நிலத்தை விற்று ஏழை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்த சகோதரர்கள்!

கர்நாடகாவைச் சேர்ந்த இச்சகோதரர்கள் ஏழை மக்களுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க தங்களது நிலத்தை விற்று 25 லட்சம் திரட்டியுள்ளனர்.

8th May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்தியாவில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,700-க்கும் மேற்பட்டோர் இந்தக் கொடிய வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பலரும் இந்த நோய்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தக் கடினமாகப் போராடி வருகின்றனர்.


இந்த நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசாங்கத்தின் தரப்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் நோய் தொற்று தொடர்ந்து பரவி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், தொழிலாளர்கள் போன்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு என்ஜிஓ-க்களும் தனிநபர்களும் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

1

தஜமுல், முசம்மில் பாஷா இருவரும் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவிப்பதை இவர்கள் கண்டனர். ஏழை மக்களுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவத் தீர்மானித்த இவர்கள் தங்களது நிலத்தை விற்று 25 லட்ச ரூபாய் திரட்டியுள்ளனர்.

“கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. ஏழை மக்கள் உணவின்றி அவதிப்படுவதால் வேறு வழியின்றி வெளியே வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே கொண்டு சேர்த்தால் அவர்கள் வெளியே வருவதைத் தடுக்கலாம்,” என்று தஜமுல் பாஷா `டெக்கன் க்ரோனிக்கல்’ இடம் தெரிவித்தார்.

இந்தச் சகோதரர்கள் தங்களது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டனர். கோலாரில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தனர். வறுமை காரணமாக இருவரும் நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டனர்.

“நாங்கள் வறுமையிலேயே வளர்ந்தோம். ஜாதி, மதி பேதமின்றி சமூகத்தில் பலரும் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எங்களது நண்பர் மூலம் எங்கள் நிலத்தை விற்று பணத்தைத் திரட்டினோம்,” என்று இந்தச் சகோதரர்கள் கூறினர்.

10 கிலோ அரிசி, 1 கிலோ மைதா மாவு, 2 கிலோ கோதுமை, 1 கிலோ சர்க்கரை, சமையல் எண்ணெய், டீத்தூள், மசாலா பொடிகள், சானிடைசர் பாட்டில், முகக்கவசம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை நிவாரணப் பொருட்களாக வழங்கினார்கள்.


இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதுடன் நிறுத்திக்கொள்ளாமல் வீடின்றி அவதிப்படுவோர்களுக்கு உணவளிக்க சமூக சமையலறையும் அமைத்துள்ளனர். அனைத்து குடும்பங்களுக்கும் மூன்று வேளை உணவு கிடைக்கவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.


இந்தச் சகோதரர்கள் சுமார் 2,800 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்துள்ளனர். இவர்களது உதவி கிட்டத்தட்ட 12,000 நபர்களைச் சென்றடைந்துள்ளது. ஒத்த சிந்தனையுடைய நபர்களையும் உடன் இணைத்துக்கொண்டு இவர்கள் தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவி வருகின்றனர்.


கட்டுரை: THINK CHANGE INDIA

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close