பதிப்புகளில்

சொகுசு லெதர் பொருட்கள் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் சென்னை பிராண்ட்

27th Jul 2018
Add to
Shares
49
Comments
Share This
Add to
Shares
49
Comments
Share

டோஹ்ல் (Tohl) சென்னையைச் சேர்ந்த தோல் பொருட்கள் மற்றும் துணைப் பொருட்களுக்கான நேர்த்தி மற்றும் சொகுசான பிராண்டாக அறியப்படுகிறது. இந்த பிராண்ட் இப்போது ஆன்லைனுக்கு வெளியேவும் கவனம் செலுத்துகிறது.

ஸ்டார்ட் அப்: டோஹ்ல், நிறுவனர்: மனீஷ் கல்ரா, நிறுவிய ஆண்டு: 2016, 

அமைவிடம்: சென்னை, துறை: இ-காமர்ஸ், நிதி: சுய நிதி

நீண்ட காலமாக, தோல் (லெதர்) என்பது ஸ்டைல் மற்றும் நேர்த்தியான ஈர்ப்பிற்காக அறியப்படுகிறது. கெய்டோண்டே (Gaitonde) குழுமத்தில் பணியாற்றிய மனீஷ் கல்ராவை பொருத்தவரை தோல் 25 ஆண்டுகளாக வாழ்க்கையின் அங்கமாக இருக்கிறது. வாங்கக் கூடிய விலையில் சில்லறையில் விற்பனை செய்யக்கூடிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, உயர் தர தோல் துணைப்பொருட்களுக்கான இடம் சந்தையில் இருப்பதாக நினைத்தார்.

டோஹல் 2006ல் துவக்கப்பட்டாலும், உயர்தர தோல் துணைப்பொருட்களாக சென்னையில் 2013 பின் பகுதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. 2016 ல் பிராண்டை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் ஆன்லைன் ஸ்டோருடன் டோஹல் மறு அறிமுகம் செய்யப்படது.

டோஹல் குழு

டோஹல் குழு


“தற்போது ஹைடிசைன் மற்றும் டா மிலானோ போன்ற பிராண்ட்கள் ஆதிக்கம் செலுத்தும், உயர்தர தோல் துணைப்பொருட்கள் சந்தையில் ஒரு இடைவெளி இருப்பதாக நினைத்து, எங்களுக்கு டோஹ்லை அறிமுகம் செய்ய ஊக்கமாக அமைந்தது. எங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் நாங்களே சொந்தமாக தயாரிக்கிறோம். வெளியே தருவதில்லை, இதன் மூலம் தயாரிப்பு செயல்முறையில் தரத்தை உறுதி செய்கிறோம்,” என்கிறார் மனீஷ்.

டோஹ்ல் ஏன்?

இந்த துறை மீதுள்ள ஈடுபாடு காரணமாக, மனீஷ் 2002 ல் சென்னையில் ஷூ தயாரிப்பிற்கான ஷூலைனை நிறுவினார். கெய்டோண்டே குழுமத்தில் துணைத்தலைவராக செயல்பட்டு விலகிய பிறகு இந்த முயற்சியில் ஈடுபட்டார். ஷூலைன், ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான காலணி பொருட்களை பிரத்யேகமாக தயாரித்தது. ஐரோப்பாவின் மெபிஸ்டோ, ஹோக மற்றும் கேபர் ஆகிய நிறுவனங்களை வாடிக்கையாளராக பெற்றிருந்தாக நிறுவனம் தெரிவிக்கிறது.

2012ல் ஐரோப்பாவில் உள்ள பிரிமியம் பிராண்ட்களுக்கு லெதர் பைகள் மற்றும் துணைப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் ’தி சேக் அண்ட் சாச்சல்’ நிறுவனத்தை துவக்கிய போது மனீஷுக்கு டோஹ்ல் பிராண்டுக்கான எண்ணம் பிறந்தது. சென்னையில் உற்பத்தி வசதியை பெற்றிருந்த அது, ஷூலைனின் துணை நிறுவனமாக இருந்தது. தி சேக் அண்ட் சாட்சல் நிறுவனம் மூலம் டோஹ்லின் பொருட்கள் உருவாக்கப்பட்டன.

“பத்தாண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பு துறையில் ஈடுபட்டு வந்ததால், பைகள் மற்றும் துணைப்பொருட்களுக்காக எங்கள் தயாரிப்பு தொழிலை விரிவாக்கம் செய்வது கடினமாக இல்லை,” என்கிறார் மனீஷ்.

தயாரிப்பு செயல்முறை

இந்நிறுவனத்தில் 75 திறன் ஊழியர்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். தினமும் 60-75 பைகள் அல்லது 250-300 சிறிய துணைப்பொருட்கள் தயாரிப்புக்கான திறன் பெற்றுள்ளது என்கிறார். இது ஏற்றுமதி மற்றும் டோஹ்ல் பிராண்டுக்கு போதுமானதாக இருக்கிறது.

தி சேக் அண்ட் சாட்சல் நிறுவனம் ஷூலைனின் துணை நிறுவனமாக இருப்பதால், டோஹ்லுக்கு தேவையான தோல் நிறுவன டேனரியிலேயே பதப்படுத்தப்படுகிறது. இத்தாலி மற்றும் பிரான்சில் இருந்தும் தோல் தருவிக்கப்படுகிறது. விஷேசமான டீரிட்மெண்ட் மற்றும் பினிஷுடன் நேர்த்தியான கைவினை நுட்பங்களும் பின்பற்றப்படுவதாக் மனீஷ் கூறுகிறார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட தோலை நேர்த்தியாக கையாண்டு, எல்லா செயல்முறைகளிலும் சர்வதேச தரத்தை உறுதி செய்கிறோம். எங்கள் காலணி பிரிவு மற்றும் அண்மைக்காலம் முதல் துணைப்பொருட்கள் பிரிவு சர்வதேச பிராண்டுகளுக்கு ஏற்றுமதி செய்வதால், சமீபத்தில் டெக்சர், வண்ண அமைப்பு மற்றும் பேஷனான லெதரை டோஹ்ல் பொருட்களில் பயன்படுத்துகிறோம்,” என்கிறார் மனீஷ்.

வடிவமைப்பு

வடிவமைப்பு செயல்முறை டேஹ்ல் மற்றும் வடிவமைப்பு ஆய்வில் துவங்குகிறது. வடிவமைப்பு குழு, தோல் தரம், வண்ண அமைப்பை தேர்வு செய்து அதன் பிறகு வடிவமைப்பு பலகை மற்றும் டிரிம் அடையாளத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. உள் ஆய்வுக்குப்பிறகு அடுத்த கட்ட செயல்முறை டேனரிக்கு செல்கிறது. மாதிரி அறையில் ஸ்டைல் சரி பார்க்கப்படுகிறது.

மாதிரி பரிசோதனை, அனுமதி மற்றும் ரேஞ்ச் ஆய்வுக்குப்பிறகு பைகள் மற்றும் துணைப்பொருட்களை நிறுவன பணியாளர்கள் உருவாக்குகின்றனர். தேவைப்படும் போது, சிறப்பு லேமினேட், பினிஷ் மற்றும் அலங்கார அம்சங்கள் சேர்க்கப்பட்டு தேவையான காட்சி தன்மை கொண்டுவரப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தோல், உறுதி மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மைக்காக சரி பார்க்கப்பட்டு சர்வதேச தரத்திற்கு ஏற்பட்டே செய்யப்படுகிறது.

“வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதை உறுதிப்படுத்துவதற்காக டோஹ்ல் தயாரிப்புகள் தீவிர பரிசோதனைகளுக்கு உள்ளாகின்றன. வடிவத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக தயாரிப்புகள் நுணுக்கமாக கவனிக்கப்படுகின்றன. டிஸ்பேட்ச் செய்யப்படும் வரை கவனமாக வைக்கப்படுகின்றன. எங்கள் மின்வணிக தளத்தில் தோல் பராமரிப்பு மற்றும் கையாளும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிராண்ட் மொழி தொடர்ச்சிக்காக வெண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்கிறார் மனீஷ்.

ஆன்லைன் விற்பனை

பெண்களுக்கான பைகள் மற்றும் துணை பொருட்கள் அனைத்தும், 1.5 கிலோவுக்கு குறைவான எடை கொண்டுள்ளன. இதன் தனித்துவமான வடிவமைப்பு லெதரின் வண்ணம் மற்றும் மிருது தன்மையில் சர்வதேச தன்மையை உள்ளடக்கியிருக்கிறது. பைகளில் மொபைல் பாக்கெட், கூடுதல் ஸ்லிப் பாக்கெட் மற்றும் உள் ஜிப் பாக்கெட் மற்றும் சிறப்பு கொக்கிகள் கொண்டுள்ளன.

இணையதளம் அல்லது மின்வணிக தளங்களில் இருந்து ஆர்டர் வந்துவுடன் 48 மணி நேரத்தில் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

“ரெடி ஸ்டாக் வைத்திருக்கிறோம். 12 முதல் 24 மணி நேரத்தில் பதில் அளிக்கும், வலுவான வாடிக்கையாளர் சேவை குழு இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை நன்பகல் 12 முதல் இரவு 8 வரை இந்தக்குழு செயல்படிகிறது. எளிதான மாற்றம் மற்றும் திரும்பி அளிக்கும் கொள்கை வைத்திருக்கிறோம்,” என்கிறார் மனீஷ்.

சவால்கள்

முதலில் இந்த பிராண்ட் ஆன்லைன் ஸ்டோர் மூலம் மட்டுமே மறு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது மிந்த்ரா, ஜபாங் மற்றும் அமேசான் ஆகிய போர்ட்டகளில் கிடைக்கிறது. 

“இப்போது பொட்டிக், பெரிய நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிஓக்கள் போன்ற இடங்களில் தனியே கவனம் செலுத்தி வருகிறோம். பிரான்சைஸ் மாதிரியில் எங்கள் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் மனீஷ்.

பிராண்டை வளர்த்தெடுக்க நிதி மற்றும் மனித வளத்தை திரட்டுவது தான் மிக்கபெரிய சவாலாக இந்த குழு கருதுகிறது.

“நாங்கள் சொகுசு பிரிவில் செயல்படுவதால், லெதர் மற்றும் லெதர் அல்லாத பிராண்ட்களின் போட்டியையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றை சமாளித்து வருகிறோம். மேலும் புதுமையான தீர்வுகளையும் நாடி வருகிறோம்,” என்கிறார் மனீஷ்.

அடுத்து என்ன?

சொகுசு பொருட்களுக்கான இந்திய சந்தை 2018ல் 20 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி லெதர் பொட்டிக், ஹைடிசைன், நாப்பா டோரி, ஹோலீ மற்றும் பரோக் ஆகியவை போட்டியாளர்களாக உள்ளன.

தற்போது டோஹ்லின் பொருட்கள், ரூ. 1,600 முதல் ரூ. 1700 வரை துவங்கி ரூ.10,000 வரை இருக்கின்றன. வாரத்திற்கு 3- 4 பொருட்கள் விற்றத்தில்; இருந்து தினமும் 4-54 பொருட்கள் விற்பனையாகின்றன. 

“மாதம் 100-150 பொருட்கள் விற்கிறோம். இந்த எண்ணிக்கை வளர்கிறது” என்கிறார் மனீஷ்.

மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் பின்னர் ஐரோப்பாவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

“லேசு ரக லெதர் ஆடைகள், வர்த்தக பரிசுப்பொருட்கள் மற்றும் வீட்டிற்காக லெதர் பொருட்கள் ஆகிய பிரிவுகளில் விரிவாக்கம் செய்ய உள்ளோம். இவற்றில் நல்ல வாய்ப்பு உள்ளது,” என்கிறார் மனீஷ்.

இணையதளம்

ஆங்கிலத்தில்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர்சிம்மன்

Add to
Shares
49
Comments
Share This
Add to
Shares
49
Comments
Share
Report an issue
Authors

Related Tags