பதிப்புகளில்

இந்தியாவின் ‘பிரிட்ஜ் மனிதர்’ பற்றி தெரியுமா...?

127 பாலங்களைக் கட்டியுள்ள இவர், கர்நாடகாவை சேர்ந்தவர்.
posted on 16th October 2018
Add to
Shares
518
Comments
Share This
Add to
Shares
518
Comments
Share

கடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும் கர்நாடகாவின் தொலைதூர கிராமங்களைக் கடந்து செல்கையில் தொங்கும் பாலங்கள் நம் கண்களில் படும்.

கிராமங்களை அருகாமையில் உள்ள பகுதிகளில் இணைக்கும் அத்தகைய 91 பாலங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன. இவை கேரளா, ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. இதற்குக் காரணமானவர் இந்தியாவின் பிரிட்ஜ் மனிதர் என்றழைக்கப்படும் கிரீஷ் பரத்வாஜ்.

image


66 வயதான இவர் நாட்டில் மிகவும் உயரிய விருதான பத்மஸ்ரீ பெற்றுள்ளார். இவர் மங்களூருவின் சுல்லியா தாலுகாவில் உள்ள தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவர்.

மாண்டியாவில் உள்ள பிஈஎஸ் பொறியியல் கல்லூரி பட்டதாரியான இவர், இந்த பால அமைப்புகளை வழக்கமான விலையைக் காட்டிலும் பத்தில் ஒரு மடங்கு கட்டணத்தில் கட்டியுள்ளார். மற்ற அரசு திட்டங்களுக்கு மாறாக இந்த திட்டங்களை மூன்று மாதங்களில் நிறைவு செய்கிறார்.

இவரது பெரும்பாலான திட்டங்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் இதுவரை 127 பாலங்களை கட்டியுள்ளார். 1975-ம் ஆண்டு சுல்லியாவில் ’ரேஷனல் என்ஜினீயரிங் இண்டஸ்ட்ரீஸ்’ என்கிற நிறுவனத்தைத் துவங்கினார்.

இன்று இந்த நிறுவனம் ’அயாஸ்ஷில்பா’ (Ayasshilpa) என மறுபெயரிடப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்டீல் கட்டுமான பட்டறையாக செயல்பட்டு விவசாய இயந்திரங்களும் பழுது பார்க்கப்படுகிறது. அத்துடன் சாண எரிவாயு ஆலை கட்டுமானத்திலும் ஈடுபட்டுள்ளது என ’ஸ்டார் ஆஃப் மைசூர்’ குறிப்பிடுகிறது.

பல்வேறு கிராமப்புற குடியிருப்புகளை இணைப்பது குறித்து ’டெக்கான் ஹெரால்ட்’ உடனான உரையாடலில் கூறுகையில்,

சில இடங்களில் பணப்பற்றாக்குறை காரணமாக நாங்கள் பணியை நிறுத்தவேண்டியிருக்கும். அந்த சந்தர்ப்பங்களில் என்னுடைய தொடர்புகளைப் பயன்படுத்தி மக்களை சரியான வளங்களுடன் இணைப்பேன். வழக்கமாக எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சில பகுதிகளில் மக்களுடன் ஒன்றிணைய சிறிது அவகாசம் எடுக்கும். இருப்பினும் உள்ளூர் மக்களையும் ஈடுபடுத்தி திட்டத்தில் பொறுப்பேற்கச் செய்கிறோம். நாங்கள் மக்களையும் அவர்களது கனவுகளையும் இணைக்க விரும்புகிறோம்.

image


கிரீஷ் மற்றும் எஸ்எஃப்பி கன்ஸ்ட்ரக்‌ஷனில் உள்ள 30 நிபுணர்கள் அடங்கிய அவரது குழு ஒன்றிணைந்து இந்த தொலைதூரப் பகுதிகளைக் கண்டறிவதிலும் திட்டத்தை உருவாக்கவும் நேரம் செலவிடுகின்றனர். பெரும்பாலான பாலங்கள் அரசு திட்டங்களின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு கட்டப்படும் நிலையில், பொதுவாக இந்த முயற்சியை சமூகத்தினரே மேற்கொள்வார்கள். கடந்த மூன்றாண்டுகளாக இவர் கர்நாடகாவில் 91 பாலங்களும் கேரளாவில் 30 பாலங்களும் ஒரிசா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் தலா மூன்று பாலங்களும் கட்டியுள்ளார் என ’நியூஸ் கர்நாடகா ’தெரிவிக்கிறது.

தற்போது இவரது மகன் திட்டங்களைச் செயல்படுத்தும் பணியில் உடன் இணைந்துள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
518
Comments
Share This
Add to
Shares
518
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக