராண்டின் குரல் வரை ஆறு முக்கிய அம்சங்கள் இருக்கின்றன:

இணையதளம்  

இணையதளம் மிகவும் முக்கியமானது. எதிர்கால வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உங்களைத் தேடி வரக்கூடிய முதல் இடம் இது. உங்கள் நிறுவனத்திற்கு நன்கு பராமரிக்கப்படும் தளம் இல்லை எனில், நீங்கள் பின் தங்கிவிடலாம். உங்களுக்கான வாடிக்கையாளர்கள் போட்டி நிறுவனங்களை நாடிச்செல்லலாம்.


மேலும், இணைய இருப்பு இல்லாதது, உங்கள் பிராண்ட் மீது மோசமாக தாக்கம் செலுத்தும். ஸ்டார்ட் அப் பொருத்தமானது அல்ல, முதலீட்டிற்கு ஏற்றது அல்ல எனும் செய்தியை இது அளிக்கலாம்.


ஒரு இணையதளத்தை உருவாக்க அதிக நேரம் தேவைப்படலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், விக்ஸ் போன்ற சேவைகள் மூலம் எளிதாக இணையதளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.

பிராண்டின் நோக்கம்

தெளிவான நோக்கமே, பிராண்டின் அடையளமாக அமைந்து, வெற்றிகரமான நிறுவனங்களை மற்ற நிறுவனங்களில் இருந்து வேறுபடுத்தி காண்பிக்கிறது. நோக்கம் என்பது, ஸ்டார்ட் அப்பின் குறிக்கோள் சார்ந்தது மட்டும் அல்ல, அதன் கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் சார்ந்ததும் தான்.


வெற்றிகரமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கான வாக்குறுதி அடிப்படையில் தங்கள் நோக்கத்தை உருவாக்கிக் கொள்கின்றன. மாற்றத்தை உண்டாக்க, உலகம் மீது தாக்கம் செலுத்த, வாழ்க்கையை மேம்படுத்த அவை முயற்சிக்கின்றன. இவை பிராண்ட் மீதான விசுவாசத்தை உண்டாக்கி, அதை தனித்து நிற்கச்செய்கின்றன.


ஒரு நிறுவனத்தின் நோக்கம் தெளிவாக இருக்கும் போது, வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவற்றை நிறுவனம் நிறைவேற்றுவதும் சாத்தியமாகிறது.

காட்சி அடையாளம்

பிராண்டின் காட்சி அடையாளம் முக்கியம். இது நிறுவனம் மீதான புரிதலில் தாக்கம் செலுத்துகிறது. இதற்கேற்ப காட்சி மொழி பிராண்டின் அடையாளத்திற்கு பொருத்தமாக அமைய வேண்டும்.


பிராண்ட் எனும் போது பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லோகோ தான். இதை மனதில் கொண்டு லோகோவை உருவாக்க வேண்டும். லோகோவை உருவாக்குவது, இணையதளத்தை அமைப்பது போலவே, விக்ஸ் உருவாக்கியுள்ள லோகோ மேக்கர் சேவை மூலம் எளிதாகி இருக்கிறது.


பல ஸ்டார்ட் அப்கள் லோகோவை உருவாக்குகின்றன என்றாலும் அவை, பிராண்ட் வடிவமைப்பு அம்சங்களை மறந்து விடுகின்றன. நிறுவனத்தின் அழகியல், அதன் செய்தியை சொல்வதில் முக்கியப் பங்கு வகிப்பதால், இது பெரிய தவறாகும். ஸ்டார்ட் அப் பயன்படுத்தும் வண்ணம் மற்றும் எழுத்துருக்கள், பிராண்டிற்கான துடிப்பான தன்மையை அளிக்கும்.

ஸ்டார்ட் அப் குரல்

பிராண்ட்களுக்கு குரல் இருக்க வேண்டும் என்பது புதிய கருத்தல்ல என்றாலும், இதன் முக்கியத்துவம் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில், நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை, விளம்பரங்களில் தக்க வைத்து வந்தன. இப்போது, பிராண்ட்கள் பலவிதமான வழிகளில் மக்களைச் சென்றடைய வேண்டியிருக்கிறது.


மக்களும் பலவிதங்களில் பிராண்டை தொடர்பு கொள்கின்றனர். பாரம்பரிய ஒரு வழி விளம்பரங்களில் இருந்து மாறுபட்டு, திறந்த வெளித்தன்மை கொண்ட உரையாடல் நிகழ்கிறது. இது பிராண்டின் குரல் மீதான முக்கியத்துவத்தை அதிகமாக்குகிறது.  


எழுத்து வடிவிலான மற்றும் பேச்சு வடிவிலான குரல், பிராண்டின் ஆளுமையாகும். நோக்கம், மதிப்புகள் அடிப்படையில் இது அமைகிறது. பல்வேறு தளங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்ப செய்தி மாறக்கூடும் என்றாலும், அவை பிராண்டின் அடிப்படை அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.  

சமூக ஊடக பயன்பாடு

சமூக ஊடக இருப்பு என்பது, பிராண்டிங் முயற்சி மட்டும் அல்ல. இது வாடிக்கையாளர்களைச் சென்றடைய மற்றும் பிராண்டின் இணைய இருப்பிற்கு இது பிரதான வழியாகும்.


பல்வேறு சமூக ஊடகங்களில், கணக்குகளை பராமரிப்பது மற்றும் பிராண்டின் அழகியல், குரலை தக்க வைத்துக்கொள்வது, அதன் அடையாளத்திற்கு வலு சேர்க்கும். இது முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது. இதனால், பிராண்ட்களுக்கும், குறிப்பாக ஸ்டார்ட் அப்களுக்கும் சமூக ஊடகம் முக்கியமானது.

மாற்றி யோசிப்பது

இதில் தான் உண்மையான படைப்பூக்கம் மற்றும் தொழில்முனைவு மின்னுகிறது. ஸ்டார்ட் அப்கள் பெருகியுள்ள சூழலில் புதுமை முக்கியம். சேவையை விட, பிராண்டிங் புதுமை மிகவும் முக்கியம் எனலாம்.  


ஆக, போட்டிச் சூழலில் தனித்து நிற்க பிராண்டிங் முயற்சி உதவும். இதை மனதில் கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுக்கான உத்தியை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஆங்கில கட்டுரை: யுவர்ஸ்டோரி குழு | தமிழில்: சைபர்சிம்மன்