பதிப்புகளில்

இயற்கை மருத்துவ முறையை வாழ்க்கை முறையாக மாற்ற விரும்பும் மருத்துவர்!

YS TEAM TAMIL
29th Aug 2018
Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share

வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படும் நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் நேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை, நோய் சிகிச்சைக்கான மாற்று மருத்துவமுறையாக மாறி வருகிறது. நோய்களுக்கான சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் என்பது மட்டுமின்றி மருந்துகளின்றி உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மசாஜ் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

பாபு நேச்சர் க்யூர் மருத்துவமனை மற்றும் யோகாசிரமம் (BNCHY) இயற்கை மருத்து முறையில் முன்னோடியாகும். இதன் நிறுவனரான டாக்டர் ருகமணி நாயர் முதல் தலைமுறை தொழில்முனைவோர். இவர் மூத்த அதிகாரிகள், கேபினட் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்துள்ளார். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 10,000 பேருக்கு இயற்கை மருத்துவ முறை உத்திகள் குறித்தும் வாழ்வாதாரம் பெற சிகிச்சையாளர்களாக மாறுவதற்கான பயிற்சியையும் வழங்கியுள்ளார். 

imageருகமணி இயற்கை மருத்துவமுறையில் எதேச்சையாகவே ஈடுபடத் துவங்கினார். மணிப்பூரின் கக்சிங் மாவட்டத்தில் பிறந்த இவர் குடும்பத்தின் ஏழு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாவார். இவரது குடும்பத்திற்கு விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தது.

இவர் இம்பாலில் பிஎஸ்சி படித்துவந்தபோது நோய்வாய்பட்டதால் மூன்று மாதங்கள் படுக்கையிலேயே இருக்க நேர்ந்தது.

“நான் எப்போதும் சிறந்த மாணவி என்பதால் என்னுடைய இக்கட்டான சூழல் என்னை பெரிதும் பாதித்தது. மன அழுத்தத்திற்கு ஆளானேன். என்னுடைய அருகாமையில் வசித்தவர் சிலர் தென்னிந்திய பயணம் சென்றனர். அவர்களது மகள் அங்கு இயற்கை மருத்துவம் படித்து வந்தார். என்னுடைய சகோதரர்களுக்கு அவர்கள் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் என்னையும் அவர்களுடன் அனுப்பி வைத்தார். நான் அவர்களுடன் சென்றேன். இயற்கை மருத்துவ அறிவியல் மீது இருந்த ஆர்வத்தை கண்டறிந்தேன்,” என்று நினைவுகூர்ந்தார்.
image


இயற்கை மருத்துவ முறையின் பலன்களை அவர் விவரிக்கையில், 

“இயற்கை மருத்துவ முறை நோயாளியின் உணர்வு ரீதியாகவும், மனதளவிலும் உடலளவிலும் குணப்படுத்தி நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையின் குணப்படுத்தும் சக்தியே இதன் அடிப்படையாகும். உடலுக்குத் தேவையானவற்றை வழங்கினால் அது தானாகவே குணமடைந்துவிடும். நமது உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனது. ஆரோக்கியமான உடலில் இந்த அம்சங்கள் சமச்சீராக இருக்கும். இதன் சீரற்ற தன்மையே நோய் ஏற்படுத்தும். இயற்கை மருத்துவ சிகிச்சைகள், உணவு கட்டுப்பாடு, யோகா ஆகியவை உடலின் நச்சுத்தன்மையை அகற்றி அனைத்து அம்சங்களையும் சமன்படுத்த உதவுகிறது. இதனால் உடல் தானாகவே சீர்செய்துகொண்டு நோய்தாக்கத்தில் இருந்து மீண்டுவிடும்.

ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்த பிறகு ருகமணி மணிப்பூருக்கு மாற்றலானார். அவரது வருங்கால கணவரான டாக்டர் நாயர் பணி நிமித்தமாக டெல்லி சென்றார்.

image


”தொழில் தொடங்கவேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் நாங்கள் இருவரும் சேர்ந்து இயற்கை மருத்துவத்தை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபடுவது குறித்தும் அதன் பலன்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பது குறித்தும் பேசினோம். இயற்கை மருத்துவ சிகிச்சைகளையும் ஆயுர்வேத சிகிச்சைகளையும் ஊக்குவிக்க ஒரு அறக்கட்டளையை உருவாக்க தீர்மானித்தோம். அந்த பணிகளுக்காக நான் டெல்லிக்கு மாற்றலானேன். 

“நாங்கள் துவங்கியபோது இந்தத் துறையில் குறிப்பாக இந்தப் பிரிவில் பெரியளவில் யாரும் செயல்படவில்லை. வட இந்தியாவில் இயற்கை மருத்துவமும் யோகாவும் வெவ்வேறாக கருதப்பட்டது. ஆனால் தென்னிந்தியாவில் யோகா இயற்கை மருத்துவத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதையும் உணர்ந்தோம். தனிநபர்கள் சிகிச்சையாளர்களாக மாறுவதற்குத் தேவையான வாழ்வாதார பயிற்சிகளை வழங்கத் துவங்கினோம். காலம் செல்லச்செல்ல ஒரு முழுநேர ஆரோக்கிய மையமாக மாற்றினோம். நாங்கள் அனைத்து விதமான ஆயுர்வேத சிகிச்சைகள், யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை வழங்குகிறோம். அத்துடன் 50 படுக்கை வசதியுடன் கூடிய மறுவாழ்வு மருத்துவமனையையும் நடத்தி வருகிறோம்,” என்றார் ருகமணி.

பாபு நேச்சர் க்யூர் மருத்துவமனை & யோகாசிரமம் CGHS மற்றும் DGHS உடன் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோர் இவர்களது க்ளையண்ட் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

”என்னைப் பொருத்தவரை அனைத்து க்ளையண்டுகளும் சமமானவர்களே. அவர்களது வலிகளைப் போக்க என்னால் உதவ முடிகிறது என்பதே அனைத்தையும் காட்டிலும் முக்கியமானதாகும். எங்களது கிளையண்ட்களில் நீண்ட காலமாக இணைந்திருப்பவர் இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் டாக்டர் புடா சிங்கின் மனைவி மஞ்சித் கவுர். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியே அவருக்கு எதிராக செயல்படும் ஆட்டோ இம்யூன் நோய் தாக்கம் இவருக்கு இருந்தது. இவருக்கு இயற்கை மருத்துவம் பெரிதும் உதவியது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மனைவி சுவ்ரா முகர்ஜிக்கும் சிகிச்சை அளித்துள்ளேன்,” என்றார்.

இயற்கை மருத்துவ முறை குறித்த மக்களின் கண்ணோட்டம் மாறி வருவது இவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது. “தற்போது மக்கள் இந்த மருத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இயற்கை மருத்துவ முறையின் நீண்ட கால பலன்கள் மட்டுமின்றி நவீன் மருத்துவத்தின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வுமே இவ்வாறு மக்கள் இயற்கை மருத்துவத்தை ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது. எண்ணற்ற இளைஞர்கள் அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்தைக் கையாள இயற்கை மருத்துவத்தை நாடுவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவம் மட்டுமே நீண்ட கால நிலையான தீர்வை வழங்கமுடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்,” என்றார்.

மனநலம், குறிப்பாக பெண்களின் மனநலத்தின் முக்கியத்துவத்தை அவர் வலுயுறுத்தினார். 

”பெண்கள் தங்களது வீடு, பணி, சமூகம், குடும்பம் அனைத்தையும் நிர்வகிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு பொறுப்புகளை சுமப்பது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதை சமாளிக்க மன வலிமையுடன் இருக்கவேண்டியது அவசியம். எனவே மனநலம் முக்கியமானதாகும்,” என்றார்.

ருகமணி ஐந்து பொன்னான விதிகளைப் பின்பற்றுமாறு அவரது நோயாளிகளை வலியுறுத்துகிறார். இது அனைவருக்கும் பலனளிக்கும். “நான் ஐந்து பொன்னான விதிகளைப் பின்பற்றுமாறு பரிந்துரைக்கிறேன். முதலில் தினமும் ஏழு மணி நேரம் உறங்கவேண்டும். இரண்டாவது தினமும் குறைந்தபட்சம் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். மூன்றாவது ஃப்ரெஷ் பழங்கள் அடங்கிய உணவை பிரத்யேகமாக வாரத்தில் ஒரு நாள் எடுத்துக்கொள்ளவேண்டும். நான்காவது வாரத்தில் ஒரு நாள் சமைக்கப்படாத பச்சை காய்கறிகளை உட்கொள்ளவேண்டும். ஐந்தாவது தினமும் ஒரு மணி நேரம் யோகாவிற்காக செலவிடவேண்டும்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
17
Comments
Share This
Add to
Shares
17
Comments
Share
Report an issue
Authors

Related Tags