பதிப்புகளில்

டெக்30 நிறுவனமான ’Oriano Solar’ 120 மெகாவாட் சூரிய சக்தி ப்ராஜக்டுகள் நிறுவி 25 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டவுள்ளது!

YS TEAM TAMIL
17th Sep 2017
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

டெக்ஸ்பார்கஸ் 2016-ல் 'டெக்30' பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்களுள் ஒன்று ஓரியனோ சோலார் (Oriano Solar). இதற்கு முக்கியக் காரணம் பல்வேறு தடைகள் இருப்பினும் அவற்றைக் கடந்து சூரிய சக்தி மீது இந்நிறுவனத்தின் மூன்று நிறுவனர்களுக்கும் இருந்த தீவிர அர்ப்பணிப்பாகும். துவங்கி இரண்டாண்டுகளான இந்த ஸ்டார்ட் அப் க்ளீன் சூரிய சக்தியை விநியோகித்து தொழில்களும் தொழிற்சாலைகளும் தங்களது ஆற்றல் செலவை குறைத்துக்கொள்ள உதவுகிறது. நுகர்வோரின் மின் கட்டணமும் 20-30 சதவீதம் வரை குறையும் என்று திடமான நம்புகிறது. பங்குதாரர்கள் தரப்பிலிருந்து சூரிய சக்தி தொடர்பான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய மின்தொகுப்பு மக்களை சென்றடையும்.

image


இதுவரை நடந்தவை….

ஓரியானோ-வின் பயணம் 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. சச்சின் ஜெயின், யஷ்வந்த் ராவ், சமீர் ஷா ஆகியோர் இணைந்து சூரிய சக்தி சார்ந்த தீர்வுகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவினர். சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் கூடிய பொருளாதார வளர்ச்சிக்காக க்ளீன் சூரிய சக்தியை வழங்குவதே இவர்களது நோக்கம்.

சச்சின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்ததும் இந்தியா திரும்பினார். 2010-ம் ஆண்டு மஹிந்திரா பார்ட்னர்ஸின் க்ளீண்டெக் வணிகத்தின் நிறுவனர்கள் குழுவில் இணைந்தார். அந்த சமயத்தில் ஒரு விற்பனையாளர் சந்திப்பில் யஷ்வந்த் ராவ் மற்றும் சமீர் ஷாவை சந்தித்தார். யஷ்வந்திற்கும் சமீருக்கும் 20 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்தது. அவர்கள் இருவரும் இணைந்து ஏற்கெனவே CCL Optoelectronics என்கிற அவர்களது நிறுவனம் வாயிலாக 2009-ம் ஆண்டு தங்களது சோலார் பயணத்தை துவங்கியிருந்தனர். இவர்களது நிபுணத்துவம் மற்றும் திறனால் ஈர்க்கப்பட்ட சச்சின் இவ்விருவருடனும் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தார்.

2012-ம் ஆண்டு KPMG நிறுவனத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் இணை இயக்குநராக இணைந்தார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கத்தில் 2014-ம் ஆண்டிற்கான சூரிய ஆற்றலுக்கான இலக்கை 100 GW-ஆக உயர்த்தியபோது மூவரும் ஓரியானோ சோலார் உருவாக்குவதற்கு அதுவே சரியான தருணம் என்று தீர்மானித்தனர்.

”15 ஆண்டுகள் கார்ப்பரேட் உலகில் பணியாற்றிய பிறகு அதிலிருந்து வெளியேறுவது கடினமாக இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக சூரிய ஆற்றலில் யஷ்வந்த் மற்றும் சமீருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்ததால் நான் இதில் எளிதாக நுழைந்துவிட்டேன்,” என்றார் சச்சின்.

ஊடுருவுதல்

ஓரியானோ நிறுவப்பட்டு ஒரு மாதம் ஆனதும் அதன் நிறுவனர்கள் நிதிக்காக SIDBI வென்சர் காப்பிடலை அணுகினர். சூரிய ஆற்றல் உள்கட்டமைப்பு துறையின்கீழ் இருப்பதால் இ-காமர்ஸ் அல்லது மென்பொருள் துறையில் கவனம் செலுத்திய VC-க்கள் இந்தப் பகுதியில் ஆர்வம் காட்டவில்லை. உண்மையான ஆர்வமுள்ள ஏழு அல்லது எட்டு VC-க்களை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனமானது என்பதை அறிந்தோம். மேலும் எங்களுக்குத் தேவையான முதலீட்டின் அளவும் VC-க்களின் சரியான முதலீட்டு சுற்றும் பொருந்தவேண்டும்,” என்றார் சச்சின்.

எனினும் பெரிய எண்ணிக்கையை காட்ட இயலாத இளம் நிறுவனமாக இருந்ததால் அவர்களால் முயற்சியில் வெற்றியடைய இயலவில்லை. ஆனால் இது அவர்களுடைய நீண்ட பயணத்தின் துவக்கப்புள்ளியாக அமைந்தது.

சோலார் துறையில் சிறப்பிக்க வேண்டுமெனில் வழக்கமான EPC தீர்வுகளைத் தாண்டி சந்தையில் வேறுபட்ட தீர்வுகளை வழங்கவேண்டும் என்று குழுவினர் உணர்ந்தனர்.

நுகர்வோரின் மின் கட்டணத்தைக் குறைத்து முதலீடில்லாத சூரிய சக்தியை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்கிற அவர்களது நோக்கத்தை ஆதரிக்கும் முதலீட்டாளர்களை தேடினர். Amway யின் கூரைக்கு சூரிய மின்சக்தி அமைப்பு ஏற்படுத்திய முன்னணி நிறுவனமான சன்எடிசன் நிறுவனத்துடன் முதல் ப்ராஜெக்டில் வெற்றிகரமாக இணைந்தது ஓரியானோ.

RCC ரூஃப்பில் எந்தவித ஊடுருவலும் இல்லாமல் க்ளூகூட (glue) இல்லாமல் இரண்டரை ஏக்கர் சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்ட நாட்டின் முதல் ப்ராஜெக்டுகளில் இதுவும் ஒன்று. ஒட்டுமொத்த வடிவமைப்பும் counter-weight ballast மாதிரியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.” என்றார் சச்சின்.

ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடித்த பிறகு ஓரியானோ நுகர்வோருக்கு முதலீடின்றி சூரிய சக்தியை வழங்குவதற்கோ அல்லது முதலீட்டாளர்களை பெறுவதற்கோ இதே மாதிரியை பின்பற்ற தீர்மானித்தனர். அல்லது நுகர்வோர் சோலார் ப்ராஜெக்டுகளை அமைக்க முதலீட்டாளர்களுக்கு உதவுவதற்காக பின்பற்ற தீர்மானித்தனர். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மிகப்பெரிய சர்வதேச டெவலப்பர்ஸ் இந்தியாவின் சோலார் சந்தையில் நுழைந்து உதவி செய்து அவர்கள் ரிவர்ஸ் ஆக்ஷன் (reverse auction) மூலமாக 150 MW பெற உதவியது.

செயல்பட்டால் பெரியளவில் செயல்படவேண்டும்

சூரிய ஆற்றல் பகுதியில் ஓரியானோ ப்ராண்டை உருவாக்க இக்குழுவினர் பல்வேறு உத்திகளை கையாண்டனர். உதாரணத்திற்கு ப்ராஜெக்டை காட்டுவது, அவர்களது தளங்களுக்கு சாத்தியம் நிறைந்த வாடிக்கையாளர்களை அழைப்பது, சோலார் துறையின் நிகழ்வுகள் மற்றும் இதழ்கள் வாயிலாக அவர்களது ப்ராண்ட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற உத்திகளை கையாண்டனர். ”சமீபத்திய காலம் வரை எங்களிடம் பிரத்யேக பிசினஸ் டெவலப்மெண்ட் குழு இல்லை. பல ஆண்டுகளாக நாங்கள் உருவாக்கிய நெட்வொர்க் எங்களுக்கு கைகொடுத்தது,” என்றார் சச்சின்.

நாட்டின் முதல் சோலார் பார்க்கை கர்நாடகாவில் அமைத்தது ஓரியானோ. 23 MWp திறனுடன் தனியார் நுகர்வோர்களுக்கு மின்சக்தியை விற்பனை செய்தது. இவை 100 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதன் கட்டுமானப்பணிகளுக்கு 450 பணியாளர்கள் தேவைப்பட்டனர். 

“இந்த சோலார் PV ஆலையானது 2040-ம் ஆண்டு வரை 6.9 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கிறது. இது கிட்டத்தட்ட 13,23,765 மரங்கள் நடுவதற்கு சமமாகும். இது 80,000 இந்திய வீடுகளுக்குத் தேவையான மின்சக்தியை வழங்கும்.” என்றார் சச்சின்.

கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் 2016-ல் 2600 டெக்30 ஸ்டார்ட் அப்கள் விண்ணப்பங்களில் ஓரியானோ நிறுவனம் தேர்வானது. இந்த அங்கீகாரம் ஓரீயானோவிற்கு பலனளித்தது. பல்வேறு VC/PE நிறுவனங்கள் இவர்களது செயல்பாடுகள் குறித்து விசாரித்தது,” என்றார் அவர்.

அடுத்தடுத்த மாதங்களில் ஓரியானோவின் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து வந்த SIDBI வென்சர் கேப்பிடல் ஓரியானோவின் செயல்பாடுகளுக்காக சம்ரிதி நிதி மூலம் 20 கோடி ரூபாயை பங்குகள் மற்றும் வென்சர் கடன் வாயிலாக புகுத்தியது.

மிகப்பெரிய தடைகளை எதிர்த்துப் போராடினர்

நாட்டில் வென்சர் முதலீடு உயர்த்திய வெகு சில சோலார் EPC நிறுவனங்களில் ஓரியானோ சோலார் நிறுவனமும் ஒன்று. ஓரியானோ பல வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த சுற்று மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. “மிகப்பெரிய ஆர்டர் புக் இருப்பினும் வங்கிகளில் வொர்கிங் கேப்பிடல் வரம்புகள் பெறுவது கடினமாக இருந்தது. வென்சர் முதலீட்டை உயர்த்தியது இந்த சவால்களை எதிர்கொள்ள உதவியது. மிகப்பெரிய ஆர்டர்கள் பெறவும் உதவியது,” என்றார் சச்சின். 

“ஆழமான நீண்ட கால உறவை அமைக்க வளர்ச்சி குறித்து VC-க்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்.”

நிறுவனத்தினுள் நிதியை புகுத்திய பிறகு 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அஷோக் லேலாண்ட்/ஹிந்துஜா ரெனியூவபிள்ஸ்-க்காக 5.5 MWp சூரிய மின்சக்தி அமைப்பு நிறுவப்பட்டது. தற்போது 50 MWp சோலார் PV ப்ராஜெக்டுகளை கர்நாடகாவில் அமைக்கிறது. மொத்தம் 400 ஏக்கர் நிலப்பரப்பில் 105 MWp சோலார் PV ப்ராஜெக்டுகளின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதை 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.”

”இந்த ப்ராஜெக்டுகள் பெண்கள் உட்பட திறனுள்ள மற்றும் திறனற்ற 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. ஆலையை பார்வையிடும் போது எங்களது பொறியாளர்கள் ஆர்வமுடன் பணிபுரிவதைக் கண்டு வாடிக்கையாளர்கள் வியப்படைந்தனர். நீங்கள் மேற்கொள்ளும் பணியில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அது நிச்சயம் அடுத்தவருக்கும் வரவும் என்பதையும் உங்களது ஆர்வன் நிச்சயம் கவனிக்கப்படும் என்பதையும் கற்றுக்கொண்டோம்.” என்றார் சச்சின்.

தற்போது ஓரியானோவின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளது. க்ளீன் EPC தீர்வுகள் முதல் பரிமாற்ற லைன்கள், சோலார் பார்க் கட்டமைப்பு போன்ற சேவைகளையும் வழங்குகின்றனர். 60 பேர் அடங்கிய குழுவுடன் பல்வேறு ப்ராஜெக்டுகளுடன் ஓரியானோ 17-18 நிதியாண்டில்120 MWp சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவி 25 மில்லியன் டாலர் வருவாயை ஈட்ட திட்டமிட்டு வருகிறது. இந்த இரண்டாடுகளில் ஓரியானோ இந்திய சோலார் வீக் எக்ஸலன்ஸ் அவார்டில் ’சோலார் PV EPC கம்பெனி ஆஃப் தி இயர் 2017-யுடிலிட்டி ஸ்கேல் – கோல்ட்’ விருதை வென்றுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக