பதிப்புகளில்

சாலையில் குல்பி ஐஸ் விற்கும் 17 தங்கப் பதக்கம் வென்ற அர்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரர்!

posted on 4th November 2018
Add to
Shares
1164
Comments
Share This
Add to
Shares
1164
Comments
Share

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மோகம் போல் வேறு எந்த விளையாட்டிற்கும் இல்லை என திரும்பத்திரும்ப சொல்லி வருகிறோம். ஏனெனில் கிரிகெட் வீரர்களை கொண்டாடும் நாம் மற்ற விளையாட்டு வீரர்களை உடனே மறந்துவிடுகிறோம். இந்தியாவிற்காக ஒலிம்பிக் மற்றும் பல சர்வதேச விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்ற தடகள மற்றும் பிற விளையாட்டு வீரர்களை ஒரு நாள் கொண்டாடிவிட்டு மறுநாள் மறந்து விடுகிறோம்.

பட உதவி: The Logical Indian

பட உதவி: The Logical Indian


அன்று இந்தியாவிற்காக பல பதக்கங்கள் வென்று இன்று வாழ வழி இல்லாமல் போன பல வீரர்களின் கதை வெளி வருகிறது. அந்த வகையில் 17 தங்கப்பதக்கங்கள் வென்ற, அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீரர் தினேஷ் குமார் வாழ வழியின்றி தெருவில் குல்பி ஐஸ் விற்றுக்கொண்டிருக்கும் புகைப்படமும், செய்தியும் வெளியானது.

ஹரியானா மாநிலம் பிவாணியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், குத்துச்சண்டை வீரரான இவர் நாட்டிற்காக விளையாடி இதுவரை 17 தங்கப்பதக்கமும், 1 வெள்ளிப்பதக்கமும் மற்றும் 5 வென்கலப்பத்தக்கமும் வென்றுள்ளார். குறிகிய காலம் மட்டும் விளையாட்டுகளில் கலந்துக் கொண்டாலும் பல பதக்கங்களை வென்று அதற்காக சிறந்த விளையாட்டு வீரருக்கான மத்திய அரசின் அர்ஜுனா விருதை பெற்றவர் இவர்.

ஆனால் இவரது இந்த வெற்றிப்பயணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை, 2014ல் ஏற்பட்ட கார் விபத்தால் தனது விளையாட்டை தொடரமுடியாமல் போக தினேஷின் கனவுகள் உடைந்ததோடு வாழ்வாதாரமும் நிலைகுலைந்தது. தினேஷ் குணமடைய சிகிச்சைக்காக பணம் நெருக்கடி ஏற்பட தினேஷின் தந்தை பல இடங்களில் கடன் பெற்று சிகிச்சை அளித்துள்ளார். 

ஏற்கனவே இதுபோன்ற விளையாட்டுகளுக்கு எளிதில் ஸ்பான்சர்ஷிப் கிடைக்காததால் சர்வதேச விளையாட்டில் தினேஷ் பங்கேற்க பல கடன்களை பெற்றுள்ளார் தினேஷின் தந்தை. இரண்டும் சேர்ந்து கடன் சுமை அதிகரிக்க வேறு வழியின்றி தன் தந்தையுடன் தெருவில் குல்பி விற்க வந்துவிட்டார் இந்த விளையாட்டு வீரர்.

“விபத்தால் இனி என்னால் விளையாட்டை தொடர முடியாது, என் கடனை தீர்க்க இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அரசு எனக்கு முறையான வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்; என்னால் இன்றும் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்து குத்துச்சண்டை வீரர்களாக உருவாக்க முடியும்,” என்கிறார் தினேஷ்.

image


இதற்கு முந்திய அரசும் தனது நிலைமைக்கு எந்த ஒரு வழியையும் காட்டவில்லை என்கிறார் தினேஷ். தினேஷின் சகோதரர் இது வேறு விளையாட்டு வீர்ரகளுக்கு நடந்து இருந்தால் நிலைமை வேறு மாதரியாக இருந்து இருக்கும். இன்று நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதை கேட்பதற்கு கூட ஆளிலில்லை என்று வருத்தப்படுகிறார்.

தன்னால் விளையாட முடியாமல் போனாலும் தன் பயிற்சியை நிறுத்தவில்லை இந்த வீரர். வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீரர்களுக்கு பணம் வாங்கமால் பயிற்சி அளித்து வருகிறார் தினேஷ். தான் பயிற்சி அளித்த பலர் சர்வதேச போட்டிகளில் கலந்துக்கொண்டதாக தெரிவிக்கிறார்.

இவரது வீடியோவை ANI தன் ட்விட்டர் பக்கத்தில் முதலில் வெளியிட்டது. இதனையோட்டி பல நெட்டிசன்கள் அரசு முன் வந்து இவருக்கு உதவ வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளனர். முன்னால் கோச் விஷ்ணு பகவான்,

“விபத்தால் தெருவில் ஐஸ் விற்கும் நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது. வாய்ப்புக்கொடுத்தால் இவரைப்போல் பல வீரர்களை இவர் உருவாக்குவார்,” என்கிறார்.

நம் நாடு கொண்டாட வேண்டிய இந்த வீரரின் அவலம் அரசு பார்வைக்கு வந்து அவருக்கான வாழ்வாதாரத்தை அளிக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே கிரிகெட்டை தாண்டி மற்ற விளையாட்டுகளில் இளைஞர்கள் தைரியமாக விளையாட முன் வருவார்கள்!

தகவல் உதவி: ANI | கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்

Add to
Shares
1164
Comments
Share This
Add to
Shares
1164
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக