பதிப்புகளில்

வாய்ப்பும்,தேர்வும் உங்களுடையது!

6th Oct 2015
Add to
Shares
96
Comments
Share This
Add to
Shares
96
Comments
Share
image


"ஒரு கோப்பை ஒயின், துறவிகள் நிறைந்த தேவாலயத்தை விட அதிக அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது". இது ஒரு பழைய இத்தாலிய பழமொழி. இது போல மது தொடர்பான பல தவறான நம்பிக்கைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மது பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்பது. 1990 களில் இளம் நிருபராக நான் ஸ்ரீநகர் சென்றிருந்தேன். தீவிரவாதம் அப்போது உச்சத்தில் இருந்தது. காஷ்மீர் கொந்தளித்து இருந்ததால், இந்தியாவுடனேயே இணைந்து இருக்குமா என்ற அபாயமும் இருந்தது. டால் ஏரியில் இருந்த செண்டாவூர் ஹோட்டலில் நான் தங்கியிருந்தேன். அதிகாலையில், வரவேற்பறை மேலாளர் பயத்தால் நடுங்கி கொண்டிருப்பதையும் மயங்கி விழும் நிலையில் இருப்பதையும் பார்த்தேன். மற்றவர்களிடம் என்ன நடந்தது என்று விசாரித்தேன். ஒரு தீவிரவாதி உள்ளே வந்து மது வேண்டும் என கேட்பதாக தெரிவித்தனர். அந்த தீவிரவாதி சுற்றுலா பயணி போல நுழைந்திருந்தார். அவர் தொடர்ந்து கேட்டு, கேட்டு பார்த்தும் மது கிடைக்காது என தெரிந்த நிலையில், துப்பாக்கியை எடுத்து மேலாளரின் நெற்றியில் வைத்து, "இன்று உங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டீர்கள். எனக்கு மட்டும் மது பாட்டிலை கொடுத்திருந்தீர்கள் என்றால் இந்நேரம் நீங்கள் உயிரை விட்டிருப்பீர்கள்” என்று கேலியாக சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார்.

image


நான் உடனே அந்த ஹோட்டலில் இருந்து காலி செய்து வேறு பிரபலமான ஹோட்டலுக்கு சென்றுவிட்டேன். தீவிரவாதிகளுடனான மோதலில் சிக்கி உயிரைவிட விரும்பவில்லை என நான் ஒரு சிறுவன் போல சிந்தித்தேன். அந்த இன்னொரு ஹோட்டல் கட்டுப்பாடு மிக்கதாக இருந்தாலும் நகரின் மையப்பகுதியில் இருந்தது. எனது வேலையை முடித்துவிட்டு, இருள் சூழும் நிலையில் எனது ஹோட்டல் அறைக்கு வந்தேன். அப்போது திடிரென கதவுகள் தட்டப்பட்டன. வரவேற்பறையில் இருந்து இளைஞர் ஒருவர் நிற்பதை பார்த்தேன். எனக்கு மது பாட்டில் தேவையா என அவர் மிகவும் பணிவாக கேட்டார். நான் அதிர்ச்சியில் சில்லிட்டுப்போனேன். என்னை சிக்க வைப்பதற்கான சதியாக இருக்கும் என நினைத்தேன். வேண்டாம் என கூறி விட்டு கதவை சாத்தினேன். சிறுது நேரம் கழித்து கதவு மீண்டும் தட்டப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் ஒருவர் நின்றிருந்தார், அவர் பேச்சுத்துணை நாடி வந்திருந்தார். அவரை உள்ளே அனுமதித்தேன். "மது அருந்துவீர்களா” என கேட்டவர் என் பதிலுக்கு காத்திருக்காமல் வரவேற்பறைக்கு அழைத்து யாராவது ஒருரை அனுப்பி வைக்குமாறு கூறினார். எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் எங்களுக்கு மது அளிக்கப்பட்டது. ஏதாவது விபரீதம் நடக்கப்போகிறது என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவரோ என்னை அமைதிப்படுத்தும் வகையில் "கவலைப்பட வேண்டாம், தீவிரவாதிகள் காஷ்மீரிகளுக்கு தான் மது பயன்படுத்த தடை விதித்துள்ளனர். ஆனால் அது எளிதாக கிடைக்கும், யாரும் உங்கள் மீது கைவைக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

இதன் பிறகு நான் பலமுறை காஷ்மீர் சென்று வந்திருக்கிறேன். மது வாங்குவது ஒருபோதும் பிரச்சனையாக இருக்கவில்லை. எல்லா பிராண்ட்களும் கிடைக்கின்றன. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான குஜராத்திற்கும் சென்றிருக்கிறேன். மாநிலம் முழுவதும் மதுவிலக்கு உள்ளது. ஆனால் அங்குள்ள யாரை வேண்டுமாலும் கேளுங்கள் அல்லது அங்கு வந்து பணியாற்றும் ஒவ்வொரு பத்திரிகையாளரும், எல்லா சிறந்த பிராண்ட்களும் கிடைப்பது பற்றியும், எப்படி பல கோடி மதிப்புள்ள வர்த்தகமாக இது நடைபெறுகிறது என்பது பற்றியும் பல கதைகளை சொல்வார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்திருக்கிறார். அதோடு தில்லியில் மது அருந்துவதற்கான வயதை 25 ல் இருந்து 18 ஆக குறைக்கலாமா எனும் விவாதம் எழுந்துள்ளது. வாக்களிக்க உரிமை உள்ளவர்கள், வாக்குச்சீட்டு மூலம் இந்த தேசத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளவர்கள் மது அருந்த உரிமை பெறாமல் இருப்பதை நானும் கூட இன்று காலை தெரிந்து கொண்டேன். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது அருந்த அனுமதி இல்லை என்பது எனக்கு செய்தியாக இருக்கிறது.

ஒரு இளைஞனாக நான் மது அருந்துவது என்பது சமூக தீங்கு என கருதப்பட்ட சூழலில் வளர்ந்தேன். எனது தந்தை எப்போதாவது மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தார். பலருக்கு அது தெரியாது. யாரும் அறிவதை அவர் விரும்பவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது அதிகபட்சம் இரண்டு முறை மது அருந்தினார். ஜே.என்.யூவுக்கு நான் சென்ற போது முற்றிலும் வேறு சூழலை எதிர்கொண்டேன். அங்கு மது அருந்த கட்டுப்பாடு இல்லை. அது பாவமாகவும் கருதப்படவில்லை. மிகச்சிறந்த அறிவுஜீவிகள், ஒழுக்கமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட வெளிப்படையாக மது அருந்தினர். மாணவிகளும் கூட வாழ்வின் இந்த நல்ல பழக்கம் மீதான தங்கள் விருப்பத்தை மறைக்கவில்லை. ஒவ்வொரு எளிமையான சூழலும் கூட சேர்ந்து மது அருந்துவதற்கான வாய்ப்பாக அமையும். நானும் சலனமடைந்தேன். ஆனால் நான் நல்ல பையன் இன்னமும் பாரம்பரிய சிந்தனை மற்றும் கட்டுப்பாட்டான வளர்ப்பில் சிக்கியிருந்தேன். இது நீங்கள் தேர்வு செய்யும் வாய்ப்புகள் சார்ந்தது என புரிந்து கொண்டேன். இரண்டு உலகங்களுக்கு இடையிலான முரணால் உண்டான வாய்ப்பை நான் தேர்வு செய்தேன். என்னுடைய தந்தையின் பணத்தில் ஒருபோதும் மது அருந்த மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டேன். என்னிடம் 300 ரூபாய்க்கான முதல் காசோலை வந்த தினத்தன்று, நான் நண்பருடன் ஓல்ட் மாங்க் மது அருந்தி கொண்டாடினேன். சுவர் உடைக்கப்பட்டது ஆனால் எனது காதுகளில் மகிழ்ச்சியின் ரீங்காரம் கேட்கவில்லை. 

அதோடு அமெரிக்க நாவலாசிரியர் ரேமண்ட் சாண்ட்லர், "மது என்பது காதலைப்போல, முதல் முத்தம் அற்புதமானது, இரண்டாவது நெருக்கமானது, மூன்றாவது வழக்கமானது அதன்பிறகு நீங்கள் பெண்கள் ஆடையை மட்டும் நீக்குகிறீர்கள்” என்று வர்ணித்தது ஏன் என்றும் எனக்குப்புரியவில்லை.

இந்த அற்புத பாணத்துடனான எனது முதல் அறிமுகம் வழக்கமானதாக இருந்தது. நான் அதை நினைத்து வெட்கப்படவில்லை. மதங்கள் ஏன் அதை பாவம் என கூறுகிறது என்றும் புரியவில்லை. சமூகம் ஏன் இதை நினைத்து கவலைப்பட வேண்டும் மற்றும் ஒரு தனி நபர் அல்லது கலாச்சாரத்தின் தார்மீக நெறிமுறையை சமூகம் ஏன் தீர்மானிக்க வேண்டும் என்ற கேள்வியும் என்னை குடைந்து கொண்டிருந்தது. கசப்பான சுவை கொண்ட சில துளிகள் நமக்குள் ஒரு உணர்வை உண்டாக்கி வேறு உலகிற்கு அழைத்துச்செல்கிறது. இது ஒரு பழைய ஹிந்தி கவிதையை நினைவு படுத்துகிறது... "முல்லா என்னை மசூதியில் அமர்ந்தபடி மது அருந்த அனுமதியுங்கள், இல்லையேல் மது அருந்த, அல்லா இல்லாத ஓர் இடத்தை எனக்கு காண்பியுங்கள்..."

இன்று நான் மது அருந்துகிறேன். எந்தவித குற்ற உணர்வோ, தயக்கமோ இல்லாமல் நண்பர்களுடன், எனது குடும்பத்துடன் மது அருந்துகிறேன். டிவி சேனல்களில், மது அருந்துவதற்கான வயது வரம்பை 18 ஆக குறைப்பது சமூகத்தை மேலும் மோசமானதாக, குற்றங்கள் நிறைந்ததாக ஆக்குமா எனும் விவாதத்தை தில்லி அரசு துவக்கி வைக்க விரும்புவதை டிவி சேனல்களில் பார்க்கும் போது ஒழுக்கம் மற்றும் நெறிகளை போதிக்கும் சமூகத்தின் புனிதர்களை நினைத்து பரிதாபம் கொள்கிறேன். தில்லியில் இளைஞர்கள் மது அருந்த எந்த சட்டமும் தேவையில்லை. அவர்கள் புத்திசாலியாக, நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இளம் தலைமுறை மிகவும் முன்னேறி இருக்கிறது. அவர்கள் மதுவை விரும்புகின்றனர். அவர்களுக்கு எந்த தடையும் இல்லை. 

சிலிக்கான் வேலி தில்லியில் இருந்திருந்தால், ஆப்பிள் புரட்சியை உண்டாக்கியவர்கள் அனைவரும் சிறையில் வாடிக்கொண்டிருப்பார்கள். இந்த தொழில்நுட்ப புரட்சியை சாத்தியமாக்கியவர்கள் எல்லோருமே மதுவுடன் ஏதாவது ஒரு விதத்தில் உறவு கொண்டிருந்ததால் உலகம் நிச்சயமான ஒரு புரட்சியை இழந்திருக்கும். எனதருமை நண்பர்களே நீங்கள் எப்படி மது கோப்பை ஏந்துகிறீர்கள் என்பதை பொருத்து இது அமையும். தனிநபர்கள் கட்டுப்பாட்டை இழக்கும் போது, சமூகம் கண்ணை மூடிக்கொண்டும், அரசு நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் போது தான் பிரச்சனை உண்டாகிறது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி அருந்தினால் மது ஒரு மருந்து தான். ஆனால் மது, மனிதர்களை குடிக்கத்துவங்கும் போது பாவமாகிறது. பஞ்சாப்பில் அது ஒரு தலைமுறையை அழித்துவிட்டது. ஆனால் சிலிக்கான வேலியில் அது ஒரு புரட்சியை உண்டாக்கியது. வாய்ப்பும்,தேர்வும் உங்களுடையது.

பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.

Add to
Shares
96
Comments
Share This
Add to
Shares
96
Comments
Share
Report an issue
Authors

Related Tags