பதிப்புகளில்

ஆரம்ப பள்ளி கல்விக்கு ஓர் அர்த்தத்தை தந்துள்ள"ஹிப்போ கேம்பஸ்"

16th Aug 2015
Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share

தற்போதைய அரசு பள்ளிகளில் இருக்கும் பாரபட்சமும் கவனிப்பின்மையும் "ஹிப்போ கேம்பஸ்" (Hippo Campus) கற்றல் மையத்தை உருவாக்க ஒரு வித்தாக அமைந்திருக்கிறது. ஹிப்போ கேம்பஸ், ஆரம்ப பள்ளி நிலையங்களில் 5200 குழந்தைகளும், 350 ஆசிரியர்களும் இன்றைய தேதியில் இருந்தாலும், 2020ம் ஆண்டில் ஃபின்லாந்து மக்கள் தொகைக்கு இணையாக, குழந்தைகளுக்கு ஆரம்ப பள்ளி கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இதனுடைய முதற் குறிக்கோள். ஹிப்போ கேம்பஸை நிறுவிய உமேஷ் மல்ஹோத்ரா இதனுடைய ஆரம்ப பயணத்திலிருந்து இருக்கும் சவால்களை பற்றி விவரிக்கிறார். இந்த குறிக்கோளே மிஷன் ஃபின்லாந்து (Mission Finland) என்ற பெயரையும் தந்திருக்கிறது.


image


ஹிப்போ கேம்பஸில் ரோஹிணி நிலகேணியுடன் எற்பட்ட உரையாடலின் போது, அக்க்ஷரா ஃபவுண்டேஷனை பற்றி தெரிந்துக்கொண்ட உமேஷ், தோஹிணியுடன் ஒரு சிறிய கிராமத்தின் அரசு பள்ளிக்கு சென்றிருந்தார். அந்த பள்ளியில் இருந்த நிலை உமேஷுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியை தந்தது என்றே சொல்லலாம். ''கிராமங்களில் கல்வியை வழங்கும் இத்தகைய பள்ளிகளின் நிலையை கண்டு அதிர்ச்சியை அடைந்தேன்.'' என்று விளக்குகிறார் உமேஷ்.

அதே நேரத்தில் முதல் முறையாக ஒரு குடிசை பகுதியை கண்ட உமேஷுக்கு அவர்களின் வாழ்க்கைநிலை பற்றியும் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. '' அது வரை சின்ன வயதிலிருந்தே ஒரு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தேன். ஆனால், நான் பார்த்து வியந்த விஷயம் எதுவென்றால், அந்த நிலையிலும் கூட அளவுகடந்த நம்பிக்கையுடன் அங்கிருந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பள்ளிகளுக்கு தவறாமல் அனுப்பி வைத்தனர்.'' என்று பகிர்ந்து கொண்டார் உமேஷ்.

வெளிச்சமில்லாத அறைகள், சப்தமான சூழல், ஆசிரியர்களின் அலட்சியம் என்று நிறைய விஷயங்கள் உமேஷின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. '' சில பேருக்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு போவது மிகவும் சிரமம் என்று தோன்றும், ஆனால் உண்மையான சிரமம் இத்தகைய பள்ளிகளில் படிப்பது தான்." என்று கூறினார்.

ஏற்றத்தாழ்வு நிலை, ஒரு வளர்ச்சியை ஏற்படுத்தமுடியாத அந்த சூழலில் பெற்றோர்களும் பிள்ளைகளும் வாழ்வதை பார்த்து உமேஷ் நிறைய விஷயங்களை தானாக தெரிந்து கொண்டார். ''அவர்கள் ஒரு அசாதாரணமான நம்பிக்கையை மட்டுமே வைத்து வாழ்ந்து வருகின்றனர் என்பதை என்னால் அப்போது புரிந்துக்கொள்ள முடிந்தது."

இந்த நிலையை தன்னால் மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உமேஷின் மனதில் நன்றாக உதித்திருந்தது. இருந்தாலும், அந்த மக்களின் அடிப்படையான மனநிலையை மாற்றி தன்னுடைய திட்டத்திற்குள் கொண்டுவருவதில் சற்று கஷ்டமாகவே இருந்ததாக உமேஷ் பகிர்ந்து கொண்டார். "ஐ. டி துறையில் அவ்வளவு நுட்பமான விஷயங்களை செய்யும் அதே அறிவை ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வருவதிலும் செயல்படுத்தலாம் என்ற எண்ணம் எனக்குள் ஆணித்தனமாகவே இருந்தது. ஒரு சில ஆண்டுகளில் நிறைவேற்றலாம் என்று திட்டமிட்டாலும், என்னால் அதை செயல்படுத்த முடியாமல் போனது." என்று தான் சந்தித்த தோல்வியை பற்றி விளக்கினார்.


image


ஹிப்போ கேம்பஸ் நூலகம் மூலம் வெற்றிகரமாக செய்ய முடிந்த விஷயங்களை இதிலும் செயல்படுத்தலாமே என்று யோசித்த உமேஷ், "பள்ளிகள் சரியாக இல்லாமல் போனாலும், புத்தகங்கள் குழந்தைகளுக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தரும் தவிர, அவர்களின் வாழ்க்கையையே மாற்றும் என்ற எண்ணம் வலுவாகவே எங்களுக்கு இருந்தது. ஒரு மணிநேரம் மட்டுமே செலவழித்தாலும் கூட, அது ஒரு நல்ல மாற்றத்தை அவர்களுக்கு தரும்." என்று தன நம்பிக்கையை பற்றி பகிர்ந்து கொண்டார்.

இருந்தாலும், சில நடைமுறை சிக்கல்கள் உமேஷின் முயற்சியில் ஆரம்பத்தில் இருக்கவே செய்தது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியாமல் இருப்பது, ஆசிரியர்கள் அதற்கான முயற்சிகளை எடுக்காமலும், நினைத்த அளவில் புத்தகங்களை கொண்டு வர முடியாமல் போனது, தலைமை ஆசிரியர்கள் போதிய உதவிகளை செய்யமால் இருந்தது போன்ற பல பிரச்னைகளை உமேஷ் சந்தித்தார். நூலகங்கள் நேரத்தை விரயம் செய்யக்கூடிய விஷயமாகவும் தலைமை ஆசிரியர்களால் கருதப்பட்டது. "இது போன்ற பிரச்னைகளுக்கு மத்தியில் நூலகங்களை கொண்டு வருவதற்காக கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்தோம். அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொடுத்து இதை சாத்தியமாக்குவதில் பெற்றோர்கள் எங்களுக்கு ஊக்கமும் தொடர் நம்பிக்கையும் தந்தார்கள்." என்றார் உமேஷ்.

இதையொட்டி 2007ம் ஆண்டில் 'க்ரோ பை ரீடிங் (Grow by Reading) என்று ஒரு சின்ன நூலக திட்டத்தை அமல்படுத்தினார் உமேஷ். இதன்படி, ஒவ்வொரு புத்தகமும் குழந்தைகளின் புரிதல் மற்றும் கற்கும் திறனுக்கேற்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிறம் தரப்பட்டது. மொத்தமாக ஆறு பிரிவுகளாக பச்சை, நீலம், சிகப்பு என்று நிறங்களோடு பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு குழந்தையுடைய திறனுக்கேற்ப அந்த நிறத்திலிருக்கும் புத்தகத்தை எடுத்து படிக்கலாம். "நிறைய தோல்விகளுக்கு பின், இந்த சரியான வழியை கண்டறிந்தோம். குழந்தைகளுடைய அடையாள அட்டையில் இருக்கும் நிறத்திற்கேற்ப புத்தகங்களை படிக்கலாம்." என்று விவரித்தார் உமேஷ்.

படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடையே வலுவாக அமைக்க வண்ணம் அடித்தல் போன்ற சில சின்ன சின்ன நிகழ்ச்சிளையும் நூலகத்தில் அறிமுகப்படுத்தினர்."குழந்தைகள் வரும் போது, முதலில் இரண்டு புத்தகங்களை படித்தால் மட்டுமே, நிகழ்ச்சிக்கு செல்ல முடியும் என்று ஒரு சின்ன நிபந்தனை வைப்பதுண்டு. அதன்படி, குழந்தைகள் அதிகமான ஆர்வத்துடன் புத்தகங்களை படிப்பார்கள். 2009ம் ஆண்டில் எங்கள் நூலகத்தில் கிட்டத்தட்ட 50,000 குழந்தைகள் சேர்ந்திருந்தனர். ஆங்கிலம், கன்னடம், தமிழ் போன்ற மொழிகளை தவிர ஹிந்தி மற்றும் உருது மொழிகளிலும் புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தோம்." என்று நெகிழ்ந்தார் உமேஷ்.


image


ஹிப்போ கேம்பஸின் அடுத்த கட்ட வளர்ச்சி, 'எ ரூம் டு ரீட்' (A Room to Read) என்கிற என்.ஜி.ஓ அமைப்பால் வந்து சேர்ந்தது. கிட்டத்தட்ட 10 நாடுகளிலிலும், 9 மாநிலங்கள் அளவிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டில் அசோகா நற்திட்டத்தின் கீழ் உமேஷ் இருந்தபோது, பல்வேறு மாநிலங்களிலிருக்கும் சமூக தொழில்முனைவோர்களை சந்திக்க வாய்ப்புகள் பெருகியது.

ஹிப்போ கேம்பஸ் ஆரம்ப பள்ளி கற்றல் திட்டத்தின் அடித்தளமாக அமைந்த தருணத்தை பற்றி பேசும் போது," சித்ரதுர்கா என்ற கிராமத்தில் நான் பார்த்த போது, ஆரம்ப பள்ளி என்பதே இல்லை. அதனால், குழந்தைகளை நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் நிலை அங்கிருந்தது. நகரங்களில் ஆரம்ப பள்ளிகளில் அடிப்படை திறனை பெற்று குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர். கிராமத்து குழந்தைகளுக்கு இத்தகைய வாய்ப்பு இல்லாததால், பல குழந்தைகளால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போக காரணமாக இருக்கிறது. சமமான ஒரு கல்வி திட்டம் இங்கு இல்லை என்பதையே இது தெளிவு படுத்துகிறது." என்று தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்கிறார் உமேஷ்.

ஆசிய வளர்ப்பு வங்கியை முதலாக வைத்து, கிராமத்து பிள்ளைகளுடைய வளர்ச்சியையும், செயல்முறை சார்ந்த கல்வி திட்டம் என்ற அடிப்படையை வைத்து ஆரம்பிக்கப்பட்டது ஹிப்போ கேம்பஸ் ஆரம்ப பள்ளி. "நாட்டின் அடித்தளத்தில் இருக்கும் 5 கோடி மக்களுக்கு நல்ல கல்வியறிவை தர வேண்டும் என்ற கொள்கையில் ஆரம்பித்தது தான் இது." எனக்கூறும் உமேஷ், ஹிப்போ கேம்பஸ் ஆரம்ப பள்ளிகளில் 3000 ரூபாய், ஓராண்டு கட்டணமாக பெறுகிறது. இதில், சில பெற்றோர்கள் ஒரே முறையில் செலுத்துவதுண்டு. சில பெற்றோர்கள் மாதா மாதம் தவணை முறையிலும் செலுத்துகின்றனர். "எல்லோரிடமும் ரேஷன் கடை பொருள் சரியாக சேர்வதை போல, குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டி இந்த ஆரம்ப பள்ளிகளை தொடங்கினோம்." என்று விளக்கினார் உமேஷ்.

குழந்தைகள், அங்கன்வாடி பள்ளிகளுக்கு போகாமல் ஹிப்போ கேம்பஸ் ஆரம்ப பள்ளிக்கு வந்ததால் ஆரம்பத்தில் சில பிரச்னைகள வந்தாலும், பெற்றோர்களின் ஆதரவு, ஹிப்போ கேம்பஸ் குழுவிற்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

"குழந்தைகள் எளிதாக விஷயங்களை கவனிப்பதால், ஆசிரியர்களும் கற்றுததருவதில் சந்தோசம் அடைகின்றனர். எழுத்து தேர்வு, திறன் மற்றும் படிப்பை சோதனையுடன், வகுப்பறையில் எவ்வளவு சரியாக குழந்தைகளுக்கு பாடம் கற்றுத்தருகிறார்கள் என்ற அடிப்படை தேர்விற்கு பின், ஆசிரியர்களை நாங்கள் நியமிக்கிறோம். தவிர, ஒரு கற்பனை சூழலை தந்து, அதை எப்படி எதிர்க்கொள்கிறார்கள், ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள தேவையான பயிற்சி முகாம்களும் அதில் சில வீட்டுபாடங்களும் அவர்களுக்கு தரப்படுகிறது. ஒரு வகுப்பறைக்கு அந்த குறிப்பிட்ட ஆசிரியர் எப்படி பொறுப்பேற்க வேண்டும் என்ற பாடத்தை அவர்களுக்கு முதலிலேயே தருவது வழக்கம். இது மட்டுமல்லாமல், ஆங்கிலம் பேசுவதற்கான பிரத்யேக வகுப்புகளும் ஃபொனடிக் முறையில் கற்றுத்தந்து தயார் செய்கிறோம் என்று பள்ளியின் முறைகளை பற்றி விவரிக்கிறார் உமேஷ்.

சிறந்த கல்விமுறை, பாடத்தை ரசித்து கற்று தரும் ஆசிரியர்கள், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன் வார்த்தைகளை கோர்த்து படிக்கும் குழந்தைகள் என்று எங்களது பள்ளிகளை பார்க்கும் போது, இன்னும் நிறைய விஷயங்களை செயல்படுத்த வேண்டும் என்ற துடிப்பு மேலோங்கி நிற்கிறது " என்று தன்னுடைய பயணத்தை பற்றி அழகாக பகிர்ந்து முடித்துக்கொண்டார் உமேஷ்.

Add to
Shares
47
Comments
Share This
Add to
Shares
47
Comments
Share
Report an issue
Authors

Related Tags