பதிப்புகளில்

ஸ்டார்ட் அப்பில் ஈடுபடும் ஒவ்வொரு தொழில்முனைவோரும் செய்யும் முக்கியத் தவறுகள்!

21st Oct 2017
Add to
Shares
260
Comments
Share This
Add to
Shares
260
Comments
Share

தொழில்முனைவு அபார வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் ஆதரவான இகோசிஸ்டம் இல்லாமல் தொழில்முனைவோரால் நிலைத்திருக்கமுடியாது. ஒரு தொழில்முனைவோரின் துறை அதன் வாழ்க்கை சுழற்சியில் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து புரிதல் இல்லாததுதான் இந்தியாவின் தொழில்முனைவு சுற்றுச்சூழலின் மிகப்பெரிய பிரச்சனையாகும் என்கிறார் வழிகாட்டி, ஏஞ்சல் முதலீட்டாளர் மற்றும் முன்னாள் SINE சிஇஓ அஜீத் குரானா.

சிலிக்கான் வேலிக்குப் பிறகு உலகிலேயே இரண்டாவது பெரிய இகோசிஸ்டம் இந்திய ஸ்டார்ட் அப் இகோசிஸ்டம். ஆனால் பங்குதாரர்கள் பரப்பும் மூடநம்பிக்கைகளே முதலிடத்தை அடையத் தடையாக உள்ளது என்று மும்பையில் TIDE டிஜிட்டல் ஓஷனின் தொழில்நுட்பக் கருத்தரங்கத்தில் பகிர்ந்துகொண்டார் அஜீத்.

image


இகோசிஸ்டம் முதிர்ச்சியடையலாம். ஆரம்பக்கட்ட தடங்கல்கள் குறையலாம். ஆனால் ஒருவர் எவ்வாறு ஸ்டார்ட் அப் துவங்கி அதில் நீடித்து நிலைப்பது? அவ்வாறு நிலைத்திருக்க தொழில்முனைவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அஜீத்.

1. வாழ்க்கை சுழற்சி குறித்த புரிதல்

சரியான நேரத்தில் சரியான பகுதியில் செயல்படுவது குறித்து பேசுகையில் அஜீத் ’நேரம்’ என்பது மிக முக்கியமானது என்றும் ஆனால் இந்திய தொழில்முனைவோர் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிடுகிறார். 

“பல தொழில்முனைவோர் தகுந்த நேரத்திற்கு முன்பே செயல்பட்டதால்தான் தாங்கள் வெற்றியடைய முடியவில்லை என்கின்றனர். இதை ஒரு நேர்மறை கருத்தாகவே வெளிப்படுத்துகின்றனர். ஆனால் அவர்களது கணிப்பு துல்லியமாக இல்லை என்பதையே இது உணர்த்துகிறது. மேலும் அந்த நேரத்தில் ஸ்டார்ட் அப்பைத் துவங்கியது தவறான முடிவு. காலம் கடந்து துவங்குவதைப் போலவே முன்னரே செயல்படுவதும் தவறான முடிவாகும்,” என்று விவரித்தார்.

புக்மைஷோ துவங்கிய சமயம் அந்தத் துறையில் போதுமான முதிர்ச்சி இல்லை. அப்போது பெரும்பாலான சினிமா ஹால்கள் டிக்கெட்டிங் நடவடிக்கைகளுக்கு கம்ப்யூட்டரைக் கூட பயன்படுத்தவில்லை. டிக்கெட்டிங் செயல்முறையை முழுமையாக டிஜிட்டலாக்குவதே புக்மைஷோவின் நோக்கமாக இருந்தது. இதனால் டிக்கெட்டை டெலிவர் செய்வது, பணம் சேகரிப்பது என மாறுபட்ட விதங்களில் தங்களது செயல்பாடுகளைத் துவங்கினர். மெல்ல வளர்ச்சியடைந்து டிஜிட்டல் டிக்கெட்டிங் மற்றும் கட்டணங்களுக்கு மாறினர். பார்வையாளர்கள் மாறும்வரை காத்திருந்தனர். அத்துடன் அவர்கள் மாறவும் உதவினர்.

ஒரு தொழில்முனைவோர் தங்களது தயாரிப்பை விரைவாக அறிமுகப்படுத்தியதாக நினைத்தால் மொத்தமாக ஸ்டார்ட் அப்பில் ஈடுபடுவதிலிருந்தே விலகிவிடக்கூடாது என்று அறிவுரை வழங்கினார் அஜீத். மாறாக, 

“வாழ்க்கைச்சுழற்சியில் தங்களது நிலை குறித்து புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்படவேண்டும்.”

உங்களது தொழில்நுட்பம், தயாரிப்பு, துறை, பிரிவு ஆகியவை அதன் வாழ்க்கை சுழற்சியில் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். உங்களது முறை வரும்வரை காத்திருக்கத் தேவையான நிதி பலம் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். அதாவது கிட்டத்தட்ட 20-36 மாதங்கள் வரையாகலாம். இதுதான் வெற்றியின் ரகசியம். நீங்கள் வெற்றி பெறவில்லையெனில் உங்களது வாடிக்கையாளர்களின் புரிதலில் பழி போடாதீர்கள். நீங்கள் மதிப்பிடுவதில் தோல்வியடைந்துவிட்டீர்கள் என்றும் மாற்றத்திற்கு உதவத் தவறிவிட்டீர்கள் என்றுமே அர்த்தம்.”

2. அதிகார அமைப்பில் மாற்றம்

ஸ்டார்ட் அப் இகோசிஸ்டமானது பங்கீ ஜம்பிங் விளையாட்டில் வரும் கயிற்றைப் போன்றது என்று குறிப்பிடுகிறார். அதாவது இந்த விளையாட்டில் கயிறு தவிர்க்கமுடியாத அங்கமாகும். மேலும் நம்பகத்தன்மை உடையதாக இருக்கவேண்டும். ஆனால் கயிறுதான் அனைத்தையும் செய்கிறது என்றும் அதுதான் அனைத்துமே என்றும் ஒருவர் நம்பக்கூடாது என்கிறார்.

”தொழில்முனைவோர்தான் முக்கிய பங்கு வகிக்கவேண்டும். வழிகாட்டிகள், VC-க்கள், அரசாங்கம் போன்றவையே கதாநாயகனாக உள்ளது. தொழில்முனைவோர் இவர்களையே சார்ந்துள்ளதாக நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட முதிர்ச்சியற்ற நிலையில் நாம் உள்ளோம். இந்த அதிகார அமைப்பு மாறவேண்டும்,” என்றார்.

3. VC-க்கள் பரப்பும் கட்டுக்கதைகளும் மூடநம்பிக்கைகளும்

VC-க்கள் அப்பாவிகளான தொழில்முனைவோர்களிடம் பரப்பிவிடும் கட்டுக்கதைகளும் அப்பட்டமான பொய்களும் திகைக்கவைக்கிறது. அஜீத் கூறுகையில், 

”அடுத்தவர்கள் செய்வதை அப்படியே திரும்பச்செய்யாமல் இந்தியாவின் தனித்துவமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணுங்கள் என்று பெரும்பாலான நிகழ்வுகளில் சொல்லக் கேட்டிருப்போம். இங்குள்ள முதல் 10 ஸ்டார்ட் அப்களைப் பாருங்கள். சர்வதேச ப்ராண்டின் தெளிவான பிரதிபலிப்பாக இல்லாமல் ஏதாவது ஒரு ஸ்டார்ட் அப் உள்ளதா? அதே VC-க்கள் உலகளாவிய மாடலுக்கு அளவுகோலாக விளங்கும் மாடல்களுக்கு மட்டுமே நிதியளிப்பார்கள். அதாவது நீங்கள் அடுத்தவர்களைப் போல் செய்யக்கூடாது ஆனால் நான் மட்டும் செய்வேன் என்பதே பொருள்,” என்றார் அஜீத்.

4. ஒரு நிலையை அடைய உதவியது அடுத்தடுத்த நிலைக்கும் இட்டுச்செல்லாது

ஒரு தலைவர் தனது ஸ்டார்ட் அப் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையச் செய்ய வழக்கமாக நான்கு அல்லது ஐந்து திறன்கள் அவரிடம் இருக்கவேண்டும். அதாவது ப்ராடக்ட், தொழில்நுட்பம், மேலாண்மை, இணக்கம் போன்றவை. நிறுவனர்களிடம் இதில் ஒன்று அல்லது இரண்டு பலங்கள் இருக்கலாம். இது ஸ்டார்ட் அப்பை அறிமுகப்படுத்தி விரைவான வரவேற்பைப் பெற போதுமானதாக இருக்கலாம். ஆனால் அவை தவறாக மதிப்பிடுவதற்கு வழிவகுக்கும். உதாரணத்திற்கு 5,000 ரூபாய் செலவிடும்போது 200 வாடிக்கையாளர்களைப் பெற முடிந்தால் 5 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 20,000 ரூபாய் அதிகமாக லாபமடைய முடியும் என்று கணக்கிடுவார்கள். 

”இந்த நிலையை அடைய எது உதவியதோ வேறு ஒரு நிலையை அடைய அது உதவவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஏனெனில் நீங்கள் உங்களது ஸ்டார்ட் அப்பின் வாழ்க்கை சுழற்சியில் தற்போது வேறு ஒரு நிலையில் இருக்கிறீர்கள். ஆரம்பத்தில் உங்களுக்கு கிடைத்த வாடிக்கையாளர்கள் உங்களுக்கு நெருங்கிய வட்டத்திலிருப்பவர்களாக இருக்கலாம். இந்தியாவில் ஸ்டார்ட் அப்பைத் துவங்குவது எளிது நிலைத்திருப்பதுதான் கடினமான விஷயம்,” என்று கூறி விடைபெற்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா

Add to
Shares
260
Comments
Share This
Add to
Shares
260
Comments
Share
Report an issue
Authors

Related Tags