பதிப்புகளில்

பழங்கால பாரம்பரியத்தை தங்கள் கைவினைப்பொருட்களில் உருவாக்குகின்றனர் ஐந்து பெண் தொழில்முனைவர்கள்

Gajalakshmi Mahalingam
27th Oct 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
"கைத்தறியை உயிரூட்டும் ஒரு தொழிலாக பார்ப்பதற்கு போதுமான நிலை இல்லை. அதை நம்முடைய முக்கிய தொழிலாக மாற்றுவதோடு, நம்முடைய கிராமத்து வீட்டை அமைக்கும் போது இதற்கென ஒரு முக்கியத்துவத்தை அளிக்க வேண்டியது அவசியம்” என்பது மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற பொன்மொழிகள்.

வீட்டுக்கு வெள்ளை அடிப்பது, கட்டுமானப்பணி, தச்சு வேலை, மரம் அல்லது செதுக்கும் வேலை எதுவாக இருந்தாலும் தங்கள் கைகளாலேயே செய்ய நேரம் ஒதுக்குபவர்களுக்கு அதன் நிறைவு கிடைக்கும். தினசரி அலுவல்களில் மட்டுமல்ல, கைவினை என்பது ஒரு பரந்த கலைநயத்தை உள்ளடக்கியது. உங்களுடைய வீட்டை நீங்களே சரி செய்வதற்கும் மற்றவர்கள் சீரமைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நீங்களே செய்யும் போது பணம் மிச்சமாவதோடு, உங்களுடைய இல்லத்தை புதுப்பிக்கும் அனுபவமும் உங்களுக்குக் கிடைக்கும். நாம் கீழே காணும் இந்த பெண் தொழில்முனைவர்கள் தங்களுக்கு விருப்பமான கைவினைக்கான இடத்தில் தங்களது ஆர்வத்தை நிலைநாட்டியுள்ளனர்.

image


அர்பன் கலா(கிராமியக் கலை) – சவிதா ஐயர்

சவிதா ஐயருக்கு கலை மீதும் கற்பனைத்திறன் மீதும் இருந்த ஆர்வம் அவரை 2012ல் அர்பன் கலா அறிமுகப்படுத்தத் தூண்டியது. பல விதமாக வர்ணம் பூசப்பட்ட சணல் பைகள், கேன்வாஸ் பைகள், ஆபரணங்கள், சாவிக்கொத்து மாடங்கள், ட்ரேகள் மற்றும் அலங்கார பொருட்கள் என பல்வகைப்பொருட்கள் அர்பன் கலாவில் கிடைக்கும். இவை அனைத்து வீணான மரம், தேங்காய் ஓடுகள் மற்றும் பழைய சணல் துண்டு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த பல்வேறு பொருட்களின் கலவை அவர்களுடைய கற்பனை வடிவங்களுக்கு உயர்ந்த இடத்தையும், நீடித்த வாழ்வையும் பெற்றுத் தருகின்றன.

எத்னிக் ஷேக் – ஸ்ரீஜதா பாட்நகர்

ஸ்ரீஜதா பாட்நகர், தனக்கு பிடித்த கைவினைப்பொருட்களுக்காக 2014ம் ஆண்டு எத்னிக் ஷேக்கை நிறுவினார். பாரம்பரியம் மற்றம் நவீன யுக்திகளின் கலவையைக் கொண்டு அவர் ஆடைகள் மற்றும் பயன்பாட்டு பொருட்கள், துப்பட்டாக்கள், ஸ்டோல்கள், சல்வார்கமீஜ் செட்கள், கைப்பைகள், சிலைகள், வீட்டு அலங்காரம் மற்றும் சுவர் அலங்காரங்கள், தலைவிரிப்புகள் என எத்னிக் ஷேக் மூலம் பலவற்றை வழங்குகிறார். கைத்தொழில் நிபுணர் மற்றும் கைவினைக்கலைஞர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களோடு சேர்ந்து பணிபுரிகிறார் ஸ்ரீஜதா. இதனால் கைத்தொழில் நிபுணர்கள் அவகாசம் எடுத்தாலும் பிரச்சனையின்றி லாபம் ஈட்டவும், வாடிக்கையாளர்களைப் பெருமைப்ட வைப்பதற்கும் இதுவே அடித்தளம்.

சாத்னா – லீலா விஜய்வெர்ஜியா

1988ம் ஆண்டு லீலா விஜய்வெர்ஜியா இதைத் தொடங்கினார். 15 பெண்களைக் கொண்டு தொடங்கப்பட்ட சாத்னா தற்போது 625 பெண் கலைஞர்களை வைத்து நடத்தும் அளவு வளர்ச்சி கண்டுள்ளது. பெண்கள் பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சாத்னா உதய்பூரில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் இந்த கலைஞர்களே, அதோடு உபரியாக ஈட்டப்படும் லாபம் அவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு இது ஒரு மாற்று வழியில் லாபத்தை ஈட்டித் தரும் முயற்சி. சாத்னாவில் பெண்களுக்கான குர்தாக்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், ஆபரணங்கள் மற்றும் ஆண்களுக்கான ஆடைகள் கிடைக்கும்.

சபாலா ஹேண்டிகிராஃப்ட்ஸ் – மல்லாமா யலாவர்

மல்லாமா யலாவர் தி சலாபா இயக்கத்தை 1986ல் தொடங்கினார். பிஜாபுரில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் பெண்களுக்கு ஆணிவேராக இருக்கிறது. சபாலா பெண்களுக்கு திறமைகளை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பையும், அவற்றை வருமானம் ஈட்டும் பொருட்களாக மாற்றும் திறனை வழங்கியுள்ளது. சபாலா பாரம்பரிய லம்பானி மற்றம் கசூதி கலையை பிரதிபலிக்கின்றன. இந்த பொருட்கள் அனைத்தும் உயர்ந்த தரத்தில், பாரம்பரிய முறையில் கைகளால் தயாரிக்கப்படுகின்றன

கிரியேட்டிவ் ஹேண்டிகிராஃப்ட்ஸ் – இசபெல் மார்டி

25 ஆண்டுகளுக்கு முன்னர் இசபெல் மார்டி என்ற ஒரு ஸ்பாணிஸ் இயக்குனர் அந்தேரியில் வாழ்ந்தார். அந்கு வசித்த குடிசைப்பகுதிப் பெண்கள் தாங்கள் பொருளாதார சுதந்திரம் அடைய உதவுமாறு அவரிடம் கேட்டனர். அவர் அங்குள்ள உள்ளூர் அமைப்புகளுடன இணைத்து பெண்களுக்கு ஒரு கிரெச்சை ஏற்படுத்தினார்.

இதில் இரண்டு பெண்கள் தையல் வகுப்புகள் மற்றும் மேன்மையான பொம்மைகள், ஆடைகள் மற்றம் இதரை பாரம்பரிய கைவினைப்பொருட்களை மற்ற பெண்களுக்கு கற்பிக்கத் தொடங்கினார்கள். இசபெல் அவர்களுடைய தயாரிப்புகளை உள்ளூரிலும், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனியிலும் விற்பனைக்கு வைத்தார். ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த முதல் தையல் வகுப்புப் பாடங்களும், கற்பனைத்திறன் மிக்க கைவினைக்கலையும் 300 பெண்களை முழு நேரப் பணியாளர்களாகவும், 400 பெண்களை பகுதிநேரப் பணியாளர்களாகவும் உருவாக்கியுள்ளது. அந்தப் பெண்கள் உருவாக்கும் பொருட்கள் மும்பையின் புறநகர் பகுதிகளான அந்தேரி, கண்டிவளி மற்றும் பாந்த்ராவின் மூன்று கடைகளில் விற்பனை செய்ய வைத்துள்ளது.

நவீன வாழ்வை விட ஒரு பொருள் ஏன் தயாரிக்கப்படுகிறது, அது எந்த வகையில் தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கைவினை என்பது பொருளின் தோற்றம் மற்றும் வடிவமைப்புக்கான மொழி. அது பொருட்களின் மதிப்பை பற்றி நமக்கு கற்றுத் தருகிறது. கைவினைப்பொருட்களின் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்பது உண்மைதான், ஆனால் அவற்றின் மதிப்பு ஆத்மார்த்த திருப்தியளிக்கும். அதில் இருக்கும் அரசியல் மற்றும் வரலாற்றை பார்த்தால் அவை ஏன் அவ்வாறு இருக்கின்றன என்பது புரியும். ஒரு கைவினைப்பொருள் விற்பனைக்கு வந்தால் அவற்றுக்கு நாம் அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது, ஏனெனில் வாடிக்கையாளர்களாக நாம் கைவினைக்கலைஞர்களின் திறமையை மதிக்கும் பொறுப்பு உள்ளவர்கள் ஆகின்றோம். உள்ளூர் பொருட்களாக இருந்தாலும், அல்லது வெறும் சாதாரண பழைய ஃபேஷனாக இருந்தாலும் சரி கைவினைப்பொருட்கள் பண்டைக்கால பொக்கிஷங்கள், விலைமதிப்பற்றவை.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக