பதிப்புகளில்

நேதாஜி தப்பிச் சென்ற நிகழ்வுகளை அலசும் உறவினரின் பகிர்வு!

1941-ல் வீட்டுக் காவலில் இருந்த நேதாஜி தப்பித்துச் சென்றது குறித்து நினைவுகூர்ந்தார் சரத் சந்திர போஸின் மருமகளான நந்திதா

YS TEAM TAMIL
14th Aug 2017
Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share

சரத் சந்திர போஸின் மகனான சுப்ரதா போஸ் மிகவும் அமைதியானவர். மரியாதையான நபர். மீன் உண்ணும்போது முள்கரண்டி மற்றும் ஸ்பூன் கொண்டு லாவகமான மீனின் எலும்புகளை அகற்றி உண்ணும் திறன் கொண்டவர். அவர் இறந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் 70-வது சுதந்திர தின விழாவில் அவரது மனைவியான நந்திதா போஸ் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது குடும்ப நிகழ்வுகள் சிலவற்றை அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டார். அவரது கதைகள் ஆவலாகக் கேட்கும் விதத்தில் நகைச்சுவையும் கலந்தே இருந்தது. இவர்களது குடும்பத்திற்கு சுதந்திர தினம் என்பது மிகப்பெரிய நிகழ்வாகவே இருந்தது என்று நினைவுகூர்ந்தார் 77 வயதான நந்திதா,

போஸ் சகோதரர்கள்

போஸ் சகோதரர்கள்


1947-ம் ஆண்டு அவருக்கு ஏழு வயது. கொடி ஏற்றப்படுவதும் ஊர்வலங்கள் கடந்து செல்வதும் அவருக்கு நினைவிருந்தது. பிறகு 22 வயதானபோது வங்காளத்தின் புகழ்பெற்ற போஸ் குடும்பத்திற்கு மருமகளாகச் சென்றதும் சுதந்திர தினம் என்றாலே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ்கள் வரும்.

இரண்டு சகோதரர்கள்

கொல்கத்தாவின் எல்கின் சாலையிலிருந்து அவர்களது குடும்ப வீட்டை விட்டு வுட்பர்ன் தெருவில் அருகாமையில் இருந்த தனது சொந்த வீட்டிற்குச் சென்றார் சரத். அவரது மகன் சிசிர். சுபாஷ் சந்திர போஸ் வீட்டுக் காவலில் இருந்து தப்பிச் சென்ற நிகழ்வு நாட்டின் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்று. அந்த நிகழ்வின்போது சுபாஷ் சந்திர போஸின் உடனிருந்தவர் சிசிர்.

1941-ல் 44 வயதான சுபாஷ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். காவலர்கள் அவரது வீட்டிற்கு வெளியே காவலில் இருந்தனர். தப்பித்துச் செல்வது ஒரு சாதாரண பயணத்தைப் போலவே இருக்கவேண்டும் என்று பரிந்துரைத்தார் சரத். 

“ஏதோ தவறு நடக்கிறது என்று யாரும் சந்தேகிக்கக்கூடாது என்று நினைத்தார். தினமும் நடக்கும் ஒரு விஷயத்தினூடே வெளியேறுவதற்கான மாறுவேடமும் சந்தேகம் எழும்பாத விதத்தில் இருக்கவேண்டும் என்றார். அவரிடம் அத்தகைய தொலைநோக்குப் பார்வை காணப்பட்டது.” என்று விவரித்தார் நந்திதா.
நந்திதா போஸ்

நந்திதா போஸ்


இரண்டரை மாதங்கள் தினமும் நள்ளிரவில் சிசிர்; சுபாஷின் வீட்டிற்குச் செல்வார். காவலர்கள் அவரை நிறுத்தும்போது அவர்களிடம், 

“என்னுடைய சித்தப்பா இரண்டாம் உலகப் போர் பற்றிய வானொலி ஒலிபரப்பைக் கேட்க விரும்புகிறார். அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வானொலியை இயக்க முடியாது. அதனால் அவருக்கு நான் உதவவேண்டும்,” என்றார். காவலர் அவரை உள்ளே அனுமதித்தனர். “என்னுடைய மாமனார்தான் இவ்வாறு நடந்துகொள்ள அறிவுறுத்தினார்.” என்று குறிப்பிட்டார் நந்திதா.

காவலர்கள் அதிகம் இருந்ததால் இவர்களது திட்டத்திற்கு வீட்டிலுள்ள நம்பிக்கைக்குரிய சில உறவினர்களையும் இணைத்துக்கொண்டனர். உதாரணத்திற்கு சுபாஷ் மற்றும் சிசிர் இருக்கும் கார் அவர்களது பாரம்பரிய வீட்டு வளாகத்தை விட்டு வெளியேறியதற்கு அறிகுறியாக ஒருவர் இருமல் சத்தத்தை ஏற்படுத்துவார்.

பல நாட்கள் முகத்தில் சவரம் செய்யாமல் விருந்தாளிகளை சந்திக்காமல் இருந்தார் சுபாஷ். அடுத்தவர் அவரை சந்திக்க ஏற்பட்ட ஒவ்வொரு வாய்ப்பையும் தவிர்த்தார். யாரும் அவரை பார்த்ததாகத் தெரிவிக்கக்கூடாது என்பதற்காகவும் அவர் தப்பிக்க திட்டமிடுவதை யாரும் சந்தேகிக்கக்கூடாது என்பதற்காகவுமே இவ்வாறு தனிமையில் இருந்தார். அறையின் வாசல்வழியாக அவருக்கான உணவு அனுப்பப்பட்டது.

தனது சகோதரர் பாதுகாப்பாக தப்பித்து விடவேண்டும் என்று விரும்பினார் சரத். அவரது வீட்டின் மேற்கூரையில் நின்று கொண்டிருந்தார். கார் வெளியே சென்றபோது உள்ளே பயணித்தவர்கள் டார்ச் மூலம் வெளிச்சத்தைக் காட்டினர்.

பிளவுபடாத இந்தியாவை சரத் போஸ் விரும்பினார் என்று நினைவுகூர்ந்தார் நந்திதா.

ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இடைக்கால அரசில் வகித்த பதவியை ராஜினாமா செய்தார் சரத். சுபாஷ் அவர்களும் தேசப்பற்று காரணமாக தடங்கலற்ற, ஊழலற்ற, பிளவுபடாத தேசத்திற்காக இறுதிவரை போராடினார்.

தப்பித்தல்

டிசம்பர் 1943, போர்ட் ப்ளேர். நேதாஜி கொடி ஏற்றும் நிகழ்வு

டிசம்பர் 1943, போர்ட் ப்ளேர். நேதாஜி கொடி ஏற்றும் நிகழ்வு


கோமோ ரயில் நிலையம் செல்லும் வழியில் அவர்களது உறவினர்களான அசோக்நாத் போஸ் மற்றும் மிரா போஸ் ஆகியோர் இருந்த ரிஷ்ரா வீட்டில் கார் நிறுத்தப்பட்டது. மிராவின் பணியாளர் எதிர்பாராத விருந்தினர் இருவர் இரவு உணவிற்கு வந்துள்ளதாக தெரிவித்தார். சிசிர் ஒரு அழகான ‘முஸ்லிம்’ ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளாரே என்று மிரா ஆச்சரியப்பட்டார். மாறுவேஷத்தில் இருந்த சுபாஷ் டிராயிங் ரூமில் காத்துக்கொண்டிருந்தார். சிசிர் அசோக்கை நம்பினார். இரவு உணவின் போது அனைவரும் அமைதி காத்தனர். ‘முஸ்லிம் நபர் முட்டைகோஸ் ருசியாக இருந்ததாக பனியாளரிடம் தெரிவித்துள்ளார்’ என்று மிரா கூறியுள்ளார்.

”அவர் இருந்த சூழலுக்கிடையில் முட்டைகோஸ் குறித்து பேசியுள்ளார்!” என்று அவரது பேச்சை கூர்ந்து கவனிக்கும் பலரிடம் பகிர்ந்துகொண்ட இப்படிப்பட்ட நிகழ்வுகளை என்னிடமும் சிரித்தவாறே பகிர்ந்துகொண்டார் நந்திதா.

கோமோ ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் சிசிர் வண்டியை ஓட்டினார். முன் இருக்கையில் சுபாஷ் அமர்ந்திருந்தார். அசோக் மற்றும் மிரா பின்னால் அமர்ந்திருந்தனர். 18 வயதே நிரம்பிய புதுமணப்பெண்ணான மிராவிடம் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை தெரியப்படுத்தவேண்டும் என்று தீர்மானித்தார் சுபாஷ். நடந்ததை அறிந்த மிரா வாயடைத்துப்போனார் என்பதில் ஆச்சரியமேதும் இல்லை. ஆனால் சுபாஷ் அமைதியாக அவரைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே இது குறித்து யாரிடமும் ஒரு வார்த்தைகூட தெரியப்படுத்தக்கூடாது என்று நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார்.

ரயில் நிலையத்தில் உடன் வந்த உறவினர்கள் தலை மீது தனது தலையை பாசமாக வைத்து காரில் சென்று காத்திருக்குமாறு கூறினார். யாரும் அவருக்கு வழியனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். நடைமேடையில் மற்றொரு பயணி போலவே தானும் நடந்து வந்து தனது சித்தப்பா இரயில் பெட்டியில் ஏறுவதைப் பார்க்க வருவேன் என்று சிசிர் வற்புறுத்தினார். காவலர்கள் உள்ளங்கையில் புகையிலையை கசக்கியவாறே காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். வங்காலத்தில் காவலர்களால் தேடப்பட்டு வந்த புரட்சியாளர் அமைதியாக தப்பித்துச் சென்றார்.

எனது பாடப்புத்தகத்தில் வாழ்க்கை வரலாறு பகுதியில் சுபாஷ் தப்பித்துச் சென்றது குறித்து படித்தது நினைவிருக்கிறது. இரவின் இருட்டில் மறைந்த இரயிலின் வெளிச்சத்துடன் அவரை ஒப்பிட்டிருந்தனர். நந்திதா கதையை முடிக்கையில் எனக்கு அந்த வெளிச்சம்தான் நினைவிற்கு வந்தது.

Emile Schenkl உடன் நேதாஜி 

Emile Schenkl உடன் நேதாஜி 


1945-ம் ஆண்டு சுபாஷின் மனைவி Emile Schenkl உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். இந்தியாவைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சிக்கியதாக வானொலியில் அறிவிக்கப்பட்டது. அவரது வாழ்க்கை ஒரு திடீர் முடிவை எதிர்கொண்டது.

நாட்டின் நோக்கம் என்ன என்பது எனக்கு வெளிச்சமாகியுள்ளது. பிரிட்டிஷின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா ஒரு சுதந்திரக் குடியரசாக வேண்டும். சுதந்திர இந்தியா என்னுடைய வாழ்க்கையின் கனவாகவே இருந்து வருகிறது. இந்தக் கனவு நிறைவேறி இந்திய வரலாற்றில் இடம்பெறவேண்டும் – சுபாஷ் சந்திர போஸ், பெஹ்ராம்பூர் ஜெயில், டிசம்பர் 1924.

ஆங்கில கட்டுரையாளர் : ஷின்சினி சௌத்ரி

Add to
Shares
4
Comments
Share This
Add to
Shares
4
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக