பதிப்புகளில்

நீங்களும் தன்னிகரற்ற தலைவராவது சாத்தியமே!

YS TEAM TAMIL
28th Apr 2016
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

மாபெரும் தலைவராகத் தேவையான பண்புகளைக் குறித்து தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆச்சர்யத்துக்கு இடமின்றி முதலில் நான் தேடத்தொடங்கியது அவர்களின் உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றிதான். அதிலும், யூசி டேவிட்டின் 'எக்ஸிக்யூடிவ் லீடர்ஷிப் ப்ரோக்ராம்' வீடியோக்களின் உரை என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு வீடியோ பதிவில், பயிற்றுவிக்கும் மிட்சல் அட்லெர் Psy.D., CGP உணர்வுசார் நுண்ணறிவை தலைவர்கள் தமக்கு எப்படி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர் என விளக்கியுள்ளார். தனது ஆராய்ச்சியின் முடிவில் மாபெரும் தலைவராக நான்கு முக்கிய பண்புகளை மேம்படுத்துவதன் அவசியம் பற்றி அவர் இணை-ஆசிரியராக எழுதியுள்ள ‘ப்ரொமோட்டிங் எமோஷனல் இண்டலிஜன்ஸ் இன் ஆர்கனைசேஷன்ஸ்’ புத்தகத்தில் எடுத்துரைத்துள்ளார்.

image


உணர்வுகள் என்பன எவை?

உணர்வு என்பது சூழலைச் சார்ந்த மன நிலை மற்றும் உடலியல் சார்ந்த மாற்றங்களுடன் கூடிய தானாக எழும் ஒரு எதிர்வினையே 

என்கிறது ஆங்கில மொழிக்கான அமெரிக்கன் ஹெரிட்டேஜ் அகராதி.

நான்கு அடிப்படை உணர்வுகள்

உணர்வுகள் தாமாகவே இயற்கையாக ஏற்படும். அவை நமது சூழலைச் சார்ந்ததாக இருக்கும்.

அவற்றில் அடிப்படை நான்கு உணர்வுகள்: பித்து(Mad), சோகம்(Sad), மகிழ்ச்சி(Glad) மற்றும் பயம்(Scared). 

இவை நமது அனுபவம் சார்ந்து ஏற்படும் உணர்வுகள். நமது உணர்வுகளின் உலகத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு கீழ்வரும் சில கேள்விகள் உதவும்.

#நமக்குள் ஏற்படும் உணர்வுகள் எதனால் தோன்றுகின்றது? ஒரு தலைவராக உங்களைக் கோபப்படுத்தும் காரணிகள் எவை? எது அதனைத் தூண்டுகின்றது?

நமது உணர்வுகளைத் தூண்டும் காரணிகளை நாம் தெரிந்துகொண்டால்தான் அவற்றின் பிடியிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும். உதாரணமாக சிலருக்கு, காலதாமதமாக நடந்துகொள்பவர்கள், பொறுப்பில்லாதவர்கள் மற்றும் நேர்மையில்லாதவர்களைக் கண்டால் கோபம் வரும். இதுபோன்ற காலதாமதமாக நடந்துகொள்பவர்களைக் கண்டதும் கோபமாக நடக்காமல் அவர்களது தாமதத்துக்கு ஏதேனும் முக்கியக் காரணம் இருக்கலாம் எனப் புரிந்துகொண்டு செயல்படுவது மாபெரும் தலைவராக நீங்கள் வெற்றியடைய வழிவகுக்கும்.

#நம்மிலிருந்து அவை வெளிப்படுவது எப்படி? நமக்குள் அவை தோன்றுவது எப்படி?

நமது உணர்ச்சிகள் வெளிப்படும் விதத்தைத் தெரிந்துகொண்டால், அது எத்தகைய மன நிலையில் உருவாகின்றது எனப் புலப்படும். பல சமயங்களில் நாம் எப்படிப்பட்ட உணர்வுக்குள்ளாகின்றோம் என்பதை உணரும் முன் நமது நடத்தை மாறிவிடுகின்றது. சிலர் கவலைப்படும்போது மார்புப்பகுதி இறுக்கமடையலாம் அல்லது வயிற்றுப்பகுதி வழுவழுப்பாகத் தோன்றலாம். நமது உடல் மனதைக் காட்டிலும் வேகமாக உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுகின்றது.

#மன அழுத்தமான சூழலில் எவ்வாறு செயல்படுவது? அந்த நேரத்தில் உணர்ச்சிகளைக் கையாள்வது எப்படி?

மன அழுத்தத்துக்கான காரணிகளை கண்டறிய வேண்டும். கோபம் வரும் சூழலில் நீங்கள் பின்வாங்குகின்றீர்களா? அல்லது கோபத்தை வெளியில் பகிரங்கமாக காண்பிக்கின்றீர்களா? எப்படி அந்தச் சூழலைக் கையாளுகின்றீர்கள்? உங்களது உணர்ச்சிகரமான சூழலில் நீங்கள் செய்யும் பத்து செயல்களை பட்டியலிடுங்கள். அவற்றைக் கட்டுப்படுத்த என்ன செய்கின்றீர்கள்? இந்த நான்கு அடிப்படை உணர்வுகளைத் தெரிந்துகொண்டு அவற்றை சரியான விதத்தில் செயல்படுத்துவது நீங்கள் சிறந்த தலைவராக உதவும்.

சுய-விழிப்புணர்வு: உங்களது நான்கு அடிப்படை உணர்வுகளைப் பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவைப் பற்றியும் தெரிந்துகொண்டு, உங்களது பலம் மற்றும் பலவீனத்தை தரம் பிரித்துக்கொள்ளவேண்டும். அதன் மூலமாக உங்களின் சுயமதிப்பையும், திறன்களையும் அறிந்துகொள்ளலாம். 

உங்களது உணர்வுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும் - உணர்ச்சிகள் ஏற்கப்படலாம், ஆனால், உணர்ச்சிகரமான நேரத்தில் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மற்றவர்களும் நமது கண்ணாடியே என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் - உங்களது பாத்திரம் இதில் என்ன? என்பதை சிந்தியுங்கள்.

நரம்புஉயிரியலின் நம்பகத்தன்மை - உளப்பகுப்பான்மை சார்ந்த நரம்புஉயிரியல் ஆராய்ச்சி. யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தின் கீழ் டேனி செய்கல் நடத்திய ஆராய்ச்சியில் மற்றவர்களது உணர்ச்சிக்கு செவிசாய்க்கும்போதே அவர்களின் மீதான நம்பகத்தன்மையை நாம் உணரமுடியும் என்பதை நிரூபனமாக்கியுள்ளது. பேச்சு மட்டுமின்றி அவர்களது உடலசைவையும் கவனிக்கும் நம் உள்ளுணர்வு பொய்மைத் தன்மையை சட்டென தெரிந்துகொண்டுவிடும். ஆகவே, அவற்றை கவனிக்க வேண்டியது அவசியம். ஒரு தலைவராக முன்னேற இதுபோன்ற உள்ளுணர்வர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

உங்களுக்கான பிரத்யேகமான குறிக்கோளை மேம்படுத்துங்கள்: இவை நீங்கள் ஏன், எவ்வாறு நடந்துகொள்கின்றீர்கள் என்பதற்கான கொள்கைகளாக இருக்க வேண்டும். நீங்கள் தலைவராக இருப்பதற்கான காரணமாக அமைவது எது? நீங்கள் எவ்விதமான மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டவராக எந்தப் பாதையை நோக்கி பயணிக்கின்றீர், அப்படி நடந்துகொள்வதன் காரணம் என்ன? நாம் தலைவராக இருக்கும்போது மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்னோடியாகவும் திகழ வேண்டும். உங்களது தீர்மானம் தீர்க்கமானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும். நமது மதிப்புகளும், நம்பிக்கைகளும் உண்மையானதாக இருக்கவேண்டும்.

சுய மேம்பாடு: நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். உணர்ச்சிக் கட்டுப்பாடு, சூழலுக்கு ஏற்ப நடப்பது, வளைந்துகொடுப்பது, பொறுப்புணர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியம்.

சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல்: மற்றவர்களது சூழலை அறிந்து அவர்களிடம் உரிய நேரத்தில் பச்சாத்தாபம், சேவை, வழிகாட்டுதல் ஆகிய பண்புகளுடன் நடப்பது அவசியம். உங்களைப் போல வளர முயலும் மற்றவர்களின் தேவைகளை கவனிப்பதுடன், மேம்பாட்டுக்கான தேவைகளையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

உறவு மேம்பாடு: மற்றவர்களின் விரும்பத்தக்க நடத்தையைத் தூண்டுவது. இது பிரச்சனைகளை கூட்டாக இணைந்து சமாளிக்கும் வழிமுறை.

எனவே, உணர்வுசார் நுண்ணறிவு என்பது சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கவும், நமது தனிப்பட்ட உணர்வுகளையும், மற்றவர்களது உணர்வுகளையும் சரிவர புரிந்துகொண்டு அணுக உதவும். மிட்சல் அட்லரின் இந்த ஆராய்ச்சி சரியான முறையில் பயிற்சிபெற்றவர்கள், அடிமட்டத்தில் இருக்கும் தொழிலில் மேம்பாட்டை ஏற்படுத்தவும், பணியின் மீது ஆர்வமின்றி விடுப்பு எடுப்பவர்கள் அதைக் குறைப்பதையும் கண்கூடே காண்பித்துள்ளது என்கின்றார். மாபெரும் தலைவர்களாவே எல்லோரும், எப்போதும் பிறப்பதில்லை. மாறாக, உங்களது உணர்வுசார்ந்த உலகத்தை மேம்படுத்த கற்றுக்கொண்டாலே நீங்களும் மாபெரும் தலைவராகலாம்.

ஆக்கம்: சுக்ரித்தி ஷர்மா | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

வயது ஒரு எண்ணிக்கை மட்டுமே- நீங்கள் தயாராக இருந்தால் தொடங்குங்கள் உங்கள் நிறுவனத்தை!

பெண் தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்!

பெண் தொழில்முனைவோருக்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்!

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக