பதிப்புகளில்

குறைபாட்டை புறந்தள்ளி சிறுவயது கனவை மெய்ப்பித்த மூத்த பத்திரிகையாளர்-செய்தி அறிவிப்பாளர் எச்.ராமகிருஷ்ணன்

2nd May 2017
Add to
Shares
809
Comments
Share This
Add to
Shares
809
Comments
Share

இரண்டு வயதிலேயே போலியோ நோய் அவரது இரண்டு கால்களையும் தாக்கியது. ஒவ்வொரு நிலையிலும் பல போராட்டங்களை சந்தித்து அவற்றை எதிர்கொண்டார். சிவில் சர்வீஸ் தேர்வெழுதி IIS-ல் சேர்ந்தார். பத்திரிகையாளராக 40 ஆண்டு அனுபவத்தை பெற்று ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோருடன் உரையாடிய அனுபவமிக்கவர். எதுவும் சாத்தியமே என்பதை நிரூபித்தவர் எச்.ராமகிருஷ்ணன்.

குறைபாடுடன் வாழ்வது ஒரு சவாலாகும். எனினும், பலர் அதனை எதிர்த்துப் போராடி வெற்றியாளர்களாக வெளிவருகின்றனர். ஏதோ ஒரு வகையில் குறைபாடுடன் கஷ்டப்படும் 2 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் இதுபோன்றவர்களின் வாழ்க்கை உத்வேகம் அளிக்கிறது.

image


ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹெலன் கெல்லர், ஜான் நேஷ் போன்ற உத்வேகம் அளித்த பலரின் வரலாற்றை நாம் அறிவோம். சரியான மனநிலை இருந்தால் எதுவும் சாத்தியவே என்று நிரூபித்த இந்த அசாதாரண மனிதரும் அவர்களைப் போன்றவரே.

போலியோவை எதிர்த்து உயரத்தை எட்டினார்

எழுபத்தைந்து வயதான எச்.ராமகிருஷ்ணன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.

“கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி, 1941-ல் பிறந்தேன். அதனால்தானோ என்னவோ சிலுவையைப்போல என்னால் சுமக்க முடியாத பாரமாக என்னுடைய உடலை சுமந்துகொண்டிருக்கிறேன்.” 

என்னுடைய அப்பா ஒரு வழக்கறிஞர் (பின்னர் நீதிபதியானார்). என்னுடைய அம்மா ஒரு இல்லத்தரசி. எனக்கு இரண்டு வயதானபோது போலியோ தாக்கியதால் வீட்டின் முதல் குழந்தை பிறந்ததனால் ஏற்பட்ட அத்தனை சந்தோஷமும் நம்பிக்கையும் சிதைந்துபோனது. இரவல் கேட்கும் பெண் ஒருவர் ஊனமுற்ற தன்னுடைய குழந்தையை தூக்கி வருவதை என்னுடைய அம்மா பார்த்தார். என்னுடைய நிலையும் அவ்வாறு ஆகிவிடுமோ என்று அவர் பயந்தார்,” என்று தன் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.

ஒன்பது வயது வரை அவர் தவழ்ந்துகொண்டே இருந்தாலும் அவரைத் தாக்கிய கொடிய நோய் குறித்து அவர் முழுமையாக அறியவில்லை. அவர் வளர வளரவே சூழ்நிலையின் தாக்கத்தை உணர்ந்தார். இளம் வயதில் அவர் சந்தித்த போராட்டங்கள் குறித்து யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்துகொள்கையில், 

என்னுடன் படித்த மாணவர்கள் அனைவரும் உணவு இடைவேளையின் போது மைதானத்தில் விளையாடியபோது நான் மட்டும் ஒதுங்கி தனித்திருந்தேன். சில வருடங்களுக்குப் பிறகு மன தைரியத்தை வளர்த்துக்கொண்டேன். நானும் சாதாரணமாக இருப்பதாகவே உணர்ந்தேன்.
image


உள்ளூர் பள்ளிகள் ராமகிருஷ்ணனை அனுமதிக்க மறுத்துவிட்டது. அவரது தாய்வழி தாத்தா வேறொரு நகரத்திலுள்ள பள்ளியில் சேர்க்க திட்டமிட்டார். அவரது தாத்தா அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக விவரித்தார் ராமகிருஷ்ணன். அவர் கூறுகையில்,

இளம் வயதில் எனக்குத் தேவைப்பட்ட பலம், மன உறுதி, உத்வேகம் அனைத்தையும் என்னுடைய தாத்தா எனக்கு அளித்தார். 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். எங்கள் வீட்டில் முதன் முதலில் வானொலி பெட்டி வாங்கினோம். மிகப்பெரிய PYE வால்வ் செட். என்னுடைய தாத்தா அந்த வானொலி முன்னால் உட்கார்ந்துகொண்டு 9 மணி செய்திகளைக் கேட்பார். Melville de Mello அவர்களின் தனித்துவமான குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். 

ஒரு நாள் இரவு நான் தாத்தாவிடம் சொன்னேன், ‘தாத்தா, நானும் ஒரு நாள் இதேபோல செய்தி வாசிக்க விரும்புகிறேன்’. அவர் என்னுடைய தலைமுடியை கோதியபடியே ‘உன்னுடைய விருப்பம் நிறைவேற நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்’ என்றார்.

செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற ஆசையினால் UPSC தேர்வெழுத நினைத்தார். ஆனால் அவரது குறைபாடு காரணமாக தேர்வெழுத அனுமதிக்காததால் மனமுடைந்து போனார். அவரது வாழ்க்கையிலேயே மிகவும் மனமுடைந்து தாழ்வாக உணர்ந்த சமயம் அது. இருந்தும் அவர் தனது வெற்றிப் பாதைக்கு அதை ஒரு தடையாகப் பார்க்கவில்லை.

IIS-ல் சேர்ந்த பிறகு ஆல் இந்தியா ரேடியோவில் முதலில் டெல்லியிலும் பின்னர் சென்னையிலும் பணியாற்றினார். ஏர் இந்தியா ரேடியோவில் சில நாட்கள் பணியாற்றிய பிறகு தூர்தர்ஷன் கேந்திராவில் 25 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். தூர்தர்ஷன் சென்னையின் முதல் செய்தி வாசிப்பாளர்களில் இவரும் ஒருவர். 

இந்தியன் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக மூன்றாண்டுகள் பணியாற்றினார். பல அரசு நிறுவனங்களில் பணியாற்றியபின் மூத்த நிர்வாக க்ரேட் அதிகாரியாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பணிபுரியும் அளவிற்கு உயர்ந்தார். நாற்பது ஆண்டு கால அனுபவத்துடன் மாநில அரசின் உயரிய விருதான ’கலைமாமணி’ பட்டத்தை தமிழக அரசு அவருக்கு வழங்கியது.

image


அரசாங்கப் பணி அனுபவம் குறித்து கேட்கையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியாக இருந்தேன். அனைத்து இடங்களிலும் சிறந்த மேலதிகாரியும் சக ஊழியர்களும் கிடைத்தனர். IIS-ல் வெளி உலகத்தைப் பார்க்கவும், முக்கிய பிரமுகர்களை சந்திக்கவும் உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேல் பொது மக்களைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றார்.

போராட்டம் நிறைந்த வாழ்க்கை

அவர் அரசுப் பணியிலிருந்தபோது அவர் சென்ற இடங்களிலெல்லாம் மக்களுக்கு ஊக்கமளித்தார். அவர் PIB-யில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது அவருக்கு அனுப்பப்பட்ட ரகசிய அறிக்கையில் அவரது குறைபாடு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அன்று தற்செயலாக ஜனாதிபதி வி.வி.கிரியின் மாநாட்டு உரையின் நகலை பெற்றுக்கொள்வதற்காக அவர் ராஜ்ய சபா செல்லவேண்டியிருந்தது.

