பதிப்புகளில்

சிறப்பு மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2017 ஜுன் 10-ம் தேதி நடைபெறும்!

YS TEAM TAMIL
15th Dec 2016
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு – உயர்நிலை சிறப்பு பாடங்கள் (NEET-SS)

1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.

image


பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜுன் மாதம் 10ம் தேதி நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்த தேர்வில் இந்திய மருத்துவ கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.

இந்த தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்த தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும். 1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைகழகம் / மருத்துவ கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.

இந்த தேர்வின் முக்கியத்துவம்: NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு ஆகும் 2017ம் கல்வி ஆண்டுக்கான இந்த தேர்வில் கீழ்க்கண்டவை அடங்கி இருக்கும்:

i) நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலை கழகங்கள் நிகர்நிலை பல்கலைகழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள்

ii) ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள்

iii) அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுதில்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.

தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.

தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். mail@natboard.edu.in 011-45593000/1800111700 (Toll Free) என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக