நேரடி கல்வி பயிற்சி ‘BYJU’S Future School’ அறிமுகம் செய்துள்ளது பைஜூஸ்!
பைஜு’ஸ் நிறுவனத்தின் புதிய மேடை, அமெரிக்கா, யு.கே, பிரேசில் உள்ளிட்ட ஆறு நாடுகளில் கிடைக்க உள்ளது.
பைஜுஸ் நிறுவனம், நேருக்கு நேரிலான இணைய கற்றல் மேடையை, பைஜு’ஸ் பியூச்சர் ஸ்கூல் (‘BYJU’S Future School’) எனும் சேவையை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ஒயிட் ஹேட்ஜேஆர் மற்றும் பைஜு’ஸ் ஒருங்கிணைப்பு செயலுக்கு வந்துள்ளது.
"இந்த ஒருங்கிணைப்பு புதன்கிழமை நிகழ்ந்தது. நேரடி வகுப்புகள் (WhiteHatJr கோடிங் வகுப்புகள்), மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகிய இரண்டு கற்றல் முறையின் முழு ஆண்டு ஒருங்கிணைப்பின் துவக்கமாக இது அமைகிறது,” என்று பைஜு’ஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன் யுவர்ஸ்டோரிக்கான பிரத்யேக உரையாடலில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தேர்ந்தெடுத்த நாடுகளில் WhiteHatJr அறிமுகம் செய்த நேரடி ஆன்லைன் வகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. இந்த புதிய மேடை, அமெரிக்கா, யூ.கே, ஆஸ்திரேலியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் மெக்சிகோவில் அறிமுகம் ஆக உள்ளது.
பைஜு’ஸ் பியூச்சர் எனும் இந்த மேடையின் சர்வதேச விரிவாக்கத்தை WhiteHatJr நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கரண் பஜாஜ் வழிநடத்துவார். ஆறு முதல் பதினெட்டு வயதிலான குழந்தைகளுக்கு படைப்பூக்கம் மிக்க பலன்களை அளிக்க, பாடங்களுடன் ரியல் டைம் வழிகாட்டுதல்களை கலந்தளிக்கும் வகையில் உரையாடல் தன்மை சார்ந்த கற்றல் மேடையை வழங்குவதன் மூலம், வழக்கமான கற்றலுக்கும், துடிப்பான கல்விக்குமான பாலமாக பைஜு’ஸ் பியூச்சர் ஸ்கூல் விளங்கும்.
துவக்கத்தில், பைஜூ’ஸ் பியூச்சர் ஸ்கூல் கோடிங் மற்றும் கணித பாடங்களை வழங்கும். இசை, ஆங்கிலம் மற்றும் நுண்கலை எதிர்காலத்தில் வழங்கப்படும். பைஜு’ஸ் தனது பிரதான மேடையில் 80 மில்லியன் பதிவு செய்த மாணவர்களை பெற்றுள்ளது. இந்த 1:1 ஆன்லைன் நேரடி கற்றல் மேடை 2022ம் ஆண்டில் 350 மில்லியன் பயனாளிகளை அடைய திட்டமிட்டுள்ளது.
"அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மேம்பாட்டிற்கான செலவு அதிகம் என்பதால், இதை இயல்பாகவும், செயல்திறனுடனும் செய்து வருகிறோம். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆசிரியர்கள், பெரும்பாலும் பெண்கள், கணிதம் மற்றும் கோடிங் கற்றுத்தந்து அமைப்பு சார்ந்த பொருளாதாரத்திற்குள் வருவதை சாத்தியமாக்கும் மாதிரியை உருவாக்குவதாக,” பைஜு ரவீந்திரன் தெரிவிக்கிறார்.
’நம்முடைய நாட்டில் பார்த்தால் 23 சதவீத பெண்கள் தான் அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் இருக்கின்றனர். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இது 38 சதவீதமாக இருக்கிரது.
”பைஜு’ச் பியூச்சர் ஸ்கூல் மூலம் மேலும் பல பெண்கள் ஆசிரியர்களாக தகுதி பெற்று, அமைப்பு சார்ந்த பொருளாதாரத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்,” என்று யுவர்ஸ்டோரியிடம் கரண் பஜாஜ் தெரிவித்தார்.
பாட திட்டத்திற்கு உட்பட்டு மாணவர்களுக்கு கோடிங் கற்றுத்தரும் வகையில் பள்ளிகளுடன் இணைந்து பைஜு’ஸ் செயல்படும் மாதிரியையும் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
பிரத்யேகமான, செயல்முறை சார்ந்த கோடிங் கற்றல் முறை மாணவர்கள் உருவாக்குதல் மூலம் கோடிங் கற்க உதவும். அனுபவம் வாய்ந்த ஆசிரியர் வழிகாட்டியாக இருப்பார். சுவாரஸ்யமான முறையில் கற்றுக்கொள்ள மற்றும் கணிதத்தின் நிஜ வாழ்க்கை பயன்பாடு சார்ந்து கதை சொல்லல் அடிப்படையில் கணித கற்றல் அமைந்துள்ளது.
இரண்டு பாடங்களுமே மாணவர்கள் தங்கள் விரும்பி வகையில் கற்றுக்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு வகையான கற்றல் கலைவை முறையின் மையமாக, பைஜு’ஸ் உருவாக்கியுள்ள கம்ப்யூட்டர் விஷன் மேடை ஓஸ்மோ விளங்கும். இது மாணவர்கள் கணக்குகளுக்கு தீர்வு காண உதவும்.
"எதை செய்வது, எதை செய்யக்கூடாது எனும் அடிப்படையில் கிளிப்பிள்ளை முறையில் கற்றுத்தருவதற்கு பதிலாக சோதனை முறையில் கற்றுத்தர இது உதவும். இந்த டிஜிட்டல் மற்றும் நிஜ உலகம் இணைந்த மாதிரியில், சாதனம் மற்றும் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு வழிகாட்டும். மேலும் மாணவர்களை சிறந்த முறையில் தயார் செய்ய ஆசிரியர்களுகு உதவும்,” என்று பைஜு ரவீந்திரன் தெரிவிக்கிறார்.
பைஜு’ஸ் பியூச்சர் ஸ்கூல் 11,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டிருக்கும். கோடிங் கல்வி ஸ்பானிஷ், போர்ச்சுகள் மொழிகளிலும் அளிக்கப்படும்.
“தொழில்நுட்பம் மூலம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கற்றலை விரும்பச்செய்ய முடியும் என நம்புகிறோம். தங்கள் குழந்தைகள் செயல் மூலம் கற்றல் மற்றும் படைப்புக்கத்தை பெறுவதை பெற்றோர்கள் விரும்பும் நிலையில் எங்கள் சர்வதேச விரிவாக்கம் அமைகிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
“அடுத்த தலைமுறையை மாறுபட்ட முறையில் சிந்திக்க வைப்பது, அவர்கள் படைப்பூக்கத்தை தூண்டி விடுவது, படைப்பூக்கம் மிக்கவர்களாக ஆக்குவது எனும் எங்கள் நோக்கம், பைஜு’ஸ் பியூச்சர் ஸ்கூல் அறிமுகம் மூலம் பெரிய அளவில் உத்வேகம் பெறும் என்று கரண் கூறினார்.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: மலையரசு