ஜனாதிபதியின் செயலாளரான திரு அப்துல் ஹமீத் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர். நான் மனச்சோர்வுடன் காணப்படுவதற்கான காரணத்தை கேட்டபோது ரகசிய அறிக்கை குறித்து அவரிடம் தெரிவித்தேன். ஹமீத் உள்ளே சென்று அது குறித்து ஜனாதிபதியிடம் பேசினார். அவர் அப்போதே தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்ப ஒரு கடிதத்தை டிக்டேட் செய்தார். ரகசிய அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டதாக ஒரு வாரத்தில் எனக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

image


இது ஒரு தொடக்கம்தான். ரகசிய அறிக்கையில் தேவையின்றி ஒருவரின் குறைபாடு பற்றி குறிப்பிடப்படுவது அத்துடன் நிற்கவில்லை. அதன் பிறகு எந்த ஒரு நபரின் குறைபாடு குறித்தும் ரகசிய அறிக்கையில் குறிப்பிடப்படக் கூடாது என்று அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

திரைப்படத் துறையிலும் பிரவேசித்து பலருக்கு உத்வேகம் அளித்தார் ராமகிருஷ்ணன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அவருக்கு மிகவும் திருப்தியளித்த ஒரு கதாப்பாத்திரம் குறித்து கூறுகையில், 

கே. பாலச்சந்தரின் ‘வானமே எல்லை’ திரைப்படத்தில் நடித்தது மிகுந்த மனநிறைவளித்தது. அந்தத் திரைப்படத்தில் என்னுடைய நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். மனமுடைந்த நான்கு நண்பர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுப்பார்கள். ஆனால் குறைபாடுள்ள நான் மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்த்ததும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்வார்கள். என்னுடைய கதாப்பாத்திரம் உத்வேகம் அளித்ததாக பலர் தெரிவித்தனர்.

க்ருபா (Krupa) என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் காது கேட்காதவர்களுக்கான கேட்கும் சாதனம், கைத்தடி, மூன்று சக்கர வண்டி, கேளிப்பர்ஸ் போன்றவற்றை வழங்கி உதவி வருகிறார். எனக்கு குறைபாடு இருப்பதால் என்னைப் போன்றோருக்கு என்னால் இயன்ற சிறு உதவிகளைப் புரிவது சிறந்தது என்று நினைக்கிறேன்.

மகிழ்ச்சியான மனிதர்

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவருக்குத் தேவையான பலத்தையும் தைரியத்தையும் அளித்து அவர் முன்னேற ஆதரவாக இருந்துள்ளனர். அவரது வாழ்க்கையின் மந்திரம் எது என்ற கேள்விக்கு ஸ்டீஃபன் க்ரெல்லட் அவர்களின் வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார். 

இந்த உலகத்தில் என்னுடைய இந்தப் பாதையை நான் ஒரு முறை மட்டுமே கடக்கமுடியும். ஆகவே என்னால் செய்ய இயன்ற நல்ல விஷயங்களையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்ட இயன்ற அன்பையும் இப்போதே கொடுத்து விடுகிறேன். அதை ஒத்திவைக்கவோ புறக்கணிக்கவோ கூடாது. ஏனெனில் நான் இதே பாதையை மற்றொரு முறை கடக்கப்போவதில்லை. 

image


இளைய தலைமுறையினருக்கு அவர் கூற விரும்பும் செய்தி குறித்து கேட்கையில்,

”உயர்ந்த லட்சியத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்புவதை அடைய தைரியமாக செயல்படுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம்,”என்றார் ராமகிருஷ்ணன்.

இந்தக் குறிப்பை மற்றவர்களுக்காக வெறும் வார்த்தையாக சொல்லாமல் அவரது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இதைப் பின்பற்றியதால் இது நமக்கு மேலும் அதிக உத்வேகமளிக்கிறது.

ஆங்கில கட்டுரையாளர்: ஷல்மாலி ப்ரகாஷ்

Add to
Shares
809
Comments
Share This
Add to
Shares
809
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக