பதிப்புகளில்

'இந்தியர்களின் பொறியியல் மோகம்'- கொள்கைப்புத்தகத்தை வெளியிட்டுள்ள ஆதித்யா ஐயர்!

Gajalakshmi Mahalingam
17th Oct 2015
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

ஆதித்யா ஐயர் மும்பையில் பிறந்தவர். அவர் பிறந்த பின்னர் அவருடைய குடும்பம் சவுதி அரேபியாவிற்கு சென்றுவிட்டது. சில காலம் பள்ளிப்படிப்பை சவுதியின் ஜென்னாவில் கற்ற ஆதித்யா, மேற்படிப்புக்காக தன்னுடைய தாயாருடன் இந்தியா திரும்பினார். இந்தியாவில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த ஆதித்யாவிற்கு, தொடர்ந்து சர்தார் பட்டேல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மூன்றாம் பருவ முறைப் படிப்பை அவர் அடைந்த நேரம், பல பேரைப்போல் பொறியியல் படிப்பு அவருக்கானது அல்ல என்பதை ஆதித்யா உணர்ந்தார். படிப்பை விட்டு சுயமாக எதையாவது தொடங்க வேண்டும் என்று அவருக்கு ஊக்கம் ஏற்பட்டது. அப்போது தான் அவர் "அன்னானிமஸ்"(Annanymous) தொடங்கினார். அது பொறியியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பிரத்யேக டீ-சர்ட் பிராண்ட். இந்த எண்ணம் ஆதித்யாவிற்கு நல்ல புகழை ஏற்படுத்திக் கொடுத்தது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பொறியியல் மாணவர்கள் அவரை ஈ-மெயில் மூலம் தொடர்பு கொண்டனர்.

“அப்போது தான் எனக்கு முதலில் தோன்றியது நான் தனி ஆள் இல்லை என்பது. உலக அளவில் என்னைப் போல எண்ணிலடங்கா பொறியாளர்கள் தங்களது வாழ்வை தொலைத்து விட்டுத் தேடுகிறார்கள்” என்று நினைவுகூறுகிறார் ஆதித்யா. சில காலம் கழித்து என் வாழ்வில் அனைத்தும் எனக்கு கைமேல் கிடைத்தது. ஆனால் 2011ன், தொடக்கத்தில் இந்தியாவின் இன்றைய நிலையில் பாதி அளவுகூட கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லை. கல்லூரி முடித்தபின், என்னுடைய இணை நிறுவனர்கள் அமெரிக்காவுக்கோ, வேலை தேடியோ சென்று விட்டனர். கேம்ப்பஸ் தேர்வில் பங்கேற்பதை ஆதித்யா விரும்பவில்லை, சில மாத போராட்டங்களுக்குப் பிறகு தன்னுடைய தொடக்கநிலையைத் தேடி பெங்களூருக்குச் சென்றார். அங்கு அவர் எச்பிஎஸ் (HBS grad) பட்டத்தில் சேர்ந்தார்(தனக்குத் தானே இந்திய பொறியியல் பட்டம்) மேலும் சில ஐஐடி/ஐஐஎம் (IIT/IIM alums) படித்து முடித்த மாணவர்கள் (மீண்டும் அனைத்துப் பொறியாளர்களும்) ஒன்று சேர்ந்து "சாய் பாயின்ட்" (Chai Point) மூலம் டீ விற்கத் தொடங்கினர்.

image


“பொறியாளர்கள் உட்பட யாருமே தங்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை” என்பதை இரண்டு ஆண்டுகளை பெங்களூரில் கழித்த பின் உணர்ந்ததாகக் கூறுகிறார் ஆதித்யா. வேலையை விட்டுவிட்டு கலிபோர்னியாவின் சான்டியாகோவில் இருந்த தன்னுடைய பிள்ளைப்பருவ நண்பன் தர்ஷனுக்கு நிதி கேட்டு ஈமெயில் அனுப்பினார். இந்திய பொறியாளர்களின் வாழ்க்கை நிலை பற்றி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அறிய விரும்பிய ஆதித்யா, இதற்காகத்தான் நண்பனிடம் பண உதவி கேட்டார். ஆதித்யாவின் நண்பர் வங்கி விவரத்தை கேட்டு எளிமையாக பதில் அனுப்பினார். அப்போது தான் பொறியியல் பற்றிய கிரேட் இந்தியன் இயக்கத்திற்கான திட்டத்துக்கு அடிக்கோல் இடப்பட்டது.

பொறியியல் ஏன் அவ்வளவு பெரிய விஷயமாக உலக அளவில் பார்க்கப்படுகிறது என்றும், அது குறித்த அனைத்து அம்சங்களையும் அறிவதே இந்த பட்ஜெட் சுற்றுலாவின் முக்கிய நோக்கம். தர்ஷனின் நிதியைக் கொண்டு புதிய தேடலுக்கான முதல் பயணத்தை முடித்து வந்த போது, மற்றவர்களுக்குச் சொல்ல ஆதித்யாவிடம் சுவாரஸ்யமான கதைகள் இருந்தது அவருக்குப் புரிந்தது. “மாறி மாறி வரும் சலிப்பில் இருந்து என்னை மீட்டெடுக்க நான் கற்றுக்கொண்டேன். நான் டிவி தொடர்கள் மற்றும் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளேன்(அதில் ஒன்று தேசிய விருது பெற்றள்ளது); மக்களுக்காக இணையதளம் வடிவமைத்துள்ளேன், பொறியியல் விடுதிகளில் டீ-சர்ட்டுகள் விற்றுள்ளேன். ஒரு புத்தகம் வெளியிட விரும்புகிறேன். ஒரு சிலர் நாங்கள், "கிக்ஸ்டாட்டர்" (Kickstarter) பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்ததாக” சொல்கிறார் ஆதித்யா. கிக்ஸ்டாட்டர் பற்றியோ கிரவுட்ஃபண்டிங் (Crowdfunding) பற்றியோ யாரும் அவ்வளவாக கேள்விபட்டிருக்கமாட்டார்கள். சில நாள் ஆய்வுக்குப் பின் நாங்கள் ஒரு பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்தோம். ஒரு சிறிய வீடியோ காட்சியை மக்களுக்கு அவர்களின் கதைகள் மற்றும் எண்ணங்களைக் கொண்ட வீடியோவாக இணைய வழியில் அவர்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டோம்.

எங்கள் குழுவுக்கென்று ஒரு தனி இடம் இருந்தது - எங்கள் திட்டத்துக்குத் தேவையான நிதியை கையாள்வதை தர்ஷன் பார்த்துக் கொண்டார். சுரேஷ் என்னுடைய மற்றொரு நிறுவனர், அவர் அனானிமஸில் டேட்டா ஆராய்ச்சியாளராக இருந்தவர். தற்போது மும்பையில் எம்பிஏ பயின்று வருகிறார், அவர் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டார். கிக்ஸ்டாட்டர் கேம்ப்பெய்ன் தொடங்க ஒரு வெளிநாட்டு பிரதிநிதி தேவை என்று நாங்கள் நினைத்தோம். ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்ற ஆதித்யாவின் பள்ளித் தோழனான கபில் ஷர்மா கிக்ஸ்டாட்டர் உருவாக்கும் முயற்சிக்கு முன்வந்தார். கிரவுட்ஃபண்டிங்கை விட, புத்தகங்கள் பெரிய புகழை ஏற்படுத்தவில்லை. எப்படி இருந்தாலும் இந்த திட்டத்தை முன்எடுத்து செல்வதில் உறுதியாக இருந்ததாகக் கூறும், ஆதித்யா இந்த திட்டத்திற்கு ஏன் 14 ஆயிரம் அமெரிக்க டாலர் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது என்றும் கூறுகிறார்.

கிரவுட்ஃபண்டிங் பிரச்சாரத்திற்கு நன்கு தயாரிக்கப்பட்ட வீடியோவே முக்கிய கரு, அவர்கள் பிரச்சார வீடியோவை மட்டும் மும்பை, சிட்னி மற்றும் சான்டியாகோவில் உள்ள குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து இரண்டு வாரங்கள் தயாரித்தனர். “அந்த வீடியோ வெளியிடப்பட்டட பின்னர் நாங்கள் பணியாளர்கள் விருப்ப திட்டத்தை தயாரித்துள்ளோம் என்று புரிந்து கொண்டோம். பணியாளர் விருப்ப திட்டம் கிக்ஸ்டாட்டர் பணியாளர்களை கையில் எடுத்தது, அதன் மூலம் 80 சதவீத நிதி கிடைத்தது” என்கிறார் ஆதித்யா.

கிக்ஸ்டாட்டர் பற்றி தெரியாத இந்தியர்களே இந்தத் திட்டத்தின் இலக்கு. "எங்களுக்குத் தெரியாதவர்களையும் ஃபேஸ்புக், ஈமெயில், ட்விட்டர் மற்றும் லிங்க்ட் இன் வழியே இணைக்க முயற்சித்தோம். சில இணையதள முகவர்கள் எங்கள் லிங்க்கை, பிரச்சாரத்துக்கு ஏற்ப போதுமான ஒத்துழைப்பு தரும் வகையில் கருணையுடன் பரப்பினர். இது பலரிடமும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதனால் எங்களுடைய கவனம் முழுவதும் இணையதளம் பக்கம் திரும்பியது, அது ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. 25 நாட்கள் பிரச்சாரம் முடிந்து 5 நாட்களே எஞ்சி இருந்த நிலையில் எங்களால் 5 ஆயிரம் அமெரிக்க டாலர் மட்டுமே திரட்ட முடிந்தது” என்கிறார் ஆதித்யா. கிக்ஸ்டாட்டரைப் பொருத்த வரையில் “அனைத்தும் அல்லது எதுவுமில்லை” என்ற விளையாட்டு தான். இந்த பிரச்சாரத்தின் மூலம் 13 ஆயிரத்து 999 அமெரிக்க டாலர் மட்டுமே திரட்ட முடிந்தாலும் அது தோல்வியாகவே கருதப்பட்டது.

image


திட்டத்தை கைவிடும் நிலைக்கு கிட்டதட்ட வந்துவிட்டோம், ஒரு நாள் மாலை யாரோ ஒருவர் 2 ஆயிரத்து 500 டாலர் நிதி கொடுக்க உறுதிமொழி அளித்ததை எங்கள் குழு பார்த்தது. அந்த மாலை நேரம் எங்கள் பிரச்சாரத்திற்கு புத்துயிர் கிடைத்தது அது அனைவரையும் ஒருங்கிணைத்தது. உடனடியாக இந்த மிகப்பெரிய முன்னேற்றம் பற்றி எங்கள் குழுவுக்கு நாங்கள் தெரிவித்தோம். அடுத்த சில தினங்களில், நண்பர்கள் அவர்கள் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்களுக்கு இது பற்றி தெரிவித்ததைப் பார்த்தோம். அனைவருமே எங்களுடைய இலக்கை எட்ட உதவி செய்ய முன்வந்தனர், என்கிறார் ஆதித்யா. இந்தியப் பொறியாளர்கள் பற்றிய புத்தகத்துக்காக, எங்கள் குழு 60 சதவீதத்துக்கும் அதிகமான நிதியை கடைசி 5 நாட்களில் திரட்டியது.

முதல் சுற்றுப் பயணம் முடித்து இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த புத்தக முன்பதிவு தொடங்கியது, வெளியீட்டுக்கான தேதி அக்டோபர் 15ம் தேதி என திட்டமிடப்பட்டது. இந்தியப் பொறியாளர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்களின் சுயகுறிப்புகள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. உதாரணமாக, தாமஸ் மெக்கலேவைப் பற்றி இந்திய பாடபுத்தகங்களில் எந்த குறிப்பும் இல்லை. பிப்ரவரி 2, 1835ம் ஆண்டு அவர் மறக்க முடியாத நாளாக மாற்றினார். மெக்கலே தான் இந்தியக் கல்வியில் ஆங்கிலத்தை புகுத்தினார், இதனால் அவருடைய பொறியாளர்கள் மிகவும் பயன்பெற்றனர். அவரைத் தொடர்ந்து வி.கே.பன்சால் தசை சோர்வு நோய் பாதிப்பால், 40 வயதுக்கு மேல் உயிர்வாழ முடியாத நிலையில் இருந்தார். இருந்தபோதிலும், அவர் ஒரு புது அத்தியாயத்தை எழுதினார். தான் வாழ்ந்த நாட்களில் அவர் எடுத்த முயற்சி ஒரு நகரத்தின் தலைஎழுத்தையே மாற்றியது. கோட்டா தான் இன்றைய நிலையில் பல-பில்லியன்-டாலர் பொறியியல் பயிற்சி தொழிற்சாலைக்கான தலைமையகமாக உள்ளது.

image


இந்த புத்தகத்தில் உத்திரப்பிரதேசத்தின், கான்பூரில் உள்ள கக்கடியோ பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. கக்டியோவை, உள்ளூர் மொழியில் பயிற்சி மண்டி என்பார்கள். இது மாணவர்களுக்கான பொறியியல் பயிற்சிக்கு முந்தைய இடமாக உ.பி மற்றும் பீகாரில் உள்ளது. இந்த இடத்தில் தொழில் விரோதம் காரணமாக இரு பிரிவினரிடையே ஒரு தேவையற்ற சண்டை நடந்துள்ளது. பேராசிரியர்கள் மற்றும் இரண்டு பயிற்சி வகுப்பு பேராசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அதே போன்று இந்த புத்தகத்தில் மாணவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளின் மாறுபட்ட வாழ்க்கை நடையும் சுயகுறிப்பு கதைகளாக இடம்பெற்றுள்ளது.

கிக்ஸ்டாட்டர் கேம்ப்பெய்ன்: KickStarter

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags