Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

சிறு தொழில் நிறுவனங்களுக்கு Whatsapp அறிமுகம் செய்துள்ள ’Catalogues’ வசதி!

இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில், அறிமுகம் ஆகியுள்ள இந்த புதிய வசதி, சிறு தொழில் புரிபவர்கள், வாடிக்கையாளர்களுக்கு நிறுவன தயாரிப்புகள் பற்றி எளிதாக அனுப்ப வசதி செய்கிறது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு Whatsapp அறிமுகம் செய்துள்ள ’Catalogues’ வசதி!

Monday November 11, 2019 , 2 min Read

முன்னணி மெசேஜிங் சேவையான ’வாட்ஸ் அப்’, சிறு வர்த்தக நிறுவனங்களுக்கான ’வாட்ஸ் அப் பிஸ்னஸ்’ செயலியில், ’கேடலாக்ஸ்’ ('Catalogs') எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதாக பார்க்கக் கூடிய வகையில், பல்வேறு பொருட்களின் புகைப்படங்களை இடம்பெறச்செய்ய இந்த வசதி வழி செய்கிறது.

வாட்ஸ் அப்
இந்தியா, இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் இந்த வசதி, வர்த்தக நிறுவனங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்து எளிதாக அறிந்து கொள்ள உதவுகிறது.

மக்கள் தங்களுக்குத் தேவையானதை கண்டறிய உதவும் வகையில், வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகளை காட்சிப்படுத்துவதற்கான மொபைல் விற்பனை மையம் போல ’கேடலாக்ஸ்’ வசதி இருக்கும் என வாட்ஸ் அப் அறிக்கை தெரிவிக்கிறது.

"இதற்கு முன், வர்த்தக நிறுவனங்கள், ஒரு முறை ஒரு புகைப்படம் என தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும். இப்போது வாடிக்கையாளர்கள் அவற்றை கேடலாக் வசதியில் அணுகலாம். இது வர்த்தக நிறுவனங்களை மேலும் தொழில்முறைத் தன்மை பெற வைப்பதோடு, வாடிக்கையாளர்கள் இணையதளத்திற்கு விஜயம் செய்யும் தேவை இல்லாமலே அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழி செய்யும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடலாக்கில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், வர்த்தக நிறுவனங்கள், விலை, விவரம் மற்றும் பொருள் குறியீடு போன்ற தகவல்களை இடம்பெற வைக்கலாம். சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன் ஸ்டோரேஜ் இடத்தை காப்பதற்காக வாட்ஸ் அப் இந்த புகைப்படங்களை ஹோஸ்ட் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


"பிரேசில், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, யூ.கே. அமெரிக்கா ஆகிய நாடுகளில், ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வாட்ஸ் அப் பிஸினஸ் செயலியை பயன்படுத்துபவர்கள் இந்த வசதியை அணுகலாம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வசதி, இவ்வாண்டு, ஃபேஸ்புக் ஆண்டு டெவலப்பர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

அண்மையில் ஃபேஸ்புக், புதிய லோகோ வடிவமைப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த லோகோ, ஃபேஸ்புக் நிறுவன செயலிகளில் இடம்பெறும். அந்நிறுவனத்தை, ஃபேஸ்புக் செயலியில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையிலும், நிறுவனம் தனது செயலியில் மறு பிராண்டிங் செய்துள்ளது.


இதன் மூலம், சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக், பல ஆண்டுகளாக உள்ள, நீலம், வெள்ளை தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ளும்.


செய்தி : பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்