பதிப்புகளில்

மும்பை சர்வதேச ஆவணப்பட விழாவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

17th Oct 2017
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

ஆவணப்படம், குறும்படம், அனிமேஷன் திரைப்படம் ஆகியவற்றிற்கான மும்பை சர்வதேச திரைப்பட விழா 2018–க்கு நுழைவு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள 2 ஆண்டுக்கு ஒரு முறையான இந்த திரைப்பட விழா மும்பையில் வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 3 –ம் தேதி வரை நடைபெறும்.

இந்த விழாவில் சர்வதேச மற்றும் தேசிய போட்டி பிரிவுகளில் இடம் பெற 2015 செப்டம்பர் முதல் தேதி முதல் 2017 ஆகஸ்ட் 31 வரை தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள், 45 நிமிடங்கள் வரையிலான குறும்படங்கள், ஓடும் நேரம் வரம்பு இன்றி அனிமேஷன் படங்கள் தகுதிப் பெற்றவை.

image


சர்வதேசப் போட்டிப் பிரிவுக்கு வெளிநாட்டவர்கள் நுழைவுக் கட்டணமாக 50 டாலரும் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் ரூ.1500 –ம் செலுத்த வேண்டும். சார்க் நாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் படம் ஒன்றுக்குச் சலுகைக் கட்டணமாக 30 டாலர் செலுத்தினால் போதுமானது. தேசியப் போட்டிப் பிரிவுகளுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.1000.

விழாவில் இடம் பெறுவதற்கான திரைப்படங்களுக்கு விண்ணப்பிக்க 2017 நவம்பர் 15 கடைசி நாளாகும். இது குறித்த முழு விவரங்களையும் www.miff.in என்ற வலைதள முகவரியில் காணலாம்.

விருதுகள்:

15 -வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் மிக உயரிய விருதின் மதிப்பு ரூ 5 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று திரைப்பட பிரிவின் தலைமை இயக்குநர் திரு. மனிஷ் தேசாய் தெரிவித்தார். 2018–ம் ஆண்டு மும்பை சர்வதேர திரைப்பட விழாவில் செய்யப்பட்டுள்ள இதர மாற்றங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், 

”சர்வதேசப் போட்டிப் பிரிவில், சிறந்த ஆவணப்படமாக தெரிவு செய்யப்பட்ட படத்துக்கு இந்த ரொக்க பரிசுடன் பெருமை மிகு தங்கச் சங்கு விருதும் வழங்கப்படும்,” என்றார்.

சர்வதேசப் போட்டிப் பிரிவில் சிறந்த குறும்படத்திற்கும் (45 நமிடங்கள் வரையிலான) சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கும் வெள்ளி சங்கு விருதும் ரூ 5 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

தேசியப் போட்டிப் பிரிவில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் ஆவணப்படங்களை 60 நிமிடங்களுக்கு மேற்பட்டவை மற்றும் 60 நிமிடங்களுக்கு உட்பட்டவை என்ற 2 பிரிவுகளில் அனுப்பிப் பங்கேற்கலாம். இந்த 2 பிரிவுகளிலும் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்படும் படம் ஒவ்வொன்றிற்கும் வெள்ளி சங்கு விருதும் ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். சிறந்த குறும்படங்கள், சிறந்த அனிமேஷன் படங்கள் ஒவ்வொன்றிற்கும் வெள்ளி சங்கு விருதும் ரூ 3 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

சர்வதேசப் போட்டிப் பிரிவில், பிரமோத் பட்டி சிறப்பு நடுவர் விருது வழங்கப்படும். மகராஷ்டிரா மாநில அரசு நிறுவியுள்ள தாதாசாகேப் பல்கி சித்ரநாகரி விருது இயக்குநரின் மிகச்சிறந்த முதலாவது திரைப்படத்திற்கு வழங்கப்படும். ரொக்கப் பரிசுடன் கூடிய, இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் சங்க விருது, மாணவர் தயாரித்த சிறந்த படத்துக்கு வழங்கப்படும். படப்பதிவு, எடிட்டிங், ஒலிவடிவமைப்பு ஆகிய துறைகளில் தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்படும்.

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags