பதிப்புகளில்

2025-க்குள் 10 லட்சம் சிறு விவசாயிகளை வறுமையில் இருந்து மீட்க திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளர்!

31st Aug 2017
Add to
Shares
294
Comments
Share This
Add to
Shares
294
Comments
Share

சத்யா ரகு PwC பணியை விட்டு 'கெய்தி' (Kheyti) நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் 2025-ம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் சிறு விவசாயிகளை வறுமையின் பிடியிலிருந்து மீட்க திட்டமிட்டுள்ளார்.

image


சத்யா ரகு ஒரு வெற்றிகரமான பட்டயக் கணக்காளர். PwC இந்தியாவில் நல்ல பணியில் இருந்தார். இருந்தும் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவரது சிறுவயது நிகழ்வுகள் தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. சிறு வயதில் நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஒரு விவசாயி மண்ணை உண்பதை பார்த்தார்.

ஓடிச் சென்று அந்த விவசாயியிடம் ஏன் அவ்வாறு செய்கிறார் என்று கேட்டார். “என்னிடம் பணம் இல்லை என்பது என் வயிற்றிற்குத் தெரியாது,” என்றார். இந்த வரிகள் அவருக்கு தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.

”என்னுடைய தாத்தாவிடம் சென்று விவசாயிகளின் பிரச்சனைக்காகப் போராட விரும்புகிறேன் என்று கூறினேன்,அவற்றை எதிர்த்துப் போராடாதே, அதை தீர்த்து வை’ என்றார்,” என்று நினைவுகூர்ந்தார்.

மூன்று வருடங்களுக்கும் மேலாக PwC-ல் பணிபுரிந்த பிறகு கன்சல்டிங் பிரிவை தனது வாழ்க்கைப் பாதையாக தேர்வுசெய்ய வேண்டாம் என்று தீர்மானித்தார். 2009-ம் ஆண்டு சிறு விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படும் வழிகளைப் புரிந்துகொள்ளும் பணியில் ஈடுபடத் துவங்கினார்.

image


2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நோக்கத்தை செயல்படுத்த கௌசிக் கப்பகான்டுலு, சௌம்யா மற்றும் ஆயுஷ் ஷர்மா ஆகியோருடன் இணைந்து கெய்தி என்கிற நிறுவனத்திற்கு இணை நிறுவனரானார். விவசாயிகள் சந்திக்கும் நிதிப்பிரச்சனைகளுக்கான தீர்வை உருவாக்கினார்.

பல்வேறு நிதி நிறுவனங்களையும் வங்கிகளையும் அணுகினார். 2017-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி பாங்க் ஆஃப் பரோடாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். இதன் மூலம் வழக்கமான 22 சதவீதத்திற்கு பதிலாக 8.6 சதவீதத்திற்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கினார். அவரது நிறுவனம் விவசாயிகளுக்காக ஒரு சிறிய க்ரீன்ஹவுஸை அறிமுகப்படுத்தியது. இது நிலத்தின் 2 சதவீத இடத்தை மட்டுமே ஆக்கிரமிக்கும். மற்ற காரணிகளுடன் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இது உதவியது. மேலும் மாதந்தோறும் நிலையான வருவாய் கிடைக்கவும் வழிசெய்தது.

க்ரீன்ஹவுஸ் – ஒரு சிறிய மாயாஜால பெட்டி

குறைந்த செலவில் வருவாயை அதிகரிப்பதற்காக முழுமையான சப்போர்டுடன்கூடிய க்ரீன்ஹவுஸை கெய்தி அறிமுகப்படுத்தியுள்ளது.

கெய்தியின் இந்த முயற்சி தனியார் மற்றும் பொது நிறுவனங்களின் மற்ற திட்டங்கள் போலல்லாமல் சிறிய அளவிலான க்ரீன்ஹவுஸ்களை வழங்குகிறது. 

“எங்களது மற்ற போட்டியாளர்கள் வழங்கும் சிறிய அளவானது ஒரு ஏக்கரில் ¼ பங்கு. எங்களது க்ரீன்ஹவுஸ் ஒரு ஏக்கரில் 1/16 அளவு. நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதத்தை மட்டுமே ஆக்கிரமிக்கும். விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது. துவக்கம் முதல் இறுதி வரையிலான ஒரு முழுமையான அணுகுமுறைக்கான தேவை உள்ளது,” என்று விவரித்தார் சத்யா.
image


விவசாயிகளுக்கு நிதி சார்ந்த அதிகாரமளிப்பதற்காக இந்நிறுவனம் பிக் பாஸ்கட், நார்த்வெஸ்டர்ன் இன்ஸ்டிட்யூட் ஃபார் சஸ்டெய்னபிளிட்டி அண்ட் எனர்ஜி, T-Hub, அக்ரிப்ளாஸ்ட், AIPICRISAT-அக்ரிபிசினஸ் அண்ட் இன்னோவேஷன் ப்ளாட்ஃபார்ம் மற்றும் அக்யூமென் ஃபண்டர்ஸ்சர்கிள் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. கெய்தி நிதி, உள்ளீடுகள், பயிற்சி, ஆலோசனை, மார்கெட்டிங் சேவை போன்றவற்றை வழங்குகிறது.

”எந்த ஒரு சிறிய விவசாயியையும் காலநிலைகளை சிறப்பாக எதிர்கொள்ளும் ஸ்மார்டான விவசாயியாக மாற்றும் சக்தி கொண்டது GIB. 2025-ம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் சிறு விவசாயிகள் வறுமையின் பிடியிலிருந்து மீள்வதை பார்க்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” என்றார் சத்யா.

மேலும் இந்த சொத்தானது நிலப்பரப்பில் வெறும் 1-2 சதவீத பகுதியை மட்டுமே ஆக்கிரமிப்பதால் நிலத்தின் மற்ற நடவடிக்கைகளை இது பாதிக்காது. சோதனை முயற்சி மேற்கொண்ட விவசாயிகளில் ஒருவரான லஷ்மய்யா முதல் சுற்று உற்பத்தி முடியும் தருவாயில், 

“விவசாயிகள் ராஜா என்று சொல்லப்படுவதை எனது சிறு வயதில் பலமுறை கேட்டுள்ளேன். கெய்தி எங்களது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்ததனால் மட்டுமே என்னால் அதை உணரமுடிகிறது.” என்றார்.

சத்யா மிகுந்த திருப்தியடைந்த தருணம் அது.

தற்போது 8.6 சதவீதத்தில் கடன்

image


GIB கிட்டின் விலை 1.8 லட்ச ரூபாய். விவசாயிகள் இதில் 30,000 ரூபாயை முதலில் செலுத்த வேண்டும். மீதமிருக்கும் தொகையான 1.5 லட்ச ரூபாய்க்கு கடன் வசதி செய்து தரப்படும். ஒரு லட்ச ரூபாய் அல்லது அதற்கும் குறைவான தொகைக்கு கடன் வழங்கும்போது வங்கிகள் நிலத்தை அடமானமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு இருக்கும் போதிலும் வங்கிகள் அதை வலியுறுத்துகிறது என்று விவரித்தார் சத்யா.

கார் ஓட்டுநர் ஒருவர் கார் வாங்கும்போது வருங்காலத்தில் அந்த சொத்தை அடிப்படையாகக் கொண்டு அவரால் வருமானம் ஈட்டமுடியும் என்பது கருத்தில் கொள்ளப்படுகிறது. வங்கிகள் இதே கண்ணோட்டத்தில் விவசாயக் கடனையும் பார்க்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

சிறு விவசாயிகள் பல்வேறு நிலைகளில் சுற்றுச்சூழல் சார்ந்த ஆபத்துகளை சந்திக்க நேர்வதால் இந்தியாவில் கிட்டத்தட்ட 100 மில்லியன் விவசாயிகள் பணத்தை இழக்கின்றனர். இப்படிப்பட்ட ஆபத்துகளை குறைத்து பணப் புழக்கத்தை உருவாக்கும் திறன் கொண்டது க்ரீன்ஹவுஸ். அதேபோல் இந்த சொத்தின் மூலம் எதிர்காலத்தில் பணப் புழக்கத்தை அதிகரிக்கலாம் என்பதை வங்கி அதிகாரிகள் நம்பினால் கடன் தொகைக்காக நிலத்தை அடமானம் வைக்கவேண்டிய அவசியம் இருக்காது.

தற்காலிகமாக இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சத்யாவின் ஏழு நபர்கள் அடங்கிய குழு 20 நிதி நிறுவனங்களை அணுகியது.

துவக்கத்தில் சமுன்னதி ஃபினான்சியல் இண்டர்மீடியேஷன் ப்ரைவேட் லிமிடெட், க்ரீன் ஹவுஸ் சொத்தையும் எதிர்காலத்தில் அது உருவாக்க இருக்கும் பண வரவையும் கருத்தில் கொண்டு கடன் வழங்க சம்மதித்தது. எனினும் அது வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்பதால் மூலதன செலவு அதிகமாக இருந்தது. அவர்களால் வழங்கப்படும் குறைந்த வட்டி விகிதமே ஆண்டிற்கு 22 சதவீதம்.

பின்னர் சத்யா பாங்க் ஆஃப் பரோடாவை அணுகினார். மூன்று மாதங்களுக்குள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதன்படி வாடிக்கையாளர்களுக்கு நிலையான விகிதமாக 8.6 சதவீதத்தை 3-5 ஆண்டுகள் வழங்க திட்டமிடப்பட்டது.

உண்மையில் விவசாயிகள் ஆதாயமடைவதைவிட இழப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இன்றைய நிலையில் விவசாயத்தை ஒரு சிறந்த தொழிலாக வங்கிகள் பார்ப்பதில்லை. விவசாயத்தை ஒரு தொழிலாக மேற்கொள்ளும்போது அதில் உள்ள ஆபத்துகளை நீக்கி முழுமையான அணுகுமுறையை அறிமுகப்படுத்தவேண்டும் என்று விவரித்தார் சத்யா.
image


விவசாயிகள் வறுமையிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதை உறுதிசெய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கிராமப்புறங்களில் வசிக்கும் ஐந்து பேர் அடங்கிய ஒரு குடும்பம் வறுமைக்கோட்டிற்கு கீழ் செல்லாமல் இருப்பதற்கு மாத வருமானமாக 4,800 ரூபாய் தேவைப்படும் என்கிறது உலக வங்கி. வட்டி விகிதம் குறைந்தால் மாதம் 4,000 ரூபாய் பெறும் விவசாயிகள் வட்டியை செலுத்திய பிறகும் மாதம் 6,000 ரூபாய் பெறமுடியும். மேலும் மூன்று வருடங்கள் நிறைவடைகையில் அவர்கள் கடன் தொகையை செலுத்திய பிறகு 8,000 ரூபாய் முதல் 10,000 வரை ஈட்ட முடியும்.

விவசாயிகள் காய்கறிகள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படுவதால் விரைவாக பணம் ஈட்டலாம். அதாவது விதைத்த 60 நாட்களில் பணம் ஈட்டலாம். நெல், கோதுமை போன்ற மற்ற பயிர்கள் விளைச்சலுக்கு 4-6 மாதங்கள் வரை ஆகும். திறந்த நிலப்பரப்பில் விவசாயம் செய்வதில் பருவநிலை மாற்றம் போன்ற எண்ணற்ற ஆபத்துகள் உள்ளன. ஆனால் கெய்தி க்ரீன்ஹவுஸ் உட்புற விவசாய முறையை வழங்குவதால் விவசாயிகள் ஒரு நிலையான வருவாயைப் பெறமுடியும்.

சோதனை முயற்சி மேற்கொண்ட ஒரு விவசாயி கூறுகையில், எதிர்காலத்தின் மீது இப்போதுதான் நம்பிக்கை பிறந்துள்ளது. இதற்கு முன்பு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து கடை உரிமையாளர் சொல்வதை மட்டுமே நான் நம்புவேன். ஆனால் இன்று அது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உலகின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள நிபுணர்களை இணைக்கிறது கெய்தி.

சமூக ஒன்றிணைப்பு

image


கெய்தி முதல் ஆறு மாதங்கள் தெலுங்கானா பகுதியில் செலவிட்டது. அங்குள்ள விவசாயிகளுடன் விரிவான உரையாடல் மேற்கொண்டு அவர்களது வாழ்க்கை, தேவைகள், சவால்கள், விருப்பங்கள் ஆகியவற்றை புரிந்துகொண்டனர்.

பருவநிலை மாற்றத்தால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவது தெளிவானது. அதிக வெப்பம், அதிகரித்து வரும் பூச்சிக்கொல்லி பிரச்சனைகள் மற்றும் ஒழுங்கற்ற மழையினால் குறைந்த நீர் வரத்து போன்றவை முக்கிய பிரச்சனைகளாகும். அதன் விளைவாக சிறு விவசாயிகளுக்கு நிச்சயமற்ற வருமானமே கிடைத்தது. இதற்கு தீர்வு காண தீர்மானித்தோம். நமக்குக் கிடைப்பது போன்றே சிறு விவசாயியின் கடுமையான உழைப்பிற்கும் பலன் கிடைக்கவேண்டும். அதுதான் கெய்தி உருவாகக் காரணமாக அமைந்தது என்றார் சத்யா.

திறன் சார்ந்த குழு, சட்ட ரீதியான தெளிவு மற்றும் சமூகம் ஆகியவை கெய்தியின் மூன்று தூண்களாகும். விவசாயிகள் சுயாதீனமாகவும் அதே சமயம் ஒருவரை ஒருவர் சார்ந்தும் இருக்கும் விதத்தில் ஒரு சமூகத்தை இந்த மாதிரி உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு விவசாயியின் நிலத்திலும் ஒரு க்ரீன்ஹவுஸ் இருக்கும். அவரது முயற்சிகேற்ற பலன் கிடைக்கும். எனினும் மொத்த சமூகத்திற்கும் திட்டமிடப்பட்டதால் தகவல்கள் இணைப்பு மற்றும் சந்தை இணைப்பு ஆகியவை வளர்ச்சியை எட்டுகிறது. இந்தியாவின் பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஒரு குழுவாகவே வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட முறையில் உற்பத்திக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் வாராந்திர சமூக கூட்டத்தில் பயிற்சிகள் திட்டமிடப்படும்.

வருங்கால திட்டங்கள்

image


சோதனை முயற்சிக்காக ஒரு சமூகத்தை முடிவு செய்வதற்கு முன்பு கிட்டத்தட்ட 95 கிராமங்களிலுள்ள விவசாயிகளை சத்யாவின் குழுவினர் மதிப்பிட்டனர். கெய்தியின் திட்டம் குறித்து விவரித்த பிறகு அவர்கள் திருப்தியடையவில்லையெனில் மொத்த க்ரீன்ஹவுஸ் சொத்தையும் திருப்பியளித்துவிடலாம் என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.

”ஆச்சரியமாக முதல் 15 விவசாயிகளில் 14 விவசாயிகள் மேலும் ஒரு க்ரீன்ஹவுஸ்காக விண்ணப்பித்தனர்,” என்று பெருமையுடன் குறிப்பிட்டார் சத்யா.

தற்போது காம்பெடிஷன்ஸ் மற்றும் ஃபவுண்டேஷன்கள் வாயிலாக கெய்தி சுமார் 400,000 டாலர் நிதி உயர்த்தியுள்ளது. தற்சமயம் தெலுங்கானாவில் மட்டும் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த வருட இறுதிக்குள் 150 விவசாயிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு அடுத்த ஐந்தாண்டுகளில் 40,000 விவசாயிகளை சென்றடைய திட்டமிட்டுள்ளது. மேலும் விரிவடைந்து பல விவசாயிகளை சென்றடையும் நோக்கத்துடன் அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை இக்குழு ஆராய்ந்து வருகிறது.

அடிமட்ட அளவில் புதுமையை புகுத்தினால் விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று சத்யா நம்புகிறார். 

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா

Add to
Shares
294
Comments
Share This
Add to
Shares
294
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக