பதிப்புகளில்

இந்தியாவின் 101 வயது இதய மருத்துவர் எஸ்.ஐ.பத்மாவதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

YS TEAM TAMIL
20th Jun 2018
Add to
Shares
63
Comments
Share This
Add to
Shares
63
Comments
Share

டாக்டர் சிவராமகிருஷ்ணா ஐயர் பத்மாவதி இதய மருத்துவர். இவர் மியான்மரில் பிறந்தவர். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார். இந்த மாதம் அவருக்கு 101 வயதாகிறது. நாட்டின் முதல் இதய மருத்துவர்களில் இவரும் ஒருவராவார். இவர் இந்தியாவின் முதல் இதய மருத்துவமனையையும் வடிகுழாய் ஆய்வகத்தையும் (Catheter lab) டெல்லியின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியை அமைத்தார்.

இவர் ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு 1949-ம் ஆண்டு லண்டன் சென்றார். அங்குள்ள ராயல் மருத்துவக் கல்லூரியில் ஃபெலோஷிப் பெற்றார். அதன் பிறகு எடின்பர்க் ராயல் மருத்துவக் கல்லூரியில் ஃபெலோவாக இருந்தார். சிவராமகிருஷ்ணா ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியிலும் படித்துள்ளார்.

image


லண்டனில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பயிற்சி பெற்றபோது இதயவியல் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. 1954-ம் ஆண்டு இந்தியா திரும்பி இதயவியல் துறையில் பயிற்சியைத் துவங்கினார்.

நாட்டின் முதல் இதயவியல் கிளினிக்கை இந்தியாவில் அமைத்தது மட்டுமின்றி இந்திய மருத்துவக் கல்லூரியில் முதல் இதயவியல் துறையையும் அமைத்தார். அது மட்டுமல்லாது இதய நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதத்தில் இந்தியாவின் முதல் ஹார்ட் ஃபவுண்டேஷனையும் நிறுவினார்.

1992-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்ற சிவராமகிருஷ்ணா இன்றும் டெல்லியின் நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநராகவும் ஆல் இந்தியா ஹார்ட் ஃபவுண்டேஷனின் நிறுவனர் -தலைவராகவும் உள்ளார். மேலும் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இதயநோய் தடுப்பில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

இவர் சமீபத்தில் ’இண்டியன் சிஇஓ’ - இடம் தெரிவிக்கையில்,

நான் இப்போதும் சிறப்பான கேட்கும் திறனுடன் பார்வை திறனுடனும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறேன். ஆனால் எனக்குத் தொழில்நுட்பமும் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். என்னைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள குறைந்தபட்சம் ஆண்டிற்கு இரண்டு உலகளவிலான இதயவியல் மாநாடுகளில் பங்கேற்கிறேன். மருந்துகளை உங்களது அடிமையாகவே வைத்திருக்கவேண்டும். அவை உங்களது முதலாளியாக மாற அனுமதிக்காதீர்கள்.

1967-ம் ஆண்டு சிவராமகிருஷ்ணா மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் இயக்குனர்-தலைவரானார். அங்கும் இதயவியல் துறையை அமைத்தார். பலவற்றில் முன்னோடியாக செயல்பட்ட இவர் ஜிபி பந்த் மருத்துவமனையிலும் இதயவியல் துறையை அமைத்தார். இவர் டெல்லி ஆல் இந்தியா ஹார்ட் ஃபவுண்டேஷன் நிறுவன உறுப்பினராவார் என ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA

Add to
Shares
63
Comments
Share This
Add to
Shares
63
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக