பதிப்புகளில்

தெற்காசிய மொழிகளில் தரமான உள்ளடக்கத்தை வழங்கும் இலங்கை ஸ்டார்ட் அப்!

YS TEAM TAMIL
4th May 2018
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

முஸ்தஃபா காசிம் 2015-ம் ஆண்டு ’ரோர்மீடியா’ (RoarMedia) என்கிற ஸ்டார்ட் அப்பை துவங்கினார். இலங்கையில் உள்ள இந்த ஸ்டார்ட் அப் ஆன்லைன் உள்ளடக்கப் பிரிவில் செயல்படுகிறது. உள்ளூர் மொழிகளுக்கான தரமான ஆன்லைன் உள்ளடக்கம் இல்லாத பிரச்சனைக்கு தீர்வுகாண்கிறது. இந்நிறுவனம் வெளியிடப்படாத நிதித்தொகையை உயர்த்தியுள்ளது.

முஸ்தஃபா காசிம் கலிஃபோர்னியா மாநில பல்கலைக்கழக நார்த்ரிட்ஜ்ஜில் பொருளாதாரப் பிரிவில் பட்டம் பெற்றபோது உள்ளடக்கத் தளம் துவங்கவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

”இலங்கை குறித்து அழகாக விவரிக்கப்பட்ட கதையைப் படிக்கவும் காணவும் ஆவலோடு இருந்தேன். ஆனால் அத்தகைய தளம் இல்லை. எனவே நான் வீடு திரும்பியதும் புலம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு உதவக்கூடிய உள்ளடக்க தளம் ஒன்றை உருவாக்கவேண்டும் என திட்டமிட்டேன்,” என்றார்.
image


சமூகத்தை அறிவு மேம்படுத்துமானால் அறிவு அல்லது உள்ளடக்கத்தை வழங்குவோர் முற்போக்கான தகவல்கள் சமூகத்திற்கு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். அந்த நோக்கத்திற்காக உருவானதுதான் ரோர்மீடியா.

முஸ்தஃபா கூறுகையில், 

”முழக்கம் எழுப்புவது (roar) என்பது ஒரு சில விஷயங்களை உணர்த்துகிறது. துல்லியமான நம்பகத்தன்மை உடைய தகவல்களை வழங்குவதால் உண்மையை முழக்கமிடுவது என்பது பொருள். எங்களது உள்ளடக்கம் எங்கள் குரல்களைக் கேட்கவைப்பதால் அங்கீகாரத்தை முழக்கமிடுகிறது என கொள்ளலாம்." 

பிராந்திய மொழிகளில் கவனம் செலுத்தும் தெற்காசிய டிஜிட்டல் மீடியா குழுவாக செயல்படவேண்டும் என்கிற நோக்கத்தை அடைய உந்துதலளிப்பதால் ஊக்கத்தை முழக்கமிடுகிறது என பொருள் கொள்ளலாம்.

தற்போது 25 வயதாகும் முஸ்தஃபா நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளின் பகுப்பாய்வு ஆகியவற்றை ஆங்கிலத்தில் வழங்கும் வலைதளத்தை 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். ”விரைவில் இலங்கையில் உள்ள ஆங்கிலம் பேசும் மக்களின் கவனத்தை ஈர்த்தோம்,” என்றார்.

செய்தித்தாள் வலைதளங்கள் இவருக்கு போட்டியாக காணப்பட்டாலும் தரமான உள்ளடக்கத்தை எதிர்நோக்கும் இந்தப் புதிய ஆன்லைன் பயனர்களுக்கு அவை சேவையளிப்பதில்லை என்கிறார் முஸ்தஃபா. போலி செய்திகள், வதந்திகளைப் பரப்பும் தளங்கள் போன்றவை அதன் உள்ளடக்கத்தின் தன்மையால் இவர்களுடன் போட்டியிடும் விதத்தில் இருப்பதில்லை.

ரோர்மீடியா சிங்கள மொழி தளத்தை அறிமுகப்படுத்தியது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சில மாதங்களிலேயே பயனர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்தது. சிங்கள தளத்தில் உள்ளூர் மற்றும் உலக வரலாறு, பொழுதுபோக்கு, வாழ்க்கைமுறை, விளையாட்டு அம்சங்கள் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

பெண்கள் சார்ந்த உள்ளடக்க ப்ராண்ட் ரோர் ஆர்யா, தொழில்நுட்ப தகவல்களையும் இலங்கை சந்தை நிலவரங்களையும் வழங்கும் ரோர் சிங்களா டெக் ஆகியவை இதன் துணை ப்ராண்டுகளாகும். இந்தத் தளத்தை ஒரு மாதத்தில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிடுவதாகவும் மூன்று மில்லியன் பிரத்யேகமான பார்வையாளர்கள் இருப்பதாகவும் ரோர் சிங்களா தெரிவிக்கிறது.

அப்போதுதான் அவர்கள் தீர்வளிக்க முற்படுவது ஒரு மிகப்பெரிய தேவை நிலவும் பகுதி என்பதை உணர்ந்தனர். இந்திய துணைக்கண்டத்திலும் தெற்காசியாவிலும் இணையதள ஊடுருவல் வளர்ச்சியடைந்து வருகிறது. இந்த மாதிரியை ஏன் பல்வேறு மொழிகளில் பின்பற்றக்கூடாது?

விரிவடைந்து செயல்படுதல்

ஓராண்டிற்கு முன்பு ரோர்மீடியா பங்களாதேஷ் பகுதியில் தனது செயல்பாடுகளைத் துவங்கியது. தற்போது ரோர் பங்களா இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், ட்விட்டர் ஆகியவற்றில் முன்னணியில் பட்டியலிடப்பட்டுள்ளது. ரோர் பங்களாவில் இந்திய பங்களிப்பாளர்கள் அதிகம் இருப்பதால் இதன் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இந்திய பயனர்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

image


கடந்த 10 மாதங்களில் இந்த ஸ்டார்ட் அப் ரோர் ஹிந்தி அறிமுகப்படுத்தியது. ஏற்கெனவே 21 மில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்பட்டுள்ளது. சுமார் ஒரு மில்லியன் வலைதள செஷன்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று ரோர்மீடியா ஹிந்தி, தமிழ், பெங்காலி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழி உள்ளது.

துணை கண்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகரங்களைச் சேர்ந்தவர்களில் ஸ்மார்ட்ஃபோன் வாயிலாக தங்களது தாய்மொழியில் உள்ளடக்கத்தை அணுகும் 25-40 வயது வரை உள்ளவர்களை இலக்காகக் கொண்டே ரோர்மீடியா செயல்படுகிறது. பயனர்களை அணுகுவதற்கான உத்திகளில் சமூக ஊடக உள்ளடக்க விநியோகமும் அடங்கும்.

"நாங்கள் ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இதை வரும் நாட்களில் தீவிரமாக சந்தைப்படுத்த இருக்கிறோம்,” என்றார் முஸ்தஃபா.

அந்தந்த பகுதியின் வட்டார மொழி விளம்பர உள்ளடக்கத்திற்காக GroupM, NeoOgilvy போன்ற முன்னணி விளம்பரம் மற்றும் டிஜிட்டல் மார்கெட்டிங் நிறுவனங்களுடன் ரோர்மீடியா செயல்பட்டு வருகிறது.

வருவாய்

ரோர்மீடியா கடந்த ஆண்டு ஹெச்எஸ்பிசி, சியட், யூனிலிவர், நெஸ்லே போன்ற முன்னணி ப்ராண்ட்களின் விளம்பரங்களுடன் செயல்பட்டது. இதனால் ரோர்மீடியா லாபகரமான செயல்பட்டதுடன் ப்ராண்டுகள் தங்களது தயாரிப்புகளையும் சேவைகளையும் சிறப்பாக விளம்பரப்படுத்தவும் இவர்களது பிரச்சாரம் உதவியது.

"தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷில் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். தொடர்ந்து வளர்ச்சியடைய ஏஜென்சிக்கள் மற்றும் விளம்பரதாரர்களுடன் பணிபுரிந்து வருகிறோம்,” என்றார். 

கடந்த இரண்டு காலாண்டுகளில் ரோர்மீடியா 20 சதவீத மாத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021-ம் ஆண்டில் இந்திய இணையதளத்தில் 536 மில்லியன் பயனர்கள் ஆங்கில மொழி அல்லாத பயனர்களாக இருப்பார்கள் என மதிப்பிடப்படுகிறது. அந்த காலகட்டத்தில் ஹிந்தி மொழி இந்திய இணையதளத்தில் ஆங்கில மொழியைக் காட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படும் என கூகுள்-KPMG அறிக்கை தெரிவிக்கிறது.

”இந்திய இணையதளத்தில் பெங்காலி, தமிழ், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகள் பெருமளவு வளர்ச்சியடைந்து வருகிறது. இதற்கு ஸ்மார்ட்ஃபோன்களும் விலை மலிவான டேட்டா சேவைகளும் முக்கியக் காரணமாகும். 

”எனவே இந்தத் துணைக் கண்டங்களில் தாய்மொழியில் பயன்படுத்தும் பயனர் தொகுப்பு இருக்கும் அளவு எங்களுக்கு சந்தை வாய்ப்பும் உள்ளது,” என்றார்.
image


தரமான உள்ளடக்கத்தை உறுதிசெய்தல்

ரோர்மீடியா சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் என்றபோதும் 65 பேர் அடங்கிய இவர்களது குழுவினர் புதுடெல்லி, கொழும்பு, தாகா ஆகிய பகுதிகளில் செயல்படுகின்றனர். “எங்களது முக்கியக் குழுவில் ஒவ்வொரு மொழிக்கும் அனுபவமிக்க எடிட்டர்கள், எழுத்தாளர்கள் உள்ளனர். இவர்கள் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கு பொறுப்பேற்றுள்ளனர்,” என்றார் முஸ்தஃபா. அத்துடன் பகுதிநேர எழுத்தாளர்கள், அனிமேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் ஆகியோர் உள்ளனர்.

பெரும்பாலான பிராந்திய மொழி வெளியீட்டாளர்கள் ’க்ளிக்’கில் மட்டுமே கவனம் செலுத்தி உள்ளடக்கத்தை உருவாக்குகின்றனர். ஆனால் நாங்கள் தரம் மற்றும் அளவில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார் முஸ்தஃபா. 

ப்ராண்டுகளையும் விளம்பரதாரர்களையும் பிராந்திய விளம்பரங்கள் அல்லது ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த வைப்பது சவாலாகவே உள்ளது. ஏனெனில் அவர்கள் தளத்தை விளம்பரம் இல்லாத பகுதியாக பராமரிக்கவே விரும்புகின்றனர்.

தாய்மொழி பயன்பாடு இணையதளத்தின் எதிர்காலமாக இருக்கப்போகிறது என நம்புகிறார் முஸ்தஃபா. “ஆன்லைன் ஆங்கில உலகில் ஸ்பான்சர் செய்யப்படும் உள்ளடக்கம் பொதுவாக காணப்பட்டாலும் விளம்பரதாரர்கள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளின் வடிவங்களில் செயல்படுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தனிப்பட்ட தேவைக்கேற்ப பிராந்திய மொழியில் உள்ளடக்கத் தீர்வுகளை வழங்குவதற்காக கடினமாக உழைக்கவேண்டும்,” என்றார்.

எதிர்கால சாத்தியக்கூறுகள்

BOV கேப்பிடல் மற்றும் டிஜிட்டல் இன்னொவேஷன் ஃபண்ட் நிறுவனங்களிடம் இருந்து ரோர்மீடியா ப்ரீ சீரீஸ் ஏ நிதியை உயர்த்தியுள்ளது. கூகுள் இண்டியா எம்டி ராஜன் அனந்தன் அவர்களும் ஆதரவளித்துள்ளார். அடுத்த 12-18 மாதங்களில் இந்தியாவில் வளர்ச்சியடைய அடுத்த சுற்று நிதி உயர்த்த விரும்புவதாக முஸ்தஃபா தெரிவித்தார்.

image


இந்தியாவில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புள்ளது. எனவே நாங்கள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே கவனம் செலுத்த உள்ளோம். 2020-ம் ஆண்டு ஏழு இந்திய மொழிகளில் செயல்பட திட்டமிட்டுள்ளோம். தற்சமயம் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மூன்று மொழிகளில் வளர்ச்சியடைவதில் கவனம் செலுத்தி வருகிறோம். 2018-ம் ஆண்டின் இறுதி இரண்டு காலாண்டுகளில் மலையாளம் அல்லது தெலுங்கு மற்றும் மராத்தியில் செயல்பட விரும்புகிறோம்,” என்றார்.

ப்ராண்டுகள் பார்ட்னர்ஷிப்பை ஆராய உதவும் வகையில் யூட்யூப்பில் வீடியோ ப்ராபர்டீஸ் அறிமுகப்படுத்தவும் விரும்புகின்றனர். ஏற்கெனவே ஆங்கிலம், சிங்களம், பங்களா, ஹிந்தி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

போஜ்புரி, பஞ்சாபி ஆகிய வட்டார மொழிகளில் இன்ஃபோடெயின்மெண்ட் மீடியா ப்ராபர்டீஸ் உருவாக்குவதிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியாவில் சிறப்பாக செயல்பட்ட பிறகு நேபாலை இலக்காகக் கொள்ள திட்டமிடுகிறோம்,” என்று விவரித்தார் முஸ்தஃபா.

2017-ம் ஆண்டு ’கொழும்பு சமூக ஊடக வாரத்தில்’ ’மிகவும் பிரபலமான சமூக ஊடக உள்ளடக்க போர்டல்’ என்கிற விருதினை ரோர்மீடியா பெற்றுள்ளது. யாருடன் பணிபுரிவது அல்லது யாரிடமிருந்து விளம்பரங்களை ஏற்றுக்கொள்வது என்பதில் கவனமாக பின்பற்றப்படும் செயல்முறையே ரோர்மீடியாவை வேறுபடுத்திக் காட்டுகிறது.

“வாசிப்பவர்கள் தொகுப்பை பராமரிக்க உதவுகிறது. ஆர்கானிக்கோ அல்லது கட்டணம் செலுத்தும் உள்ளடக்கமோ அதிக தகவல்கள் நிறைந்த உள்ளடக்கமே அதிக மக்களைச் சென்றடையும்,” என்றார் முஸ்தஃபா.

ஆங்கில கட்டுரையாளர் : அதிரா ஏ நாயர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக