Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆனது BYJU's

லாக்டவுனால் அதிகரித்த பயனர் எண்ணிக்கை!

இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆனது BYJU's

Tuesday June 15, 2021 , 1 min Read

இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனம் பேடிஎம். இந்த நிறுவனத்தை முந்தி தற்போது அந்த சாதனையைத் தொட்டிருக்கிறது எடெக் யூனிகார்ன் BYJU'S நிறுவனம்.


சமீபத்தில் BYJU'S நிறுவனம் நிதி திரட்டலில் ஈடுபட்டது. அதன்படி, யுபிஎஸ் குழுமம், பிளாக்ஸ்டோன், ஜூம் நிறுவனர் எரிக் யுவான், அபுதாபி மாநில நிதி ADQ, மற்றும் பீனிக்ஸ் ரைசிங் ஆகிய நிறுவனங்களிலிருந்து BYJU'ஸ் 350 மில்லியன் டாலர்களை திரட்டியது.

இதன்மூலம் தற்போது, ரூ.16.5 பில்லியன் டாலர் மதிப்புடன் BYJU'ஸ் இந்தியாவின் அதிக மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், Paytm மதிப்பு 16 பில்லியன் டாலர், மற்றும் ஐபிஓ-க்கு பிந்தைய மதிப்பீட்டை 25-30 பில்லியன் டாலர்களை இலக்காகக் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக, உலகின் முதல் 20 யூனிகார்ன்களில் BYJU மற்றும் Paytm மட்டுமே இரண்டு இந்திய நிறுவனங்களாக உள்ளன என்று தொடக்க புலனாய்வு நிறுவனமான சிபி இன்சைட்ஸ் தெரிவித்துள்ளது.

ravi

இதற்கிடையே, ஆன்லைன் கற்றல் நிறுவனமான BYJU’s பயனர் எண்ணிக்கை, கொரோனா தொற்றுநோய்க்குப் பின் 80 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதில் 5.5 மில்லியன் மக்கள் சந்தா செலுத்துபவர்கள். தொற்றுநோயின் முதல் ஆறு மாதங்களில் 45 மில்லியன் புதிய பயனர்கள் இந்த ஆப்பில் இணைந்தனர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் சென்சார் டவர் கூற்றுப்படி, உலகளவில் முதல் 10 கல்வி ஆப்களில் ஒன்றாகவும் பைஜுஸ் இந்த லாக்டவுனில் உருவானது.

"கற்றலின் எதிர்காலம் கலப்பினமானது, மேலும் இது சிறந்த ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கற்றலை ஒன்றிணைக்கும், ஏனெனில் நாங்கள் எங்கள் நிபுணத்துவத்தை இணைத்து மாணவர்களுக்கு பயனுள்ள அனுபவங்களை உருவாக்குகிறோம்," என்று இது தொடர்பாக பேசியுள்ள BYJU’s இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பைஜு ரவீந்திரன் கூறியுள்ளார்.

ஆங்கிலத்தில்: சோஹினி மிட்டர் | தமிழில்: மலையரசு