பதிப்புகளில்

சிறுதொழில் செய்து வெற்றிக்கண்ட இல்லத்தரசிகள்!

7th Jun 2018
Add to
Shares
569
Comments
Share This
Add to
Shares
569
Comments
Share

வீட்டை முறையாக நிர்வகித்து குழந்தைகளையும் பராமரித்து வரும் இல்லத்தரசியின் பொறுப்புகள் கடின உழைப்பும் கௌரவமும் நிறைந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதையும் தாண்டி சிலர் பணிபுரிய விரும்பி பணி தேடுவார்கள். இன்னும் சிலர் சுயதொழில் துவங்க விரும்புவார்கள். 

கொல்கத்தாவைச் சேர்ந்த இவ்விரு பெண்களும் அவ்வாறு தொழில் துவங்க விரும்பினர். இல்லத்தரசியாக இருந்து தொழில்முனைவோராக மாறவேண்டும் என்கிற நோக்கத்துடன் நிவேதிதா பாசு மற்றும் தெபோலினா கோஷ் இருவரும் ஒரு உணவுக்கடையைத் துவங்கினர்.

image


வட கொல்கத்தாவின் ஷ்யாம் பஜார் ஃபை பாயிண்ட் கிராசிங் பகுதியில் உணவுக்கடை அமைத்துள்ளனர். இது மலிவு விலையில் உணவு வழங்கும் ’எகுஷே அன்னபூர்னா’ (Ekushe Annapurna) அரசாங்க திட்டத்தின் ஒரு பகுதியாகும். முழுமையாக பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவால் இயக்கப்படும் இந்தக் கடையில் சாதம், பொறியல், பருப்பு, மீன் போன்றவை அடங்கிய உணவு 21 ரூபாய்க்கு கிடைக்கும்.

நிவேதிதா, தெபோலினா இருவருக்குமே இந்த அரசாங்க திட்டம் குறித்து கேள்விப்படுவதற்கு முன்பே சொந்தமாக தொழில் துவங்கும் திட்டம் இருந்தது. இந்தத் திட்டத்தில் இணைவதற்காக இருவரும் தங்களது ஒட்டுமொத்த சேமிப்பையும் முதலீடு செய்ய தீர்மானித்தனர். அதிக பெண்களை பணியிலமர்த்தினர். இதன் காரணமாக முழுவதும் பெண்கள் அடங்கிய குழுவால் ஒரு உணவுக்கடை செயல்படத் துவங்கியது.

நிவேதிதா ’தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடன் உரையாடுகையில்,

"நாங்கள் இல்லத்தரசியாகவே இருந்தோம். வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பணியை மட்டுமே மேற்கொண்டு வந்தோம். சொந்த வணிக முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பணியில் இணைந்து பத்து மணி நேரம் வெளியில் செலவிடுவது எங்களுக்குக் கடினமான விஷயம். ஏனெனில் எங்களால் எங்களது குடும்பத்தைப் புறக்கணிக்க முடியாது."

இந்தப் பிரச்சனையை உணர்ந்த கணவன்மார்கள் பென்ஃபிஷ் வணிக உரிமை (Benfish franchise) பெற திட்டமிட்டனர். ஏற்கெனவே பிரபலமாகி இருந்த இத்தகைய வணிக உரிமை இந்தப் பெண்களின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் உடனே இந்த முயற்சிக்கு சம்மதித்தனர்.

உணவின் விலை மிகவும் மலிவாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். ஆனால் லாபகரமாக இல்லை. எனவே கூடுதல் வருவாய் ஈட்ட வழக்கமான உணவுடன் மீன் வறுவல் உள்ளிட்ட பொறித்தெடுக்கும் உணவுப் பொருட்களையும் இணைத்துக்கொண்டனர்.

எத்தனையோ இல்லத்தரசிகள் தொழில்முனைவில் ஈடுபடவேண்டும் என்கிற மன உறுதி கொண்டு அதற்கான முயற்சி எடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட பெண் தொழில்முனைவோரில் ஒருவர்தான் வி-ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷீலா கொச்சோசப் சிட்டிலபில்லி. இவரது கணவர் கேரளாவில் மின் சாதனங்கள் நிறுவனமான வி-கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஷீலா ஒரு இல்லத்தரசியாக இருந்தார். இன்று கேரளாவில் உள்ள வெற்றிகரமான தொழில்முனைவோரில் இவரும் ஒருவர். இவரது நிறுவனமான வி-ஸ்டார் கேரளாவில் முன்னணி உள்ளாடை ப்ராண்டாக விளங்குகிறது. ஷீலா ரீடிஃப்-உடன் உரையாடுகையில்,

"தொழில் புரிதல், வணிக திட்டமிடல், உத்திகளை கையாளுதல் என எந்தப் பகுதியிலும் சற்றும் அனுபவமே இல்லாத ஒரு இல்லத்தரசியாகவே நான் இருந்தேன். ஆனால் படிப்படியாக ஒரு எளிமையான இல்லத்தரசியாக இருந்து ஒரு பெண் தொழில்முனைவோராக மாறினேன்."

கட்டுரை : THINK CHANGE INDIA 

Add to
Shares
569
Comments
Share This
Add to
Shares
569
Comments
Share
Report an issue
Authors

Related Tags