பதிப்புகளில்

பிரியமானவர்களுக்கு வேடிக்கையான பரிசுப் பொருட்களை கொடுக்க உதவும் PropShop24

மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் பல்வேறு பிரிவுகளின்கீழ் 5,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது...

YS TEAM TAMIL
18th Sep 2017
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

பிறந்தநாள் விழாக்களும் திருமணநாள் விழாக்களும் க்ரீட்டிங் கார்டுடனும் வெறும் டெட்டிபேர் பொம்மையுடனும் மட்டுமே கொண்டாடப்பட்ட நாட்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சியால் அப்படிப்பட்ட பாரம்பரிய பரிசுப்பொருட்களை தவிர்த்து நாம் விரும்பும் நபருக்கு பொருத்தமான சுவாரஸ்யமான பொருட்களை வழங்கலாம். ப்ராப்ஷாப்24 (PropShop24) இரண்டு தொழில்முனைவோரின் ஒரு தற்கால கண்டுபிடிப்பாகும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பரிசுப்பொருட்களை வசதியாக கையில் கொண்டு சேர்க்கிறது.

வெவ்வேறு ப்ராண்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 90 வேடிக்கையான பொருட்களுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இந்த ப்ராண்ட் துவங்கப்பட்டது. இன்று 15 உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளனர். வீட்டு உபயோகம், ஸ்டேஷனரி, ஃபேஷன், கேஜெட்ஸ்கள், அழகுப்பொருட்கள் மற்றும் உணவு என பல்வேறு பிரிவுகளின் கீழ் 5,000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இதில் உள்ளன. எனினும் இந்த ப்ராண்டின் வேடிக்கையான வீட்டுப் பயன்பாட்டுப்பொருட்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

ஆரம்பகால முதலீடாக 12 லட்ச ரூபாயுடன் இந்த ப்ராண்ட் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்தோஷ் சிங் மற்றும் உத்சவ் வோஹ்ரா இருவரால் நிறுவப்பட்டது. அம்தோஷ் IMG ரிலையன்ஸ் மார்கெட்டிங், நிகழ்வுகள் மற்றும் டிஜிட்டல் வெர்டிகல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். உத்சவ் நியூயார்க் RIT-ல் நிதி மற்றும் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றவர். ப்ராப்ஷாப்24-ல் இணைவதற்கு முன்பு இவரது குடும்பத் தொழிலான கார்ப்பரேட் கிஃப்ட்ஸில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் ஃபேஷன் ப்ராண்டுகளுக்கான ப்ராண்டிங் மெட்டீரியஸ் மற்றும் ப்ரிண்ட் பேகேஜிங்கில் ஈடுபட்ட ’மிண்ட் க்ராஃபிக்ஸ்’ என்கிற உற்பத்தி யூனிட்டையும் நிறுவினார்.

அம்தோஷ், உத்சவ் இருவரும் கல்லூரி நண்பர்கள். இருவருக்குமே டிசைன் மற்றும் டிஜிட்டல் பகுதியில் ஆர்வம் இருந்தது.

image


பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நல்ல வடிவமைப்பிலான பொருட்கள் ஒரே கூரையின் கீழ் கிடைப்பதில்லை. அதிலும் பல்வேறு பிரிவுகளில் பலவிதமான சுவாரஸ்யமான பரிசுப்பொருட்கள் கிடைப்பதில்லை. இந்தப் பகுதியில் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்த விரும்பியதன் காரணமாக உருவானதுதான் ப்ராப்ஷாப்24.

”குறைவான விலையில் உங்களது ப்ராண்டை புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதே வளர்ச்சிப் பாதையின் கடினமான பகுதியாகும். எங்களைப் பொருத்தவரை அதிர்ஷ்டவசமாக எங்களது வாடிக்கையாளர்களே எங்களுக்கு ஆதரவளித்தனர். அவர்கள் அடுத்தவர்களுக்கு பரிந்துரைத்தது நாங்கள் முதல் இரண்டாண்டு வளர்வதற்கு உதவியது,” என்றார்.

ப்ராப்ஷாப்24 பல விஷயங்களை முதல் முறையாக செயல்படுத்தியது

ப்ராப்ஷாப்24 கிக்கர்லேண்ட், DCI, மங்கி பிசினஸ் போன்ற 30 சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து அமெரிக்கா, ஹாங்காங், ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற பகுதிகளில் செயல்படும் இந்தியாவின் முதல் மாறுபட்ட ஆன்லைன் ப்ராண்டாகும். இதுவரை ப்ராப்ஷாப்24 500-க்கும் அதிகமான ப்ராண்டுகளுடன் பணிபுரிந்துள்ளது.

உலகளவிலான ப்ராண்டுகளிடமிருந்து வாங்குவதுடன் இந்தத் தளத்தில் இரண்டு வடிவமைப்பாளர்கள் பணியாற்றுகின்றனர். அது தவிர வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கையான பரிசுப்பொருட்களை வழங்குவதற்கு மற்ற வடிவமைப்பாளர்களுடனும் இணைந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கையில் சில பொருட்களை வாங்குவார்கள். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களுக்காக சமீபத்திய தயாரிப்புகளை வழங்குவதில் இந்த ப்ராண்ட் கவனம் செலுத்துகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ப்ராப்ஷாப்24-ன் கலைஞர்களின் டிசைன் தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்படுகிறது அல்லது மும்பையிலுள்ள அவர்களது நிறுவனத்தினுள் தயாரிக்கப்படுகிறது. எனினும் டயரி, நோட்பேட்கள் போன்ற பேப்பர் தயாரிப்புகள் நிறுவனத்தினுள் தயாரிக்கப்படுகிறது.

image


இந்த ப்ராண்டில் தொடர்ந்து புதுமைகளை புகுத்துவதை நோக்கமாகக் கொண்டு ப்ராப்ஷாப்24 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், டிசைன்களை ஒன்றிணைத்தல் மற்றும் தனித்துவமான ப்ராண்டுகள் போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. 2016-ம் ஆண்டு இந்த ப்ராண்டு இந்தியாவின் முதல் டிஜிட்டல் பாப்ஸை அறிமுகப்படுத்தியது. இந்த மாதிரியானது தொகுப்பைச் சார்ந்தது. ஃப்ளாஷ் விற்பனையைச் சார்ந்ததல்ல. 

இந்த தளம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒவ்வொரு வாரமும் 20 புதிய ப்ராண்ட்களை அறிமுகப்படுத்துகிறது. 2017-ம் ஆண்டு ஃபிப்ரவரியில் Social-உடன் இணைந்து ‘ஆண்டி பாப் அப்’ முயற்சியை மேற்கொண்டு ஆஃப்லைனில் இந்தியா முழுவதும் செயல்பட்டது. ஒவ்வொரு காலாண்டிலும் முன்னணி 30 ப்ராண்டுகளை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது வரை 3,000 பேர் பங்கேற்ற இரண்டு நிகழ்வுகளை முடித்துள்ளது.

போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுதல்

பரிசுப்பொருட்கள் சந்தையின் மதிப்பு 12,000 கோடி ரூபாய் என்றும் எதிர்காலத்தில் இரு பன்மடங்கு பெருகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இத்துறையின் மதிப்பீடு தெரிவிக்கிறது. வளர்ச்சிக்கான இந்த சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதியில் ஷாப்டுசர்ப்ரைஸ், தி விஷ்ஷிங் சேர் போன்ற பல்வேறு ஸ்டார்ட் அப்கள் பரிசுப் பொருட்களை வழங்குகிறது. எனினும் ப்ராப்ஷாப்பின் அளவு மற்றும் ஆன்லைன் செயல்பாடு ஆகியவற்றைப் பார்க்கும்போது வித்தியாசமான பொருட்களை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் சம்பக் மற்றும் ஹேப்பிலி அன்மேரிட் போன்ற ப்ராண்டுகளிடமிருந்து போட்டியை எழுகிறது.

சர்வதேச வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகிறது. மேலும் தொகுப்புகளில் உலகெங்கிலுமிருந்து பெறப்படும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இவையே மற்ற தளங்களிலிருந்து ப்ராப்ஷாப்24 ப்ராண்டை வேறுபடுத்திக் காட்டுகிறது.

”எங்களது தொகுப்புதான் எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது. நாங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் 200 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறோம். தொடர்ந்து சுவாரஸ்யமான பல பிரிவுகளையும் கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம்,” என்றார் அம்தோஷ்.

எதிர்கால திட்டம்

துவங்கப்பட்ட நாள் முதல் இந்த ப்ராண்ட் சுய நிதியில் இயங்கி வருகிறது. ஆரம்பகட்ட முதலீட்டிற்குப் பிறகு 300,000 ரூபாயை மட்டுமே முதலீடு செய்தது.

”ROI சார்ந்த மார்கெட்டிங் மற்றும் விரைவாக விற்பனையாகும் தயாரிப்புகள் ஆகியவற்றில் முதலீடு செய்து தொடர்ந்து சுயநிதியில் இயங்கி வருகிறோம். எங்களது ஆரம்ப கட்டத்தில் பரிந்துரைகளுக்காக நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூக ஊடகங்களையே நம்பியிருந்தோம்,” என்று நினைவுகூர்ந்தார் அம்தோஷ்.

கடந்த மூன்றாண்டுகளில் இந்த ப்ராண்ட் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 150 சதவீத வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த வருடம் 1.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்ட திட்டமிட்டு வருகிறது. ப்ராப்ஷாப்24 சமீபத்தில் ஆண்கள், அழகு மற்றும் உணவு போன்ற பிரிவுகளை புதிய வலைதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கண்களுக்காக பயன்படுத்தப்படும் பொருட்கள், பயணத்தின்போது தேவையான பொருட்கள், ஸ்டேஷனரி போன்றவற்றிற்கான ப்ரைவேட் லேபிள் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் ப்ராப்ஷாப்24 இரண்டு மிகப்பெரிய ப்ராண்டுகளுடன் இணைய திட்டமிட்டுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : லிப்சா மன்னன்

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக