பதிப்புகளில்

ஆப் உருவாக்க பயிற்சி: மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பை எளிதாகிய “ஹசுரா”

இந்தியாவின் மிக பெரிய ஆன்லைன் இலவச பயிற்சி !

Mahmoodha Nowshin
26th Jul 2017
Add to
Shares
77
Comments
Share This
Add to
Shares
77
Comments
Share

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறி வருகின்றனர். ஆனால் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கிறதா என்று கேட்டால் இல்லை என்பதே நாம் அதிகமாக கேட்கக் கூடிய பதிலாய் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் தற்போதைய மார்கெட் தேவைக்கும், மாணவர்கள் படித்ததற்கும் உள்ள இடைவெளியே ஆகும்.

ஹசுரா குழுவினர்

ஹசுரா குழுவினர்


இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய தோன்றியதே imad.tech. இந்த வலைத்தளம் ’ஹசுரா’ என்னும் app building நிறுவனத்தின் ஒரு தொடக்கம் ஆகும். இந்த தளம், ஐஐடி மெட்ராசுடன் இணைந்து ஆப்ஸ் உருவாகுதளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சியை அளித்து வருகிறது.

“இந்த பயிற்சியை தோற்றிவித்ததர்க்கான முக்கியக் காரணம், படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள், பயிற்சி இல்லாமல் பணியில் சேரும் அளவிற்கு இதில் தேர்ச்சி உள்ளவர்களாய் இல்லை என்பதே,”

என்கிறார் நிறுவனத்தின் இணை நிறுவனர், ரஜோஷி. இந்த இலவச ஆண்லைன் பயிற்சி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே ஹசுராவின் imad-க்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள் என பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஸ்மார்ட்போனை போல் தங்கள் திறனையும் அப்டேட் செய்துக்கொள்ள விரும்புகின்றனர். 

image


“சில பெரிய நிறுவனங்கள், மாணவர்களை பணிக்கு அமர்த்தும் முன் 6 மாதம் பயிற்சி அளிப்பார்கள், ஆனால் ஸ்டார்ட் –அப் நிறுவனத்திற்கு பயிற்சி அளிப்பதற்கான நேரமும், வசதியும் இருக்காது, அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களையே சேர்க்க விரும்புவர். imad அதற்கு தேவையான பயிற்சி அளிக்கும், மாணவர்களுக்கு இதனால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்” என்கிறார். 

இந்த சூழலில் எல்லா நிறுவனங்களுக்கும் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளம், மொபைல் ஆப் போன்ற தொழில்நுட்பங்கள் தற்பொழுது மிக அத்தியாவசியமாக உள்ளது. ஹசுரா, ஸ்டார்ட்-அப் நிறுவனம் தங்களுக்கான வேலை ஆட்களை தேர்வு செய்யும்பொழுது தொழில்நுட்பத்தில் மேம்பட்ட பயிற்சி மாணவர்களுக்கு இல்லை என்பதை உணர்ந்தனர். அதன் பின்னரே ஹசுரா கல்வியின் கீழ் imad தொடங்கப்பட்டது. 

தொடங்கி ஒரு வருடம் கூட பூர்த்தி அடையாத நிலையில் இந்த ஆன்லைன் பயிற்சியில் லட்சத்திற்கு மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இது 8 வார பயிற்சியாகும். பயிற்சிக்கு பிறகு ஹசுரா ஆன்லைன் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குகின்றது. ஐஐடி சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், பயிற்சிக்கு பின் ஐஐடி தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்கலாம்.

“imad-ல் பயிற்சி பெறுபவர்கள் ஆப் உருவாக்குதலை அடிப்படையில் இருந்து கற்றுக்கொள்ளலாம். இதனாலேயே ஆன்லைன் பயிற்சியில் imad தனித்துவமானது” என்றார் ரஜோஷி.

இந்த பயிற்சியின் மூன்றாம் பதிப்பு இம்மாதம் தொடங்கப்பட்டது. ஏறக்குறைய imad-ல் இரண்டு லட்ச மாணவர்கள் இணைந்துள்ளனர். ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் டாக்டர்.கௌரவ் ரைனா இதில் பயிற்சி அளிக்கிறார். ஹசுராவின் மற்றொரு துணை நிறுவனர் தன்மை கோபாலும் இதில் பயிற்சி அளிக்கிறார்

ஹசுராவில் பயிற்சிபெற்றவரின் ஆப் வடிவம்<br>

ஹசுராவில் பயிற்சிபெற்றவரின் ஆப் வடிவம்


அது மட்டுமின்றி ஹசுரா, மாணவர்களுக்கு இடையே கலந்துரையாடலுக்கும், விவாதத்திற்கும் தளம் அமைத்துத் தருகின்றனர். இது மாணவர்கள் இணைந்து படிக்க ஊக்கவித்து வருகிறது, உலகளாவிய பலரையும் இணைக்கிறது.

பயிற்சி முடிந்து முதலிடத்தில் தேர்ச்சி பெரும் மாணவர்களை, Product Development fellowship செய்ய ஹசுரா தன்னுடன் இணைத்துk கொள்கிறது. அதில் தொலைநிலை வழிகாட்டல் திட்டம் மூலம் பயிற்சியாளர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆப்பை உருவாக்கலாம். தற்பொழுது ஹசுராவில் 400 பயிற்சியாளர்கள் உள்ளனர்.

ஹசுரா, NPTEL மற்றும் யூ-டுபிலும் இப்பயிற்சியை வழங்குகிறது. NPTEL-ல் அதிகமான மாணவர்களை கொண்டுள்ள நிறுவனமாக ஹசுரா உள்ளது. அமேசான், ஃப்லிப்கார்ட், ஓலா, PayTm போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இந்த ஆன்லைன் பயிற்சியை ஏற்றுக் கொள்கின்றனர்.

Add to
Shares
77
Comments
Share This
Add to
Shares
77
Comments
Share
Report an issue
Authors

Related Tags